சிறுகதை: குட்டிநாயும் அவனும்! - சு. கருணாநிதி -

சந்திரன் பஸ்சால் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தான் வீதியின் பெயரைக் காணவில்லை. சந்தியிலிருந்து பெரியவீதியால் நடந்து திரும்பி உள்ளே போகும் சிறு வீதியாயிருக்கலாம் அதுதான் பெயர் கண்ணிற் படவில்லை போலும். கைத்தொலைபேசியை எடுத்து மகன் சொன்னதின்படி கூகுளினுள் நுழைந்து மப்பைப் போட்டு அந்த மூதாட்டி கொடுத்த முகவரியை பதிந்து தேடினான். இடதுபக்கம் திரும்பு நட... முதலாவதுவலது திரும்பு,, நட... கூகிளுக்குள்ளிருந்து பேசும் பெண் குட்டியின் குரல் கரம்பற்றி வழி நடத்த நடந்தான். குட்டிநாய் புதிய இடத்திற்கு வந்திருந்ததால் அது குதூகலத்தோடு துள்ளிக்குதித்து அங்குமிங்குமாய் இடம் வலமாய் இழுத்து அலைக்கழித்துக் கொண்டிருந்தது. டேய் மணி... இஞ்சாலவா... டேய்.சக்... குரலுயர்த்தி கழுத்துச்சங்கிலியை இழுத்துக்குறுக்கி காலடிக்குள் கொணர்ந்தான்.
ஒரு சந்தியிலிருந்து பிரியும் ஒழுங்கையில் நாட்டியிருந்த பெயர்ப்பலகையை உற்றுப்பார்த்தான் "நாய் பயிற்சியகம்" என எழுதப்பட்டிருந்த வாசகம் நம்பிக்களித்தது. ஓகே கண்டுபிடிச்சாச்சு நிமிர்ந்து நடையை விரைவுபடுத்தினான்.
இப்பிடித்தான் முப்பது மூன்று வருடங்களுக்கு முன்பு யேர்மனியிலிருந்த காலத்தில் ஒருகிராமப்புறத்தில் அவன் தோட்டவேலை தேடிச்சென்ற பாதையில் "நாய்ப்பண்ணை" என்ற பெயர்ப்பலகைப் பார்த்து அடகடவுளே நாய்களிற்கும் பண்ணையிருக்கா இந்தநாட்டில, பிரமித்து வியந்திருந்தான் அப்போது. இப்போ நாய்ப்பள்ளிக்கூடத்தைக்கண்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றான்.
விதம்விதமான நாய்களின் படங்களைப்போட்டு விளங்கப்படுத்தி நாய் பயிற்சியகம் என எழுதப்பட்டிருந்த அறிவித்தல்ப் பலகையைக்குக்கீழேயிருந்த கதவை தள்ளித்திறப்பதா இழுத்துத்திறப்பதா. தள்ளியும் இழுத்தும் பார்த்தான். திறபட்டது. தள்ளும்போது திறபட்டா இழுக்கும்போது திறபட்டதா தெரியாது திறபட்டதே போதுமானதாகவிருந்தது. மனம் பதட்டபட்டுக்கொண்டிருந்தது. எப்படிக்கதைப்பது எதிலிருந்து தொடங்குவது பக்கத்து வீட்டுப்பெண்மணி கூறியதையும் மகன் சொல்லிக்கொடுத்ததையும் கூட்டிச்சேர்க்கையில் தெரிந்தவார்த்தைகளாகவே இருந்தன.எப்பிடியிருந்தாலும் நாய்க்குட்டிக்கு தன்னிலும்பார்க்க பிரெஞ்சு விளங்கும் என்ற திடம் அவனுக்குள் உற்சாகமளித்தது.


