வாழ்நாள் சாதனையாளர் தெளிவத்தை ஜோசப்!
[தினகரன்(இலங்கை) வாரமஞ்சரியில் வெளியான கட்டுரை - பதிவுகள்] மலையக இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மேலும் சிறப்பிடம் பெறுகிறது. இதற்கு காரணம் அந்த (தந்தையார்) தோட்டத்துப் பள்ளி ஆசிரியர் லயத்தின் தொங்கல் வீட்டில் குடியிருந்தது காரணமாகவிருக்கக் கூடும். தென்னிந்தியாவிலிருந்து கற்பிக்க இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஆசிரியர் குழுக்களில் அவரது தந்தையும் ஒருவர் (தெளிவத்தை ஜோசப் அவர்களின் நேர்காணல் – மூன்றாவது மனிதன்). பதுளை ஊவா கட்டவளை என்ற தோட்டத்தில் சந்தனசாமி பிள்ளை, பரிபூரணம் ஆகிய இருவருக்கும் இரண்டாவது பிள்ளையாக 1934.02.16 திகதியன்று பிறந்தவரே ஜோசப். தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக இருக்கும் அதேவேளை இதற்கு முன் ஒரு பாரிய நிறுவனத்திலும் கணக்காளராகவும் பணிபுரிந்துள்ளார். ‘பேசும்படம்’ என்ற சஞ்சிகையில் பார்த்த படங்களில் உள்ள பிடிக்காத காட்சிகளை ‘வெட்டுங்கள் வெட்டுங்கள்’ என்ற பகுதிக்கு பாடசாலை காலத்திலேயே எழுதி அனுப்பும் பழக்கம் இவருக்குண்டு. ‘எஸ் ஜோசப் - ஊவா கட்டவளை, ஹாலிஎல’ என்ற பெயரில் பல கடிதங்களை பிரசுரித்திருந்தன. இவ்வாறு ஆரம்பமானதே இவரது எழுத்துப் பணி. அதனை தொடர்ந்து 1955 இல் அவரது அண்ணன் ஞானப்பிரகாசம் (எழுதுவினைஞர்) தொழில் நிமித்தம் பதுளையின் இன்னொரு தோட்டமான தெளிவத்தை யில் தங்கியிருக்கும் காலத்தில் அவருக்கு ஒத்தாசையாய் அவருடன் இருந்த ஓய்வு நேரங்கள் அவரை எழுத்துப் பணிக்கு இழுத்துச்சென்றது.

காதல் என்னும் பதத்திற்கு அன்பு, பற்று, பாசம், நேசம், நட்பு, காம இச்சை, பக்தி, வேட்கை, ஆவல், பற்றார்வம், காதலணங்கு, அன்புச்செய்தி, காதல் நினைவூட்டு, காதல் தொடர்பு, காதலாட்டம், காதல் தெய்வம், மதவேள், அன்புகொள், பாசங்கொள், நேயமுறு, காதல்கொள், காதலி, விரும்பு, அன்புடன் பேணு, பெற்றுமகிழ், நுகர்ந்து மகிழ், ஈடுபாடுகொள், நாட்டங்கொள், சார்புகொள், விரும்பிப்பயில் போன்ற கருத்துகள் அகராதியில் நீண்டு அமைவதுபோல் காதலும் இன்ப ஒழுக்கத்தின் இயல்பை உணர்த்தி நின்று மக்களை வழிப்படுத்துகின்றது. பெண்ணானவள் 12 ஆவது, 13 ஆவது அகவைகளிலும், ஆணானவன் 14 ஆவது, 15 ஆவது அகவைகளிலும் பருவமடையும் பொழுது உடம்பில் ஏற்படும் ஓர் இயற்கை உந்தலால் தூண்டப்பட்டு, உடல் இச்சை கொண்டு, இன்பமடைய விரும்பி, காதல் வயப்பட்டு, பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் விரும்பிக் காதலிப்பர். பசித் தூண்டலுக்குச் சாப்பிடுவதும், தாகத்துக்கு நீர் அருந்துவதும் உடல் தேவையின் நியதியாகும். தொல்காப்பியம் (தி.மு.680—கி.மு.711):- இனி, எமக்குக் கிடைக்கக்கூடிய காலத்தால் மூத்த சங்க இலக்கிய நூலான தொல்காப்பியம் முதல் மற்றைய நூல்களிலும் காதல் எவ்வண்ணம் பேசப்படுகின்றது என்ற கதைகள் பற்றிக் காண்போம். தொல்காப்பியர் காதலை (1) கைக்கிளை, (2) அன்பின் ஐந்திணை, (3) பெருந்திணை என்று மூன்று பகுதிகளாக வகுத்துள்ளார்.
