மீள்பிரசுரம்: கல்லுக்குள் ஈரம்

[அண்மையில் மறைந்த எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாள் பற்றித் 'தினமணி' பத்திரிகையில் வெளியான கட்டுரையிது. அவரது ஞாபகார்த்தமாக மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. - பதிவுகள் -] அண்ணாச்சி ர.சு.நல்லபெருமாள் இன்று உடலோடு இல்லை. இயற்கை எய்தினார் இறைவனடி சேர்ந்தார் என்று பலபடச் சொன்னாலும் காலமானார் என்று சொல்லுவதுதான் சாலப் பொருந்தும் அந்தப் பெருமகனாருக்கு. ஆமாம், கல்கியின் அன்புக்குப் பெரிதும் பாத்திரப்பட்டவர் அண்ணாச்சி. அவரது வாழ்க்கை வருங்கால இளையவர்க்குப் பெரும் பாடமாக அமையும். மிகுந்த அன்பு கொண்டவர் அண்ணாச்சி. அதிர்ந்து பேசாத பண்பாளர். எந்தவித தீயபழக்கங்களும் இல்லாத தூயவர். அவரது சித்தப்பா சங்கரபாண்டியம் பிள்ளை நாடாளுமன்ற உறுப்பினர் நேரு அவையில். இன்றோ அவரது உறவில் தம்பி ஏ.எல்.எஸ். திருநெல்வேலி மாநகரத் தலைவர். எனினும், அண்ணாச்சிக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகம்.

விசுவாமித்திரன் வரங்கள் பல பெற விரும்பி ஒரு வேள்வி செய்யத் தீர்மானித்தார். அதே நேரத்தில் அந்த வேள்வியைக் குழப்பிவிடப் பல அசுரர்கள் எத்தனிப்பர் என்ற ஐயப்பாடும் அவருக்கு ஏற்பட்டது. எனவே, கடுகதியாய் அயோத்தி சென்று, தசரத மன்னனைக் கண்டு, விடயத்தைக் கூறி, வேள்வியைக் காப்பதற்கு இராமனைத் தந்தருளுமாறு வேண்டி நின்றார். இராமனைப் பிரிய விரும்பாத தசரதன் துடிதுடித்து ஈற்றில் இராமர், இலக்குமணன் ஆகிய இருவரையும் விசுவாமித்திரருடன் செல்வதற்குச் சம்மதித்தான். விசுவாமித்திரன், இராமன், இலக்குமணன் ஆகிய மூவரும் அயோத்தியிலிருந்து காட்டுக்குச் சென்றனர். ஆங்கு முனிவர்களின் தவத்திற்கு இடையூறு புரிந்து வருபவளான தாடகை என்ற அரக்கியை இராமன் அம்பைத் தொடுத்துக் கொன்றான். அதன்பின் இராமரும், இலக்குமணனும் யாக சாலையைச் சுற்றி நின்று காவல் புரிய, விசுவாமித்திரன் அரிய வேள்வியை ஆறு நாட்கள் நடாத்தி முடித்து இராமனையும், இலக்குமணனையும் வாழ்த்தினார்.
தமிழ்
முற்போக்கு இடதுசாரி இயக்க செல்நெறிகளில் ஆழக்கால் பதித்த செ.கணேசலிங்கன் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அறுபது ஆண்டு காலத்துக்கு மேலாகப் பணியாற்றி வருபவர்களில் முதன்மை பெற்று நிற்கின்றார். எண்பது நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்டுச் சாதனை படைத்தவர். சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், சஞ்சிகை என்று பல்துறை இலக்கிய வடிவங்களுக்கூடாக தன் ஆளுமையை நிலை நிறுத்தியுள்ளார். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் அதன் கொள்கை வழிநின்று செயற்பட்ட பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, கே.கணேஷ், எச்.எம்.பி.மொஹிடீன், சில்லையூர் செல்வராஜன், இ.முருகையன், நீர்வை பொன்னையன், அ.முகம்மது சமீம், இளங்கீரன், கே.டானியல்,பிரேம் ஜி, டொமினிக் ஜீவா, அ.ந.கந்தசாமி போன்றவர்களுடன் தோழமை உணர்வுடன் ஒன்றிணைந்து முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை செ.கணேசலிங்கன் வழங்கினார். தாம் மேற்கொண்ட மார்க்சிய சித்தாந்தக் கொள்கைப் பற்றுறுதியுடன் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் செ.கணேசலிங்கன் முற்போக்கு இலக்கியச் செம்மல்களில் ஒருவராக முகிழ்ந்து நிற்கின்றார்.
