ஈழத்துக்கவிதை இதழ்கள் (மீள்பிரசுரம்)
- 'திறனாய்வுக் கட்டுரைகள்' நூலிலிருந்து பெறப்பட்ட இக்கட்டுரையினை நன்றியுடன் காலத்தின் தேவை கருதி மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் -
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைத் தேயங்களில் சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பிருச்தே கவிதைக்கென்று தனிச்சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்கின. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “பொயற்றி”, என்ற கவிதைச் சஞ்சிகை 1912ஆம் ஆண்டு முதல் வெளிவருகின்றது. 1909ஆம் ஆண்டு முதல் “பொயற்றி றிவியு” என்னுஞ் சஞ்சிகை இங்கிலாந்தில் இருந்து வெளிவருகின்றது. கவிதைகளையும், கவிதை பற்றிய விமர்சனங்களையும், புத்தக மதிப்புரைகளையும் இச் சஞ்சிகைகள் தாங்கி வருகின்றன.
தமிழில், கவிதைகளை மாத்திரம் தாங்கிய ஒரு இதழை வெளிக்கொண்டு வரும் முயற்சி, முதன்முதல் தமிழ் நாட்டிலேயே தொடங்கியது. பாரதிதாசனே இதைத் தொடங்கி வைத்தவர். அவர் வெளியிட்ட குயில் பத்திரிகையே தமிழின் முதலாவது கவிதை இதழ் என்று தெரிகின்றது. குயில், பாரதிதாசனின் படைப்புக்களையே பெரும்பாலும் தாங்கி வந்தது. குயிலைத் தொடர்ந்து கவிதை, சுரதா, வானம்பாடி முதலிய கவிதை இதழ்கள் தமிழகத்தில் இருந்து வெளிவந்தன. வானம்பாடி அண்மைக் காலத்து முயற்சியாகும். தமிழ் நாட்டுக் கவிதை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய வானம்பாடி, வானம்பாடிக் குழுவினருக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நின்று விட்டதாகத் தெரிகின்றது.
ஆசிரியத் தலையங்கம் முதல் அடுத்த இதழுக்கான அறிவித்தல் வரை அனைத்தையும் செய்யுளிலேயே எழுதுவது தமிழ் நாட்டுக் கவிதை இதழ்களின் பிரதான பண்பாகக் காணப்பட்டது. பாரதிதாசனே இப்போக்கைத் தொடங்கி வைத்தவர் எனலாம். “சுரதா தன் கவிதைப் பத்திரிகையில் விளம்பரத்தைக் கூடக் கவிதையில் தான் பிரசுரிக்கிறார்” என்று நண்பர் ஒருவர் என்னிடம் சிலாகித்துப் பேசினார். அந்த அளவுக்கு ஆசிரியத் தலையங்கம், போட்டி அறிவித்தல், வர்த்தக விளம்பரங்கள் அனைத்தையும் அவை செய்யுளில் எழுதப்பட்ட காரணத்தால் கவிதையோடு சமமாக மதிக்கும் ஒரு சமரச மனப்பான்மை இவ்விதழ்களில் காணப்பட்டது. வானம்பாடி இதில் இருந்து வேறுபட்டது. முற்றிலும் புதுக்கவிதைக்கான ஒரு வெளியீட்டுக் களமாக அது அமைந்தது. ஆயினும் டாம்பீகமான மொழிப் பிரயோகம் அதன் பிரதான பண்பாகக் காணப்பட்டது. சமூக சமத்துவ நோக்கை வானம்பாடிக் குழுவினர் தங்கள் உட்பொருளாகக் கொண்டிருந்த போதிலும் சமூகத்தின் பொது வழக்குக்குப் புறம்பான மொழிப்பிரயோகத்தயும், சிந்தனை முறையையும், கற்பனைப் படிமங்களையும் பெருமளவு கையாண்டதால் வானம்பாடி எழுப்பிய குரல் சமூகத்தோடு ஒட்டாது அந்நியமாகவே ஒலித்தது. வானம்பாடியில் இதற்குப் புற நடைகள் உண்டு. எனினும் இதுவே பொதுப்பண்பு என எனக்குத் தோன்றுகின்றது.
