எழுத்து ஊழியத்தை இறுதிவரை மேற்கொண்டவர்..! மனித நேயங்கொண்ட 'மதுரகவி' இ. நாகராஜன்..!! - வி. ரி. இளங்கோவன். -
அறுபதுகளின் முற்பகுதி..
யாழ்ப்பாணத்தில், இன்றைய நவீன சந்தைக் கட்டிடம் அன்று இருக்கவில்லை. அந்த இடத்தில் பஸ் நிலையம் பரந்த பரப்பளவில் விசாலமாக அமைந்திருந்தது. அதன் மேற்குத் திசையில் கஸ்தூரியார் வீதித் தொடக்கத்தில் 'பூபாலசிங்கம் புத்தகசாலை.'
இங்குதான் அதிகமான இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் சந்தித்துக்கொள்வார்கள். தமிழகத்திலிருந்து வரும் மார்க்ஸிச நூல்கள், சஞ்சிகைகள், இலங்கையில் வெளியாகும் இலக்கிய நூல்கள், மார்க்ஸிச ஏடுகள் என்பன இங்கு கிடைக்கும். ஆஸ்பத்திரி வீதியில் 'தம்பித்துரை புத்தகசாலை.' இவர்கள் தான் குமுதம், ஆனந்த விகடன் சஞ்சிகைகளின் விநியோகஸ்தர்கள். கே. கே. எஸ். வீதியில் 'தமிழ்ப்பண்ணை' புத்தகசாலை இருந்தது. இங்கு தமிழகத்தில் வெளியாகும் திராவிடக் கழக, திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களின் நூல்கள், பத்திரிகைகள் கிடைக்கும். இந்தப் புத்தகசாலைகள் யாவற்றுக்கும் என் பாடசாலைக் காலத்திலேயே எனது மூத்த சகோதரர் நாவேந்தனுடன் சென்றுள்ளேன். அந்தக் காலத்தில், உயர்ந்த உருவத்தில், தூய வெள்ளை 'நாசனல்' உடையில், அங்கெல்லாம் வந்துபோன மனிதன் தான் இ. நாகராஜன் என அண்ணரிடம் கேட்டு அறிந்துள்ளேன்.
அண்ணரின் நண்பரான அவரைப், பின்னர் காணும்போதெல்லாம் ஒருசில நிமிடங்கள் அவருடன் பேசிக்கொள்வேன். இனிமையாகப் பேசும் நல்ல மனிதனாகக் காணப்பட்டார். அவர் மரபுக் கவிஞர். சிறுகதை, நாவல், குறுநாவல், காவியங்கள் பல படைத்தவர். மலையகத்தில் பார்த்துவந்த ஆசிரியர் வேலையைத் துறந்து சுதந்திரமான மனிதனாக யாழ்ப்பாணத்துக்கு வந்தார். 1948 - ம் ஆண்டளவில் எழுத்துத்துறையில் ஈடுபட்டார். அன்று வெளிவந்த 'ஈழகேசரி'ப் பத்திரிகையில் பணியாற்றத் தொடங்கினார். ஈழகேசரியில் சிறுவர் பகுதி, மாணவர் பகுதிக்கென பல்வேறு புனைபெயர்களில் சிறுவர் பாடல்கள், கட்டுரைகள் இதழ்கள் தோறும் எழுதி வந்தார். சிறுகதைகள், கவிதைகள் பலவும் தொடர்ந்து எழுதி வந்தார். அன்று ஈழகேசரி ஆசிரியராக விளங்கிய இராஜ அரியரத்தினம் இவரை ஊக்கப்படுத்தித் தொடர்ந்து எழுத வைத்தார். ஈழகேசரி வளர்த்துத் தந்த எழுத்தாளர், கவிஞர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர்.

கி.ராஜநாராயணனின் ‘கோபல்லகிராமம் ‘ நாவலின் முடிவை நினைவிருக்கிறதா ? கோபல்ல கிராமத்துக்கு மேல் வெள்ளையர் ஆதிக்கம் உருவாகும் காலம். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று வயது முதிர்ந்து பழுத்து உதிரும் நிலையில் இருக்கும் , இரு நூற்றாண்டுகளைக் கண்ட, தொட்டவ்வாவிடம் கேட்கிறார்கள். வெள்ளைக்காரன் பெண்களை பலாத்காரம் செய்கிறானா, கொள்ளையடிக்கிறானா என்று அவள் கேட்கிறாள். இல்லை என்று சொல்கிறார்கள்.அப்படியானால் அவர்களை நாம் வரவேற்போம், அவர்களுடன் சேர்ந்துகொள்வோம் என்று அவள் பதில் சொல்கிறாள்.
