நூல் அறிமுகம் : பெருமாள் முருகன் எழுதிய பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
பெருமாள் முருகன் தனது முன்னுரையில் தான் அறிந்த ஐந்து விலங்குகளில் மாடுகளை பன்றிகளை பற்றி எழுதமுடியாது. நாய்களும் பூனைகளும் கவிதைக்கானவை என்கிறார். வெள்ளாடுகள் சுறுசுறுப்பானவை என்பதால் அவற்றை வைத்து நாவல் எழுதியிருக்கிறார். தெய்வங்களைப்பற்றி எழுத பேரச்சம் எனவே அசுரர்களை பற்றி எழுதுகிறேன் என்கிறார். இப்படி அவர் எழுதிய நாவல் புனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை . கோகுல் எழுதிய ஓவர்கோட்டை(Gogol’s ‘Overcoat’)ஆவிகளின் கதை என்றால் பெருமாள் முருகன் எழுதியது ஆடுகளின் கதை. ஆனால் ஓவர்கோட்டை மற்றவர்கள் ரஷ்ஷியாவில் நிலவிய வறுமையை எடுத்துரைக்கும் குறியீட்டு சிறுகதையாக நினைத்தால் , பெருமாள் முருகனும் தமிழகத்தின் வறுமையையும் அரசியலில் மக்களுக்கும் அரசுக்கும் உள்ள தூரத்தையும் எழுதியிருக்கிறார் எனலாம். அவரது நாவலைப் பார்ப்போம்
எங்கே பிறந்தது எனத்தெரியாத ஒரு நாள் வயது ஆட்டுக்குட்டியை வளர்ந்தால் ஒரே ஈற்றில் ஏழு குட்டிகள்போடும் என்று சொல்லி எங்கிருந்தோ வந்த ஒருவனால் ஒரு கிழவனுக்கு கொடுக்கப்படுகிறது. அந்த ஆட்டுக்குட்டியை ஒரு கிழவனும் கிழவியும் வளர்க்கும் கதையே இந்த நாவல். இந்நாவலை ஆட்டுக்கதை என நினைக்கலாம். ஆனால், இது ஒரு அரசியல் குறியீட்டு நாவல். மழையற்று வரண்ட மக்களது கதை. பட்டினி பஞ்சம் என்பது என்ன என்பதை மட்டுமல்ல அங்குள்ள மக்களது வாழ்வின் போராட்டமும் அவைதான் என்பதையும் படம் பிடித்துக்காட்டியுள்ளார். எந்த விவசாயிக்கும் சாதாரணமாகத் தோன்றும் கனவே இங்கு நாவலாக விரிகிறது. இதை நாவல் என்று சொல்வதைவிட ‘நொவலா’ எனலாம். கிழவன் கிழவி மற்றும் அந்த ஆட்டுக்குட்டியே பிரதான பாத்திரங்கள். மற்றவை இவர்களுக்காக உருவாக்கப்பட்டவை. நாவலுக்கான உச்சமோ முரண்பாடுகளோ அற்ற நேர்கோட்டுக்கதை. பெருமாள்முருகன் அதை மிகத்திறமையாக, கதையை ஆவலோடு வாசிக்க எம்மை ஒரு மழையற்ற கிராமத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்.
அரசியல்
சர்க்காரது பிடி எப்படி மக்களின் மேல் வலையாக பின்னப்பட்டிருக்கிறது என்பதை ஆடுகளை கணக்கெடுத்து பதிவதிலும், அவற்றிற்கு காதுகுத்தி அடையாளமிடுவதிலும் சொல்லப்படுகிறது. அதற்கு மேல் அரசாங்கத்தின் கொடுமையை புரியவைக்க பாவித்த வார்த்தைகள் சில:

கனடாவின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, கனடாவில் வாழும் 15 பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளே முதல் சிறுகதைகள் என்று எடுத்துக் கொண்டால், இத்தொகுப்பு அவர்களுக்கொரு வெற்றி. தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு படிக்கல்.