தமிழ் நாட்டைப்போல், ஈழத்தில் இருந்தும் கவிதைக்கென்றே சில கவிதை இதழ்கள் வெளிவந்தன. ஈழத்துக் கவிதை இதழ்களுக்கு ஒரு இருபது வருட வரலாறு உண்டு. 1955ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் “தேன்மொழி”யின் முதல் இதழ் வெளிவந்தது. தேன்மொழியே ஈழத்தின் முதலாவது தமிழ்க் கவிதை இதழாகும். மஹாகவி, வாதர் ஆகிய இருவரும் சேர்ந்து சோமசுந்தரப் புலவரின் நினைவுச் சின்னமாகத் தேன்மொழியை வெளியிட்டனர். “கட்டிளமை செட்டுகின்ற கன்னிகையும் காதலனும் ஒன்று சேர்ந்தது போல எமது உள்ளத்திலே தோன்றிப் பேராவலாய் நிறைந்த இரு எண்ணங்களின் சேர்க்கைதான் இந்த இதழ். கவிதைகளை மாத்திரமே தாங்கிய ஒரு இதழை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது மற்ற எண்ணம். நவாலியூர் சோமசுந்தரப் புலவருக்கு ஒரு நல்ல நினைவுச் சின்னம் உருவாக்க வேண்டும் என்பது மற்ற எண்ணம். இந்த இரண்டு எண்ணங்களும் சேர்ந்து தேன்மொழியை உருவாக்கிவிட்டன.” என்று முதலாவது இதழில் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

“கலை, இலக்கியம், நாடகம், வெகுசன ஊடகம், தீண்டாமை, சுரண்டல், வன்முறை, சித்திரவதை, சிறுவர் மீதான கொடுமை, பெண்கள் மீதான கொடுமை, ஆதிக்கம், தேசிய இனப் பிரச்சினையால் தமிழ் மக்கள் குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் தோன்றியுள்ள அவலங்கள். தொழில்மயமாக்கலும், நகரமயமாக்கலும், நவீனமயமாக்கலும் தோற்றுவித்துள்ள மாறுதல்களும், பிரச்சினைகளும், மனித பலவீனங்களை வளர்த்துச் சுரண்டும் சந்தைப் பொருளாதார வியாபாரங்கள். நுகர்வுப் பண்பாட்டின் மனித விரோதப் போக்கு, பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கம், நவீன ஏகாதிபத்தியச் சுரண்டலின் பன்முகப் பரிமாணங்கள், உலகமயமாதல் என்ற பெயரில் நடைபெறும் அராஜகம். இப்படியான பல்வேறு விடயங்கள் பற்றிய விளக்கங்களாகவும், விமர்சனங்களாகவும் செ.கணேசலிங்கன் எழுத்துக்கள் அமைந்துள்ளன ” எனப் பேராசிரியர் சி.தில்லைநாதன் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஜெயமோகன் ஈழத்துக் கவிஞர்கள் பற்றிச் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி வாதப்பிரதிவாதங்களை எதிர்கொண்டு வருமிச்சூழலில் எனக்கு அறிஞர் அ.ந.கந்தசாமி 1962இல் வெளியான 'புதுமை இலக்கியம்' சஞ்சிகையில் (இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடு) வெளிவந்த 'கவிதை' என்னும் தலைப்பிலான கட்டுரையின் ஞாபகம் வந்தது. அக்கட்டுரையில் அவர் தெரிவித்திருக்கும் ஈழத்துக் கவிதை பற்றிய கருத்துகள் சிலவற்றைத் தொகுத்திங்கே தருகின்றேன். பெப்ருவரி 14 அ.ந.க.வின் நினைவு தினம் என்பதால் அதனையொட்டிய நினைவு கூர்தலாகவும் இப்பதிவினைக் கருதலாம்.
