நூல் அறிமுகம்: புதிதாகச் சிந்திப்போம். சமுதாயத்திற்கான கல்வி -பேராசிரியர் மா.சின்னத்தம்பி

அண்மையில் நான் படித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்ததும் எமது சமுதாயத்திற்கு பெரிதும் உதவக் கூடியதும் எனச் சொல்வதானால் அது பேராசிரியர் மா.சின்னத்தம்பி எழுதிய 'புதிதாகச் சிந்திப்போம்.- சமுதாயத்திற்கான கல்வி' என்ற நூலாகும். பேராசிரியர் மா.சின்னத்தம்பி பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறைப் பேராசிரியர். எமது சமூகத்திற்கு புதிய ஊற்றுக் கண்ணைத் திறந்துவிடுவது போல எமக்குத் தேவையான கல்வி முறை பற்றி, கட்டுரைகள் மற்றும் உரைகள் வாயிலாக அறியத் தருபவராவார். நூலின் அந்தத் தலையங்கமே மிகவும் அர்த்தபுஸ்டியானது. கல்வி என்பதை அறிவுக் கண்ணைத் திறப்பதற்கானது என்பதை பாரம்பரியமாகப் போற்றி வந்தவர்கள் நாம். ஆனால் கல்வியானது தனி நபரது முன்னேற்றத்திற்கு மட்டுமே ஆனதாக எல்லைப்படுத்தப்படும் துரதிஸ்டவசமான நிலைக்கு நாம் இன்று தாழ்ந்து போயிருப்பதைக் காண்கிறோம்.





ஒரு தேசத்தின் வரலாறு எப்போதும் வென்றவர்களாலேயே எழுதப்படுகின்றது. இன்று நாம் வாசிக்கும் ஆரம்பகால உலக வரலாற்று நூல்களைக் கூர்ந்து நோக்கினால் அவை ஆக்கிரமிப்பாளர்களாலும்ää காலனித்துவ ஆட்சியாளர்களாலும், அவர்களின் சிந்தனைப் பள்ளிகளில் மூளைச்சலவை செய்யப்பட்ட சுதேசிகளாலும் எழுதப்பட்டனவாகவே பெருமளவில் இருப்பதை அவதானிக்கலாம். ஆளும்வர்க்கத்தின் பார்வையில் அமைந்த இத்தகைய வரலாற்று நூல்கள் எதிர்காலம் எதைத் தெரிந்துகொள்ளவெண்டுமென அவர்கள் தீர்மானித்தார்களோ அவற்றையே உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது வழமை. தம்மால் தோற்கடிக்கப்பட்டவர்களின் நியாயங்கள்ää தியாகங்கள் எல்லாம் அவற்றில் மழுங்கடிக்கப்பட்டிருக்கும். வென்றவர்கள் இருந்தால் தோற்றுப் போனவர்களும் இருக்கவே செய்வர். இது இயற்கையின் விதி. அப்படியாயின், வரலாற்றில் அடக்கப்பட்டவர்களின் பக்க நியாயங்களை எடுத்துக் கூறும் வரலாறுகள் எங்கே புதையுண்டு போயின என்று தேடும்போது எமக்கு அவர்களால் அவ்வப்போது எழுதிவைக்கப்பட்ட ஆக்க இலக்கியங்களே பார்வைக்கு எஞ்சியிருக்கின்றன. அது நாட்டாரிலக்கியமாகலாம், கவிதையாகலாம், நாவலாகலாம்ää சிறுகதையாகலாம், ஏன் கடிதங்களாகவும்கூட இருக்கலாம். அந்த இலக்கிய வரிகளுக்குள் கூர்ந்து பார்த்தால் சொல்லப்படாத செய்திகளாக வரலாற்றுத் தகவல்கள் பல உருமறைப்புச் செய்யப்பட்டு ஒரு வரலாற்று மாணவனின் வருகைக்காகக் காத்திருப்பதைக் கண்டுகொள்ளலாம்.

