மக்களாற்றுப்படையின் அமைப்பு
ஆற்றுப்படை இலக்கியம் வளர்வதற்கு காரணம் அக்காலச் சூழலே காரணமாகும். ஏனெனில் சங்க காலம் மன்னரின் ஆட்சிகாலம் என்பதால் அவை சமூக உணர்வு நோக்கோடு செயல்பட்டது. மன்னனுக்காக சமுதாயமும் வாழ்ந்த காலம் சங்ககாலம். மன்னர்கள் வீரம் கொடை என்ற இரண்டையும் உயிராக மதித்து வாழ்ந்துள்ளார்கள். ஆகையால் கலைஞர்கள் மன்னரிடம் செல்லும்போது அக்கலைஞர்களை மன்னாகள்; ஆதரித்துப் போற்றியுள்ளனர். இருவரிடையே இணக்கமான நட்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் போற்றி வாழ்ந்தமையால் ஆற்றுப்படை இலக்கியம் தோன்றலாயிற்று. சங்ககால ஆற்றுப்படைக்கு பின்னர் எழுந்தது பிற்கால ஆற்றுப்படை. கால மாற்றத்திற்கேற்ப அறிவியலின் பரிமாண வளர்ச்சி போன்றுää இலக்கியத்திலும் காலத்திற்கேற்றவாறு பாடுபொருளில், மாற்றத்தினையும் வளர்ச்சியினையும் பார்க்க முடிகிறது. இவ்வகையில் வளர்ந்தது தான் பிற்கால ஆற்றுப்படை....மேலும் படிக்க

தோழி தலைவியைத் தலைவன் வரைந்துகொள்ளாது காலந்தாழ்த்தும் சூழலில் தலைவனிடம் தலைவியை வரைந்து கொள்ளுமாறு பல்வேறு காரணங்களைக் கூறியும் தலைவிக்கு ஏற்படும் இடையூறுகளைக் (வெறியாட்டுää இற்செறிப்பு, அலர், தலைவனையே எண்ணி தலைவி மெலிதல், வருந்துதல்) கூறியும் வரைவினை வேண்டுவாள். இது ‘வரைவு கடாதல்’ ஆகும். இவ்வரைவுகடாதல் சூழலானது தொல்காப்பியத்திலும் எட்டுத்தொகை அகநூல்களுள் ஒன்றான அகநானூற்றிலும் எவ்வாறு அமைந்துள்ளது என்றும், அகநானூற்றில் அமைந்துள்ள வரைவுகடாதல் சூழலானது தொல்காப்பியத்துடன் எவ்வாறு பொருந்தியும் மாறுபட்டும் அமைந்துள்ளது என்றும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது. “வரைவு கடாதல் - மணந்து கொள்ளுதலைப் பற்றி உசாவுதல்: கடாவல் -திருமணத்தில் செலுத்தல்”1 என்று கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழியகராதி குறிப்பிடுகிறது. மு. இராகவையங்கார் வரைவுகடாதல் என்பதற்கு, “தலைவன் இருவகைக்; குறிகளிலும் பலகாலும் வந்தொழுகும் இடத்து, இக்களவு வெளிப்படச்; சுற்றத்தார் இற்செறிப்பரோ என்றும், வழியாலும் பொழுதாலும் தலைவற்கு ஏதம் வருங்கொல் என்றும்; தோழி அச்சமுற்று, இவ்வொழுக்கமொழுகல், நுங்குடிப் பிறப்புக்குஞ் சிறப்புக்கும் பொருந்தாமையின், இனி நீவிர் இவளை மணந்து கொள்வதே தகுதியென்று தலைவனை வரைவுகடாவத் தொடங்குவாள் (வரைவு கடாதல் - மணந்து கொள்ளுதலைப் பற்றி உசாவுதல்)”2 என்று விளக்கமளிக்கின்றார்.. ...