அன்பிற்குரிய தமிழ் நண்பர்களே! என் தந்தையாரின் ஐந்து உரைநூல்கள், இலங்கைத் தமிழ் மாணவர்களுக்குப், பாடப் புத்தகங்களாக , 1952 ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இருந்தன. அவர் 1966 ஆம் ஆண்டே காலமாகிவிட்ட போதும், அவரின் இப் பாட நூல்கள், பாடவிதானங்களில் மாற்றங்கள் ஏற்பட்ட போதும், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமையால், மீண்டும் மீண்டும் மீள் பிரசுரம் செய்யப்பட்டன. உங்களில் பலர் இந் நூல்களை , உங்கள் 10 ஆம், 11 ஆம், 12 ஆம் வகுப்புக்களில் படித்திருந்திருப்பீர்கள். தாம் படித்த இந்துசமயபாட நூல் , பாரதியார் பாடல்கள் விளக்கவுரை, கம்பராமாயணம் கும்பகர்ணன் வதைப்படலம், கம்பராமாயணம் - சுந்தரகாண்டம்- காட்சிப் படலமும் நிந்தனைப் படலமும், கம்பரிமாயணம் அயோத்தியா காண்டம் - மந்தரை சூழ்ச்சிப் படலமும் கைகேயி சூழ்வினைப் படலமும் போன்ற சிறந்த உரைநூல்களைப் பற்றிப் பலர், என்னுடன் மிக மிகப் பெருமையாகக் கூறியுள்ளார்கள். இந்த நூல்களை எல்லாம் , அத்துடன் என் தந்தையாரால் சேமித்து வைக்கப் பட்டிருந்த, அவரின் பல நூற்றுக் கணக்கான பத்திரிகைக் கட்டுரைகள் , அவரின் கையெழுத்துப் பிரதிகள் , அவரின் பல புகைப்படங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடைத்தற்கரிய பழம் பெரும் தமிழ் இலக்கிய நூல்கள் , போன்ற அரும் பெரும் பொக்கிசங்களை நாம் 1995 ஆம் ஆண்டுப் பேரழிவில் , குடிப்பெயர்வில் இழந்தோம்.
இன்று மாலை முகநூலுக்குள் நுழைந்த என்னை துயரகரமான, அதிர்ச்சியினையூட்டிய செய்தியொன்று எதிர்கொண்டது. எழுத்தாளரும், இனிய நண்பரும், உடன் பிறவாச் சகோதரருமான சீர்காழி தாஜ் அவர்களின் மறைவுச் செய்திதான் அது. எழுத்தாளர் அனார் தனது முகநூற் பதிவில் தாஜ் அவர்களின் மறைவுச்செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். செய்தியினை உள்வாங்குவதற்கே சிறிது கஷ்ட்டமாகவிருந்தது. நேற்றும் தி.ஜானகிராமனின் படைப்புகள் பற்றிய முகநூற் குழுமத்தில் நான் பதிவிட்டிருந்த முகநூற் பதிவொன்றுக்குத் தன் கருத்துகளை 'அன்பு கிரி' என்று ஆரம்பித்துப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களா மறைந்து விட்டார். அவரது அங்கத்தம் தவழும் எழுத்து நடைக்கு நான் எப்பொழுதுமே அடிமை. நண்பர் எழுத்தாளர் தாஜ் அவர்கள் மறைந்த செய்தி ஏற்படுத்திய துயரத்தை அளவிட வார்த்தைகளேதுமில்லை.
சாதனைப் பெண்கள் வரிசையில், முன்னிலையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவர் முனைவர் நா.நளினிதேவி ஆவார். இவர் மிகச் சிறந்த ஆய்வறிஞர். படைப்பிலக்கிய வித்தகர். பெண்ணியத்தையும் பெரியாரியத்தையும் தன்னிரு விழிகளாகப் போற்றி வருகிற பேரறிஞர். எழுபதைக் கடந்த நிலையிலும் இருபதிற்கே உரிய இளமை வேகத்தோடு இவர் இலக்கிய வெளியில் இடையறாது இயங்கி வருவது பாராட்டுக்குரியது.
