கனடாவில் சிற்றிதழ்களின் தேக்கநிலை
இலங்கையில் நடந்த யுத்தம் ஈழத்தமிழ் மக்களை பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர வைத்தது. இவ்வாறு புலம்பெயர்ந்த மக்களின் பெரும்பாலானவர்கள் கனடாவில் வாழ்கிறார்கள். நாம் வாழும் கனடாவில் மட்டும் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் படைப்பாளிகளில்; கணிசமானோர் கனடாவில் வாழ்கி;றார்கள் எனலாம். கவிஞர்கள், நாவலாசிரியர்கள், சிறுகதையாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று படைப்பாளிகளின் பட்டியல் முடிவற்றது. இவர்களது படைப்புக்களின் தொகையும் எண்ணிலடங்காதது. குறிப்பாக சிற்றிதழ்கள், பத்திரிகைகளின் தோற்றம் சமீப காலத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கணினி தெரிந்தவரெல்லாம் பத்திரிகை நடத்தலாம் என்றளவில் இதன் தோற்றம் இருந்தாலும் மழைக்கால விட்டில்களாக மறைந்துவிடுகின்ற இதழ்களே அதிகம். இக்கட்டுரையின் நோக்கம் அவ்வாறான இதழ்களின் ஆழ, அகலங்களை ஆராய்வதல்ல. நிறைய எழுத்தாளர்கள் வாழ்கின்ற இந்த கனடா நாட்டில் சிற்றிதழ்கள் எதுவும் ஏன் தொடர்ந்து வெளிவரவில்லை என்பது பற்றி நோக்குவதே ஆகும்.









பண்டைத் தமிழரின் சிறப்பையும், பெருமையையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டுவனவாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க நூல்களுள் ஒன்றான புறநானூறு தமிழக வரலாற்றை அறிவதற்கு மிகப்பெரிய சான்று ஆகும். புறநானூற்றின் மூலம் நாகாpகம், பண்பாடு, வீரம், ஆட்சி, கொடை, வாணிகம் போன்றவற்றையும், படைத்திறம் வாய்ந்த பெருவேந்தரையும் கொடைத்தன்மை வாய்ந்த வள்ளல்களையும் கற்றறிந்த சான்றோர்களையும் பழந்தமிழ்க் குலங்களையும் அறியமுடிகிறது. மேலும் அரசனின் ஆட்சிக்கு அடித்தளமான அரண் குறித்த கருத்துக்களையும் உணரமுடிகின்றது. திருக்குறளிலும் அரண் குறித்த செய்திகளைப் பொருட்பாலில் அரண் என்ற அதிகாரத்தின் மூலம் அறியமுடிகின்றது.
“பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்பது பாரதியார் வாக்கு. மானிடவாழ்வில் தாய்க்கே முதலிடம் வழங்கப்படுகின்றது. முற்றும்; துறந்த முனிவர்களும் தாயைப் போற்றியுள்ளனர். அத்தகைய தாய்க்கு அடுத்தபடியாகப் போற்றப்படவேண்டியது ஒருவர் பிறந்த நாடாகும். தேசப்பற்று, ஊர்ப்பற்று, நாட்டுப்பற்று எல்லோருக்கும் இருக்கவேண்டிய ஒன்றாகும். ஆனால் அப்பற்று மற்றைய இனத்தவரையோ மற்றைய ஊரவர்களையோ துன்புறுத்துவதாகவும் தாழ்த்துவதாகவும் அமைந்துவிடக் கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு நாட்டின் பண்டைய வரலாற்றை நாம் அறிந்துகொள்ள உதவும் வழிகளுள் பிரதேச வரலாற்றாய்வுகள், இடப்பெயர் ஆய்வுகள் என்பன முக்கியமானவை. இவ்வாய்வுகள் மொழியியல், வரலாறு, தொல்பொருளியல், நிலநூல், சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளின் ஆய்வுகளுக்கும் வழிகாட்டுகின்றன. மக்களின் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை அறியவும் இவ்வாய்வு துணைசெய்கின்றது. பல்லாண்டு காலமாக ஊரின் சிறப்புப் பற்றிக் கூறும் வழக்கம் தமிழ்மொழியில் இருந்து வந்துள்ளதை நாம் காண்கிறோம். பட்டினப் பாலை, மதுரைக் காஞ்சி முதலிய சங்ககால நூல்கள் நகர்கள் பற்றிக் கூறுவனவாகும். ஊரின் அமைப்பு, மக்களின் தொழில்வளம், பழக்க வழக்கங்கள், பண்பாட்டுச் சிறப்பு ஆகியவை பற்றிய பல செய்திகளை இந்நூல்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. சிற்றிலக்கிய வகைகளான ஊர் விருத்தம், ஊர்வெண்பா என்பனவும் ஊரின் வரலாறு பற்றிக் கூறுவனவாகும். பாட்டுடைத்தலைவன் வாழ்ந்த ஊரின் சிறப்பினை பத்து ஆசிரிய விருத்தங்களால் சிறப்பித்துப் பாடப்பெறுவது ஊர்விருத்தம் என்பார்கள். ஒரு ஊரினைப் பத்து வெண்பாக்களால் சிறப்பித்துக் கூறுவது ஊர் வெண்பா எனவும் அறியப்படுகின்றது.