பொ கருணகரகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் மற்றைய புலம்பெயர்ந்த அனுபவங்கள்போல் சிதைந்து நாவல், சிறுகதை என உருமாறாது, கற்பனை கலக்காமல் அபுனைவாக தமிழ் இலக்கியப்பரப்பிற்கு வரவாகியுள்ளது.இதனால் இது நமது புலப்பெயர்ந்தோரது இலக்கியத்தில் முக்கியமான ஓரிடத்தைப் பிடித்துள்ளது. வாசிப்பதற்கான அவகாசத்தைத்தேடிப் பல காலங்களாக அடைகாத்து வைத்திருந்தேன். கடைசியில் அது கை கூடியது. நிச்சயமாக ஒரு டாக்சி ஓட்டுனராக அவர் முகம் கொடுத்த அனுபவங்கள் பலதரப்பட்டவை. டாக்சி ஓட்டுனராகப் பலரோடு பல தருணங்களில் ஏற்படும் சம்பவங்கள் மற்றவர்களுக்கு எக்காலத்திலும் ஏற்படாது. அதிலும் எத்தனை டாக்சி ஓட்டுனர்கள், அவர்போல் தனது அனுபவங்களை இலக்கியமாக்கும் மொழி தெரிந்தவர்கள்? அவரது மருத்துவராகும் எண்ணம் ஈடேறவில்லை என்பது உண்மை, ஆனால் அது தமிழ் இலக்கிய உலகத்திற்கு அதிஷ்டமாக அமைந்தது. மருத்துவரது நினைவுகள் அவர் இறந்தபின்போ அல்லது அவரது நோயாளிகள் இறந்தபின்போ மறைந்துவிடும். ஆனால் டாக்சி ஓட்டுனரான நண்பர் கருணாகரமூர்த்தியின் நினைவுகள் அழிவற்றவை. குறைந்தபட்சம் தமிழ்மொழியிருக்கும் வரையில் வாழும். இந்தப் புத்தகத்தில் இலங்கை நினைவுகளையும் பெர்லின் நினைவுடன் குழைத்து எழுதியது சுவையானது. அத்துடன் பல இலங்கையரது வாழ்வுகளை மற்றவர்களுடன் கலந்தது அவரது அகதித்தமிழ் வாழ்க்கையும் பதிவாக்கியுள்ளது.
புரவலர் புத்தகப் பூங்காவின் 38 ஆவது வெளியீடாக மா. பாலசிங்கம் எழுதிய தழும்பு என்ற நாவல் வெளி வந்திருக்கிறது. இதுவரை ஒரு நூலைத் தானும் வெளியிடாத பல புதிய எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள புரவலர் புத்தகப் பூங்கா இதுவரை 38 எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டிருப்பது சாதனைக்குரிய விடயம். தன் தாய் மொழியாகத் தமிழைக் கொண்டில்லாதபோதும் நம் தாய் மொழித் தமிழுக்கு புரவலர் புத்தகப் பூங்காவின் நிறுவுனரான புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது. போற்றப்பட வேண்டியது.
சிங்கப்பூர் தேசிய நூலகம் நுழைந்து நூலடுக்குகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தேன். என் கண்ணில் பட்ட நூல் “பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது” எனும் கவிதை நூல். கையிலெடுத்துக் கொஞ்சம் புரட்டினேன். அது மலாய்மொழிக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு. நூல் கனமாக இல்லையென்றாலும் என் கவனத்தைக் கவர்ந்துவிட்டது. படிப்பதா? இல்லை அங்கேயே விட்டுவிடுவதா என யோசித்துப் பின் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து படிக்கத்தொடங்கினேன். நூலாசிரியரின் முன்னுரை என்னைப்படிக்கத்தூண்டியது. அடக்கமும் எழுத்தின்மீது அக்கறையும் கவனமும் தொனித்த நடை அவர்மீதான மரியாதையைக்கூட்டியது. அதனாலயே தொடர்ந்து இருக்கையிலும் இருகையிலிருந்த நூலிலும் கவனம் பதிந்தது. மலாய்மொழிக்கவிதைகளையும் மலாய்க்கவிதைகளின் ஆங்கிலமொழிபெயர்ப்பையும் தமிழில் பெயர்த்து தந்திருந்தார் ஆசிரியர் பா. சிவம். கவிதை நூலில் ஒரு புதிய சொல் விளைந்திருப்பதைக் உணர்ந்தேன். அது ‘நகர்ச்சி’. நுகர்ச்சி நமக்கு அறிமுகமான சொல். ஆனால் இது நகர்ச்சி. பல கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.