உலகின் மனிதகுல வரலாறானது மகத்துவம் வாய்ந்தது. கூட்டு உழைப்பில் வாழத்தொடங்கிய துவக்ககால சமூகத்தினை இனக்குழு, நாடோடி, நிலவுடைமை ஆகிய முச்சமூகப் படிநிலைகளில் மானுடச்சமூகம் வளர்ச்சி பெற்றது. நிலவுடைமைச் சமூகத்தில்தான் குடும்ப அமைப்பு உருவானது. இக்குடும்பத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பெண் பாதுகாப்பதோடு குடும்ப நிருவாகத்தையும் பெண் பார்ப்பதாக அமைந்தது. இதுவே தாய் வழிச்சமூகமாகும். நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்க காலத்தில் தான் தாய்வழிச் சமூகம் நிகழ்ந்தது. இச்சமூகம் வளர்ச்சி பெற்ற நிலையில் பெண்ணின் உழைப்பு சுரண்டப்பட்டுக் குடும்ப அரசியல், பொருளாதாரம், உடலமைப்பு போன்ற அடிப்படையில் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள். இவ்வாறு பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கப் போக்கே தந்தைவழிச் சமூகமாகும். இந்நிலையில் உலகளவில் பெண்ணை அடிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்ணைப் பொருளாகவும் பார்க்கக்கூடிய சமூகமாக இம்மானுடச்சமூகம் திகழ்கிறது. நிலவுடைமைச் சமூகத்திலிருந்து பெண் அடிமைப்படுத்தப்பட்ட நிலையினையும், சிலப்பதிகாரத்தில் பெண் விற்கப்படுதலையும் பற்றி ஆராய்ந்தறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
1.0 முன்னுரை
அறம் பாடுவதில் திராவிட மொழிகளின் மும்மூர்த்திகள் திருவள்ளுவர் (தமிழ்), வேமனா (தெலுங்கு), சர்வக்ஞர் (கன்னடம்) ஆவர். இவர்கள் பொதுமானுட வாழ்வைப் பாடுவதில் தலைசிறந்து விளங்கினர். அவர்கள் முறையே கி.மு., கி.பி.17, கி.பி.15 ஆகிய காலங்களில் வாழ்ந்தவர்கள். அம்மூவரும் ஊர் ஊராகச் சுற்றி மக்களிடையை அறக்கருத்தியல்களை வலியுறுத்தியவர்கள் என்பது நினைவிற்கொள்ளத்தக்கது.
ஒழுக்கநெறி சார்ந்த சமண பௌத்த சமயங்களின் வரவால் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தமிழில் தோன்றின. அப்பதினெட்டு நூல்களில் பதினோரு நூல்கள் நீதிநூல்களாய் அமைந்தன. கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய்யாமை, காமம் இன்மை, கள்ளாமை எனும் பஞ்சசீலக் கொள்கைள் இவ்விலக்கியங்களால் புதிய கருத்தாக்கமாய் முன்நிறுத்தப்பட்டன. அக்காலப் புலவர்கள் மருத்துவர்களாகவும், இருந்ததால் உடல்நோயை, உள்ள நோயை நீக்குவதற்கு இலக்கியத்தையே மருந்தாகக் கருதினர். பரத்தமை ஒழுக்கம், கள் அருந்துதல், அளவுக்கதிகமாய் உணவு அருந்துதல் போன்றவற்றை நோய்க்கான காரணிகளாகச் கண்டு, எளிமையான யாப்பமைப்பில் உடல், உள்ள நோயை நீக்க இலக்கியங்கள் படைத்தனர். வாதம், பித்தம், கபம் எனும் மூன்றே நோய்களுக்குக் காரணமாக அப்புலவர்கள் கண்டனர்.

முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு எளிய கிராமத்துச் சிறுவனுக்கு தமிழ் வழியாக என்ன வாசிக்க கிடைத்திருக்கும்? முதலில் ராணி, தேவி, கல்கண்டு. பின்னர் மெல்ல குமுதம், கல்கி, விகடன். அவற்றின் வழியாக சாண்டில்யன் முதல் சுஜாதா வரையிலான தொடர்கதைகள். அவற்றில் ஒரு பக்கத்துக்கு மிகாமல் வரும் கட்டுரைகள். அவற்றின் வழியாக தெரியவரும் உலகம் ஒரு உள்ளங்கைக் கண்ணாடியில் பிரதிபலித்துப் பார்த்துக்கொள்வது போன்றது. அவ்வளவுதான். அதற்குமேல் அவனை தற்செயல்கள் உந்திச்சென்று எங்காவது சேர்ப்பித்தால் ஒழிய அவனுக்கு இன்னொரு உலகம் அறிமுகம் ஆகப்போவதில்லை. எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த உலகம் விரிவடையப்போவதில்லை. மெல்ல சலித்து அவன் தன் அன்றாட வாழ்க்கையின் முடிவில்லா அலைகளில் மூழ்கி மறைந்து போய்விடுவான். இந்த ஒற்றைப்பெரும்பாதைக்கு மாற்றாக அன்று இருந்த ஒரே சிறுபாதை சோவியத் நூல்களினால் ஆனது. சோவியத் ருஷ்யாவின் ராதுகா பதிப்பகம், முன்னேற்ற பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் ஓர் ஆர்வமுள்ள தொடக்க வாசகனுக்கு அவனுடைய இளமையை சவாலுக்கு அழைக்கும் அற்புதமான பாதை ஒன்றை அறிமுகம் செய்தன. பேரிலக்கியங்களின் ஒளிமிக்க கனவுகளின் வழியாக அவனை நடத்திச்செல்லும் பாதை.
