நூல் அறிமுகம்: காபீர்கள் எழுதிய இஸ்லாமியக் கதைகள்{ கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்தளித்த ‘காபிர்களின் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!
“இந்தியா போன்ற கொந்தளிப்பான தேசத்தில் இது போன்ற நூறு தொகுப்புகள் வரவேண்டிய அவசியம் இருகின்றது” மேற் கூறிய எடுகோளுடன் கீரனூர் ஜாகீர் ராஜாவின் முயற்சியில் எதிர் வெளியீடாக ‘காபிர்களின் கதைகள்’ என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பொன்று வெளிவந்துள்ளது. இன்று இந்திய உபகண்டத்தில் கொழுந்து விட்டெரியும் இந்து-முஸ்லிம் பிரச்சினையானது சிக்கலும் நெருக்கடியும் மிகுந்த காலகட்டங்களை எல்லாம் கடந்து அபாயகரமானதோர் காலகட்டத்திற்குள் பிரவேசித்துள்ளது. இந்தியப் பெருந்தேசியம் என்ற கட்டமைப்பை செயலுறுத்த இந்துமதம் என்ற பேரமைப்பை பிணைப்பு சங்கிலியாக வலியுறுத்தும் அதிகார வர்க்கம், அதற்கு இந்திய தேசத்திற்கு உள்ளும் புறமுமாக இஸ்லாமியர்களை ஒரு எதிர்சக்தியாக பகைமுரனாக காட்டி வருகினறது. பாபர்மசூதி தகர்ப்பும், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் அதைத் தொடர்ந்து வந்த தொடர் கலவரங்களும் இதை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றன. ஈழத்திலும் இத்தகைய பதற்றமான ஒரு சூழ்நிலையே இன்று நிலவுகின்றது. அங்கு பல நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்த தமிழ்-முஸ்லிம்களின் சகோதரத்துவ உறவானது, முஸ்லிம் ஊர்காவல் படையினரின் உருவாக்கத்துடன் முறுகல் நிலையை அடைந்து, பின்பு விடுதலைப் புலிகளின் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம், காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் எனும் சம்பவங்களின் ஊடாக மாபெரும் விரிசல் நிலையை அடைந்துள்ளது. இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் மற்றைய சமூகங்களின் எதிர்ப்புணர்வுகளின் மத்தியில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு முஸ்லிம் சமூகங்களும் மற்றவர்களில் இருந்து தம்மைத் தாமே தனிமைப்படுத்தியும் வேறுபடுத்திக் காட்டும் முகமாகவும் ஆடை அணிகலங்கலிருந்து மற்றைய பழக்க வழக்கங்கள் வரை வித்தியாசமாக தம்மை அடையாளப்படுத்திக் காட்டுவதும் மத அடிப்படைவாதிகளாகவும் வஹாபிகளாகவும் மாறும் போக்கும் இன்று அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய காலமும் சூழலும் உவப்பாக இல்லாத ஒரு கால கட்டத்தில் காலத்தின் தேவை கருதியும் சூழலின் அவசியத்தை உணர்ந்தும் ஜாகீர் ராஜா அவர்கள் இத்தொகுப்பினை வெளிக்கொணர்ந்துள்ளார்.


நல்ல சிந்தனைகள் மனித மனதை வலுப்படுத்துகின்றன. அவ்வாறு தோன்றும் சிந்தனைகளை ஏனையோருக்கும் தெரியப்படுத்தும் பணியை ஒரு எழுத்தாளன் தன் எழுத்துக்களுக்கூடாக செய்கின்றான். உள்ளத்தில் தோன்றிய உணர்வுகள் ஏனைய வாசகர்களோடு சங்கமிக்கும் போது யதார்த்த வாழ்வியல் குறித்த உண்மையை அறிய அது காரணியாக அமைந்து விடுகின்றது. சிறுகதைகள் அப்பணியை செவ்வனே நிறைவேற்றுகின்றன. சொல்ல வந்த விடயத்தை ஆழமாகவும் நேர்த்தியாகவும் பாத்திரங்களினூடாக அல்லது கதாசிரியரே கதைசொல்லியாக திறம்பட சொல்லும் போது அச்சிறுகதை உயிர் பெறுகின்றது.