பிரேம்ஜி ஞானசுந்தரம் இடதுசாரிக்கருத்துகளால் கவரப்பட்ட ஒரு முற்போக்காளர். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை வழிநடத்தி வந்தவர். 1954 தொடக்கம் அதன் செயலாளராக இருந்துவருகின்றார். அவர் 1950களில் இருந்து எழுதி வந்த கட்டுரைகள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு நூல் கடந்த 27.09.2009 மாலை 'ஸ்காபுரோ விலேச்' சனசமூக நிலையத்தில் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வை திரு. வி.என். மதியழகன் தொகுத்து நெறிப்படுத்தினார். செல்வி ஆதிரை விமலநாதன் தமிழ்த்தாய் வாழ்த்தையும், கனடிய தேசிய கீதத்தையும் இசைத்தார். தொடர்ந்து த.சிவபாலு அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து தலைமையுரையாற்றினார் அதிபர் கனகசபாபதி அவர்கள். தலைமையுரையில் 'பிரேம்ஜீ அவர்கள் இலைமறை காயாக இருந்து செயலாற்றிய ஒருவர்; ஆரம்பத்திலவர் பரமேஸ்வராக்கல்லூரியில் கற்றபோது அவரைப் பரீட்சைக்குத்தோற்றுமாறு அவரது ஆசிரியர் கேட்டபோது அவர் நான் பரீட்டைஎடுக்கவரவில்லை அறிவுக்குப் படிக்கவே வந்தேன் என்றபோது அப்படியானால் இது உனக்கு உகந்த இடமல்ல என்று பாடசாலையில் இருந்துவெளியேற்றப்பட்டபோது, அவரது பெற்றோரும் அதனை ஒரு சவாலாக எடுத்து அவரை வேறு பாடசாலையில் சேர்ந்து படிக்கவைத்துள்ளனர் என்றால் பிரேம்ஜிக்குப் பெற்றோர் தந்த ஒத்துழைப்பு எத்தகையது என்பது எனக்க வியப்பைத்தருகின்றது. அது மட்டுமல்லாது கொழும்பில் நாமக்கல் கவிஞரைக் கண்டு நான் ஆங்கிலத்தை அல்ல தமிழைத்தான் கற்க விரும்புகின்றேன் என்று கூறி அவருடைய அனுமதியைப் பெற்று இந்தியாவிற்குச் சென்று தமிழைப் படித்துள்ளார் என்றால் அவரது மொழிப்பற்று, தேசப்பற்று என்பன பற்றிச் சொல்லத்தேவையில்லை. சென்னையில் வி.க. வ.ரா. சுவாமிநாத சர்மா ஆகியோருடன் பழகும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார். அது மட்டுமன்றி சுவாமிநாத சர்மாவின் ஆலோசனைப்படி கொம்யூனிசக்கட்சியில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக 1954 தொடக்கம் இயங்கி வருவதோடு மட்டுமன்றி பல்வேறுபட்டி பிரிவினரையும் இணைத்துப் பாலமாகச் செயற்பட்டவர். சர்வதேச எழுத்தாளர் மகாநாட்டைக் கூட்டி பல வெளிநாட்டு எழுத்தாளர்களும் இணைத்து பெரிய ஒரு மகாநாட்டைக் கூட்டியவர்' என்று அவரைப்பற்றிய சிறப்புக்களை எடுத்துரைத்தார்.