குறிப்பு - ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவரது புதிய தொகுப்பான And the Mountains Echoed எனும் நாவல் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது. அவரது புதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற நேர்காணலின் தமிழாக்கம் இது. -
ஒரு நாவலின் வெற்றியும் தோல்வியும் எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது, உலக அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் விற்பனையான நாவல்கள் இன்று இருந்த இடமே தெரியவில்லை, வெளியான காலத்தில் சில நூறு பிரதிகள் விற்ற நாவல்கள் இன்று கொண்டாடப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன, புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருக்க கூடும். அதைத் தவிர எழுத்தாளன் மேற்கொள்ளும் தந்திரங்கள் சுயபுகழ்ச்சிகள். ஊதிப்பெருக்கிய பாராட்டுகள் எதனாலும் ஒரு நாவலை வெற்றி அடைய செய்துவிட முடியாது, அவை புகைமயக்கம் மட்டுமே, ஒவ்வொரு நாவலின் பின்னேயும் எழுத்தாளர்கள் வெளியே பகிர்ந்து கொள்ளாத கஷ்டங்கள். நெருக்கடிகள். நாவலை எழுதுவதற்கு உந்துதலாக இருந்த சம்பவங்கள். நிஜமனிதர்களின் சாயல்கள் என வாசகஉலகம் அறியாத எவ்வளவோ இருக்கின்றன. அவை எழுத்தாளனின் ரகசியங்கள். அவற்றை தனக்குள்ளாகவே புதைத்துவிடவே எழுத்தாளன் எப்போதும் விரும்புகிறான், அரிதாக சிலர் தனது நாவலின் அந்தரங்கக் குறிப்புகளில் ஒன்றிரண்டைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள், பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரை புகழ்ந்து பேசப்படுகிறது, தோற்ற குதிரை புறக்கணிக்கப்படுகிறது ஆனால் ஒடி வலித்த அதன் கால்களின் வேதனையை ஒருவருமே கவனிப்பதில்லை, அப்படி பட்டது தான் நாவலின் வெற்றி தோல்வியும், அதன் முன்னே எழுத்தாளின் வலிகள் கண்டுகொள்ளபடாமல் போகின்றன,
கோயில் குருக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக மனைவி சொன்னாள்.
யார் இந்த அருந்ததிராய்? மேகாலயாவின் தலைநகரான சில்லாங்கில் 24 நவம்பர் 1961-வில் கேரளத்தைச் சேர்ந்த ரோஸ்மேரிக்கும் வங்காளத்தின் தேயிலைத் தோட்ட பணியாளரான தந்தைக்கும் பிறந்தவர். இவருக்கு ஒரு வயது இருக்கும்போதே பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து போயினர். கலப்பு மணம் புரிந்து கணவனைப் பிரிந்து வாழ்ந்த தாய்க்கு மகளாகப் பிறந்ததனால் இவருக்கும் ஊரின், உறவின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது. அருந்ததி ராய்க்கு சமூகம் எதிர் உலகமாகத்தான் முதலில் அறிமுகமாகியது. பின்னர் எல்லாவற்றையும் மீறி நீலகிரியில் பள்ளிப்படிப்பை முடித்து தில்லி பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை படிப்பில் சேர்ந்தார். உடன் படித்த ஒருவரைக் காதலித்து மணந்த தால் படிப்பு பாதியில் நின்றது. அந்த வாழ்க்கையும் நான்கு ஆண்டுகள்தான் நிலைத்தது. அவரிடமிருந்து பிரிந்த பின்னர் “பிரதீப் கிரிஷன்’ என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து திரைப் படம் எடுத்தனர். இவ்வாழ்க்கையும் இவருக்கு நிலைக்க வில்லை. இவரின் கட்டற்ற சிந்தனை அடக்குமுறைக்கு அடங்காதவராக இவரை வடிவமைத்திருந்தது. மேலும் புரட்சிச் சிந்தனை மிக்கவராகவும் இவர் இருந்தார். இவரின் முதல் ஆசிரியரே இவரின் தாய்தான். “”உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள். நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்கிற பாடம் அவருக்குச் சூழலே கற்றுக் கொடுத்தது. அதனால் எல்லாவற்றின்மீதும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் என எல்லாவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி படைப்புகளின் மூலம் பலரின் கவனம் பெற ஆரம்பித்தார். இந்நிலையில் தான் 1997-ல் அவர் எழுதிய “த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ (The God of Small things) என்னும் நாவல் புக்கர் பரிசினைப் பெற்றது. புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் இவர்தான்.