இலங்கையின் தென்பகுதியில் கொக்கலை என்ற சிங்களக் கிராமத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த மார்ட்டின் விக்கிரமசிங்கா, சிங்கள இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்பாளி. அவர் இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் 90 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர். அவற்றில் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மாத்திரமன்றி ருஷ்ய மொழியிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரது நாவல்கள் சில திரைப்படங்களாகியுள்ளன. 1914 ஆம் ஆண்டில் தனது முதலாவது நாவலாக லீலா என்ற புதினத்தை வெளியிட்டிருக்கும் மார்ட்டின் விக்கிரமசிங்கா 1976 ஆம் ஆண்டு தமது 86 ஆவது வயதில் மறைந்தார். அன்னாரின் நினைவாக இலங்கையில் மல்லிகை இதழும் சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது.
மு.தளையசிங்கத்தின் 'தியாக' மரணம் பற்றி இப்போது கேள்வி எழுந்துள்ளது. சு.வில்வரத்தினம் மு.த.பற்றிய போலீஸ் தாக்குதலைப்பற்றிப் பேசினால் உணர்ச்சியின் எல்லைக்கே போய்விடுவார் என்பதெல்லாம் அவர் மு.த.பற்றி கொண்டிருந்த உணர்வுபூர்வமான ஈடுபாட்டைக் குறிப்பதாகும். அவர் புங்குடுதீவில் அஹிம்சை வழி நின்று போராடிய நிகழ்வு வணக்கத்திற்குரியது. ஆனால், அவருடைய மரணம் குறித்து கேள்வி எழுந்ததும் சென்டிமென்டல் கூச்சல் போடவேண்டியதில்லை. புத்தர்பிரான் மறைவு குறித்தே அவர் food poisoning இல் இறந்தாரா, அவர் தானம் பெற்று உண்ட உணவு பற்றி இன்று ஆய்வுகள் நடக்கின்றன.புத்தர் இலங்கை வந்தது எப்படி என்றால், பவுத்த பிக்குகள் உங்களை அறைவார்கள். அக்கேள்வியை எழுப்பினாலே அவர்கள் உணர்ச்சியின் எல்லைக்கே சென்று விடுவார்கள். உணர்ச்சியின் எல்லைக்கு போவது ரொம்ப லேசு. அது புத்தி செயல்படும் நேரமில்லை. Anthony Burns என்ற கறுப்பின அடிமையானவர் தப்பிச்சென்று , பின் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்ட நிலையில் அவரைச் சிறையிலிருந்து மீட்க அடிமை முறையினை எதிர்த்தவர்கள் முயன்றபோது, அவருக்குக் காவலில் இருந்த James Batchhelder சுட்டுக்கொல்லப்பட்டபோது, அவரின் autopsy மரணவிசாரணை அறிக்கை பற்றி இன்றும் பேசப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடந்தது 1854 ஆம் ஆண்டு.. இன்றைக்கு 167 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். இந்த மருத்துவச் சான்றிதழ் முக்கியமானதுதான். பாரதியார் யானை தாக்கி மரணமுற்ற நிகழ்ச்சி பற்றி மு.புஷ்பராஜன் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.அந்த விளக்கத்திற்கு புஷ்பராஜனிடம் தான் மருத்துவச் சான்றிதழ் கேட்கவேண்டும். விஷயம் தெரியாதவன் கேள்வி கேட்டால், அவனிடம் போய் மரணமடைந்தவர் பற்றி நீ ஆதாரம் தா என்று கேட்பது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை. 
பதிவுகள் இணைய இதழ் மற்றும் முகநூலில் தொடரும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் ,தன் கருத்துகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றார் இலண்டனில் வசிக்கும் சமூக, அரசியற் செயற்பாட்டாளரான ராகவன்.
- தற்போது முகநூலில், பதிவுகளில் இடம் பெறும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் இடம் பெறும் கருத்துகளையிட்டு , எழுத்தாளர் நந்தினி சேவியர் தனது கருத்துகளை அனுப்பி வைத்துள்ளார். அவற்றையும் இங்கு பகிர்கின்றோம். - பதிவுகள் -

மார்ச் 8 - சர்வதேச மகளிர் தினம்!