பூங்காவனத்தின் 28 ஆவது இதழ் ஓய்வு பெற்ற அதிபரும், இலக்கிய ஆர்வலருமான திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் புகைப்படத்தை அட்டைப்படமாகத் தாங்கி வந்திருக்கிறது.
சமூகமொன்றின் இயக்கத்துக்கும் நீடித்து நிலைபெறலுக்கும், வரலாறு என்பது அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. ஆனால் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு ஆய்வாளன் ஆராய்கின்ற வழக்கிழந்த நடைமுறை ஒன்று, புவியியலால் தனித்த வேறொரு பகுதியில் இன்றும் மருவிய நிலையில் வழக்கில் இருக்கலாம். ஆனால், விரிவான தளத்தில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளும் போது அந்த மிகச்சிறு அம்சம் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புகள் உண்டு.
மனிதன்பேசித்திரியும் விலங்கு என்றொரு பழமொழி உன்டு. இடம்பெயர்தல் ஆங்கிலத்தில் மைகிரேசன் என்பார்கள் காக்கை தன் ஊரைவிட்டு வெகுதொலைவு செல்லாது.புறா,கொக்கு,நாரை, பல கிலோமீட்டர் சென்று திரும்பும்.சுப்ரபாரதிமணியன் மைகிரேசன் கொண்ட மனிதர்.திருப்பூரில் பிறந்து குன்னூர் , ஹைதராபாத் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை என பல ஊர்களில் பணி செய்த அனுபவம் கொண்டவர் ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் உண்டு அது தனக்கேயான முகம்.எனினும் பின்னால் பல முகங்கள் கொண்டவர்கள் என்பதே உண்மை.
“இந்த இராவணனின் எந்த தலை உண்மையானது?” – இது மூன்றாவது மனிதன் பெப்ரவரி 2003 இதழில் பாலு மகேந்திரா குறித்து உமா வரதராஜனால் எழுதப் பட்ட ஒரு கட்டுரையின் தலைப்பு. மேற்குறித்த கேள்வி பாலு மகேந்திரா மீது மட்டும் தொடுக்கப்படும் கேள்வி அல்ல. இப்படியான கேள்விகளை பன்முகத்தன்மை கொண்ட ஒவ்வொரு கலைஞனும் தன் படைப்பிலும் வாழ்விலும் மக்களிடமிருந்து தினந்தோறும் எதிர்கொண்ட வண்ணமே இருக்கின்றான். மேலும் அவனது படைப்புக்கும் வாழ்விற்கும் இடையேயான இடைவெளிகள் அதிகரிக்கும் பட்சத்தில் இது போன்ற கேள்விகளின் வீச்சு இன்னும் பலமானதாகவும் வீரியம் மிக்கதாகவும் விளங்கும். இதே போன்ற பல்வேறு விதமான கேள்விகளை உள்ளடக்கி, அன்று தொடக்கம் இன்றுவரை தனது திரைப்படங்களிலும் நிஜவாழ்க்கையிலும் என்றுமே சர்ச்சைகளை உருவாக்கி வரும் நடிகர் கமல்ஹாசன் மீதும் அவர் உருவாக்கிய பாத்திரங்கள்,படைப்புக்கள் மீதும் யமுனா ராஜேந்திரனால் வைக்கப்பட்ட விமர்சனக்கட்டுரைகளின் தொகுப்பாக ‘உத்தமவில்லன் – The Anti-Hero ‘ என்னும் 12௦ பக்கங்கள் அடங்கிய சிறு நூலொன்று பேசாமொழி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
எழுதப்பட்டது அல்லது பதியப்பட்டதே வரலாறு. மற்றவை ,வரலாறுக்கு முந்தியவை என வரையறுக்கப்படுகிறது வரலாறு என்பதன் ஆங்கிலப்பதம் (History) கிரேக்க மொழியில் இருந்து வந்தது. இதன் கருத்து அறிந்து ஆராய்தல் – அல்லது விசாரித்து அறிதல் எனப்பொருள்படும். இதற்கு கிளையோ (Clio) என்ற பெண்தெய்வம் அருள் பாலிப்பதாக கிரேக்கர்களால் உருவகிக்கப்படுகிறது.