பேராசிரியர் சண்முகதாஸ், வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் 1950 களில் எனக்கு மூன்று வகுப்புகள் மூத்தவராகக் கல்வி பயின்றவர். நான் எனது 11ஆவது வயதில் அப்பாடசாலையுள் தயங்கித் தயங்கிக் கண் விழிக்காத பூனைக்குட்டியாகக் காலடி வைத்தபோது எனக்கு வயது 11. சண்முகதாஸுக்குவயது 14. தன் இனிய குரலால் அனைவரையும் வசீகரித்து அனைவரும் அறிந்த சிறுவனாக இருந்தார் சண்முகதாஸ். அண்ணன் என்றுதான் நாம் அவரை அன்று அழைத்தோம். என்னைப்போல அவரும் கட்டையானவர். வண்டுகள் போல நாம் அங்கு ஓடித்திரிவோம். 6 வருடங்கள் அந்த விடுதியில் நாங்கள்ஒன்றாக வளர்ந்தோம். 1954 ஆம் ஆண்டு மஹா பாரதம் தழுவிய நச்சுப் பொய்கை எனும் பாடசாலை நாடகம் ஒன்றில் 15 வயது சண்முகதாஸ் கதாயுதம்தாங்கி ஹா ஹா என்று சப்தமிட்டபடி வீமனாக மேடைப் பிரவேசம் செய்தமையும், கையினால் தண்ணீர் பருகாது பொய்கையிலிருந்த தண்ணீரைகதையினால் அடித்து அடித்து வாயினால் ஆவ் ஆவ் எனப் பருகிய காட்சியும் இப்போது ஞாபகம் வருகிறது.
நெருக்கடிமிக்க சென்னை அண்ணா சாலையின் தென்புறம் நாங்கள் நான்கைந்து நண்பர்கள் நிற்க, மார்பில் அணைக்கப்பட்ட நான்கு பீர் பாட்டில்களோடு சாலையைக் கடந்த பிரபஞ்சனிடம் அந்த இரவு பத்துமணிக்கு சிலர் நின்று ஆட்டோகிராப் கேட்டார்கள். பீர் பாட்டில்களை அவர்கள் கையிலேயே தற்காலிகமாகத் தந்துவிட்டு சாலை ஓரமாக நின்று கையெழுத்திட்டுத் தந்த பிரபஞ்சனைப் பார்த்து, “இதெல்லாம் வேணாம் சார், உங்களுக்கென்று தமிழ்நாட்டில் ஒருபெரிய இமேஜ் இருக்கு ” என்று சொன்ன என்னை தடுத்து, “அப்படி ஒரு பொய்யான இமேஜை நான் வெறுக்கிறேன் பவா. நான் எதுவாக இருக்கிறேனோ அப்படியான பிம்பம் மட்டுமே வெளியிலேயும் பதிவாக வேண்டும். நான் எப்போதாவதுதான் குடிப்பவன். அது வெளியே தெரிய வேண்டாமெனில் இதை இனி தொடக்கூடாது இல்லையா” என்ற அப்படைப்பாளியின் கையிலிருந்த பாட்டில்களை கொஞ்சநேரம் என் கைகளுக்கு மாற்றி நடந்தது நினைவிருக்கிறது. எவர் கைகளிலேயும் நிரந்தரமாக அடக்கிவிட முடியாத நீர் தான் பிரபஞ்சன் எனத் தோன்றும். என் கல்லூரிப் படிப்பை முடித்து, இலக்கியம் நோக்கி வெறிகொண்டலைந்த காலத்தில் கி.ரா. பற்றிய ஒரு இலக்கியக்கூட்டத்தில்தான் பிரபஞ்சனை முதன்முதலில் பார்த்தேன். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை போட்டு கையில் புகைந்த ஒரு சிகரெட்டோடு அரங்கவாசலில் நின்றிருந்த அவரை ஏனோ அப்படிப் பிடித்துவிட்டது. எனக்கு அது இத்தனை ஆண்டுகளாகியும் அகல மறுக்கும் அன்பின் அடர்த்தி. பத்தாயிரம் ரூபாயை கவரில் வைத்து கொடுப்பார்கள் என்ற நிச்சயத்திற்காக, ஒன்றுமேயில்லாத ஒருவனை உலகக்கவி என்றும், தன் படைப்பு அவன் அதிகாரக் காலடியில் அச்சேறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், அவன் எழுத்து நோபலுக்கும் மேலே என எழுதுகிற பலபேருக்கு மத்தியில் பிரபஞ்சன் என்ற அசல் இன்றளவும் தமிழ்வாசிக்கும் பலராலும் நேசிக்கப்படுவதற்கு அவரிடம் இயல்பிலேயே இன்றளவும் இருந்து வருகிற இந்த எளிமையும் உண்மையும்தான் காரணம்.