கனடாவிலே ரொறன்ரோவை மையப்படுத்திய வாழ்க்கைச் சூழலிலே எனக்கும் எனது துணைவியார் கௌசல்யாவுக்கும் கிடைத்த கெழுதகை நண்பர்கள் சிலரில் மிக முக்கியமான ஒருவர் பேராசிரியர் சுப்பராயன் பசுபதி அவர்கள். அறிவியல் துறைசார் கல்வியாளரான அவர் தமிழ் மொழி, இலக்கியம், கலைகள் முதலான பண்பாட்டுத் துறைகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவராவார். அவ்வாறான பண்பாட்டுத் துறைகள்சார் புலமை அம்சங்களை ஆய்வரங்குகள் ஊடாகவும் வலைப்பூக்கள் வழியாகவும் சமகால அறிவுலகுக்கு அவர் வாரிவழங்கி வருகிறார்.
வரலாற்றில் நிஜப் பாத்திரங்கள் :



“வாழ்க்கை சவால்களால் நிறைந்துள்ளது. வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்கள், சில நேரங்களில் வலி நிரம்பியவையாக உள்ளன. சிலநேரம் அப்பாடங்கள் நாம் வளர வாய்ப்பளிக்கின்றன. அவை சவால்கள் போலத் தோன்றினாலும்கூட, அவை சாதனையாக மாற வல்லவை என்பதை மறுப்பதற்கில்லை. வாய்ப்புகள் எப்போதும் வருவதில்லை. என்னால் செய்யமுடியும் என்று முன்வராமல், யாராவது நம்மைத் தேர்ந்தெடுத்து வாய்ப்பைத் தட்டில் வைத்து தருவார்கள் என எதிர்பார்ப்பதும் வாய்ப்புகள் வரும்போது, நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதும் முட்டாள்தனம்“ மேற்சொன்ன வரிகளுடன் தொடங்குகிறது, முனைவர் சந்திரிக்கா சுப்பிரமணியன் எழுதியிருக்கும் பெண் நூறு என்ற நூல். ஒரு பெண்ணாக, பெண்களுக்கென்றே சந்திரிக்கா இதனை எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. இக்கருத்து ஆண்களுக்கும் பொருந்தும்.
அத்தியாயம் இருபத்தியிரண்டு: ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!
அளவில்லாத ‘எம்மெ’ அவரையின் இளங்கொழுந்துகளை உண்டிருந்த அந்த எருமைக்கு நிற்காமல் கழிந்துகொண்டிருந்தது. அது எவ்வளவோ அடக்க முயன்றது போலும். பயனில்லை. அதன் கட்டுப்பாட்டையும்மீறி விரிந்த குதம் இடைவிடாது கக்கிக்கொண்டிருந்தது.



"மாத்தளை எங்கள் மலையகத்தின் தலைவாயில் தமிழகக் கரையிலிருந்து பயங்கரப்படகுகள் மூலம் கடலைக்கடந்து, கொடிய கானகங்களுக்கிடையே கால்நடையாய் உயிர்தப்பி வந்ததற்காக நன்றி கூறும் முதல் தெய்வம் எங்கள் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன். மலையக மக்களின் வரலாறு மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாற்றுடன் ஆரம்பமாகிறது” என்கிறார் மலையகத்தின் கல்விமான் அமரர் இர.சிவலிங்கம். 

சூரியகுமாருக்கு நாளை காலை பத்திற்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட சுப வேளையில் திருமண எழுத்து நடைபெற இருந்தது.
வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனிப்புகாரில் பாதை தெளிவாகத் தெரியவில்லை. பனிமூட்டத்தில் போகிறபாதை தெளிவாகத் தெரியாவிட்டாலும் செல்லவேண்டிய இடத்தை அடைவதில் சுகி குறியாக இருந்தாள்.


அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். தங்கள் பதிவுகளில் எஸ்.ரி. ஆர். பற்றியும் ஜோர்ஜ் குருஷ்ஷேவ் பற்றியும் நீங்கள் எழுதியிருந்த குறிப்புகளை படித்தேன். அருமை. ஜோர்ஜ் குருஷ்ஷேவை 2007 இல் கனடா வந்த சமயம் ஒரு சந்திப்பில் கண்டு பேசியிருக்கின்றேன். அவரது முகத்தில் தவழும் மந்திரப் புன்னகையையும் நீங்கள் குறிப்பிட்டிருந்தது சிறப்பு. அவருக்கு பெப்ரவரி 27 பிறந்த தினம் என தங்கள் மூலம் அறிந்து வாழ்த்துகின்றேன்.
முன்னுரை
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