கருணாகரனின் நான்காவது கவிதைத் தொகுதி வெளியாகியிருக்கிறது ‘எதுவுமல்ல எதுவும்’ என்ற தலைப்பில். 108 பக்கங்கள். 56 கவிதைகள். இலங்கையிலிருந்து ‘மகிழ்’ வெளியீடாக வந்திருக்கும் இந்தக் கவிதைகள் 2006 க்கும் 2008 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்தக் காலப் பகுதியில் போர் நடைபெற்ற ஈழப் பகுதியிலிருந்து எழுதப்பட்ட வேறு கவிதைத் தொகுதிகள் ஏதும் இதுவரையில் வந்ததா என்று தெரியவில்லை. அப்படி வேறு தொகுதிகள் வரவில்லையென்றால், இந்தக் கவிதைகளே அந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. இந்தக் காலப்பகுதியில் கருணாகரனினால், இலங்கையில், வன்னியில் இருந்து எழுதப்பட்ட இன்னொரு தொகுதிக் கவிதைகள் ஓராண்டின் முன்னர் ‘பலியாடு’ (இந்தத் தொகுதி ‘பலியாட்டின் கண்கள்’ என்றே வந்திருக்க வேண்டும் என்று கருணாகரன் சொல்கிறார்) என்ற தொகுதியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலை தமிழகத்திலுள்ள வடலி என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அவற்றைத் தவிர்த்து எஞ்சிய கவிதைகள் ‘எதுவுமல்ல எதுவும்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றப்பா அது, ஜானகியாடா?” என்று கண்ணாடியை இரண்டு விரல்களால் தூக்கி விட்டுக்கொண்டே அருகில் வந்தாள்.
ஜிம் ஸ்டோவல் என்று ஓர் ஆங்கில எழுத்தாளர் எழுதிய "த அல்டிமேட் கிஃப்ட்' என்ற புத்தகத்தைப் படித்தவர்கள், ஹோவர்ட் ரெட் ஸ்டீவன்ஸ் என்ற ஒரு செல்வந்தர் தம் சொத்துக்களை உயில் மூலம் தன் குடும்பத்தினருக்கு எழுதி வைத்தபின், அவர்கள் எப்படி அதை அழித்துவிட்டு, அவர்களும் உருப்படாமல் போனார்கள் என்று முடித்திருக்கிறார். இளைஞனான மருமான் ஜேசன், மறைந்த தன் மாமா வீடியோவில் தன்னுடன் பேசுவதைப் பார்க்க வழக்கறிஞர் ஏற்பாடு செய்வார். நமக்கு இந்த உலகில் கிடைத்திருப்பதெல்லாம், கடவுளின் அன்பினால் மட்டுமே கிடைத்தது என்பதைப் புந்துகொள்ள எனக்குப் பல ஆண்டுகள் ஆயின என்று அவனுக்குக் கூறுவார். எனக்கு உன் மீது சிறிது நம்பிக்கை இருக்கிறது. அதை ஊதிப் பெரிதாக்க முடியும் என்று நம்புகிறேன் என்பார். ஜேசன் கடினமாக உழைத்து, பெரியவரின் நம்பிக்கையை நிறைவேற்றுவான். ரெட் ஸ்டீவன்ஸ் சிறுவர் இல்லம், ரெட் ஸ்டீவன்ஸ் நூலகம், மருத்துவமனை, ஏராளமான கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் எல்லாம் நடத்த ஒரு பில்லியன் டாலர் அறக்கட்டளை அவன் வசம் ஒப்படைக்கப்படுகிறது முழுப் புத்தகத்தையும்கூடப் படிக்க வேண்டாம். பின் அட்டையை முழுதும் படித்தாலே போதும். நூலின் மையக்கருத்து புலப்பட்டுவிடும்.
ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாளியாக இல்லாது போனாலும், 25 ஆண்டுகள் நூலகராக இருந்த அனுபவம், பத்தாண்டுகளாக நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூற்பட்டியலைத் தொகுத்து 8000 ஈழத்துத் தமிழ் நூல்களைப் பதிவுசெய்து வழங்கிய அனுபவம், இரண்டொரு ஈழத்துத் தமிழ்ப் பதிப்பாளர்களுடன் இணைந்து கடந்த இரு ஆண்டுகளாக லண்டனில் ஈழத்துத் தமிழ்ப் புத்தகச் சந்தையை பல இடங்களிலும் நடத்தி சராசரி வாசகர்கள் பற்றிப் பெற்றுக்கொண்ட அனுபவம் இவை அனைத்தும் என்னை இக்கட்டுரையை எழுதத் தூண்டியுள்ளது. எம்மவரிடையே வாசிப்புத் தரம் குறைந்துவிட்டது என்று வெளிப்படையான உண்மையைச் சொல்லி ஒதுங்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. அதிலிருந்து எவ்வாறு மீளலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடே இக்கருத்துக்கள். வாசிப்பு என்பது கல்வித் தேவைகளுக்காகவும், அதற்கப்பால் உள்ள விரிந்த தேடலுக்கும் என இரண்டு வகைகளில் இங்கு நிகழ்கின்றது.
[அண்மையில் மறைந்த எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான தி.சு.சதாசிவம் அவர்களின் நினைவாக எழுத்தாளர் பாவண்ணனால் எழுதப்பட்டு , திண்ணை இணைய இதழில் பிரசுரமான கட்டுரையிது. - பதிவுகள்] எண்பதுகளின் பிற்பகுதியில் கொப்பள என்ற ஊரிலிருந்து கதக் என்னும் ஊர்வரைக்கும் கேபிள் புதைக்கும் வேலைக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன். இரண்டு ஊர்களுக்கும் இடையில் லக்குண்டி என்னும் சிற்றூர் இருக்கிறது. பருத்தியும் சோளமும் விளையும் கரிசல் மண்ணைக் கொண்ட சிற்றூர். ஊருக்கு நடுவில் அழகான ஏரியொன்றும் சமணக்கோவில் ஒன்றும் உண்டு. அதையொட்டித்தான் நாங்கள் எங்களுடைய கூடாரத்தை அமைத்திருந்தோம். பொழுது சாய்ந்தபிறகுதான் வேலையிலிருந்து திரும்புவோம். பிறகு ஒரு குளியல். அதற்கப்புறம் நண்பர்களோடு பேசியபடியே ஒரு நடை. எளிய இரவு உணவு. உணவை முடித்ததுமே நண்பர்கள் மீண்டுமொரு நடைக்குத் தயாராவார்கள். நான் எனது கூடாரத்துக்குள் சென்றுவிடுவேன். லாந்தர் விளக்கெரியும் ஒரு சிறிய எழுத்துமேசையின் முன்பு அமர்ந்து படிக்கவோ அல்லது எழுதவோ, அக்கணத்தின் மனநிலைக்குத் தகுந்தபடி செய்வேன். அந்த ஊரில் இருக்கும்போதுதான் பெங்களூரிலிருந்து இயங்கிக்கொண்டிருந்த காவ்யா பதிப்பகத்தின் தொடர்பு கிடைத்தது. இங்கே இன்று என்னும் இதழையும் வேறு சில சிறுகதைத்தொகுதிகளையும் நாவல்களையும் காவ்யாவிடமிருந்து வரவழைத்துப் படித்தேன். அவற்றுள் ஒன்று சம்ஸ்காரா என்னும் கன்னட நாவலின் தமிழ்மொழிபெயர்ப்பு.
