மானுட மற்றும் சமூக விஞ்ஞானத்துறைகளில் நடைபெறவுள்ள இரு வாரப் பயிற்சிப்பட்டறை மற்றும் ஆய்வில் கலந்துகொள்வற்காக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றும் 'ஆர். பென் டில்கரன்' (R.Ben Dilharan) ஐக்கிய இராச்சியத்திலுள்ள 'யுனிசர்சிடி ஒஃப் எக்ஸேடெர்' (University of Exeter) சென்றுள்ளார். இவர் யாழ் அராலி வடக்கைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சிப்பட்டறை & ஆய்வானது கடந்த வருடம் மேற்படி பல்கலைக்கழகத்தினரின் போருக்குப் பிந்திய யாழ்ப்பாணத்தின் அடையாளம், இடம், சமூகம் மற்றும் மானுடவியல் சம்பந்தமான விஜயத்தின் தொடர்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாய்வு மற்றும் பயிற்சிப்பட்டறையானது பென் டில்கரன் இராச்சியத்திலுள்ள 'யுனிசர்சிடி ஒஃப் எக்ஸேடெர்' பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ஜில் ஜூலிஎஃப் (Gill Julieff) , முனைவர் டெபொரா மக்ஃபார்லேன் ( Deborah Macfarlane) ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பினைத் தருகின்றது.
இந்தப்பயிற்சிப்பட்டறை பராம்பரிய வரலாற்றிடங்களுக்கான விஜயம், யாழ்ப்பாணத்துக் கலை பற்றிய கண்காட்சி, குழுக் கலந்துரையாடல், விருந்தினர் உரை ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது. அத்துடன் இத்திட்டம் சம்பந்தமான எதிர்காலத் திட்டம் பற்றிய மேலதிகக் கலந்துரையாடலிலும் பங்கு பற்றும் சந்தர்ப்பத்தையும் தருகின்றது. அத்துடன் பேராசிரியர் ருத் யங் (Prof.Ruth Young), முனைவர் எம்மா டிவையெர் ( Dr.Emma Dwyer) ஆகியோருடன் இவ்விடயங்கள் பற்றிய உரையாடல்களைத் தொடர்வதற்கும் , திட்டமிடுதலுக்கும் இப்பயிற்சிப்பட்டறை வழங்குகின்றது.
இப்பயிற்சிப்பட்டறைக்கான உதவி விரிவுரையாளர் ஆர்.பென் டில்கரனின் பயணம் வெற்றிபெற, சமூகப்பயன் விளைந்திட வாழ்த்துகள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.