பெண்கள் என்ற குழந்தை உழைப்பாளிகள் :
சமூகத்தில் நடக்கின்றவற்றை படம்பிடிக்கும் கருவியாக எழுத்தாளன் செயற்படுகின்றான். அந்த வகையில் இலக்கியத்தின் கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் என்ற பல்வேறு தளங்களிலும் செயல்படும் உ. நிசார் தன் எளிமையான எழுத்துக்களினூடாக வாசகரைக் கவர்ந்தவர். சமூகம் சார் சிறுகதைகள் இவரது ஆளுமைக்கு கட்டியம் கூறுவனவாக அமைந்திருக்கின்றன. இதுவரை 19 நூல்களை வெளியிட்டிருக்கும் இவரது 20 ஆவது நூலாக பூவிதழும் பூனிதமும் என்ற நூல் 09 சிறுகதைகளை உள்ளடக்கியதாக 96 பக்கங்களில் பானு வெளியீட்டகத்தின் மூலம் வெளிவந்திருக்கின்றது.
எங்கோ ஓர் மூலையில் இலை மறை காயாக இருந்து கொண்டு இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை உலகறியச் செய்யும் பணியை புரவலர் புத்தகப் பூங்கா மேற்கொண்டு வருகிறது. இவ்வமைப்பு மூலம் இதுவரை 37 நூல்கள் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வமைப்பின் நிறுவனரான புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் இலக்கிய உலகுக்கு தன்னாலான பல பங்களிப்புக்களை செவ்வனே செய்து வருபவர். இதுவரை பல முதற் பிரதிகளைப் பெற்று எழுத்தாளர்களை ஊக்குவித்து வருவதனூடாக ஒரு வரலாற்று சாதனையாளராக திகழ்கின்றார். புரவலர் புத்தகப் பூங்காவின் 37 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கிறது இராகலை தயானியின் அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி. 57 கவிதைகளை உள்ளடக்கி 72 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்தத் தொகுதியில் மலையகம் சார்ந்த, பெண்கள் சார்ந்த கவிதைகளே விரவிக் காணப்படுகின்றன.
திரு. ஈஸ்வரன் அவர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். வல்லநாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் 1949 இல் கொழும்புக்கு வந்தார். புனித பெனடிக்ஸ் பள்ளியில் படித்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்தார். தற்போது ஈஸ்வரன் பிரதர்ஸ் என்ற தேயிலை நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் இவர் பேருபகாரியும் கூட. எழுத்தாளரான இவர் ஏனைய எழுத்தாளர்களுக்கும் கரம் கொடுத்து உதவும் ஒரு வள்ளல். பல முக்கிய சம்மேளனங்களில் தலைவராகவும் இருக்கிறார். 
போர் என்பது ஒரு பிரதேசத்தில் பிரவேசித்து விட்டால் அந்நிலமானது மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிடுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். கூடவே இழப்புக்களும் இடப்பெயர்வுகளும் கூட அங்கு நியதிகளாகவும் நிரந்தரங்களாகவும் மாறி விடும். இத்தகைய மரணங்கள் மலிந்த பூமியிலிருந்து இன்னல்களுடனும் இழப்புக்களுடனும் இப்பூமிப்பந்தெங்கும் சிதறிப் போன பல லட்சம் ஈழமக்களினது சாட்சியங்களாகவும் குரல்களாகவும் மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்‘ எனும் கவிதைகளின் தொகுதியொன்று வெளிவந்துள்ளது.
ஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37 ஆம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய நான்கு நாவல்களைத் தொடராக வெளியிட்டு நாவல் துறையில் பிரபலமான ஒரு நாவலாசிரியராக மிளிர்ந்துகொண்டிருக்கும் திருமதி ஏ.சீ. ஜரீனா முஸ்தபா நாவல்கள் தவிர ரோஜாக் கூட்டம் என்ற சிறுவர் கதைத் தொகுதியையும், யதார்த்தங்கள், மீண்டும் ஒரு வசந்தம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். பொக்கிஷம் இவரது கவிதைத் தொகுதியாகும்.