ஈழத்து இலக்கியத்தோப்பில் வைரம்பாய்ந்த தனி விருட்சமாக, ஆழ வேரோடி, பரந்தகன்ற கிளை விரித்து, குளிர்நிழல் பரப்பிநிற்கும் தனித்த ஆளுமைதான் கே.எஸ். சிவகுமாரன். இந்த பெரும் இலக்கிய வியக்திக்கு இணைசொல்ல இங்கே யாருமில்லை. நூறு கவிஞர்களைக் காட்ட முடியும்; நூறு நாவலாசிரியர்களைக் காட்ட முடியும்; நூறு கட்டுரையாளர்களைக் காட்ட முடியும். கே.எஸ். சிவகுமாரனுக்கு நிகரான பல்துறைசார்ந்த ஓர் எழுத்தாளனை ஈழத்து இலக்கியப்பரப்பின் கடந்த அறுபது ஆண்டுகால எல்லையில் காண்பதற்கில்லை. இந்த அறுபதாண்டுகாலத்தில் தொடர்ந்த வாசிப்பே அவரது சுவாசமாக இருந்திருக்கிறது. அந்த வாசிப்பின் வியாபகம் அசலானது. அயராத எழுத்துப்பணியே அவரின் மூச்சாக இருந்திருக்கிறது. இவரின் எழுத்துக்கள் 5,000 பக்கங்களில், முப்பத்தேழு நூல்களாக மலர்ந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இன்னும் நூல் வடிவம் பெறாத இவரின் எழுத்துக்கள், இன்னும் ஓர் ஆயிரம் பக்கங்களை மிக எளிதாகத் தாண்டிவிடும். இந்தளவு பல்துறை சார்ந்து, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுத்தை ஓர் இயக்கமாக எண்ணிச் செயற்பட்ட வேறு ஒருவரை என்னால் சொல்ல முடியவில்லை.
அண்மையில் இவ்வுலகை விட்டு மறைந்த திரு டொமினிக் ஜீவா அவர்கள் இலங்கையின் முற்போக்கு இலக்கியத்துறையில் மிகவும் முக்கியமான ஆளுமைகளில் ஒருத்தராகும். 27.6.1927-ல் பிறந்து 28.1. 2021 மறைந்த மதிப்புக்குரிய எழுத்தாளரின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கற் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். இச்சிறு கட்டுரையில அவருடன் எனக்கிருந்த இலக்கிய உறவு தொடக்கம் அவரின் இலக்கியப் பயணத்தின் எனக்குத் தெரிந்த சில விடயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். இன்று அன்னாரின் மறைவுக்கு,உலகம் பரந்த விதத்தில் அஞ்சலி செலுத்துக்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு பத்திரிகைகளில் அவரைப் பற்றிய பல தகவல்கள் இலக்கிய ஆர்வலர்களால் எழுதப் படுகின்றன.
தமிழியல் துறை தமிழியற்புலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,மதுரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை, சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்,ஹ_ஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமெரிக்கா, உகண்டா தமிழ்ச்சங்கம், உகண்டா கிருஷ்ணகிரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கம் இணைந்து நடாத்தும் 100 நாள் தேசிய நாடகவிழா மற்றும் நாடகமும் பண்பாடும், திறன் மேம்பாட்டுத் தேசிய பயலரங்கம் நிகழ்வைச் சிறப்பித்துக்கொண்டிருக்கும் தமிழில்துறை தலைவர் முனைவர் யோ.சத்தியமூர்த்தி, கலைமணிச்சுடர் ம.வெ.குமரேசன், நாடக ஆசிரியர் மாதையன், நாடக மனேஜர் பெ.முருகேசன் மற்றும் கலைஞர்கள், நடிகர்கள், கலை ஆர்வலர்கள், இளையவர்கள் அனைவருக்கம் எனது இனிய வணக்கம்!
