துணிவும் தீரமும் கொண்ட பெண் எழுத்தாளர் அம்பை!
தமிழ் எழுத்தாளர்களுள் நீண்டகால வரலாற்றில் ஆண்களே முதன்மை வகித்து வந்துள்ளனர். ஆனால் சில பெண் எழுத்தாளர்களும் தங்கள் எழுத்தாற்றலால் தமது நிலையை இலக்கிய உலகில் தக்க வைத்துள்ளனர். பெண்களை இரண்டாம் படியில் வைத்துப் பார்ப்பவர்கள் இந்திய மரபுவாதிகள். இந்தியப் பாரம்பரியத்தின் விளைவாக பெண்கள் இயல்பு வாழ்க்கையில் காலடியெடுத்துவைத்தால் தானுண்டு தன் குடும்பம் உண்டு என வாழப் பழகிக் கொள்வார்கள். கணவன். பிள்ளைகள், பெற்றோர் என அவர்களின் நலன் சார்ந்து வாழவேண்டியவர்களால் ஆக்கப்பட்ட சமுதாய கட்டுக்கோப்பை மீறமுடியாதவர்களாக குடும்பத்தோடு இணைந்து விடுவார்கள். இந்தியரில் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் தமிழ் எழுத்தாளர்களே இருந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையின் மத்தியில் சடங்கு, சம்பிரதாயம் என அவற்றிற்குக்கட்டுப்பட்டு வாழ்ந்தவர்களின் மத்தியில் ஒரு சிலர் அந்த நிலைமைகளை மீறிக்கொண்டு வெளியே வந்துள்ளனர்.

அகவாழ்க்கையைப் பெண்டிர் அடுக்களைகளிலே பெரிதும் கழிக்கின்றனர். அங்கு அவர்கள் அடையும் இன்னல்கள் அளப்பறியன. அவ்வின்னல்களைப் பொருட்படுத்தாது உணவு ஏற்பாடு செய்து தம் கணவரின் பசியைப் போக்கும் மாண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். அதனைத் தமிழில் குறுந்தொகையும் பிராகிருதத்தில் காதா சப்த சதியும் அறைகூவுகின்றன. இவ்விரு நூல்களில் குறுந்தொகையின் நூற்று அறுபத்தேழாம் பாடலும் காதா சப்த சதியின் பன்னிரண்டாம் பாடலும் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைக் குறிப்பிடுகின்றன. இங்கு அவ்விரு பாடல்களின் ஒத்த சிந்தனைகளையும் வேறுபட்ட சிந்தனைகளையும் இனங்காணப்படுகின்றன.
மனித வாழ்க்கையில் அடிப்படைத் தேவையாகக் கருதப்படுவது உணவு, உடை, இருப்பிடமாகும். இம்மூன்றில் ஒன்று குறையாக அமைந்துவிட்டால் உயிரினங்கள் வாழும் தகவமைப்பினை இழந்து விடுவர். அவற்றில், மனிதன் தங்குவதற்கு இருப்பிடம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது. இத்தகைய இருப்பிடம் மக்களின் வசதியைப் பொறுத்து அமைத்துக் கொள்கின்றனர். கற்காலத்தில் மனிதன் நாடோடியாகச் சுற்றித் திரிந்தான். அவன் வாழ்க்கையில் இயற்கை சீற்றத்தில் அவன் தப்பிப் பிழைத்தது அரிது. அக்கால கட்டங்களில் மனிதன் மரங்களின் கிளைகள் மீதும், பாறைக்குகைகளிலும் மறைந்து, விலங்குகளிடமிருந்தும், மழை போன்ற இயற்கைத் தாக்குதலிலும் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டான். தான் உறங்குவதற்கும் அத்தகைய குகைகளையும் மரங்களையும் பயன்படுத்தினான். புதியகற்காலத்தில் மரங்களின் இலைகள், புல், கோரை இவற்றினை வைத்து கூரைகளை வேய்ந்து, அக்கூரைகளில் வாழ்ந்து வந்தான். புல், கோரை இவற்றினை வைத்து மனிதன் கூரையமைத்து வாழ்ந்தமைக்கானச் சான்று, கலித்தொகை, சிறும்பானாற்றப்படை போன்ற நூல்களிலும் கம்பராமாயணத்திலும் காணப்படுகின்றன. தற்காலத்தில் குடிசைவீடு, ஓட்டு வீடு, காரைவீடு எனப் பலவிதங்களில் அமைக்கின்றனர். இவ்வகையான இருப்பிடம் அமைத்தலில் தொழிலாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். இங்கு கட்டிடத்தொழிலாளர்கள் பயன்படுத்தும் வழக்காடு சொற்களைத் தவிர்த்து தொழில் சார்ந்த கலைச்சொற்களை மட்டும் அறிமுகப்படுத்தும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.
