"அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!" - பாரதியார் -
பாரதியின் வரிகள் எல்லாமே இருப்பின் அனுபவத்தெளிவு மிக்கவை, ஆனால் எளிமையானவை. அதனால்தான் கேட்பவர் உள்ளங்களை வெகு இலகுவாகக் கவர்ந்து விடுகின்றன. அவரது 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா'ப் பாடல் எனக்குப் பிடித்த அவரது கண்ணம்மாப் பாடல்களிலொன்று: https://www.youtube.com/watch?v=hWIGYq3JfDU
அண்மையில் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடகர் 'சித் ஶ்ரீராம்' ( Sid Sriram ) குரலில் கேட்டேன். கேட்டதுமே என்னை மிகவும் கவர்ந்து விட்டது. https://www.youtube.com/watch?v=hWIGYq3JfDU
பாடல் வரிகள் முழுமையாக:
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்.
பொன்னை, உயர்வைப், புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று.
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்.
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்.
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்.
துன்ப மினியில்லை , சோர்வில்லை,
சோர்வில்லை, தோற்பில்லை.
நல்லது தீயது நாமறியோம்.
நாமறியோம் நாமறியோம்.
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்.