தமிழில் எழுதப்பட்ட இலக்கணங்களை மரபிலக்கணங்கள், நவீன இலக்கணங்கள் எனப் பாகுபடுத்திப் பார்ப்பது பெரும்பான்மையான ஆய்வறிஞர்களின் துணிபு. அவற்றுள் மரபிலக்கணங்களைப் பட்டியலிட இருபதாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்(2010:112), நூற்பா வடிவில் அமைந்திருக்க வேண்டும்(2010:299-300) என்பது இலக்கணவியல் அறிஞரின் கருத்து. அதாவது அறுவகை இலக்கணம் வரை எழுதப்பட்ட நூல்களை மரபிலக்கணங்களிலும், பிறவற்றை நவீன இலக்கணங்களிலும் வைக்கலாம் என்பது அவ்வறிஞரின் கருத்தாகப் புலப்படுகிறது. அக்கருத்து மரபிலக்கணக் காலநீட்சியை அறிவதற்கான கருதுகோள்கள் எனில், ஏழாம் இலக்கணத்தையும் மரபிலக்கண வரிசையில் வத்துப் பார்ப்பதே பொருத்தமுடையதாக இருக்கும். ஆக, ஏழாம் இலக்கணம் மரபா? அல்லது நவீனமா? என அறிவதாக இக்கட்டுரை அமைகிறது.
In a time of burnings and bombings Heaney used poetry to offer an alternative world; he gave example by his seriousness, his honesty, his thoughtfulness, his generosity Two years ago I invited Seamus Heaney to read at the Kilkenny arts festival in Ireland. The venue was St Canice's Cathedral, one of the most beautiful churches in Ireland. It was here almost 40 years earlier that, as a young poet, he had met Robert Lowell, who had become a friend and a mentor. Heaney admired Lowell's utter dedication to his craft, his ability to change, his absolute belief in the importance of poetry. When I suggested that Dennis O'Driscoll, who had done a book of interviews with Heaney, should introduce him on stage, Seamus said he would like that, but he would prefer it if Dennis would read as well. Dennis, he said, had done enough introducing; since he was also a poet, he should get equal billing. It was typical of Seamus's generosity. That evening, I suggested to him that he should do no signing of books after the reading, but go and have a drink with the theatre director Peter Brook, who was in Kilkenny and wanted to meet him. As we left by a side door and walked away from the church, he sighed and said that all his life after readings when everyone else was free to walk out into the world, he would spent an hour or more signing books and meeting people. He was the most tactful and careful and scrupulous of men. He used a deep-rooted conscientiousness in his work, but it also came across every time you met him. He had a way of holding back, watching every word, weighing the moment. In his public readings he had a real command; privately, he was almost shy, always thoughtful.
The Best Untranslated Writers series – in which established writers select and showcase fellow writers from their own languages who are not yet widely translated or read – began with a trio of Brazilians on the writers they love most but are yet to make the leap into English. Today V.V. Ganeshananthan introduces us to Shobaskathi, also known as Anthony X, who writes about Sri Lanka and its diaspora communities, and who was previously involved in the Liberation Tigers of Tamil Eelam. Shobasakthi is also known as Anthony X; he is an ex-militant; he is an expatriate. Based in France, he writes about Sri Lanka in Tamil, his native language (and the native language of my parents). I read Tamil, but not yet well enough to get through the original versions of his books; instead, I use popular English translations by Anushiya Ramaswamy. I finished his novel Gorilla very shortly before meeting him; I read another, Traitor, many years after that initial conversation.