கலை , இலக்கியம், வானொலி, தொலைக்காட்சி, சினிமா, நாடகம், மற்றும் விளம்பரம் முதலான துறைகளில் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி நீண்ட காலமாக இயங்கிய காவலூர் ராஜதுரையின் மறைவு ஈடுசெய்யப்பட வேண்டிய இழப்பு என்று அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றோம். தமது பூர்வீக ஊருக்குப்பெருமை சேர்க்கும் வகையில் தனது இயற்பெயருடன் ஊரின் பெயரையும் இணைத்துக்கொண்டு நீண்ட நெடுங்காலமாக கலை, இலக்கியம் சார்ந்த பல்வேறு துறைகளில் தனது ஆற்றலையும் ஆளுமையையும் வெளிப்படுத்திவந்த காவலூர் ராஜதுரை தமது 83 வயதில் அவுஸ்திரேலியா சிட்னியில் காலமாகிவிட்டார் என்பதை அறிந்து எமது சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்கின்றோம். காவலூர் ராஜதுரை இலங்கையில் மட்டுமல்ல அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தாம் சார்ந்திருந்த துறைகளில் ஆக்கபூர்வமாக உழைத்தவர். ஈழத்து இலக்கிய வளர்ச்சியைப்பொறுத்தவரையில் நான்கு தலைமுறைகாலமாக அவர் குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகளை வழங்கியவர். சிறுகதை, விமர்சனம், நாடகம், வானொலி ஊடகம், இதழியல், திரைப்படம், தொலைக்கட்சி, விளம்பரம் முதலான பல்வேறு துறைகளில் அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்துள்ளார்.
தமிழ் எழுத்துலகில் பெண் எழுத்தாளராக புகழுடன் வலம் வந்த ராஜம் கிருஷ்ணன் திங்கள் கிழமை இன்று இரவு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90. 1925ல் திருச்சிக்கு அருகே உள்ள முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருடன் திருமணமானது. பள்ளி சென்று முறையான கல்வி பயிலாவிடினும், மின் பொறியாளரான கணவர் உதவியால் புத்தகங்களைப் படித்து, தாமே கதைகள் எழுதத் துவங்கினார். 1970ல் தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையைக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்து, அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை உள்ளிட்ட சமூக அவலங்கள் குறித்து எழுதியுள்ளார். கலைமகள் இதழில் கதைகள் பல எழுதியுள்ளார். அதன் ஆசிரியர் கி.வா.ஜகன்னாதனால் எழுத்துலகில் வளர்க்கப்பட்டவர். 1953ல் கலைமகள் விருது, 73ல் சாகித்ய அகாதெமி விருது, 91ல் திருவிக விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது கணவர் கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் தம் 90ம் வயதில் காலமானார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. பின்னர் முதுமையில் வறுமையால் வாடிய சென்னையில் விஷ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் தங்கினார். கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று இரவு அவர் காலமானார்.
பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோ 2014ம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மோடியானோவின் "தொலைந்த மனிதன் (Missing Person)' நாவல் இப்பரிசினைப் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, நாஸிக்களின் ஆக்ரமிப்பு வன்முறையால் பிரான்ஸ் அடைந்த துயரங்களைக் குறித்த விரிவான ஆய்வுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் பேட்ரிக் மோடியானோ., பிரெஞ்சு நாட்டை ஜெர்மனியின் நாஸிப் படைகள் இரண்டாம் உலகப்போரில் ஆக்கிரமித்த காலக்கட்டத்தின் நிகழ்வுகளை தனது படைப்பாற்றல் மூலம்வெளிப்படுத்தி யுள்ளார்.. அன்னிய ஆக்கிரமிப்பின் பிடியில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை மோடியானோவின் எழுத்துகள் அச்சு அசலாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன .அதன்மூலம், யாரும் புரிந்து கொள்ள முடியாத உலகுக்கு மனித உணர்வுகளை இட்டுச் செல்லும் கலை நயத்துக்காக மோடியானோவிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்று ஸ்விடனில் இருக்கும் நோபல் பரிசு தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறும் பிரஞ்சு படைப்பாளிகளின் வரிசையில் மோடியானோ 11 ஆவது நபராக இடம் பெறுகிறார்.


