மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்!
என் நட்பின் ஆழ்கடலே!
நதியே! பூங்காற்றென்னும் தோழியே!
நினைவை மீட்டெழுப்பும் நட்புறவே!
பெண்ணே! நட்பின் அறனே!
நட்பு வானத்தில் எங்கள்
நினைவுகளை பரப்பிய அழகே!
குயிலே! எங்கள் நினைவுகளில்
தோகை விரித்தாடும் மயிலே!
காலமும் நேரமும் நட்பின்
வழியே கடந்து போகையிலே
பறவையின் ஓசையும் நட்பின்
ஓசையும் இணைந்தே போகட்டும்.
தோழி, உன் நினைவுகளால்
கவி வரைகின்றேன் மகளிர் தினத்தன்று.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