சூசை எட்வேட் என்பவர் நாடறிந்த எழுத்தாளர். அவரது சிறுகதைகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. பத்திரிகைகளில் அவரது படைப்புக்கள் அதிகமான அளவில் வெளியிடப்பட்டு வருவதும் அவரது எழுத்துத் திறமையை வெளிக் காட்டுகின்றது.


“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
நவீன தமிழ் இலக்கிய மரபானது புலம்பெயர் இலக்கியப் படைப்புக்களினால் இன்னொரு பரிமாணத்திற்கு நகர்த்திச் செல்லப் பட்ட போதிலும் இதுவரை வெளிவந்த அநேகமான புலம்பெயர் இலக்கியப் படைப்புக்கள் யாவும் தாயகம் நோக்கிய எண்ணங்களையும் ஏக்கங்களையும் பிரதிபலிப்பவையாக அல்லது புலப்பெயர்ந்த ஒரு நிலத்தில் அவர்கள் எதிர்நோக்கிய புதிய நெருக்கடிகளின் வெளிபாடுகளாகவும் மட்டுமே அமைந்திருந்தன. இவற்றிற்கு மாறாக இப்புலம்பெயர் மண்ணில் தாம் எதிர் நோக்குகின்ற நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர் கொள்கின்ற மற்றைய சமூகங்களையும் கதை மாந்தர்களாகக் கொண்டு அம்மண்ணின் மைய அரசியலையும் சமூக பொருளாதார பின்னணிகளையும் களமாககொண்டு ஒரு புதிய படைப்பாக சேனன் அவர்கள் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் வெளிவந்துள்ளது. இந்நாவலானது புலம் பெயர் இலக்கிய மரபை இன்னொரு தளத்திற்கு நகர்த்தி சென்றுள்ளதாகவும் அதற்கு இன்னொரு பரிமாணத்தை வழங்கியுள்ளதாகவும் இலக்கிய விமர்சகர்களினாலும் ஆய்வாளர்களினாலும் மிக அண்மைக்காலமாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. 
மன்னார் அமுதனின் ‘அக்குறோணி’ கவிதைத் தொகுதிக்கு நயவுரை வழங்கியோரில் நானும் ஒருவன். அதன் பின்னர் அமுதனின் இந்தக் கவிதைத் தொகுதி உங்கள் கரங்களுக்கு வந்திருக்கிறது. அக்குறோணி கவிதைகளின் போக்கிலிருந்து வித்தியாசப்பட்ட கவிதை சொல்லும் வகையில் இக்கவிதையில் அமைந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
யதார்த்தமான விடயங்களை அச்சுப் பிசகாமல் வாசகர்களிடம் முன்வைப்பது எழுத்தாளர்களால் மாத்திரமே சாத்தியமாகின்றது. அதையும் சுவாரஷ்யமான முறையில் தெளிந்த மொழிநடையுடன் சமர்ப்பிக்கும் ஆற்றல் எல்லோரிடத்திலும் வாய்த்து விடுவதில்லை. சிங்களமொழி மூலம் கல்வி கற்று தமிழ் மீது கொண்ட அபிமானத்தால் இலக்கியவாதியாக உருவெடுத்து இன்று தன் பெயரை நிலைக்கச் செய்திருப்பவர் எழுத்தாளர் ஏ.சீ. ஜரீனா முஸ்தபா அவர்கள். நாவல் துறையில் அதிக முனைப்புடன் செயற்பட்டு வருபவர். ஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37ம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய 04 நாவல்களையும், ரோஜாக் கூட்டம் (சிறுவர் கதை), பொக்கிஷம் (கவிதைத் தொகுதி) ஆகிய நூல்களையும் அத்துடன் யதார்த்தங்கள் என்ற சிறுகதைத் தொகுதியை அடுத்து மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதியையும் இதுவரை இவர் வெளியிட்டிருக்கின்றார். மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதி நூலாசிரியரின் 08 ஆவது நூல் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.
உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகள் சிகிச்சையளிப்பது போன்று மனதில் தோன்றும் நோய்களுக்கு இலக்கியம் சிக்கிச்சையளிக்கின்றது. இது எழுத்தை நேசிக்கும் பெரும்பாலானவர்களின் கருத்து. அவ்வாறு குணப்படுத்துபவர்களுள் வைத்திய கலாநிதி ச. முருகானந்தன் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்.
