நூலாய்வு – ‘நிறங்களின் மொழி' ,'நிறங்களின் உலகம்'
'நிறங்களின் மொழி' ,'நிறங்களின் உலகம்' என்ற புதினம் இரு ஆளுமைகளின் இரண்டு படைப்புகள் அடங்கியது. இதனை, ஆனந்த விகடன் ஒரு தொகுப்பினுள் முன் பாதி, பின் பாதியாக ஓவியங்களுடன் வெளியிட்டுள்ளது. நிறங்களால் மொழியையும் உலகத்தையும் படைத்துள்ள படைப்பாளர்களின் ஓவியங்கள் அட்டையில் இடம் பெற்றுள்ளன.
மனோகர்தேவதாஸ் ஓவியம் வரைவதில் வல்லவர். பார்வை இழந்த நிலையிலும் இவரது தூரிகை மிக நேர்த்தியாக வண்ணங்களைக் காட்சிப்படுத்துகிறது. வண்ணங்களை வடிவங்களாக்கி தனது நினைவு மண்டலத்திற்குள் வசப்படுத்தியுள்ள இவரது ஓவியங்கள் அத்தனையும் அருமை.
பார்வை இருந்த போது தான் கண்ட இடங்கள் பழமையான, மதுரை ஆட்சியர் அலுவலகம், மாநகர வீதி, உயர்ந்த மாடங்கள், மயில், மயிலிறகு, வண்ணத்துப் பூச்சிகள், மல்லிகைப் பூக்கள், மாடுகள், நாய், கழுதை, இயற்கைக்காட்சிகள் எனப் பல்வேறு பரிமாணங்களில் பார்வையற்றபோதும் இவரது தூரிகையின் 'நிறங்களின் மொழி’யால் நம்மை வசப்படுத்துகின்றன.


எழுவைதீவில் இருந்த காலத்தில் நான் கேட்டு வளர்ந்த பல தமிழ்ச் சொற்களை பின்பு அரைநூற்றாண்டுகளாக நான் கேட்டதில்லை. அதனால் அவை மூளையில் புதைபொருளாகிவிட்டன. தமயந்தி எழுதிய ஏழு கடல்கன்னிகள் என்ற சிறுகதைத் தொகுப்பின் பக்கங்களில் அந்த சொற்கள் மீண்டும் எழுந்து வந்தபோது மனம் புல்லரித்தது.
இருட்டறையில் பல வருடங்கள் பாதுகாக்கப்பட்ட வைன் நாக்கில் மட்டுமல்ல, சுவை நரம்புகள் அற்று அறியமுடியாத அடித்தொண்டையிலும் சுவைக்கும். அதுபோல் பலகாலமாக எனது அலமாரியில் இருந்து பின் பெட்டிகளில் புகுந்து ஒளித்திருந்த நாவல் இமயத்தின் கோவேறு கழுதைகள். 25 வருடங்களுக்கு முன்பாக அவர் எழுதியது என்றபோது ஆச்சரியமாக இருந்தது. அதேவேளையில் அக்காலத்தில் வாசித்திருந்தால் சில மணிநேரத்தில் வாசித்துவிட்டு வைத்திருப்பேன். தற்போது வாசிப்பதற்கு ஒரு கிழமை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். நல்ல இலக்கிய வாசிப்பும் கலவி மாதிரி.

Covid 19 வைரஸ் பரம்பலினையிட்டு ஒரு உள்ளிருப்பு வாழ்வினை வாழ்கின்ற ஒரு நெருக்கடி மிகுந்த கால கட்டத்தில், எத்தனையோ உயிர்ப்பலிகளும் இழப்புகளும் துன்பங்களும் துயரங்களுமாகத் தொடர்கின்ற வாழ்க்கையிலும், வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்துமுகமாக சில புதிய சிந்தனைப் போக்குகளும் செயற்பாடுகளும் உருவாகி வருவது உண்மையில் மனதிற்கு ஒரு சிறிய ஆறுதலையும் ஆசுவாசத்தினையும் ஏற்படுத்தி நிற்கின்றது. இவ்வகையில் புதிய வகை எழுத்துக்களும், படைப்புக்களும் காணொளி வாயிலான உரையாடல்களும் நேர்காணல்களும் பல்வேறு தளங்களிலும் உருவாகி உலா வந்து கொண்டிருப்பதானது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயங்களாகும். (இங்கு நான் அண்மையில் உருவாகி மறைந்து போன யாழ் நூலக திறப்பு விழா குறித்த அலப்பறை உரையாடல்களையும் சர்ச்சைகளையும் கணக்கில் எடுக்கவில்லை). இவ்வகையில் இலண்டனைத் தளமாக கொண்டு இயங்கி வரும் மக்கள் கலை பண்பாட்டுக் களமானது இந்நெருக்கடி மிகுந்த காலகட்டத்திலும் மிகக் காத்திரமாக செயற்பட்டு வந்த அமைப்பாகும். அவர்களது செயற்திறன் மிக்க ஒரு வினையாற்றுகையின் வடிவமாக அவ்வமைப்பினர் தோழர் வி.இ. குகநாதனின் ‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ என்ற நூலினை வெளியிட்டு, உள்ளிருப்புக் காலகட்டத்தில் புகலிடத்தில் வெளிவந்த ஒரேயொரு நூலினை வெளியிட்ட பெருமையினையும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர், இன்று அச்சக – பதிப்பக துறைகள் முற்று முழுதாக முடங்கிப் போயுள்ள காரணத்தினால் அவர்கள் இந்நூலினை ஒரு மின்னூலாக அமேசன் இணையத்தளம் மூலமாக வெளியிட்டுள்ளனர்.
நான் என்னும் பெருங்கனாக் கொண்ட உமையாழின் எழுத்துக்கள் ஏற்கெனவே எனக்கு பரிச்சயமானவைதான். வழமையாக எனக்குக் கிடைத்த எழுத்துக்களிலிருந்து சற்று மாறுபட்ட, சுவாரஸ்யமான அந்த எழுத்துக்களில் ஒருவித வசீகரம் இருக்கிறது. நேர்மை இருக்கிறது. பெண்களை மதிக்கும் தன்மை இருக்கிறது. பெண்களின் மீதான கரிசனை இருக்கிறது.
1971ல் திருப்பூரில் நடந்த நெசவாளர் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாவல். நெசவாளர்கள் பற்றிய நாவல்கள் தமிழில் குறைவுதான். அதில் இதுவும் ஒன்று