சயந்தனின் ஆறாவடு நாவல் வாழத்துடிக்கும் ஒரு மனிதனின் கதை. அவன் தனி மனிதன் மட்டுமல்ல. அவன் வாழ்விடமும் வாழும் காலமும் அவன் கதையை தனி மனித வட்டத்தை விட்டு விசாலமான இன்னொரு தளத்திற்கு நகர்த்தி இருக்கிறது. போரிலக்கிய வரிசையில் போர்க்காலத்தில் நடந்த சம்பவங்களையும் அதன் பின்னணிகளையும் மட்டுமே சொல்லிச் சென்றிருக்கும் கதையல்ல ஆறாவடு. போர்க்காலத்தில் வாழத்துடித்த ஓரிளைஞனின் பயணமிது. போர், காதல், சண்டை, சச்சரவு , பணம், அதிகாரம், கதை, கவிதை எல்லாமே எதற்காக...? மனிதன் தன் இருத்தலை எப்போதும் உணர்ந்து கொள்ளும் தேடலுக்காக. அந்த தேடலின் பயணத்தில் போரும் காதலும் அதிகாரமும் அவனைப் பாதிப்பதும் அந்தப் பாதிப்புகள் எழுப்பும் கேள்விகளுக்கான பதில் தேடும் பயணமும் தொடர்கின்றன. சயந்தனின் ஆறாவடு நாவல் இப்படியான ஒரு தேடல்தான். இந்தத் தேடல் அமைதியான சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு விதமாகவும் போர்க்கால சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் வேறுவிதமாகவும் இருக்கிறது. ஈழப்போரட்ட வரலாற்றில் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல் என்ப்தால் இந்த நாவலின் ஒவ்வொரு வரியும் கவனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.
In reading Chris Durban's great book, "The Prosperous Translator" (which is in the form of a series of questions and answers from translators), one of the main take-aways I learned was that writing ability in one's own native language is a critical skill of the best translators. Too many of us translators, me included, get caught up in the source language. We think that our native language is kind of automatic, and we don't have to work on it. This is wrong for the following reasons: The target language text is the only thing your client and reader will see. No matter how good your translation skill is, if you can't write well in your native language, it is all for naught. The black and white text on the page in your native tongue is the only thing the reader sees of your awesome translation skills. Language is constantly evolving. Words are being invented today in my native American English, that I don't know about. I need to keep up. If your text is 100% "perfect" from a translation point of view, but does not flow well, you are still going to be viewed as not very good.
கடந்த இருபது வருடங்களாக, சிட்னியில்; வசிக்கும் என்னுடய அம்மாவுக்கு வயது தொண்ணூறு. இந்த வயதிலும் அவருக்கு நோயற்ற திடகாத்திரமான உடம்பு! அவரின் முப்பத்திரண்டு பற்களும் ஒறிஜினல். சூத்தையோ, ஆட்டமோ அற்ற பால் வெள்ளைப் பற்கள் அவை. பல்வைத்தியரான என்னுடய மகன், அப்பாச்சியின் பற்களை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்து, பல்வைத்திய மாநாட்டு விரிவுரைகளில் காட்டிப் பெருமைப்படுவான். 'நல்ல காலம்! ஆஸ்ரேலியர்களுக்கு அப்பாச்சியின் பற்கள் இல்லை. அப்பாச்சி போல, இங்கே பிறந்தவர்களும் இருந்தால், நான் கிளினிக்கை இழுத்து மூடவேண்டும்’ என பேத்தியாருக்கு 'கொமன்ற்’ அடிப்பான் பேரன். யாழ்ப்பாணத்து தண்ணியும், கைதடி முருங்கைக் காயும்தான், தனது உறுதியான பற்களுக்குக் காரணம் என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. முருங்கைக்காய் சமாசாரம்பற்றி பேச்சு வரும்போதெல்லாம் கைதடி முருங்கைக் காய்தான் திறமென அடம் பிடிப்பார். கைதடி, ஒரு கலட்டிப் பாங்கான பூமி. அங்கு எது வளருதோ இல்லையோ, முருங்கை மரங்கள் நன்கு வளர்ந்தன. எங்கள் கைதடி வளவிலும் அம்மா பலவகை முருங்கை மரங்களை நட்டிருந்தார். களிமுருங்கை, வலியன் முருங்கை, கட்டை முருங்கை, உலாந்தா முருங்கை என அம்மாவின் பாஷையில் அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள்.