நவீனத் தமிழிலக்கியச் சூழலில் சிறுகதை இன்னமும் தனது செழிப்பையும் செல்வாக்கையும் இழந்துவிடவில்லை. ‘சிறுகதை எனப்படுவது ஒரு சிறிய கதை’ என்ற சௌகரியம் அதற்கான ஒரு புறவயமான காரணம். எனினும் அதற்கும் அப்பால், சிறந்த சிறுகதை ஒன்றினுள் அடங்கியிருக்கும் அளவிறந்த ஆற்றலே அல்லது உள்ளார்ந்த வீரியமே அதன் சிறப்பின் மூலாதாரம். ‘அணுவைத் துளைத்தலும், ஏழு கடலைப் புகுத்தலும்’ சிறுகதைக்குள்ளும் நிகழ்த்தப்படக்கூடிய சித்து வித்தைகள்தான் என்பதற்குச் சாட்சியங்கள் நிறையவுண்டு. தமிழ்ச் சிறுகதையின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சொல்முறைமையிலும் காலநகர்வுக்கேற்ப அவ்வப்போது பரிணாம மாற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றபோதிலும், அதற்கான தேவையிலும் தேடலிலும் சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஏதும் இதுவரை தென்படவில்லை!
கிழக்கிலங்கையின் தெற்கே அமைந்துள்ள தம்பிலுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரி நாதனின் கன்னிக் கவிதைத் தொகுதியே விடைதேடி எனும் கவிதை நூலாகும். 100 பக்கங்களில் அமைந்துள்ள இந்தக் கவிதை நூலில் 75 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இக்கவிதைகள் தாயன்பு, தமிழின் சிறப்பு, ஆடவரின் அடக்குமுறை, இனத்துன்புறுத்தல்கள், வன்னிப் போரின் கொடூரம், கடமையுணர்வு, ஆசிரியரின் பெருமை, வாழ்வியல் தரிசனங்கள், மனித நடத்தைக் கோலங்கள், சிறுவர் துஷ்பிரயோகம், காணாமல் போனோர் ஆகிய கருப்பொருட்களில் அமைந்துள்ளன.

ஒரு நாவலை வாசிக்கிற போது, அதனை ரசித்து உள்வாங்கிக் கொள்வதென்பதும் அதன் கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போவதென்பதும் வேறு வேறு நிலைரசனை கொண்டவை. ஆழ்ந்து அவதானித்தால் இரண்டு ரசனைகளுக்கிடையே நிரம்ப வித்தியாசங்கள் உண்டென்பதைக் கணிக்க முடியும். இவ்விரண்டு நிலையுமே வாசிப்பின் நிறைவை வெளிப்படுதும் பாங்குதான் என்றாலும், நாவலோடு ஒன்றிப்போவதென்பதையே கூடுதல் ஈடுபாடாகக் கருதயிடமுண்டு!. தோழர் பாரதிநாதனின் 'வந்தேறிகள்' நாவலை வாசித்த போது என் நிறைவை, கூடுதல் ஈடுபாடுகளுடன்தாம் உணர்ந்தேன்!
பூங்காவனம் 19 ஆவது இதழ் பூங்காவனம் வாசகர் கரங்களில் தற்பொழுது மணம் பரப்பிக்கொண்டிருக்கின்றது. பூங்காவனத்தின் வழமையான அம்சங்கள் இந்த இதழையும் அலங்கரித்திருக்கின்றன. டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை வாசகர்கள் அறிவார்கள். அதனை நினைவுபடுத்துமுகமாக ஆசிரியர் பக்கத்தில் சிறந்த பல யோசனைகள் தரப்பட்டிருக்கின்றன. மனதில் உறுதியிருந்தால் உடலில் ஏற்படும் ஊனம் திறமையை பாதிப்பதில்லை என்பதையும், ஏனையவர்கள் ஊனமுற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்தவே வருடாந்தம் ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கின்றது. மேலும், முயற்சியையே மூலதனமாகக் கொண்டுள்ள ஊனமுற்றவர்கள் உலக ரீதியாக பல சாதனைகளைப் படைத்திருக்கின்றனர். இறைவன் இவர்களுக்கு விசேட வல்லமைகளைக் கொடுத்திருக்கிறான் என்ற உண்மையும் கூறப்பட்டிருக்கிறது. ஊனம் என்பது தனிநபர் சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதால் அவர்களை அணுகி அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை வழங்கி நட்புடன் உறவாடி `வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற உண்மையை உணர வைக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. 