‘அசோகனின்வைத்தியசாலை’என்ற நாவல், அவுஸ்திரேலியாவில், மிருக வைத்தியராகவிருக்கும், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து அங்குவாழும் நொயல் நடேசனின் மூன்றாவது நாவலாகும். இந்த நாவலுக்கு, இதுவரை ஒரு சிலர் முகவுரை, கருத்துரை, விமர்சனம் என்ற பல மட்டங்களில் தங்கள் கருத்துக்களைப் படைத்திருக்கிறார்கள். இந்த நாவலுக்கு, இன்னுமொரு புலம் பெயர்ந்த எழுத்தாளர் என்ற விதத்தில், இவரின் நாவல் பற்றிய சில கருததுக்களையும, இவருடைய நாவலில் படைக்கப் பட்டிருக்கும் பெண் பாத்திரங்கள் பற்றி, எனது சில கருத்துக்களையும் சொல்ல வேண்டுமென்று பட்டதால், இந்தச் சிறு விமர்சனத்தை வைக்கிறேன். அவுஸ்திரேலியா, அமெரிக்கா,நியுசீலாந்து, கனடா போன்ற ஒரு புதிய உலகம். அவுஸ்திரேலியா கிட்டத்தட்ட இருநூறு வருடங்களுக்குக் கொஞ்சம் கூடுதலான சரித்திரத்தைக் கொண்டது. உலகின் பல தரப்பட்ட மக்களும் குடியேறிய நாடு. பல நாடுகளிலுமிருந்து போன மக்கள் தங்களுடன் தரப்பட்ட கலை,கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்டு சென்றவர்கள். தாங்கள் கொண்ட சென்ற புகைப்படத்திலுள்ள தங்களின் இளமைக் கால நினைவுகளுடன், தங்கள் பழைய சரித்திரத்தைப் பிணைத்துக் கொண்டவர்கள்.





கலை இலக்கியப் பார்வைகள் என்ற இந்தத் தொகுதி மீரா பதிப்பகத்தினூடாக வெளிவரும் கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் பதினைந்தாவது நூலாகும். மீரா பதிப்பகத்தின் 102 ஆவது வெளியீடாக 122 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் இலக்கிய விடயங்களுக்கு அப்பால் நாடகம், சினமா, உலக இலக்கியங்கள், தொடர்பாடல் என பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. நவீன இலக்கியத்தின் ஆரம்பகால செல்நெறி பற்றி அறிய முனையும் இன்றைய மூத்த இலக்கியவாதிகளுக்கும், புதியதலைமுறை இலக்கியவாதிகளுக்கும் இந்நூல் ஓர் உசாத்துணையாக திகழும் என்பதை உறுதியாகக் கூறமுடியும். 26 தலைப்புக்களில் தேசிய இலக்கியம், சர்வதேச இலக்கியம் பற்றி இந்த நூல் அலசி ஆராய்கிறது. 1989 - 2000 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தான் பத்திரிகைகளில் எழுதி பிரசுரமான பல்வேறுபட்ட ஆக்கங்களின் தொகுப்பாகவே நூலாசிரியர் இந்த நூலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தான் இதுவரை எழுதிய குறும்பாக்களில் பெரும்பாலானவற்றை தெரிவுசெய்து நூறு தலைப்புக்களில் நூறு குறும்பாக்களைத் தொகுத்து 84 பக்கங்களில் கலாபூஷணம் பாலமுனை பாறூக் அவர்கள் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் தனது நூலை வெளியீடு செய்துள்ளார். இந்த நூல் குறும்பா பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள வழியமைத்துத் தந்திருக்கிறது. இன்று பலராலும் பெரும்பாலும் அறிந்து வைக்கப்படாத ஒரு வடிவமாகவே குறும்பாவைக் கருதலாம். ஆனாலும் அனைவரும் கட்டாயம் இந்த வகையான வடிவத்தையும் தெரிந்துகொள்வது அவசியமாகின்றது. மறைந்த கவிஞர் மஹாகவி என்று அறியப்படுகின்ற து. உருத்திரமூர்த்தி அவர்ளே தமிழில் குறும்பா என்ற இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியவராவார். குறும்பாக்கள் குறுமையாக இருப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் குறும்பும் செய்கின்றன. அந்ந வகையில் இந்தத் தொகுதியில் உள்ள அநேகமான குறும்பாக்கள் குறும்பு, அங்கதம், கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, எள்ளல், துள்ளல் என நகைச்சுவை ததும்புவனவாக அமைந்துள்ளன. எழுத்தினூடாக நகைச் சுவை உணர்வைக் கொண்டு வருவதென்பது காட்சி அமைப்பு, உடல் அசைவு, நடிப்பு, சம்பாஷணை என்பவற்றினூடாக அதனைக் கொண்டு வருவதை விடவும் சிரமமான காரியமாகும் என்பது புலனாகின்றது. ஆனாலும் அதனை முயற்சி செய்து பார்த்திருக்கிறார் பாலமுனை பாறூக் அவர்கள்.
ஒரு ஆசுவாசமான காலைப் பொழுதில்தான், கருணாகரனின் கவிதைகள் மீது என் பார்வை பதிந்திருந்தது. ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ – தலைப்பைப் போலவே, கவிதைகள் தோறும், போரின் நெடில். கவிதை மற்றும் புனைவுகளை வாசிக்கும் போது, தவிர்க்க முடியாமல் ஒரு சிக்கல் எழுவதுண்டு. பின்-நவீனத்துவவாதிகள் சொல்லுவது போன்று எல்லா சந்தர்ப்பங்களிலும், படைப்பாளி இறந்துவிடுவதில்லை. கருணாகரனின் கவிதைகள் மீது பார்வை படர்ந்த போதும், கவிதையுடன் சேர்த்து கூடவே, கருணாகரன் பற்றியும் சிலதையும், மனது அசைபோட்டுக் கொண்டது. எனக்குத் தெரிந்த கருணாகரன், புலிகளின் வன்னி முற்றங்களுக்குள் விமர்சனங்களை பவுத்திரப்படுத்தியவாறு வாழப் பழிகிக்கொண்ட சிலரில், ஒருவர். கருணாகரனுக்கும் எனக்குமான முதல் சந்திப்பு நிகழ்ந்த அந்த நாட்களை எண்ணிப்பார்ப்பது, இந்தக் கவிதைத் தொகுப்பைப் பொறுத்தவரையில் கனதியானதாகும். அந்த நாட்கள் மிகவும் இனிமையானவை. இடது, வலது என்னும் கருத்து மூட்டைகளை ஒரு பக்கமாக வீசிவிட்டு, வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தமிழ்நாடு என்று, அனைத்துப்பகுதி படைப்பாளுமைகளும் சங்கமித்துக்கிடந்த ஒரு நாளில்தான், நாங்கள் நட்பாகிக் கொண்டோம். அது ‘மானுடத்தின் தமிழ் கூடல்’ என்னும் சுலோகத்தின் கீழ் அரங்கேறியிருந்தது. பின்நாட்களில், கருணாகரனின் கிளிநொச்சி முற்றத்திலிருந்து நாங்கள் பல தடைவைகள் அளவளாவியிருக்கிறோம். முரண்பட்டுமிருக்கிறோம்.