['புத்தம் வீடு' என்னும் தனது நாவலின் மூலம், உலகத் தமிழிலக்கியத்தில் தன் தடத்தினைப் பதித்த ஹெப்ஸிபா ஜேசுதாசன் பெப்ருவரி 9, 2012 அன்று இயற்கை எய்தினார். அவரது நினைவாக 'அ.ராமசாமி எழுத்துகள்' என்னும் வலைப்பதிவில் வெளியான கட்டுரையினை மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்-] ஹெப்ஸிபா ஜேசுதாசன் அறுபதுகளின் மத்தியில் ‘புத்தம் வீடு’ என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் பிரவேசம் செய்தவர். தான் எழுத ஆரம்பித்த காலம் தொடங்கி, தமிழ் இலக்கியச் சூழலில் நிலவும் ஒரு மனோபாவத்திற்கு எதிராக இயங்கியும் வருபவர். தமிழ் இலக்கியச் சூழல் என்பது பொதுவாக அறுபதுகளுக்கு முந்தியும் பிந்தியும் இரண்டு முகங்களைக் கொண்டதாகவே இருந்து வந்துள்ளது. குழுமன நிலையோடும், கட்சி அடிப்படையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் சிறுபத்திரிகை உலகம் ஒரு முகம். இதில் ஒரு எழுத்தாளன் ஒரு குழு சார்ந்தவனாகவோ, அல்லது கட்சி சார்ந்தவனாகவோ அடையாளங்காணப்படுதல் தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. இன்னொரு முகம் வெகுஜனப் பத்திரிகைகளின் உலகமாகும். பெருமுதலாளிகளின் வணிக லாபத்திற்கு எழுத்துச் சரக்கினை உற்பத்தி செய்யும் பேனாத் தொழிலாளர்களைக் கொண்டது இம்முகம். இவ்விருமுகங்களில் ஏதாவது ஒன்றை அணிந்து கொள்ளாமல் இயங்கி வருபவர் ஹெப்ஸிபா ஜேசுதாசன். அதே வேளையில் சிறுபத்திரிகைக் குழுவினராலும், கட்சி சார்ந்த விமரிசகர்களாலும் புறமொதுக்கப்படாமல், தமிழ் நாவல் இலக்கியத்திற்கு முக்கியப்பங்களிப்பு செய்தவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர். இத்தகைய விதிவிலக்குகள் நவீனத் தமிழிலக்கியப்பரப்பில் வெகு சொற்பமே.
வரலாற்று நாவல் என்பது என்ன? முகங்களாக ஆக்கப்பட்ட வரலாறு என்று அதைப்பற்றி கூறலாம். வரலாறு என்ற வரைபடத்தை மரங்களும், மிருகங்களும், மக்களும் வாழ்க்கையும் ததும்பும் நிலமாக மாற்றுவதே வரலாற்று நாவலின் கலை. சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ ஏன் ஒரு தோல்வி என்றால், அந்நாவல் இந்தச் சவாலில் வெல்ல முடியவில்லை என்பதே. தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ ஏன் வெற்றிகரமான நாவல் என்றால் மொத்த வரலாற்றையும் நாமே சென்று வாழ்ந்து விட்டு மீளக்கூடிய ஒரு பரப்பாக, என்றும் உணரும் வாழ்க்கையாக அது மாற்றிவிடுகிறது என்பதே. அதாவது செல்லப்பாவின் நாவலில் நாம் வரலாற்றையே காணமுடியும். அதேசமயம் தல்ஸ்தோயின் நாவலில் நாம் வாழ்க்கையையே வரலாறாகக் காண்கிறோம். இதையே வரலாற்றுக்கு வண்ணம் சேர்க்கும் பணி என்று கூறுகிறேன்.
ஒரு புதிய கவிஞரின் முதலாவது கவிதை நூல் இது. இளைப்பாறிய ஆசிரியரான சுமதி குகதாசன் எழுதிய தளிர்களின் சுமைகள் என்ற நூல் இது. நூல் பற்றிய எனது கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பாக இன்றைய கவிதைகள் பற்றிய சில கருத்துக்களை பகிர்வது நூலிலுள்ள கவிதைகளை அணுக உதவலாம் என எண்ணுகிறேன்.
[முனைவர் மு.வரதராசன் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து பெறப்பட்ட தகவல்களிவை.] மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட 'டாக்டர்' மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டினுள் ஒன்றாக விளங்குவது மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியாகும். இந்நூல் எழுநூற்று எண்பது அடிகளை உடைய நெடும்பாடலாகும். இப்பாடலில் சங்ககால அறங்கள் எடுத்துரைக்கப் பெறுகின்றன. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை வருணத்தாருக்கு உரிய அறங்கள், சமண, பௌத்த மதத்தோருக்கான அறங்கள், அறத்தைக் காக்கும் குழுக்களின் செயல்பாடுகள். பெண்களுக்கு உரிய அறங்கள் ஆகியன தெளிவு பட எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இக்கருத்துகளின் முலம் சங்ககால அறங்கள் பற்றிய தெளிவினைப் பெற முடிகின்றது.