இதமான கடற்காற்று…. ஆர்ப்பரிக்கும் கடல்… அந்தக்காற்றை சுவாசித்தவாறும் கடலோசையை கேட்டவாறும் மாலையில் சூரிய அஸ்த்தமனத்தின் அற்புதக்காட்சியை ரசித்தவாறும் தனது தாத்தா, பாட்டி, தாய், தந்தை, அக்கா, தங்கை, தம்பிமாருடன் மனிதநேயத்துடனும் எண்ணற்ற கனவுகளுடனும் வாழ்ந்து வளர்ந்த இளைஞன், அந்தக்கடற்கரையோர நகரத்தில் தமிழ் சார்ந்த பல பணிகளில் ஊர்மக்களுடன் இணைந்திருந்தான். தனது ஆரம்பக்கல்விக்கு துணையாக நின்ற பாடசாலையிலும் அதற்கு வித்திட்ட வெகுஜன அமைப்பான இந்து இளைஞர் மன்றத்திலும் இயல், இசை, நாடகத்தின் வளர்ச்சிக்கு பக்கபலமாக நின்றான். பாடசாலை பழைய மாணவர் மன்றத்தை உருவாக்குவதிலும் அதன் ஊடாக மாணவரிடையே ஊக்குவிப்பு போட்டிகளை நடத்துவதிலும் உறுப்பினர்களுடன் இணைந்திருந்தான். இவ்வாறு இலங்கையின் மேற்கே தமிழ் அலைகள் ஆர்ப்பரிக்க, அதில் தன்னாற்றலால் நீச்சலிட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆச்சரியப்படத்தக்கது அல்ல. உள்ளார்ந்த படைப்பிலக்கவாதி எங்கிருந்தாலும் அப்படித்தானிருப்பான். அவனுக்கு எழுத்தின்மீதும் வாசிப்பின் மீதும் பற்றுதல் அதிகம். பெற்றவர்களின் கனவு வேறுவிதமாக இருக்க அவனோ தனது கனவை வேறுவிதமாக வளர்த்து நனவாக்கிக்கொள்ள முயன்றான். அவனது உழைப்பு வீண்போகவில்லை. தான் நேசித்த கடல் மாந்தர்கள் பற்றிய கதைகளையே முதலில் எழுதி முதல் தொகுப்பிற்கு தேசிய சாகித்திய விருதையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டான்.
“ஒரு நபர் தனக்காக மட்டும் பாடுபட்டால், ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம், மிகச்சிறந்த கவிஞராகலாம், ஆனால் உண்மையான மனிதராக முடியாது” என தனது பள்ளிப்பருவத்திலே எழுதியவர் காரல் மார்க்ஸ். சக மனிதர்கள் குறித்தும் அம்மனிதர்களின் வாழ்வுக் குறித்தும் உயரிய நிலையில் சிந்தித்து செயலாற்றியமையே வரலாற்றினுடைய மனிதராக அவர் போற்றப்படுவதற்கான அடிப்படையாகும். மனித குல வளர்ச்சிப் போக்க்pல் அறிவு என்பது சமுதாயம் சார்ந்த விடயமாகும். எனவே அவ்வறிவு எப்போதும் விஞ்ஞானம் தழுவியதாக அமைந்திருப்பதுடன் செருக்ககோ நேர்மையீனமோ இல்லாது சமூக வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதாக அது அமைந்துக் காணப்படுகின்றது. பிரம்ஜி என்ற ஆளுமையின் பணிநலன் பாரட்டு நிகழ்வு குறித்த சிந்திக்கின்ற போது மேற்கறிக்க வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.