சிறுகதைக்கான வரைவிலக்கணம் எதையும் கணித்தபடி தற்போதைய சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கவில்லை.முன்னரெல்லாம் அகிலன்,கல்கி தொடங்கிசாண்டில்யன்,கோவி மணிசேகரன் என விரிந்து அசோகமித்திரன்,மௌனி எனப் பரந்து தளம் விரிந்தே செல்கிறது.இன்று பலர் சிறுகதைக்குள் வந்துவிட்டனர்.கல்வி,கணினியியல் வசதி என வாய்ப்புக்கள் கைக்குள் வர வடிவங்களிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இலங்கையிலும் அப்படியே. சிறுகதைகளின் முன்னோடிகளின் தொடர்ச்சியாக பலர் வந்துவிட்டனர். அன்று தொடங்கி இன்று வரை பலரும் தம்மை சிறுகதைகளின் மூலம் அடையாளப்படுத்தி நிற்கின்றனர். சிறுகதைகள் தனியாகவும், நூலாகவும் பரிசில்களைப் பெற்றுவிடுகின்ற அளவுக்கு வளர்ந்து வருகின்றன என்றே சொல்லலாம். இன மோதல்களில் சிதறுண்ட மக்கள் பல நாடுகளில் வாழும் நிலையில் வாழ்வின் சோகம்,யுத்த நோவுகள்,குடும்ப சிதைவுகள்,ஒன்றினைவுகள் எல்லாம் இன்னும் கைகளுக்குள் வராத சூழலில் பலர் எழுத்தை தம் வடிகாலாக்கினர். பழையவர்களுடன் புதியவர்களும் இணைந்துகொண்டனர். இதற்கு புலம்பெயர் சூழலில் வானொலிகளின், தொலைக்காட்சிகளின், அச்சு ஊடகங்களின் வருகை பலரையும் உள்வாங்கும் களமாகவும் ஆகிவிட்ட நிலையில் சிறுகதைகள் எழுதும் பலரையும் உருவாக்கிவிட்டிருந்தது. இலகுவாக வாசிக்கும் சூழலும், இங்குள்ள கல்வி,நண்பர்களின் தொடர்பு கதை வடித்தல் அவர்களை ஓரளவு ஆசுவாசப்படுத்தவும் செய்வதை மறுக்கமுடியாது.
தமிழ் மரபிலக்கணங்களை ஆய்வறிஞர்கள் அகத்தியம், தொல்காப்பியம், வீரசோழியம், பிரயோகவிவேகம் என நான்கு மரபுகளாக இனங்காண்கின்றனர். இவ்வகைப் பிரிப்புமுறைகள் இலக்கண உருவாக்க நோக்கம், புறக்கட்டமைப்பு, முன்னோர் நூலைப் பின்பற்றும் பொதுமரபு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன எனலாம். தமிழ் மொழிக்குரிய முதலெழுத்து விளக்க நெறிகளில் மரபிலக்கணிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், அதன் மரபாக்கம் குறித்தும் விளக்க முனைகின்றது இக்கட்டுரை.


மகாகவி பாரதி அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்தவன்.வறுமை விரட்டியபோதும் உறவுகள் எதிர்த்தபோதும் சுதந்திரபாரதம் பெறத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவன்.தாமிரபரணிபாயும் சீவலப்பேரி, மகாகவி பாரதியின் தந்தை சின்னச்சாமிஐயர் பிறந்தஊர்.தந்தை கடுவாய்ச் சுப்பைய்யர் காலமானபின் தாய் பாகீரதியம்மையாருடன் பாரதியின் தந்தை எட்டயபுரம் செல்ல நேரிடுகிறது. எட்டயபுரத்தில் சின்னசாமிஐயர் பள்ளிப்படிப்பை முடித்து எட்டயபுரஜமீனில் பணிபுரிகிறார்.அதே ஊரில் வசித்த லட்சுமிஅம்மையாரை மணக்கிறார்.1882 டிசம்பர் 11 இல் மகாகவி பாரதி பிறக்கிறார்.சுப்ரமணியன் என்று பெயரிடுகிறார்கள்.பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887இல் பாரதியின் தாய் லட்சுமிஅம்மையார் காலமாகிறார். பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