எஸ்.ராமகிருஷ்ணனின் உலக இலக்கியம் பற்றிய அறிமுகப் பதிவுகளை நான் விரும்பி வாசிப்பது வழக்கம். மிகவும் அழகாக படைப்பாளிகளைப் பற்றியும், படைப்புகள் பற்றியும், தன் உளப்பாதிப்புகளின் அடிப்படையில் விபரிக்கும் அவரது நடை வாசகர்களின் நெஞ்சங்களை ஈர்த்துவிடும். அவரது படைப்புகளில் காணப்படும் இன்னுமொரு அம்சம் இருப்பின் நிலையாமை பற்றிய சோகம். பெரும்பாலான அவரது படைப்புகளில் புனைவுகளாகவிருக்கட்டும், அபுனைவுகளாகவிருக்கட்டும் எல்லாவற்றிலுமே இவ்விதமான சோகம் பரவிக்கிடக்கும். நகரங்கள், பயணங்கள் எல்லாமே அவருக்கு எப்பொழுதும் கடந்த கால நிகழ்வுகளை, உறவுகளை, துயரங்களையெல்லாம் தம்முள் அடக்கி வைத்திருக்கும் படிவுகளாகவேயிருக்கின்றன. இதனால் பெரும்பாலான அவரது புனைவுகளை வாசிக்கும்பொழுது வாசகரொருவரின் உள்ளமானது வாசிப்பின் முடிவில் நிலையாமை பற்றிய ஒருவித துயரத்தால் கனத்துப் போகின்றது.
Abdul Karim Abdul Razak. —Dawn photoCOLOMBO: Abdul Karim Abdul Razak is an oddity. This Urdu-speaking Memon Muslim from what is now Pakistan, is a leading light in Tamil literary circles in Sri Lanka as a poet and writer! Tall and fair with a stubble and betel stained teeth, Razak is every inch a Memon, who no one would associate with Tamil poetry at first glance. But he has managed to break into a literary circle which has been the close preserve of ethnic Tamils and indigenous Sri Lankan Muslims whose mother tongue is Tamil. In fact, the 54-year-old Razak has the distinction of being the world`s first and the only Tamil litterateur from the Memon community. It was trade which took the Memons from Sindh to Gujarat, Mumbai, East Africa and Sri Lanka. Razak`s forefathers, who had migrated from Sindh to Junagadh in Gujarat, finally landed in Colombo to take advantage of the growing trade links between Ceylon and India during British rule. But while the Memons of Colombo were immersed in commerce, showing little inclination towards scholarship, literature or poetry, school student Razak was a different kettle of fish. He not only loved to read but had a passion for the Tamil language, with a burning ambition to be a revolutionary Tamil poet.Fittingly known as “Memon Kavi”, Razak has several volumes of poems in free verse to his credit, one of which, Naalayay Nokkiya Inril (Today Looking Towards Tomorrow), had won the Lankan Sahithya Award for the best Tamil poem in free verse in 1990.
மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் டிசம்பர் 11. தனது குறுகிய காலத்து வாழ்வில் அவரது சாதனைகள் வியப்பைத் தருவன. தான் வாழ்ந்த காலகட்டத்துச் சூழலை மீறிச் சிந்தித்த கவிஞன் அவன். 'தன்னுடை அறிவி னுக்குப் புலப்பட லின்றியே தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச் செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம் தீயபக்தி யியற்கையும் வாய்ந்தி'டாத கவிஞனவன். தன் அறிவு கொண்டு , தனக்குச் சரியென்று பட்டதை உரைத்திடத் தயங்காதவன் அவன். தான் வாழந்த சமுதாயத்தைப் பற்றி, அச்சமுதாயத்தில் நிலவிய சீர்கேடுகளைப் பற்றி, அந்நியர் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த தன் பிறந்த மண் பற்றி, அதன் விடுதலை பற்றி, பெண் விடுதலை பற்றி, வர்க்க விடுதலை பற்றி, மானுட விடுதலை பற்றி, மானுட இருப்பைப் பற்றி, சக உயிர்களைப் பற்றியெல்லாம் சிந்தித்துப் பாடிய, எழுதிய படைப்பாளி அவன். பணத்தை மட்டுமே வைத்து எடைபோடும் இந்த மானுட சமுதாயம், அவன் வாழ்ந்த காலத்தில், வாழத் தெரியாதவனென்றெல்லாம் அவனை எள்ளி நகையாடியது. ஆனால் இன்று .. அதே மானுட சமுதாயம் அவனைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. மாகவி பாரதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு 'பதிவுகள்' அவனது கவிதைகள் சிலவற்றை மீள்பிரசுரம் செய்கிறது.