எமது இனிய நண்பர் கலாநிதி சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி அவர்கள் சென்ற சனிக்கிழமை 30-1-2021 ஆண்டு எம்மைவிட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி எமக்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றது. இலங்கையில் பிரதி கல்விப்பணிப்பாளராகவும், ரொறன்ரோவில் பகுதிநேர ஆசிரியராகவும் கடமையாற்றியிருந்த இவரை முதன் முதலாக 1990 களில் ‘கனடா தமிழ் பெற்றோர் சங்க நிகழ்வு ஒன்றில்தான் சந்தித்தேன். இவர் பெற்றோர் சங்க நிர்வாகக் குழுவில் இடம் பெற்றிருந்தார். திரு சின்னையா சிவநேசன், திரு கே. கனகரட்ணம், திரு. இராமநாதன் ஆகியோர் அக்காலகட்டத்தில் தலைவர்களாக இருந்தார்கள். நான் முதலில் பொருளாளராகவும், பின் செயலாளராகவும் கடமையாற்றினேன். அதிபர் பொ. கனகசபாபதி, பேராசிரியர் இ. பாலசுந்தரம், திரு. சாள்ஸ் தேவசகாயம், திரு. இராமச்சந்திரன் போன்றோர் நிர்வாகசபையில் இருந்தார்கள். அக்காலத்தில் இருந்தே, தன்னார்வத் தொண்டரான நண்பர் சிவநாயகமூர்த்தி இது போன்ற ‘இலங்கை பட்டதாரிகள் சங்கம்’ மற்றும் பல சங்கங்களில் இணைந்து கடைசிவரை தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.


பெண்ணியம் என்ற சொல் 1890 களில் இருந்து பாலின சமத்துவ கோட்பாடுகளையும், பெண்ணுரிமைகளைப் பெறச் செயற்படும் இலங்கங்களையும், குறிக்கப் பயன்பட்டு வருகிறது. தமிழில் பெண்ணியம், பெண்நிலை வாதம், பெண்ணுரிமை ஏற்பு என்ற சொற்கள் பயன்பட்டு வருகிறது. பெண்ணியம் பெண்கள் அனுபவிக்கும் எல்லா விதமான அடக்குமுறைகளையும், எதிர்ப்பது மட்டுமன்றி, பெண்களின் மேம்பாட்டிற்குரிய வழிமுறைகளையும் ஆராய்ந்து செயற்படுத்துகின்றது. இதனையே புட்சர் “பெண்ணியம் என்பது, பெண்கள் பாலின பாகுபாட்டால் அனுபவிக்கும் தனிப்பட்ட பொருளாதாரத் துன்பங்களை எதிர்த்து மேற்கொள்ளும் இயக்கமே” என்கின்றார். பெண்ணியவாதிகள் ஆண்களை வெறுப்பவர்கள் அல்லர். இருப்பினும் ஆண் நாயகத்தையும் வெறுப்பவர்கள். பெண்ணியம் ஆண்களுக்கும்ää பெண்களுக்கும் பொதுவான நேர்மையான சமத்துவத்துடனும், சுதந்திரத்துடனும் கூடிய சமூகம் உருவாக வேண்டுமென்று விரும்புகின்றது.

ஈழத்தில் 1930 முதல் சிறுகதைகள் புதிய வடிவமும் சமூக சீர்திருத்தப் பார்வை கொண்டனவாகவும் வெளிவரத்; தொடங்கின. முன்னோடிப் படைப்பாளிகளாகத் திகழ்ந்தவர்களின் ஆங்கில மொழிப் பயிற்சியும், தமிழக இதழ்களில் வெளியான சிறுகதைகள் மீதான பார்வையும் அவர்கள் சிறந்த கதைகளைப் படைக்க ஏதுவாகவிருந்தன. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மூலவர்களில் ஒருவராகவும் அன்றுதொட்டு இன்றுவரை இலக்கிய வரலாற்றில் முக்கியமானவராகவும் பலராலும் குறிப்பிடப்படுபவர் இலங்கையர்கோன. இவரது இயற்பெயர் த. சிவஞானசுந்தரம். ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆங்கில மொழிமூலம் கல்விகற்று நிர்வாக சேவைக்குத் தெரிவுசெய்யப்பட்டுக் காரியாதிகாரியாக (னு.சு.ழு.) கடமையாற்றியவர். சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞராகவும் திகழ்ந்தவர்.
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் அனார் கவிதைகள் பற்றிய கலந்துரையாடலைத் தொடக்கிவைக்கும் முகமாக அனாரை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சிறு குறிப்பை அனுப்பிவைக்குமாறு நண்பர் நடேசன் என்னைக் கேட்டுக்கொண்டார். அனாருக்கு புதிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை எனினும், கருத்தரங்கச் சம்பிரதாயத்துக்காக நான் இந்தச் சிறிய அறிமுகக் குறிப்பை உங்கள் முன்வைக்கின்றேன்.
