1971ல் திருப்பூரில் நடந்த நெசவாளர் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாவல். நெசவாளர்கள் பற்றிய நாவல்கள் தமிழில் குறைவுதான். அதில் இதுவும் ஒன்று
இந்த லாரியை கொஞ்சம் நகர்த்தி நிறுத்தி நிறுத்துங்கப்பா.. பாவு நீட்டணும்.
ரங்கசாமி கூறினார்.
” ஏய் யாரப்பா.. அது ரோடு . எங்களுக்கும் சொந்தம் தான் நீங்க வேற எடம் பாரப்பா “ என்ற கவுண்டரின் பதில் இடையில் பேச வந்த ரங்கசாமியின் மனைவி நாகமணி ஏதோ கூற வந்தவளை ஜாடை காட்டிப் பேசாதிரு என்றார் .ரங்கசாமி.
இது நாவலில் ஒரு பகுதியில் வருவது.
இவர்கள் பொதுவாகவே எதிப்பு சக்தியற்ற கூட்டம். கைத்தறி நெசவாளர்கள போராட்ட குணம் இல்லாதவர்கள் என்ற நிலையில் இல்லாமல் கூலியை உயர்த்திக் கொடு என்ற போராட்டம் தொடங்குகின்ற சமயம் அவர்கள் மனநிலை வெவ்வேறானது.
நெசவாளர்களின் வாழ்க்கை என்பது தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்கின்ற அப்பாவி மக்கள். சினிமா சீட்டாட்டம் அமாவாசை நாளைக்கு என்றால் இரவு பெருக்கான் எலி வேட்டைக்குத் கிளம்புவார்கள். ராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்ற உலக அறிவே இல்லாத அளவில் தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள்.
இன்றைய நிலை வேறு.
கூலி உயர்வு போராட்டத்தை எப்படி தொடங்குவது என்று வழி தெரியாமல் தேவாங்கர் நெசவுத் தொழிலாளர் சங்கம் மூலமாக ஆட்களைத் திரட்டி போராடுகிறார்கள் மறுநாள் ஊர்வலத்திற்கு யாரும் வராமலும் கோசம் போட ஆள் இல்ல .அவங்க தடுமாறுவதும் குழப்பமான மன நிலையை அடைகிறார்கள் .அரசியல் கட்சிகளின் ஆதரவு கேட்க அவர்களும் நீங்கள் ஏற்கனவே நெசவுத் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் சாதி சங்கத்துடன் போராடுகிறீர்கள் எங்களோடு இணைந்து வந்தால் சேர்ந்து போராடலாம் இல்லையென்றால் ஆதரவு மட்டுமே தரமுடியும் என்று கூறிவிட குழப்பத்தோடு இருக்கிறார்கள். இந்த நிலையில் நெசவு வியாபாரிகள் இவர்களின் போராட்டத்தை கண்டு கொள்வதே இல்லை.இதில் நெசவாளர்களின் நிலையை மிக மிக எதார்த்தமாக ஆசிரியர் எழுதியிருக்கிறார். இந்த நிலையில் பஞ்சம் தலைவிரித்து ஆரம்பிக்கிறது கஞ்சித் தொட்டித் திறந்து வைத்து போராடி வருகிறார்கள். வெளியூர் நெசவாளர்களும் உள்ளூர் நெசவாளர்களுக்கும் வருகின்ற நெசவாளர்கள் அனைவருக்கும் கஞ்சி ஊற்றப்படுகிறது. பொன்னு -ரங்கசாமியின் மகன் இவன் படித்து விட்டு வேலைக்காக முயற்சி செய்து கொண்டுள்ளான். இவனுக்கு ராஜாமணி என்ற மார்க்சிய தோழன் அறிமுகமாகிறார் அவரோடு சேர்ந்து இயக்கம், இலக்கிய நாவல்களைப் படிக்க ஆரம்பிக்கிறார். அவனுக்கு நெசவாளர் போராட்டம் முறை பிடிப்பதில்லை .ஆனாலும் இவனால் யாருக்கும் எதுவும் சொல்ல முடியாத நிலை. மேலும் போராட்டம் தீவிரமடைகிறது . தீவைப்பு சம்பவங்கள் . போலீசார் துரத்தி ஓடும்போது நிலையும் ..அதனால் ஆண்கள் தலைமறைவாக சுற்று வரையும் நடக்கிறது .இந்த நிகழ்ச்சியை ஆசிரியர் சுப்ர பாரதி மணியன் யதார்த்தமாக நேரில் கண்டது போல் மிக அற்புதமாக சொல்கிறார். நெசவாளர்களின் நிலை பற்றி வேறு எங்கும் இல்லாத அளவு விவரித்து எழுதி இருப்பார். இறுதியாக போராட்டம் வெற்றி பெறுகிறது .கூலி உயர்வு தருவதாக முதலாளி கூறி வருகிறார்கள் இந்த நிலையில் சிறை சென்ற தோழர்களை விடுதலை செய்ய முயற்சிக்கிறார்கள். பெண்கள் எப்போதும் எப்போதும் போலவே சவுண்டம்மன் சாமி புண்ணியத்தில் போராட்டம் வெற்றி பெற்று விட்டது நான் பழனிக்கு மொட்டை அடிக்கப் போகிறேன் காவடி எடுத்து விட்டு போகிறேன் என்று சொல்லிக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள். போராட்டத்தின் கடுமை மறந்தவர்களாக இந்த நாவலில் வருகிற கதாபாத்திரங்கள் அனைவருமே போராட்டம் உணர்வின்றி பல சமயங்களில் உள்ளார்கள். தீவிரம் காட்டுவது இல்லை
சீட்டாடிக் கொண்டிருப்பவர்களை ஊர்வலத்திற்கு அழைத்த போது யாரும் விருப்பமுடன் எழுந்து வருவதில்லை. ரங்கசாமி அதிலேயே மிகவும் களிப்படைகிறார் .அவரின் இரண்டு பெண்கள் கூட போராட நாங்கள் ரெடி என்று சொல்லிச் சென்றார்கள் ஓயாமல் நாடா ஓடினால் நெசவாளி வீட்டில் பாட்டுச்சத்தம். ஓடிய நாடா ஓய்வெடுத்தால் நெசவாளி வாழ்வில் கேள்விக்குறி என்பதை இந்த நாவலில் திரு சுப்ரபாரதி மணியன் அவர்கள் மிக அருமையாக நெசவாளர்களின் வாழ்க்கை முறையை யதார்த்தமாக கூறிச்சென்றது அருமை. பொதுவாக எதையாவது சான்று இரு என்ற தத்துவமும் போராட்டக் காலங்களில் எவ்வாறு நிதர்சனமாக இருந்தது என்பதை இந்த நாவல் மூலம் சொல்லாமல் சொல்கிறார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
உழைப்பவர்களின் தொழிலாளர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய உன்னதமான நாவல் அவர்களின் உணர்ச்சிகளைக்கொட்டி இருப்பதால், ( ரூ 175 . என்சிபிஎச் வெளியீடு, சென்னை )
tiruppur awards - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.