மொழி என்பதோர் திரவிய கூடம் தாகத்தோடும் தேடலோடும் அதன் உட்புகுந்து தெரிதல் நிகழ்த்தும் ஒருவன் மொழிசார் கலைவடிவங்கள் எதையேனும் தனது படைப்புகளைத் தரும் ஒரு ஊடகமாகக் கொள்ளுதல் இயலும். அத்தகைய ஒரு தெரிதலின்போது, அவன் தனது அனுபவங்கள் மூலம் வடிவமைத்துக் கொண்ட நுண்புலனின் திறனைப் பிரயோகிக்கிறான். அந்த நேரத்தில் அவன் தெரிவு செய்கிற சொற்கள் தேர்ந்து கொள்கிற சொல்முறை வெளிப்படுத்துகிற உணர்வுகள் எல்லாம் ஒருங்கிணைந்து அவனுக்கான கலைவடிவ உருவாக்கத்தைத் தீர்மானிக்கின்றன.
ஈழத்தில் இருந்து கனடாவிற்குப் புலம்பெயர்ந்து தமிழ் மொழியில் விஞ்ஞானத்தை வாசகர்களிடம் இலகு தமிழில் எடுத்துச் செல்லும் நோக்குடன் பல அறிவியல் நூல்களை உருவாக்கியதோடு தொடர்ச்சியாக அறிவியல் கட்டுரைகள், கவிதைகள், தொடர்கதைகள் போன்றவற்றைப் படைத்து வரும் எழுத்தாளர் கனி விமலநாதன் அவர்களின் “விந்தைமிகு விண்வெளி விபத்து” என்ற தலைப்புக் கொண்ட விஞ்ஞான நாவல் எனது கையில் கிடைத்ததும் மிக்க ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன். நாவலைப் படித்து முடித்ததும் நாவலைப் பற்றி ஒரு விமர்சனக் கட்டுரையை எழுத வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஊற்றெடுத்தது. நாவலை வாசிக்கத் தொடங்கியதும் நான் முழுமையாக வாசித்திட வேண்டும் என்ற ஆவலை எனக்குக் கொடுத்ததை வைத்துக் கொண்டே நூலாசிரியர் வாசகர்களிற்கு ஆவலைத் தூண்டும் வகையில் இந்த நாவலைப் படைப்பதில் வெற்றி கொண்டுள்ளார் என்று திடமாக என்னால் கூற முடிகின்றது.
‘‘போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை; தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது!’ இரண்டாம் உலகப் போருக்குத் தீ மூட்டியவரும், ஜேர்மன் சர்வாதிகாரியுமான அடொல்ஃப் ஹிற்லர்தான் இதைச் சொன்னவர். ‘2009 மே 18இல் முடிவுக்கு வந்த தமிழீழப் போரில் விடுதலைப் புலிகள் எப்படித் தோற்றுப் போயினர்?’ என்ற வினாவுக்கு விடையளிக்கக்கூடாது என்பதற்காகவே அவ்வமைப்பின் மூலவர்கள் பலரும் கூட்டாக உயிரிழந்தார்களோ என இக்கூற்று எண்ணத் தூண்டுகின்றதல்லவா? இதேவேளை, விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்து, போரியல் வல்லுனர்களும் அரசியல் ஆய்வாளர்களும் புதிய புதிய எடுகோள்களையும் அனுமானங்களையும் ஊகங்களையும் முன்வைப்பதில் ஆளுக்காள் இதுவரைக்கும் சளைக்கவுமில்லை; இன்னமும் களைக்கவுமில்லை. எது எவ்வாறாயினும், நந்திக்கடலில் நடந்துமுடிந்த அவலத்தின் காரணங்களை ஒரு சாமானியனின் நோக்கில், நறுக்கென்று சொல்லிவிடும் சாமர்த்தியம், நான்கே நான்கெழுத்து வார்த்தை ஒன்றிடம் உண்டு. அதுதான் ‘துரோகம்!’
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெ.முருகபூபதி அவர்கள் நீண்ட காலமாக உள்ளத்தில் பூட்டி வைத்த பல இரகசியங்களை சொல்ல மறந்த கதைகள் என்று கோடிட்டு சொல்லியுள்ள நூல்தான் சொல்ல மறந்த கதைகள். ஒவ்வொரு ஆண் பெண்ணிடமும் மனம் என்னும் அதளபாதாளத்தில் பல இரகசியங்களைக் கொண்ட பல அடுக்குகள் தொல்பொருள் போல புதைந்து கிடக்கின்றன.