1.0 முகப்பு
['மல்லிகை; சஞ்சிகையின் வெளியீட்டாளரும், ஆசிரியரும், எழுத்தாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்கு ஜூன் 27 அன்று வயது எண்பத்தியேழு. அவரது பிறந்த தினத்தையொட்டி 'எதுவரை.நெட்' இணைய இதழில் வெளியான இக்கட்டுரை நன்றியுடன் மீள்பிரசுமாகின்றது. - பதிவுகள் -]
[அண்மையில் பதிவுகள் இணைய இதழில் வெளியான 'பிரமிளின் தவளைக் கவிதை பற்றியதொரு புரிதல்' என்னும் எனது கட்டுரையில் 'தவளைக் கவிதை’ பற்றிய எனது புரிதலை எழுதியிருந்தேன். அது பற்றிய ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்திற்கு ஜெயமோகன் அளித்துள்ள பதிற் கடிதம் ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. - வ.ந.கி -] ஒரு கவிதையை வாசிக்க குறைந்தபட்ச வாசிப்பு அதிகபட்ச வாசிப்பு என இரு தளங்களை உருவாக்கிக்கொள்வது பயனளிக்கும் என்பது என் எண்ணம். குறைந்தபட்ச வாசிப்பு என்பது அந்தக்கவிதை உருவான மொழி-பண்பாட்டுச்சூழலில் கவிதையின் வரிகள் மூலம் பொதுவாக அடையச்சாத்தியமான அர்த்தம். அந்த மொழி-பண்பாட்டுச்சூழலில் உள்ள, கவிதையின் தனிமொழியை கற்பனைமூலம் விரித்து அறியும் பயிற்சி கொண்ட எல்லா கவிதைவாசகர்களும் ஏறத்தாழ அடையக்கூடிய வாசிப்பு அது. ஒரு வகுப்பில், ஒரு விவாதக்கூடத்தில், ஓர் வாசிப்பரங்கில் எப்போதும் அந்த குறைந்தபட்ச வாசிப்பைத்தான் முதலில் முன்வைக்க முடியும். இந்த வரிகள் இவ்வாறெல்லாம் பொருள் அளிக்கின்றன, ஒட்டுமொத்தமாக இக்கவிதை இந்தப் பொருளை, இந்த உணர்வை, இந்த தரிசனத்தை அளிக்கிறது என்று சொல்லலாம். அப்படிச் சொன்னதுமே அதை அங்குள்ள ஒவ்வொருவரும் தாண்ட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் தனிப்பட்ட வாசிப்பைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அதைத்தான் அதிகபட்ச வாசிப்பு என்கிறேன்.
'எரிந்து கொண்டிருக்கும் நேரம்' என்னும் கவிஞர் சேரனின் கவிதைகளை லக்சுமி ஹாம்ஸ்றம் (Laksmi Holmstrom) அவர்களின் மொழிபெயர்ப்பில் 'ஆர்க்' வெளியீட்டகம் வெளியிட்டிருந்தது. இதற்காக அப்பதிப்பகத்துக்கு இங்கிலாந்துப் பேனா அமைப்பினரின் (PEN - UK) மொழிபெயர்ப்பு நூல்களுக்கான 2012ற்குரிய விருது கிடைத்துள்ளது. லக்சுமி ஹாம்ஸ்றம் அவ்ர்களுக்குக் கனடாவின் 2007ற்கான இயல்விருது கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த விருது கிடைத்தபோது எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் கடுமையாக அந்த விருதினையும், லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களின் அதற்கான தகுதி பற்றியும், அவரை அவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்த நடுவர்கள் பற்றியும் விமர்சித்துத் தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார். அந்நடுவர்களில் நானுமொருவனாக இருந்ததனால் அது பற்றி பதிவுகள் இணைய இதழில் எழுதிய பதில் கட்டுரைகளிலொன்றினை ஒரு பதிவுக்காக இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதியில் பகிர்ந்துகொள்கின்றேன்.![[Grants] Independent publishers scoop PEN awards for translation Posted May 15th, 2013 by Emma Cleave & filed under Translation.](/images/stories/pentranslates1.jpg)
Publishers Arc, Peirene, Haus Publications, And Other Stories, Portobello Books and Harvill Secker were all named today as recipients of English PEN’s latest series of awards for books in translation. Alongside these five award-winners, English PEN announced a further 16 titles that will receive grants to enable publishers to bring into English outstanding writing from languages as diverse as Farsi, Tamil, Portuguese, Occitan, Hebrew, French, German and Spanish. Each year, English PEN highlights worldwide writing of exceptional literary merit and courage. The charity awards grants to support both the promotion of published titles to readers in this country and to help finance the translation of planned titles, to ensure they reach English-speaking readers around the world.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