(மெல்பனில் நடைபெற்ற தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட நயப்புரை)
கவிதை நான் பயணப்படாத தளம். சிறுகதைகளிலும் புதினங்களிலும் இயல்பாக இலகுவாக பயணிப்பதுபோல், கவிதை கைவரவில்லை. மனம் இன்னும் அதற்குப் பக்குவப்படவில்லை என்று நினைக்கிறேன். தமிழச்சி தங்கபாண்டியனின் பல கவிதைகள் ஒரு சிறுகதைக்குரிய கருவை தாங்கியிருப்பதும், என் மனம் அதை சிறுகதையாய் மாற்ற முயற்சித்ததும், பின் அதை நான் கட்டியிழுத்து அடுத்த கவிதைக்கு இட்டுச்செல்வதும் என முதல் நான்கு நாட்கள் ஓடியேவிட்டது. தமிழச்சி, தன் மனதிற்குள் பல நாட்களாய் பொத்திவைத்து அடைகாத்ததை கவிதை முத்துக்களாய் ஒரு சில வரிகளில் படைப்பது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பரமற்று, எளிமையான வார்த்தைகளால் எல்லோரும் அனுகும்விதமாக , எல்லோருக்கும் புரியும் விதமாக இவரது கவிதைகள் உள்ளன. எப்படி எளிமையான சொற்களால் ஆனதோ, அதேமாதிரி எளிமையான மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள், வாழ்க்கைப்பாடுகள், சின்னச்சின்ன இழப்புகள் என இவர் கவிதைகளாலும், நாம், நம் அன்றாட வாழ்க்கையுடனும் எண்ணங்களுடனும் இணைத்துக்கொள்ளலாம்.
எஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள். 1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து - சிறுகதை, நாவல் , விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை,மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கிறோம். எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு. அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சனமேயாகும். எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார். இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2018 இல், இடம்பெற்ற நாவல் இலக்கிய அரங்கில் சமர்ப்பித்த கட்டுரை -
மராத்தி, மேற்கு இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் பேசப்படும் ஓர் இந்தோ-ஆரிய மொழியாகும். இம்மொழியானது அங்கு அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றது. உலகளவில் தொண்ணூறு மில்லியன் மக்களால் பேசப்படும் மொழி எனும் சிறப்பைப் பெற்றுக் காணப்படுகின்றது.
இலக்கியம் என்பது ஒரு எழுத்தாளன் வாழும் காலகட்டத்தில் அவன் கண்ட சமுதாயத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு சரித்திர ஆவணம் என்பது எனது கருத்து. தான்வாழும் சமுதாயத்தில் சாதி மத இன,நிற வர்க்க பேதங்களால் மக்களுக்கு நடக்கும் கொடுமைகயைக் கவனிக்காமல் அல்லது தெரிந்தும் தெரியாத நடித்துக்கொண்டு ஒரு எழுத்தான் தனது இலக்கியப் படைப்புக்களைச் செய்தால் அவை சமூகம் சாராத-தன்னை அந்தச் சமுகத்துடன் இணைத்துப் பாராத ஒரு படைப்பாளியின் உயிரற்ற வெற்றுப் படைப்பாகத்தானிருக்கும்.
