என் அபிமானப் பாடகர்களில் ஒருவரான பாடகர் ஜெயச்சந்திரனின் மென்மையாக இதயங்களை வருடிச் செல்லும் குரலில் ஒரு பாடல். இன்று , மார்ச் 3, அவரது பிறந்த நாள்.
நான் கேட்ட இவரது குரலில் ஒலித்த முதற் பாடல் 'அலைகள்' திரைப்படத்தில் வரும் 'பொன்னென்ன பூவென்ன கண்ணே' பாடல்தான். நடிகர் விஸ்ணுவர்த்தனுக்காகப் பாடியிருப்பார். யாழ் ராஜா திரையரங்கில் பார்த்த திரைப்படம் 'அலைகள்'.
ஆனால் இன்று இவர் நினைவாகக் கேட்கும் பாடல் 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள, கவிஞர் வாலியின் வரிகளை, இசைஞானி இளையராஜாவின் இசை தாங்கி வரும் 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி' பாடல். நடிகர் விஜயகாந்துக்காகப் பாடிய பாடல். விஜயகாந்தின் திரைப்பட வாழ்க்கையில் முக்கிய மைல் கல் 'வைதேகி காத்திருந்தாள்'. https://www.youtube.com/watch?v=bihKCX6nDQA
இசை, வரிகள், குரல் & நடிப்பு அனைத்தும் ஒன்றிணைந்து நெஞ்சை வாட்டி ஈர்க்கும் பாடல்களிலொன்று இந்தப்பாடல்.
பாடலில் பிடித்த வரிகள்:
"நீரு நிலம் நாலு பக்கம்
நான் திரும்பி பாத்தாலும்
அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற.
நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுற.
ஆலையிட்ட செங்கரும்பா
ஆட்டுகிற எம் மனச.
யாரை விட்டு தூதுசொல்லி
நான் அறிவேன் உம் மனச.
உள்ளமும் புண்ணாச்சு.
காரணம் பெண்ணாச்சு."
https://www.youtube.com/watch?v=bihKCX6nDQA