ராஜாஜி ராஜகோபாலன் ஈழத்தில் இருந்த கனடாவுக்குச் சென்று அங்கு வசித்த வருபவர். அவருடைய படைப்பாக வளரி எழுத்துக்கூடம் வெளியிட்ட ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம் பற்றி சில குறிப்புக்கள் . கவிதை என்பது உள்ளத்து உணர்வுகளை வெளிக்கொணரும் மொழியின் ஒரு அழகிய பகுதி . அந்தக்கவிதையை கையிலெடுத்த ராஜகோபாலன் ஈழத்து வாழ்வியலை அதன் பண்பாட்டம்சங்களை அழகிய கவிதைகளாக இத்தொகுதியில் தந்திருக்கிறார். "அம்மாமெத்தப் பசிக்கிறதே" என்ற கவிதை போர் முனையில் சிதைந்த ஒரு சிறுவனின் வாய்ப்பாடாக பின்வருமாறு வெளிப்படுகிறது "வானமே எங்கள் கூரையம்மா. வெண் மணலே எங்கள் கம்பளமாம். வேலிக்கு வெளியே வேறுலகம். வேதனை என்பதே நம்முலகம்.
சுபகாரியம் சீக்கிரம் என்பார்கள். சுபகாரியம் மட்டுமல்ல - எந்தக்காரியத்தையும் தாமதிக்காமல் உரியவேளையில் செய்யத்தவறிவிட்டால் அதற்கான பலனையும் அடைய முடியாமல் போய்விடும் என்பதும் நிதர்சனமான உண்மை. பல மாதங்களுக்கு முன்னர், எனது அக்காவின் சம்பந்தியான ஸ்ரீஸ்கந்தராஜா அண்ணா, என்னிடம் மரம் மாந்தர் மிருகம் என்ற நூலைத்தந்து, தனது ஆசான் பொ. கனகசபாபதி அவர்கள் எழுதியது என்றார். அவர் எப்பொழுதும் நல்ல விடயங்களை எனக்கு அறிமுகப்படுத்துபவர்.அத்துடன் நல்ல இலக்கிய ரசிகர். யாழ்.மகாஜனா கல்லூரியின் பழையமாணவர். இக்கல்லூரியின் பல பழையமாணவர்கள் கலை, இலக்கியவாதிகளாகவும் ஊடகவியலாளர்களாகவும் இருப்பதாக அறிவேன். மகாஜனா கல்லூரியில் விஞ்ஞானப்பட்டதாரி அதிபராக பணியாற்றியவர் கனகசபாபதி. மரம் மாந்தர் மிருகம் நூலை கையில் எடுத்தவுடன், மரங்களின் தன்மைகளைப்பற்றிய பட்டியல் தரும் நூலாக இருக்குமோ...? என்ற எண்ணத்திலேயே நூலைப்படித்தேன். ஆனால், அதனைப்படிக்கும்பொழுது எனக்குள் ஆச்சரியங்கள் மலர்ந்தன. தனது வீட்டில் பெற்றவர்களினால் வளர்க்கப்பட்ட மற்றும் தானாகவே வளர்ந்துவிட்ட மரங்கள், செடி, கொடிகள் வீட்டு மிருகங்கள் என மரங்களையும் மிருகங்களையும் அவற்றை வளர்த்த மாந்தர்களின் மகிமைகள் பற்றியும் நாம் அறியத்தவறிவிட்ட பல அரிய தகவல்களுடன் நூலை எழுதுகிறார் கனகசபாபதி.