கவிதை புனைவதோடு இலக்கிய உலகில் பிரவேசித்துää சுமார் முப்பதாண்டுக் காலமாகத் தமிழ் சிருஷ்டி இலக்கியத்தின் சகல கூறுகளிலும் தன் கைவண்ணத்தைக் காட்டி அவற்றில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்துள்ள ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரான அகஸ்தியர் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அண்மையில் எனக்குக் கிட்டியது. எடுத்த எடுப்பிலேயே. எழுத்துத் துறையில் புகுவதற்கு எவை தூண்டுதலாக இருந்தன என அவரைக் கேட்டேன். அடக்கு முறைகளையும். ஒடுக்கு முறைகளையும். சுரண்டலையும் நேரடியாகக் கண்டு அவற்றுக்கு எதிராகப் பணியாற்ற வேண்டுமென்ற அவாவே அவரை எழுதத் தூண்டியது என்றும். தான் சேர்ந்த முற்போக்கு இயக்கமும் அவ்வியக்கத்துத் தோழர்களிடமிருந்து தான் பெற்ற போதமும். மக்களிடமிருந்து கற்றவையுமே சரியான பாதை எது என்பதை அவருக்குக் காட்டித் தந்தன எனச் சுட்டிக் காட்டினார்.

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவர், பல்துறை ஆற்றலாளர் அ. ந. கந்தசாமி. பத்திரிகைத்துறை ஜாம்பவான். எழுத்தாளர், கவிஞர். வீரகேசரி, தேசாபிமானி, சுதந்திரன், மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளான ஒப்சேவர், ரிபுயூன் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றியவர். இலங்கை அரசாங்கத் தகவற்பிரிவின் வெளியீடான 'ஸ்ரீ லங்கா" என்ற இதழின் ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, பத்திரிகைத்துறை என யாவற்றிலும் தனக்கெனத் தனிமுத்திரை பதித்தவர்.
"நான் யாழ்ப்பாணத்திலே ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். ஏழைகளின் துன்ப துயரங்களையும், அவலங்களையும், பசிபட்டினிகளையும் அவர்களது கல்வி அறிவின்மையையும் நான் அனுபவரீதியாக அறிவேன். நாம் வாழும் இலங்கைச் சமூகம் மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கின்ற ஓர் அமைப்பாகும். பெரும்பான்மை மக்களின் வாழ்வு துன்ப துயரங்கள், அமைதியின்மைகள், வறுமையின் தாக்கங்கள் நிறைந்ததாயிருப்பதற்கு மனிதனை மனிதன் சுரண்டுகின்ற வர்க்க சமுதாயமே காரணமென்பதை அறிந்தேன். அரசியலே சகலவற்றையும் தீர்மானிக்கின்றது. இந்த ஓர வஞ்சகமான சமுதாயத்தை மாற்றி அமைப்பதற்கு உழைக்கும் மக்களின் அரசியலாலேயே முடியும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இச்சமுதாய அமைப்பை மாற்றி அமைத்து, சகலரும் சரிநிகர் சமானமாக, சுபீட்சமாக வாழத்தக்க ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக மக்களைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபட்டிருந்த மார்க்சிய இயக்கத்திலே இணைந்து உழைத்தேன். அந்த இயக்கம் எனக்கு ஒரு சரியான உலகப் பார்வையை அளித்தது. மக்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்தது. மக்களிடம் கற்று மக்களிடமே மீண்டும் அளித்தல் வேண்டும் என்ற கோட்பாட்டைப் போதித்தது. இவைகளால் தெளிவும், பரந்த உணர்வும் பெற்ற நான் மனிதனை மனிதன் சுரண்டுவதை அம்பலப்படுத்தவும், சுரண்டலினால் மக்கள் வாழ்வில் விளைகின்ற துன்ப துயரங்கள், அவலங்கள், ஏக்கங்கள், கல்வி அறிவின்மை, அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுதல் முதலியவைகளை வெளிப்படுத்தவும் நான் எழுதத் தொடங்கினேன்." எனப் பிரகடனப்படுத்துகிறார் சிறந்த முற்போக்கு எழுத்தாளர் யோ. பெனடிக்ற் பாலன்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