பாயிரங்கள் மொழிகளின் ஆக்கத்திற்கு ஏற்ப காலந்தோறும் அமைப்பு, பொருள் உருப்பெருக்கம் என்ற தன்மையில் பெருகி வருகின்றன. மரபிலிருந்து மாற்றம் பெறாமல் உறுப்புக்களை ஏற்றம் பெறச்செய்கிறது. நன்னூல், தொல்காப்பியம் பாயிர இலக்கணத்தில் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் சிறப்புப் பெருவது போல் நூற்றொகை விளக்கத்தில் பொதுவியல் சிறப்பு பெருகிறது. பொதுவியல் கட்டமைப்பில், நன்னூலரின் பொதுப்பாயிரக் கட்டமைப்பினைப் போல் தொடக்கத்திலே அறிவு, நூல் ஆகியவற்றை சூத்திரமாகக் கட்டமைத்துள்ளார் ஆசிரியர். இது தொல்காப்பிய மரபிலிருந்து மாற்றம் பெற்று காணப்படுகிறது. ஏனெனில் தொல்காப்பியர் மரபியலில் நூலினைப் பற்றி கூறியுள்ளார். அவற்றை ஒப்பிடுவதோடு, அறிவு, நூல், நூலின்வகை அதற்கான பொது இலக்கணம் மற்ற நூல்களிலிருந்து ஆசிரியர் மாற்றம் பெறுவதற்கான காரணம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை.
கிராமியப் பாடல், நாட்டுக் கூத்து , இசை, நடனம், கவிதை, நாடகம், சினிமா, இசைக்கருவி என்னுங் கலை வடிவங்கள் விஞ்ஞானம், வரலாறு, மனித உழைப்பு, ஆய்வு, விமர்சனம், பகுப்பாய்வு ஆகிய வகைப்படுத்தலால் சிறப்படைகின்றன. எல்லயற்ற ஆய்வுக்கு மனிதனால் அனைத்தும் உட்படும்போது உன்னதமடைகின்றன. கலை இலக்கிய உலகில் இந்த உன்னதமும் ஓர் எல்லையற்றிருக்கிறது. பூமி, சந்திரன், சூரியன், வெள்ளி ஆகிய சகல கோளங்களும் சுழற்சி ஓசையினூடு லய பாவத்துடன் சுருதி கலந்து இயங்குவதுபோலவே, ஒலி, ஒளி, காற்று என்பனவும் லய சுருதியோடு இயங்குகின்றன. ஜடப்பொருட்களின் இயக்கத்தில் மாத்திரமின்றி , சகல உயிரினங்களின் இயக்க முறைமைகளும் நாடித்துடிப்புகளும் அவ்வாறே பிசகின்றி இயல்பாகவே இவ்வாறு சுருதி லயப் பிசகின்றி இயங்குவதாலேயே அனைத்தும் எதிலும் துவைச்சல் பெருக்கெடுத்துக் குமுறுகிறது. கடல் வடுப் பெயர்ந்து அடங்கிக் குமுறுகிறது. அடங்கி, எழுந்து, சீறி, உயர்ந்து, தாழ்ந்து, சமமாகும் தன்மை ஜடப்பொருட்களிலும் லய பாவத்தோடு நிகழ்கின்றன.
நூறு முறையாவது படித்திருப்பேன் நகுலன் கவிதைகளை..ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் இடைப்பட்ட காலம்தான் மனிதஆயுள் என்று புத்தர் சொன்னதுபோல் நகுலனும் சொல்கிராறோ என்று நினைக்கத் தோன்றும்.வாழ்வைத் தத்துவ நோக்கோடு பார்த்தவர்கள் நகுலனும் மௌனியும்..இருவரும் சுருக்கமாக ஆனால் சுருக்கென்று தைக்க எழுதியவர்கள். கனமான அரிசி மூட்டையை லாவகமாகக் கொக்கியால் குத்தித்தூக்கி முதுகில் ஏற்றி இடம் மாற்றும் தொழிலாளியின் நேர்த்தியான லாவகம் நகுலன் கவிதைகளில் உண்டு. அவர் கவிதையின் கனம் வாசிக்கும் வாசகனின் மனதில் இடம்மாறி மனதை ஒரு வினாடியில் பாராமாக்கும்.இறந்துபோன வண்ணத்துப்பூச்சியை இரக்கமில்லாமல் இழுத்துச் செல்கிற எறும்பைப்போல் காலம் நம்மை இழுத்துச்செல்லும் கோலத்தை நகுலன் கவிதைகள் அப்பட்டமாய் சொல்கின்றன. நகுலனின் வரிகளில் சொல்லவேண்டுமானால்









பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