“மல்லாந்த மண்ணின் கர்ப்ப


பெண் கவிஞர்களிடம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல்வேறு தளங்களில் சிந்தனைகள் பரிணமிக்கின்றன. கருத்தின் மீது ஆத்மா போய் உட்காந்து கொண்டு மனிதனின் மனதை விசாலிக்கும் ஒரு அழகியற்கலையாகக் கவிதையை என்னால் பார்க்க முடிகிறது. கவிதை என்பது எந்த வகைமைக்குள்ளும் அடங்காத உணர்வாக எண்ணுகின்றேன். கவிதையை வாழ்க்கையின் அனுபவங்கள் என்று வகுத்துக்கொண்டாலும் மனம் நிறைய சமூகத்தின்மீது பேரன்பு கொண்டவர்களால்தான் கவிதைகளைப் படைத்துவிட முடியும் என்று கருதுகின்றேன். கவிதை ஒரு பயணம். அந்த வகையில் பவானியின் ‘சில கணங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு ‘கால ஓட்டத்தில் கிறுக்கி வைத்திருந்ததை தொகுப்பாக்கியிருக்கிறேன்’ என்கிறார் பவானி. ஈழத்தில் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பவானி சற்குணசெல்வம் நெதர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார். இலங்கையில் விவசாய விஞ்ஞானத்துறையில் பட்டம்பெற்று அங்கு விரிவுரையாளராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்ட பவானி நெதர்லாந்துக்கு வந்த பின்னர்; டச்சு மொழியிலும் ஆளுமை பெற்று மொழிபெயர்ப்பாளராகச் செயற்பட்டு வருபவர். ஈழத்தின் பிரபல கவிஞர் சேரனின் கவிதைகள் சிலவற்றை தெரிந்தெடுத்து ‘கடலின் கதை’ , ‘அன்பு திகட்டாது’ போன்ற நூல்களை டச்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்.
நூல்: பிம்பச் சிறை - எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்
நேற்றிரவு உமையாழின் சிறுகதைத்தொகுதியான ‘Cass அல்லது ஏற்கனவே சொல்லப்பட கதையில் சொல்லப்படாதவை’ படித்து முடித்தேன். இந்த Covid 19 வைரஸ் பரம்பலையிட்டு வீட்டினுள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையில் அச்சவுணர்வு கொஞ்சம் தலையெடுத்தாலும், பல்வேறுவிதமான நெருக்கடிகளிலும் இருந்து விடுபட்ட ஏகாந்த நிலையில் இது போன்ற நூல்களை வாசிப்பதென்பது ஒரு அலாதியான அனுபவம்தான். வாசித்து முடித்ததும் ஒரு உண்மை துலக்கமாகப் புலப்பட்டது. ஈழ- புகலிட சிறுகதையாசிரியர் வரிசையில் உமையாழ் தன்னையும் ஒரு சிறந்த சிறுகதையாளனாக இறுக்கமாகப் பிணைத்துக் கொள்கிறார். நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு மிகச் சிறந்ததொரு சிறுகதையாளன் கிடைத்துவிட்டான்.


