இலங்கை படைப்பாளி ப. ஆப்தீன் மறைவு அஞ்சலிக்குறிப்பு
ஈழத்து ஆக்க இலக்கியப் படைப்பாளியும் மல்லிகைப்பந்தல் தோழருமான எழுத்தாளர் நாவல்நகர் ப.ஆப்தீன் அவர்கள் சுகவீனமுற்ற நிலையில் கடந்த 9 ஆம்திகதி கொழும்பில் தனது 77 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமல்ல மல்லிகைப்பந்தல் தோழமை வட்டத்திலும் ஒரு வெறுமையை ஏற்படுத்தி விட்டது.
மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் பல்வேறு பிரதேசங்களில் ஆசிரியராகப் பணியாற்றியதன் காரணமாக, முற்போக்கு சிந்தனையுடன் மனித நேயப் பார்வையுடன் சமூகப் பொறுப்புணர்ச்சியுடன் படைப்புக்களைத் தந்தவர்.
மல்லிகையால் வளர்த்தெடுக்கப்பட்ட படைப்பாளி. இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு "இரவின் இராகங்கள் " மல்லிகைப்பந்தல் வெளியீடாக வந்தது. அதே தொகுப்பு தமிழகத்தில் NCBH இல் மறுபதிப்பாக வெளிவந்தது. அடுத்த அவரது சிறுகதைத் தொகுப்பும் மல்லிகைப்பந்தல் வெளியீடாக "நாம் பயணித்த புகைவண்டி " எனும் பெயரில் வந்தது.
இவர் எழுதிய. " கருக் கொண்ட மேகங்கள் " நாவல் சிங்கள-தமிழ்-முஸ்லிம் மக்கள் இடையே நிலவும் ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டும் ஒரு நாவலாக வெளிவந்தது.
இறுதியாக கொடகே வெளியீடாக வந்த இவரது "கொங்காணி" எனும் சிறுகதைத் தொகுப்பு மலையக மக்களின் வாழ்வியலை அவர்களின் சொல்லாடல்களுடன் சொன்னது மட்டுமல்லாமல், சமகால ஈழத்து மக்களின் வாழ்வியலையும் உணர்ச்சிபூர்வமாக எடுத்துக் காட்டிச் சென்றுள்ளது.
மலாய் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தமையால் இலங்கை வாழ் மலாய் சமூகத்தினரை அடையாளப்படுத்தும் வகையிலான ஒரு வரலாற்று நாவலை எழுதிக் கொண்டிருந்த நிலையில் மறைந்து விட்டார். அவரது மறைவு ஈழத்து இலக்கியத்திற்கு மட்டுமல்ல மல்லிகைப்பந்தல் தோழமை வட்டத்தினருக்கும் ஒரு பெரும் இழப்பு என்றே சொல்லவேண்டும்.
அவரது இறுதிச்சடங்கு 10.10.2015 காலை கொழும்பில் நடைபெற்றது.
தகவல்: முருகபூபதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.....



செங்கை ஆழியான் (க.குணராசா) ஒரு காலத்தில் இளம்படைப்பாளிகளின் படைப்புகளை அவதானித்து, அவர்களை சஞ்சிகைகளில் பத்திரிகைகளில் அறிமுகம் செய்து வைத்தார். ‘வல்லமை’ இணையத்தளம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டில் இருந்து, ஒருவருட காலத்திற்கு தனது இணையத்தளத்தில் வெளியாகும் சிறுகதைகளை மதிப்பீடு செய்து சிறந்த படைப்பாளிகளை இனம் கண்டிருந்தது. வல்லமையில் வெளியான அனைத்துக் கதைகளையும் வாசித்து தனது கருத்துக்களைச் சொல்லியிருந்தார் மூத்த எழுத்தாளரான வெங்கட் சாமிநாதன். மோதிரக்கையால் குட்டுப்பட்டுக் கொண்ட படைப்பாளிகளில் எட்டுபேர் மட்டும் (சுதாகர், பழமைபேசி, மணி ராமலிங்கம், அரவிந் ச்ச்சிதான்ந்தன், மாதவன் இளங்கோ, ஜெயஸ்ரீ சங்கர், பார்வதி இராமச்சந்திரன், தேமொழி) தேறினார்கள்.
"நான் கருப்பொருட்களைக் தேர்ந்துகொள்ள எனது உள்உணர்வுகளிலேயே நம்பிக்கை வைத்துள்ளதோடு என் உள்ளத்து உணர்வுகளுடனேயே எழுதுகின்றேன்" , "நானே எனது புத்தகங்களின் ஒட்டு மொத்தம்" எனவும் குறிப்பிடும் இவ்வருடத்திற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இலக்கிய கர்த்தா திரு. வி. எஸ். நேப்போல் அவர்கள், (Trinidad) ரினினாட் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் தனது இலக்கியப்படைப்பால் உயர்ந்து நிற்கின்றார். உலகில் காணப்படும் ஒரே ஒரு இந்துமத அரசாகக் காணப்படும்; நேபாள தேசத்தின் பரம்பரையில் உதித்தவர்தான் இன்று உலகளாவிய புகழ் படைத்த நாவல் படைப்பிலக்கிய மேதையாகக் கருதப்பட்டு உயர்விருதினைப் பெற்றுக்கொண்ட சிவா நேப்போல் அவர்கள். தனது பாட்டியார் இந்தியாவிலிருந்து வரும்போது பல இந்துமத நூல்களையும், சாத்திரங்களையும் கொண்டு வந்திருந்தார். அவர்கள் சமய அனுட்டானங்களைத் தொடர்ந்தார்கள் நாமும் பின்பற்றினோம் ஆனால் எமக்கு மொழியை யாரும் கற்றுத்தரவில்லை. இந்தி எழுத்துக்களை இளமையில் யாரோ சொல்லித்தந்ததாக ஞாபகம் ஆனால் தொடர்ந்து படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அத்தோடு எமது மொழியின் இடத்தில் ஆங்கிலம் திணிக்கப்பட்டதால் நாம் எமது மொழியை மறக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்று தமது ஆதங்கத்தை நோபல் பரிசு பெறுவதற்காக ஸ்ரக்கோம் சென்றவேளை குறிப்பிட்டிருந்தார். எனது புத்தகங்களின் கூட்டு மொத்தம் நானே என்று கூறும் அவர் தனது தாயாரின் ஊர் நேபாளத்தில் உள்ள ஒரு கிராமம் என்கின்றார்.