பேராசிரியர் கைலாசபதி அவர்களின் 29 வது நினைவு தினம் டிசெம்பர் 6.2011. எமது தெற்காசிய சூழலில் செப்டம்பர் 26 என்பது அண்மைக் காலத்தில் வேறொரு வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாத தாக்குதலின் நினைவு கூரலுக்குரியது அது. சர்வதேச ரீதியாக செப்டம்பர் 11 என்பது இதுபோல முக்கியத்துவம் பெற்றுள்ளமையை அறிவோம். உலக மேலாதிக்க வாத நாடான அமெரிக்க மீது முஸ்லிம் தீவிர வாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நாள் செப்டம்பர் 11. எமது பிராந்திய மேலாதிக்கவாத நாட்டுக்கும் உலக மேலாதிக்கவாத நாட்டுக்கும் முஸ்லிம் தீவிரவாதம் பிரதான அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலில் , இனி உலக செல்நெறி வர்க்க மோதலாக அன்றிப் பண்பாட்டு மோதலாகவே அமையும் , என்ற தர்க்கமும் முன்வைக்கப்பட்டு வருவதை அறிவோம். இலங்கையில் சிங்கள- தமிழ் -முஸ்லிம் -மலையக தேசியவாதப் பிளவில் சமூக வேறுபாடுகள் வலுபெற்றுள்ளது. தமிழியல் இன்று அதிகம் கரிசனைகொல்வதாக வர்க்க அக்கறை இன்றி தலித்தியம் ,பெண்ணியம் ,தேசிய இனப்பிரச்சனை என்பனவே மேலோங்கி உள்ளன.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு முக்கியமானதோரிடமுண்டு. இன்று ,85 வயதினைக் கடந்த நிலையிலும், உற்சாகம் குறையாமல் இலக்கியப் பணியாற்றும் அவரது விடா முயற்சியும், சுறுசுறுப்பும் அனைவரையும் வியப்படைய வைப்பன. தீண்டாமைக் கொடுமைக்கெதிராக அடங்கி, ஒடுங்கிச் சோர்ந்து விடாமல், அதன் நச்சுக்கரங்களின் தீண்டுதல்களைக் கண்டு அஞ்சி விடாமல், அத்தீண்டுதல்களையெல்லாம் சவால்களாக ஏற்றுக்கொண்டு, இத்தனை வருடங்களாக 'மல்லிகை' என்னும் மாத இதழினைக் கொண்டு வரும் அவரது ஆற்றல் அனைவரையும் பிரமிக்க வைத்துவிடும். 'மல்லிகை'யையும் ஜீவாவையும் பிரிக்க முடியாது. 'மல்லிகை ஜீவா' என்று அழைக்கப்படுவது அவரது இலக்கியப் பங்களிப்பினை நன்கு புலப்படுத்தும். 'மல்லிகை' சஞ்சிகை பல இளம் எழுத்தாளர்களுக்குக் கை கொடுத்திருக்கின்றது; இன்றும் அவ்விதமே ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்களை, ஆர்வலர்களை, புரவலர்களை அட்டைப்பட நாயகர்களாக்கிப் பெருமைப்பட்டிருக்கின்றது.