மீரா மொஹிதீன் ஜமால்தீன் என்ற இயற் பெயரையுடைய கவிஞர் மருதூர் ஜமால்தீனின் ''வலிகள் சுமந்த தேசம்'' கவிதை நூல் நூலாசிரியரின் 8 ஆவது நூல் வெளியீடாக வெளிவந்துள்ளது. சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும், ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்ட இவரது இந்த நூலை ஏறாவூர் வாசிப்பு வட்டம் வெளியிட்டுள்ளது.
`சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ - கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தனது 25 வருட நிறைவை முன்னிட்டு, 2019 ஆம் ஆண்டு நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டியில் தேர்வான சிறுகதைகளின் தொகுப்பு. இனிய நந்தவனம் பதிப்பகத்தினால் இவ்வருடம்(2020) இத்தொகுப்பு வெளிவந்திருக்கின்றது.
‘நேர்காணல்’ இன்று தவிர்க்க முடியாதபடி நவீன இலக்கியத்தில் ஒரு கலை வடிவமாக உருப்பெற்றுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக்கலை, நாடகம் போன்றே ஆளுமைகளின் நேர்காணல்கள் யாவும் தொகுப்புக்களாக ஒரு கலை வடிவமாக உருமாற்றம் அடைந்துவரும் மேற்கத்தைய சூழலில், அதற்கு சளைக்காத வகையில் தமிழ் இலக்கியச் சூழலிலும் நேர்காணல் வடிவம் ஆனது தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நேர்காணல்கள் ஆனது பிரதிகள் மூலமே அறியப்பட்ட ஒரு ஆளுமையின், அறியப்படாத பல பரிமாணங்களை வெளிக்கொணரும் சந்தர்ப்பங்களை எமக்கு உருவாக்கித் தருகின்றன. இவை முக்கியமாக ஒரு ஆளுமையின் வாழ்க்கைப் பின்னணி, தத்துவ நோக்கு, மாறுபடும் கால, சூழலிற்கு ஏற்ப மாறுபடும் அவரது சிந்தனைகள், செயற்பாடுகள் என்பன குறித்த ஒரு நேரிடையான, தெளிவான பார்வைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.
"தேடி சோறு தினம் தின்று
எதேச்சையாகத்தான் அந்த நூல் எனது கண்ணில் பட்டது. ஆனாலும் புறந்தள்ள முடியவில்லை. எமது மறக்கப்பட்ட, அல்லது மறக்கடிக்கப்பட்ட வரலாற்றின் பெரும்பகுதி இது போன்ற இலக்கியப்பிரதிகளுக்குள்தான் புதையுண்டு கிடப்பதாக எனக்குள் ஒரு நம்பிகை. எனவே இது பற்றி ஒரு சிறு குறிப்பொன்றினை எழுதலாம் எனது மனதில் தோன்றியதால், அதனை எழுதுவதற்கு எண்ணாமல் துணிந்தேன். இதற்குமப்பால் அந்த நூலின் வடிவமைப்பும் மிகவும் விசித்திரமாக இருந்தது. மற்றைய நூல்களைப் போல் அல்லாமல், 6’*6’ என்ற அங்குல அளவுத்திட்டத்தில் பதிப்பிக்கப்பட்ட அந்நூலானது அச்சு அசலாக ஒரு இறுவெட்டு(DVD) அல்லது குறுந்தகடு(CD) ஒன்றின் உறையின் வடிவத்திலேயே மிகவும் சிறியதாகவும் கவர்ச்சிகரமாகவும் தோற்றமளித்தது. அந்த நூலின் பெயர் : அர்த்தம் ஆசிரியர் : கதிர் சயந்தன் (இப்போது சயந்தன் கதிர் ) வெளியீடு : நிகரி பதிப்பகம் (2003)
இந்த வருடம்(2019) கனடா சென்றபோது எல்லாளன் ராஜசிங்கம் அவர்களைச் சந்தித்திருந்தேன். அவர் எழுதிய `ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்’ நூலை ஏற்கனவே வாசித்திருந்தேன். முன்னணி வெளியீடாக 2015 ஆம் ஆண்டு வந்திருந்தது. அந்தப் புத்தகம் பற்றிய உரையாடல் வந்தபோது, அவர் அது பற்றி மேலும் சில தகவல்களைக் குறிப்பிட்டிருந்தார். அவர் இந்தியாவை விட்டுப் புறப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், அந்தப் புத்தகத்தின் மூலம் அவருடைய பழைய நண்பர்கள் மீண்டும் இணைந்துள்ளார்கள் என்ற செய்திதான் அது. ஒரு புத்தகம் அந்த வேலையைச் செய்திருக்கின்றது என்றபோது மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. தமிழீழப்போராட்டம் பற்றி பலரும் புத்தகங்கள் எழுதிவிட்டார்கள். சில சச்சரவை ஏற்படுத்தின. சில வரவேற்பைப் பெற்றன. எதுவாக இருப்பினும் அவை ஒவ்வொன்றும் அவர்களின் அனுபவம் சார்ந்த வெளிப்பாடுகள், கற்றுக் கொண்ட பாடங்கள், வருங்கால மூலதனம், அரசியல் ஆவணம்.
இந்நாவலை மலையாளத்தில் எழுதியவர் மனோஜ் குரூர், தமிழாக்கம் கே.வி. ஜெயஸ்ரீ , வம்சி பதிப்பகம் திருவண்ணாமலை.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