புதிய பண்பாட்டுக்கான வெகுசன அமைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் எனக்கு அறிமுகமானவர் தோழர் நடராஜா ஜனகன். அவர் நவ சமசமாஜக் கட்சியில் நீண்டகாலம் சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகின்றவர். தமது தேடல்களில் கிடைக்கப்பெற்ற தகவல்களையும் அனுபவங்களையும் கொண்டு History of Left Movement in Sri Lanka என்ற நூலை எழுதியிருக்கின்றார். இந்நூல் வெளியீடு கடந்த வாரம் (30 ஜனவரி) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. ஏதோ மறதியின் காரணமாக எனக்கு அழைப்பிதழ் அனுப்ப மறந்திருக்க கூடும்;. நண்பர் மல்லியப்பு சந்தி திலகர் தான் இது பற்றிய பத்திரிகை செய்தியை எனக்கு அறிவித்ததுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். நிகழ்வு சரியாக மாலை 5 மணிக்கு தொடங்கிவிட்டது. முதலாவது உரையினை கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி; வழங்கினார். இடதுசாரி இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை எடுத்துக்கொண்ட முயற்சி என்பன குறித்து உரையாற்றிய அவர் - இன்று ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள் - அத்தகைய மாற்றங்களின் பின்னணியில் இடதுசாரி இயக்கங்கள் தன்னை எவ்வாறு புனரமைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி கூறிய அவர்,மிக முக்கியமாக இடதுசாரி இயக்கங்கள் பற்றிய பல விடயங்களை பேசுகின்ற இந்நூல் இன்று ஏற்பட்டுள்ள சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது பற்றியும் கூறியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
‘பாட்டி சொன்ன கதைகள்’ என்பது இங்கு நாம் நயங்காணவிருக்கின்ற நூலின் பெயர். லெ.முருகபூபதி இதனைப்படைத்திருக்கின்றார். இதிலே இருப்பவை உருவகக்கதைகள். பன்னிரண்டு கதைகள் இங்கே இருக்கின்றன. இந்த நூலுக்கு பெயர் வந்த காரணம், இதனை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த உந்துசக்தி என்பனவற்றை நூலாசிரியர் தம்முடைய முன்னுரையிலே விரிவாகச் சொல்லியிருக்கிறார். “இரவிலே உறங்கும் வேளையில் நான் கண்ணயரும் வரையில் என்னருகே படுத்திருந்து - எனது தலைமயிரை கோதிவிட்டவாறு பாட்டி சொன்ன கதைகள் இவை. இக்கதைகள் பின்பு கனவிலும் வந்திருக்கின்றன. மனதிலும் பதிந்துகொண்டன. அந்தப்பதிவு இங்கு பகிரப்படுகிறது.” என்கிறார்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