சினிமாக்கள் மனித வாழ்வோடு ஐக்கியமான ஒரு ஊடகமாகும். பொழுதுபோக்கிற்காக சினிமாவைப் பார்ப்பதாக பலர் கூறினாலும் சினிமாவில் சில யதார்த்தங்களும், சில யதார்த்த மின்மைகளும் காணப்படுவது கண்கூடு. வாழ்க்கையில் நடக்கின்ற சிலதையும், நடக்க வேண்டும் என்ற சிலதையும், நடக்கவே முடியாத சிலதையும் கூட திரைப்படங்கள் வாயிலாக நாம் கண்டுகளித்து வருகின்றோம்.
ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட எச்.எப். ரிஸ்னா எழுதிய மெல்லிசைத் தூறல்கள் என்ற பாடல்களடங்கிய நூல், கொடகே பதிப்பகத்தினால் 36 அழகிய பாடல்களை உள்ளடக்கியதாக 88 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இந்த நூல் மூலம் அவர் பாடலாசிரியராக புதுப் பிறவி எடுத்திருக்கின்றார்.
தமிழின் வரப்பிரசாதம் தமிழர் வாழும் பரப்பெல்லை விரிவுபட்டுள்ளது. இன முரண்பாடு உள்ளக வெளியக இடப்பெயர்வுகளை அதிகமான மக்களை பெயர்த்திருக்கிறது அல்லது வேரோடு பிடுங்கி எறிந்திருக்கிறது. ஆதலினால் மக்களின் பரப்பளவின் அதிகமும் அதிகமாக அவர்களுக்கிடையேயான மொழி வளம் ஆளுமை கற்றுக்கொள்ளும் வல்லமை கல்வியின் மேலோங்கிய பயிற்சி கைகளுக்குள் உலகையே கொண்டு வரும் கணினியியல் நெறிகளின் கற்கைகள் ஒவ்வொரு வரும் தங்களின் திறமைகளை வெளிக்கொணரும் துணிச்சலையும் கொண்டு வந்துள்ளமை கண்கூடு.
போர் பழம்பெரும் உலக மகா காவியங்கள், இதிகாசங்கள் பலவற்றின் பிரதான பேசுபொருளாக இருந்து வந்திருக்கின்றது. இராமாயணம், மகாபாரதம் முதற்கொண்டு, இலியட், ஒடிஸ்ஸி வரை இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளார்களான லியோ ரோல்ஸ்ரோய், ஃப்ரான்ஸ் காஃப்கா, எர்னெஸ்ற் ஹேர்மிங்வே, ஜோசெஃப் கிப்ளிங் போன்றோர் உட்பட, அண்மைக்காலப் பலஸ்தீனியப் படைப்பாளிகளான சமி அல்-காசிம், ஸியாட் கட்டாஷ் போன்றோர் பலரும் தமது போர்க்கால அனுபவங்களை இலக்கியங்களாக்கிப் புகழ் பெற்றவர்கள். தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை, காதலையும் வீரத்தையும் விதந்து பேசும் சங்க இலக்கிய காலத்தில் போர் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. அதன் பின்னர் மிக நீண்ட காலமாகத் தமிழிலக்கியத்தின் ’பிரதான பேசுபொருளாக’ இடம்பெறாதிருந்த போர், கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஒரு மாறுபட்ட வடிவத்தில் மீண்டும் தமிழிலக்கியத்தினுள் தடம் பதித்துக்கொண்டது. ஈழத்தமிழரது தமிழ்த் தேசிய விடுதலை எழுச்சியே அதற்கு வழிகோலிக் கொடுத்தது.
பாடசாலை காலத்து நினைவலைகள் எம் நெஞ்சுக்குள் அலையாக அடிக்கும் போது ஏற்படும் பரவச நிலை வார்த்தைகளில் சொல்ல முடியாதவொன்று. அக்காலத்தில் நம்முடனிருந்த நண்பர்கள், நம் ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோருமே எம் இதயத்தின் மூலையில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். நினைத்தாலும் மீண்டும் பாடசாலை வாழ்க்கைக்கு மீண்டுவிட முடியாத யதார்த்தம் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், ஆசிரியர்கள் அந்த அதிர்ஷ்டத்தை அடைந்து விடுகின்றார்கள் என்பதுதான் நிதர்சனம். 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