காலம் மனித நேயம் மிக்க ஒருவரை மீண்டும் நாம் நினைக்க வைத்துள்ளது. வர்க்கம் சார்ந்து, சாதிய முறைமைகளை எதிர்த்தபடி தனது கற்பனைத் திறத்தால் நம்மையெல்லாம் ஆட்கொண்டவர்தான் அகஸ்தியர். 29/08/1926இல் சவரிமுத்து-அன்னம்மா தம்பதியர்க்கு மகனாக ஆனைக்கோட்டையில் பிறந்தவர். அந்தக் காலத்து எஸ்.எஸ்.சி சாதாரண தரம் வரை கல்வி கற்றிருந்தாலும் அவர் வளர்த்துக்கொண்ட தமிழ் அறிவு அவரை நல்லதொரு படைப்பாளியாக நமக்குத் தந்திருக்கிறது.தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஆற்றல் வாய்ந்தவராகவே தன்னை வளர்த்துக் கொண்டார். எழுத்தாற்றலால் தன்னை வளர்த்துக்கொண்டாலும் பலராலும் நேசிக்கப்பட்ட அதே வேளை சிலரால் இருட்டடிப்புக்குள்ளாக்கவும் பட்டதனால் இவரின் எழுத்துக்களை கண்டும் காணாது விட்டதும் பலரின் பார்வைக்குத் தெரியாமல் போய்விட்டார்; பலரிடம் இவர் படைப்புகள் சென்று சேர முடியாது போனது. ஆனாலும் பார்வைக்குக் கிடைத்தவைகள் காத்திரமானதான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
ஈழத்தின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் 16 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது. (29. 08.1926 – 08.12.1995) பாரீஸ் தமிழர் கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு அதன் வளர்ச்சிப் பணியில் நாம் அதிக அக்கறை கொண்டிருந்த காலங்களில், எமது கல்வி நிறுவனத்தோடு அதிக அக்கறை கொண்டவராக அறிமுகமானவரே திரு.எஸ்.அகஸ்தியர் அவர்கள். ஆரம்பகால ஆண்டுவிழா, மலர் வெளியீட்டுகளிலும் ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து எமது வளர்ச்சிப் பாதையில் துணை நின்றார். மனித நேயத்தை நேசித்து அதற்காக வாழ்ந்து மறைந்துவிட்ட ஒரு இலக்கியவாதியின் காலத்தில் அவரது புலம்பெயர் வாழ்வில் நாமும் வாழ்ந்திருக்கின்றோம் என்பதை இங்கு பெருமையோடு நினைவுகூர்ந்து மதிப்பளிக்கு முகமாகவே அவரைப்பற்றிய நிகழ்வுகளைத் தருகின்றேன்.
[முனைவர் பாரதி ஹரிசங்கர் 2007இல் கனடா வந்திருந்தபொழுது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது பற்றி 'பதிவுகள்' இதழில் வெளியான கட்டுரையும், 'பதிவுகளி'ல் வெளியான அவரது படைப்புகள் சிலவும் ஒரு பதிவுக்காக இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. -பதிவுகள் ]அண்மையில் தமிழகத்திலிருந்து கலாநிதி பாரதி ஹரிசங்கர் கனடாவுக்குக் 'கனடியக் கற்கைநெறி'க்கான 'சாஸ்திரி அறக்கட்டளைப்' புலமைப் பரிசில் பெற்று விஜயம் செய்திருந்ததை ஏற்கனவே பதிவுகள் வாசகர்களுக்கு அறியத் தந்திருந்தோம். அதன் பொருட்டுக் கனடாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்றிருந்த பாரதி ஹரிசங்கர் தன் பயணத்தின் இறுதி இலக்காகத் 'டொராண்டோ'வுக்கும் வந்திருந்தார். 'டொராண்டோப் பல்கலைக் கழகத்தின் விடுதியில் தங்கியிருந்த அவரை எழுத்தாளர்கள் தேவகாந்தன், டானியல் ஜீவா மற்றும் வ.ந.கிரிதரன் ஆகியோர் சந்தித்தனர். அருகிலிருந்த உணவகமொன்றில் சந்தித்துச் சிறிது நேரம் கலந்துரையாடினர். பாரதி ஹரிசங்கரின் நிகழ்ச்சி நிரல் மற்றும் குறுகிய நேர அறிவிப்பு காரணமாக அவருடனொரு விரிவான கலந்துரையாடலினை ஏற்பாடு செய்ய முடியாது போய்விட்டது. இருந்தாலும் மேற்படி சந்திப்பானது குறுகியதாக அமைந்திருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