இலக்கியம் என்பதென்ன? 
அவர் நினைவாக அவரைப்பற்றிய விக்கிபீடியா பதிவினைப் பகிர்ந்துகொள்கின்றேன். கோபுலு என்றதும் என் நினைவில் வருபவை என் பதின்மவயதினில் தமிழகத்து வெகுசன சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கு அவர் வரைந்த ஓவியங்கள்தாம். ஜெயகாந்தனின் நாவல்களான 'ஒரு மனிதன். ஒரு வீடு. ஒரு உலகம்.' (விகடன்), 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (தினமணிக்கதிர்), கதிரில் வெளியான ஜெயகாந்தனின் சிறுகதைகள் மற்றும் 'ரிஷி மூலம்' குறுநாவல், ஆனந்த விகடனில் வெளியான உமாசந்திரனின் 'முழுநிலா' நாவல், ஶ்ர...ீ வேணுகோபாலனின் 'நீ. நான். நிலா' (கதிரில் வெளியான நாவல்), சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' (விகடன் பிரசுரம்), அகிலனின் 'சித்திரப்பாவை' (விகடன்), நா.பார்த்தசாரதியின் 'நித்திலவல்லி' (விகடன்), கொத்தமங்கலம் சுப்புவின் 'பந்த நல்லூர் பாமா' (கதிர்), தேவனின் 'துப்பறியும் சாம்பு' போன்ற படைப்புகளுக்கு அவர் வரைந்த ஓவியங்களும், விகடனின் தீபாவளி மலர்களுக்கு அவர் வரைந்த ஓவியங்களும்தாம்.




1. எதிர்காலச் சித்தன் பாடல்!
[சென்ற வருடம் கிருஷாங்கினியிடம் வாங்கிய கட்டுரை (பதில்கள்) என்னிடமே தங்கி விட்டன. அவற்றையும் கிருஷாங்கினியின் கவிதைகளையும் சேர்த்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சிற்றிதழ் பரப்பில் தனது கவிதை, கதை கட்டுரைகள் மூலமும், சதுரம் என்ற தனது பதிப்பகத்தின் வாயிலாகவும் ஆர்வத்தோடு பங்களித்துவரும் கிருஷாங்கினி குறித்த முடிந்த அளவு அகல்விரிவான கட்டுரை ஒன்றை அனுப்ப விரும்பி இந்த நீள்கட்டுரைத் தொகுப்பினைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியுள்ளேன் - லதா ராமகிருஷ்ணன் -]
எழுத்தாளர் ஒருவர் ஏன் இந்தக் கதைக்கருவைத் தெரிவுசெய்துகொண்டார், ஏன் அந்தக் கதைக்கருவைத் தெரிவுசெய்துகொள்ளவில்லை; ஏன் இந்தக்கதைக்கருவை இப்படிக் கையாளவில்லை, ஏன் அந்தக் கதைக்கருவை அப்படிக் கையாண்டார் என்று கேட்பதெல்லாம் ஒருவகையில் அபத்தம்தான். அதேசமயம், ஒரு கருப்பொருளை எழுத எடுத்துக்கொள்வதற்கு ஒரு கதாசிரியருக்கான நோக்கம் என்று ஒன்று இருக்கும்போதுதான் அந்த எழுத்து பொருட்படுத்தக் தக்கதாகிறது. அப்படியொரு நோக்கமிருந்து அது எழுத்துமூலம் நேர்த்தியாக, அழுத்தமாக வெளிப்படும்போதுதான் அந்தப் படைப்பு வாசகரிடையே நேர்மறையான பரிவதிர்வை ஏற்படுத்துகிறது.
- தகவல் உதவி - விக்கிபீடியாமூலம் (சிங்களமொழியில்) - தர்மசிறி பண்டாரநாயக்கவின் 'ஏகா அதிபதி' நாடகத்தின் ஒரு பகுதி.\தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -
[எழுத்தாளர் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவல் ஜனவரி 3 , 2015 அன்று தமிழகத்தில் காலச்சுவடு பதிப்ப வெளியீடாக வெளிவரவிருக்கின்றது. நீண்ட நாள்களாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நாவலான 'க்னவுச்சிறை' நூலுருப்பெற்று வெளிவருவது மகிழ்ச்சியளிப்பது. வாழ்த்துகிறோம். அதனையொட்டி 'கனவுச்சிறை' நாவல் பற்றி வெளியான எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள் சிலரின் கருத்துகள் சில இங்கு பதிவாகின்றன. - பதிவுகள்-]

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