அப்போது ஜேவிபி கிளர்ச்சிக்காலம். 1971ஆம் ஆண்டு. சரத்ஹாமு தென்னிலங்கையிலே ஹக்மண என்ற ஊரில் வாழ்கின்ற தனவந்தர். ஊர் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். கௌரவமாக வாழும் குடும்பம். சரத்ஹாமுவின் மனைவி உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். ஒருநாள் அந்தப்பாடசாலையில் இன்னொரு ஆசிரியையும் இணைகிறார். அந்த ஆசிரியை அண்மையில் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சமரநாயக்காவின் மனைவி. நாளடைவில் இரண்டு ஆசிரியைகளும் நண்பிகளாகிவிடுகிறார்கள். தினமும் பாடசாலை முடிந்தபின் மனைவியை ஜீப்பில் அழைத்துப்போகவரும் இன்ஸ்பெக்டர், அந்த தனவந்தரின் மனைவிக்கும் லிப்ட் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஒருநாள் அப்படி இறக்கிவிடும்போது உள்ளே போய் ஒரு டீயும் குடிக்கிறார். இன்ஸ்பெக்டர் குடும்பமும் தனவந்தர் குடும்பமும் நட்பு கொள்கிறது. டீ குடிக்க தினமும் இன்ஸ்பெக்டர் வரத்தொடங்குகிறார். தனவந்தர் இல்லாத டைம் பார்த்தும் வரத்தொடங்குகிறார். இன்ஸ்பெக்டரின் சரளமான ஆங்கிலம், மிடுக்கான சீருடை. கம்பீரம். சரத்ஹாமுவின் மனைவியின் அழகு. சிரிப்பு … இப்படி பல காரணங்கள். இன்ஸ்பெக்டருக்கும் சரத்ஹாமுவின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு உருவாகிறது. இன்ஸ்பெக்டரின் கண் சரத்ஹாமுவின் மனைவிமீது மட்டுமல்ல. சொத்திலும்தான். சரத்ஹாமுவை கொலை செய்துவிட்டு சொத்தையும் மனைவியையும் நிரந்தரமாக சுருட்டலாம் என்பது அவருடைய எண்ணம். ஜேவிபி பெயராலே கொலை செய்தால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. பக்காவாக திட்டம் திட்டி, ரவுடிகளை அனுப்பி தனவந்தரை கொலை செய்தும் விடுகிறார். கொலை செய்யப்போன ரவுடி இலவச இணைப்பாக சரத்ஹாமுவின் மனைவியை பாலியல் வல்லுறவும் செய்துவிடவே பிரச்சனை சிக்கலாகிவிடுகிறது. எப்படியே இன்ஸ்பெக்டர் சாட்சிகளை மடக்கி, ஜேவிபி மீது பழியினைப்போட்டு தப்பி விடுகிறார். 
சுப்ரபாரதிமணியனை அவரின் “ சாயத்திரை” நாவல் வழியாகவே எப்போதும் காணக்கிடைக்கிறார் என்பது அவர் சுற்றுசூழல் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருவதை அறிந்து கொள்ளலாம். அவற்றின் படைப்புகளில் அது வெளிப்படுத்துகிறது.இவ்வாண்டின் அவரின் புதிய சுற்றுசூழல் தொகுப்பான “ மேக வெடிப்பு “ அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.அருள் எழுதிய ஒரு கட்டுரை ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு நூலையே உருவாக்கியிருக்கிறார். இதில் அமைந்துள்ள 15 கட்டுரைகளின் பாதிப்பில் இது போன்று 15 நூல்களை நாம் உருவாக்குவதம் மூலம் சுற்றுசூழல் சார்ந்த உரையாடல்களை விரித்துக் கொண்டு போகலாம். தேன் போல் பயன் உள்ளவை இக்கட்டுரைகள். தேன் யாருக்குப் பிடிக்காது. ஆனால் மீத்தேன் யாருக்கும் பிடிக்காதுதான். மீத்தேன் எடுக்க ஆயத்தப்பணிகள் நடைபெறும் இடங்களை நான் சமீபத்தில் சென்று பார்த்தேன். அந்த என் அனுபவங்களைப் பிரதிபலிப்பவை இதில் உள்ள கட்டுரை.
இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்த காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எம்.எஸ். அப்துல் மஜீத் என்பவர். இவர் பெரும்பாலும் தனது கவிதைகளை மதியன்பன் என்ற புனைப்பெரிலேயே எழுதிவருகின்றார். காத்தான்குடி அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் மூலம் 97 பக்கங்களில் 36 பக்கங்களை உள்ளடக்கியதாக ``ஆனாலும் திமிருதான் அவளுக்கு`` என்ற மகுடத்தில் அமைந்த தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இந்தத் தொகுதியிலுள்ள அனைத்துக் கவிதைகளும் ஏற்கனவே பத்திரிகைகள், வானொhலிகள், இணையத்தளம், முகநூல், மதியன்பனின் வலைப்பூ போன்றவற்றில் வெளிவந்த கவிதைகளாகக் காணப்படுகின்றன. 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