காலம் கழியும் வேகத்தில் நாம் பலவற்றையும் இலகுவில் மறந்து கடந்துசென்று விடுகின்றோம். திடீரென்று ஒருநாள் ஒரு சிறு பொறி முன்னர் கவனிக்காது கடந்துசென்றுவிட்ட ஒரு தனி மனிதஉறவை மீண்டும் எம்மனதில்; நினைவுத்தட்டின் மேற்பரப்புக்குக் கொண்டுவந்து விடுகின்றது.
கவிஞர், ஆசிரியமணி சி. நாகலிங்கம் அவர்களால் இவ்வாறு புகழ்ந்துரைக்கப்பட்ட முதுபெரும் எழுத்தாளர் - பேச்சாளர் நாவேந்தனின் பதினெட்டாவது நினைவு தினம் 10 - 07 - 2018 அன்று ஆகும்..! யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தாபகராகவும் அதன் முதற் செயலாளராகவும் இலங்கை இலக்கிய இரசிகர் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்ட நாவேந்தன் யாழ். மாநகரசபையின் பிரதிமேயராகவும் திகழ்ந்துள்ளார்..! சாதாரண மக்களின் விடிவுக்காகப் பேனாபிடித்த படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் நாவேந்தன். அவர் சாதாரண மக்களின் பிரச்சினைகளை - அவர்களது ஆசாபாசங்களை வாழ்வியல் முரண்பாடுகளைத் தமது சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர். அவரது சிறுகதைகள் வெறும் கற்பனைகளல்ல. அவை யதார்த்த பூர்வமானவை. சமூகத்தினரிடையே புரையோடிப் போயிருக்கும் அழுக்குகளை அப்புறப்படுத்தவும் சமூக அவலங்களையும் அறியாமைகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டி சமூக மாற்றத்தின் தேவைகளை உணர்த்தவும் அவரது எழுத்துக்கள் பெரிதும் உதவின. மானுடம் பயனுற விரும்பும் இலக்கிய ஆக்க முயற்சிகளில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகத் தம்மை அர்ப்பணித்து தொண்டாற்றியவர். அவர் பன்முகத் திறன்கொண்ட படைப்பாளி. ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான இவர் சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், விமர்சகர், கவிஞர், பேச்சாளர், தொழிற்சங்கவாதி எனப் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். அவர் மறைந்து பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் மக்கள் மனதில் அவரது பணிகள் நிலைத்து நிற்பதை நிதர்சனமாகக் காண முடிகிறது.
- கீற்று.காம் இணையை இதழில் வெளியான இக்கட்டுரையினை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். -
முன்னுரை
சங்க இலக்கியங்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் சிறப்பு வாய்ந்த நற்றிணையில் அன்றில், அன்னம், ஈயல், காக்கை, காட்டுக்கோழி, கிளி, குயில் குருகு (நாரை), குருவி, கூகை, கொக்கு, கோழி (வாரணம்), சிச்சிவி (சிரல்), பருந்து (எருவை), புறா, மயில், மின்மினி, வண்டு (தும்பி, சுரும்பு), வாவல் உள்ளிட்ட 18 பறவையினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை உவமை, உள்ளுறை, இறைச்சி போன்ற நிலைகளில் இப்பறவையினங்களின் செயல்களை மனிதச் செயல்களோடு ஒப்புமைப்படுத்துகின்ற பாங்கினை நற்றிணையில் அறிய முடிகிறது. இத்தகைய பறவையினங்கள் எவ்வாறு மனித செயல்களோடு தொடர்புப்படுத்தப்படுகின்றன என்பதை ஆராயும் நிலையில் இக்கட்டுரை அமைகின்றது.
எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் முகநூலில் 'எனக்குப் பிடித்த சிறுகதை' என்னும் தலைப்பில் சிறு குறிப்புகள் பதிவிட்டு வருகின்றார். இக்குறிப்புகள் எழுத்தாளர்கள் பலரை அறிமுகம் செய்வதால் ஆவணச்சிறப்பு மிக்கவை. அவை பதிவுகள் இணைய இதழில் அவ்வப்போது பிரசுரமாகும். - பதிவுகள் -
தமிழ் மொழியில் தோன்றிய முழுமுதற் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இதில் உயிரினங்களின் குணங்கள் பற்றி குறிப்பிடுவதோடு தொன்றுத்தொட்டு காலம் காலமாக வழங்கி வரும் இம்மரபானது தமிழ் மொழியிலும் சொற்பொருள் நிலையிலும் மாற்றம் ஏற்படாமல் இருக்க பின்பற்றப்பட்டு வருகிறது. உலகம் தோன்றிய காலம் முதல் பல உயரினங்களுக்கு சில அடிப்படைக் குணங்கள் காணப்படுகின்றது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். தமிழ் இலக்கிய இலக்கணங்களில் உயிரினங்களின் தோற்றம் அதன் இயல்பு, செயல் ஆகியவற்றைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். மரபியல் கோட்பாடு என்பது உயிரினங்களின் மரபுப்பெயர்களான இளமைப்பெயர்கள், ஆண்பாற்பெயர்கள், பெண்பாற்பெயர்கள் என இவற்றை வகைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளதை இக்கட்டுரையின் வழி விளக்குவதே நோக்கமாக அமைகிறது.
கி.ரா எனும் இரண்டெழுத்து மந்திரம் :
- புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கப்பட முடியாத முக்கிய படைப்பாளிகளில் ஓருவர் கந்தையா இரமணிதரன், ' சித்தார்த்த சேகுவேரா', 'பெயரிலி', 'திண்ணைதூங்கி'யுட்படப் பல்வேறு புனைபெயர்களில் எழுதிவரும் இவர் தனித்துவமான மொழி நடைக்குச் சொந்தக்காரர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தன் பங்களிப்பை நல்கி வருபவர். அவரது 'அலைஞனின் அலைகள்: கூழ்' என்னும் வலைப்பதிவிலிருந்து இம்மொழிபெயர்ப்புக் கவிதைகள் மீள் பிரசுரமாகின்றன. - பதிவுகள் -
தமிழரின் காலக் கணிப்பில் ஒருவரின் அறுபதாண்டு வாழ்க்கை ஒரு ஆண்டுவட்டச் சுற்றைப் பூர்த்திசெய்கின்றது என்பர். அவ்வகையில் எமது தமிழ் இலக்கியவாதியான அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பயணமும் ஒரு ஆண்டுவட்டப் பயணத்தைக் கடந்து தொடர்கின்றது. அறுபதாண்டுகளாகத் தளராமல், வரட்சி காணாமல் கையிருப்பில் இன்னமும் ஏராளமான ‘விஷயங்களை” வைத்துக்கொண்டு இலக்கியப் பயணமொன்றைப் புகலிடத்திலும் தொடர்வதென்பது எழுத்தாளனுக்கு இலகுவில் கிடைக்கும் பாக்கியமொன்றல்ல.
உலகில் மொழியானது மனித உயிர் தனது அனுபவங்களைக் கருத்துக்களை, நினைவுகளைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படும் கருவி ஆகும். மொழி என்ற ஒன்று இல்லையெனில் மனித உயிர்கள் இருக்கும் ஆனால் மனிதச் சமூகங்கள், வரலாறு இருக்காது. எனவே மொழி என்பது மனித உயிர்களை அவர்கள் வாழும் சமூகத்துடனும் நிலத்துடனும் பிணைப்பதாகும். மொழி வழியே சமூகம் இலக்கியம் வரலாறு தோற்றம் பெறுகிறது. இப்பின்புலத்தில் தமிழ்மொழித் தமிழ்நிலம் தமிழ் இலக்கியம் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