மாந்தர் செய்திப் பரிமாற்றத்திற்குத் தொடக்கத்தில் சைகைகளையும் ஒலிகளையும் பயன்படுத்தியிருக்கின்றனர். பின்னர், தொடர்ந்த வளர்ச்சி நிலையில், படிப்படியே சொற்களை உருவாக்கி, மொழியை அமைத்து, அம் மொழி வழி பேசத் தொடங்கினர். அதன்பின் வரிவடிவங்கள் அமைத்துக் கொண்டு, அதன் வழியாகத் தம் எண்ணங்களை எழுத்திலும் வெளிப்படுத்தத் தொடங்கினர். முதலில் உருவான எழுத்து வழியான செய்தித் தொடர்பு ஊடகமே மடல் அல்லது கடிதம். தொலைவில் இருப்பாருடன் தொடர்பு கொள்ளப் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டுவரும் இந்த ஊடகம், கணிப்பொறி கைப்பேசி வருகைக்குப்பின் பெரிதும் குறைந்து அறவே மறைந்துவிடும் நிலைக்குச் சென்றுகொண்டுள்ளதைக் காண்கிறோம்.
[ தமிழ் இலக்கிய வரலாற்றில் பிரமிளின் பங்களிப்பானது முக்கியமானது. கதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், தத்துவமென இவரது ஆளுமை பரந்துபட்டது. இவை தவிர ஓவியம், சிற்பம் போன்ற துறைகளிலும் ஆர்வமும், திறமையும் கொண்டவராக விளங்கினார். தமிழ்ப் படைப்பாளிகளில் குறிப்பிட்ட வெகு சிலரே நவீன அறிவியற் துறையின் பலவேறு கோட்பாடுகளை, அவை கூறும் பொருளினைச் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையிலான தேடலை மேற்கொண்டவர்களெனலாம். அவர்களில் பிரமிள் முக்கியமானவர். விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு இருப்பை அறிதற்கு முயன்றவர் பிரமிள். நவீன விஞ்ஞானம் கூறும் காலவெளி, 'குவாண்டம்' இயற்பியல், சார்பியற் தத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் இருப்பை அறிதற்கு முயன்றார். இதனைத்தான் 'விஞ்ஞானம் - ஞானம் - விபூதிப்பட்டை', 'விஞ்ஞானப் பார்வையும் காலாதீதமும்' போன்ற அவரது கட்டுரைகள் புலப்படுத்துகின்றன. பிரமிளின் பிறந்த தினம ஏப்ரல் 20. அவரது நினைவாகவும், தமிழ் இலக்கிய உலகில் அவரது ஆளுமையினை, பங்களிப்பினை நினைவு கூரும் முகமாகவும் அவரைப் பற்றிய மற்றும் அவரது ஆக்கங்கள் சில 'பதிவுகளி'ல் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. - பதிவுகள்]
1. உங்களைப்பற்றிய ஒரு விரிவான அறிமுகம் வாசகர்களுக்காக:
அச்சுப் போன்ற தமிழை அடக்கமாக உச்சரித்து, நகைச்சுவை ததும்ப தமிழை ஈழமண்வாசனையுடன் சுவைக்கத்தந்தவர் புலவர் அமுது. லண்டனில் ‘மூதறிஞர்’பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டு சரித்திர வரலாறாகிய புலவர் அமுது, ஈழத்தின் பாரம்பரிய பண்டித மரபையும் பல்கலைக்கழகத்தின் நவீன இலக்கிய மரபையும் இணைத்த ஒரு பாலமாகத் திகழ்ந்தவர். இத்தகைய ஒரு பெரிய தமிழ் அறிஞரை நான் அவருடைய இளைய மகள் ஜெயமதியுடன் இளவாலைக் கன்னியர் மடத்தில் சிறுமியாகப் படித்த காலம் தொட்டே அறிந்திருந்தேன். எமது பாடசாலையின் அனைத்து முக்கியமான வைபவங்களிலும் வெள்ளை வேட்டி சால்வையோடு மெல்லிய உயர்ந்த இந்த அறிவுச்சுடரின் தலை பளபளக்க, கழுத்தை பூ மாலைகள் அலங்கரிக்க, முதல் வரிசையில் இருந்ததைப பார்த்திருக்கிறேன். லண்டனில் ஆண்டுதோறும் இடம்பெறும் இளவாலைக் கன்னியர் மடத்தின் பழைய மாணவிகளின் ஒன்றுகூடலின்போதுதான் இவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.
தற்போதைய யாழ். நவீன சந்தைக் கட்டிடம் அப்போது கட்டப்படவில்லை. அந்த இடத்தில் தான் அன்றைய பஸ் நிலையம் அமைந்திருந்தது. அதற்கு மேற்குப்புறமாகக் கஸ்தூரியார் வீதியின் ஆரம்பம். அதனருகாமையில் மேற்குப்புறமாகத் தகரக் கூரைகளுடன் வரிசையாகப் பல கடைகள். அதிகமானவை குளிர்பானம், பிஸ்கட் முதலியன விற்கப்படும் கடைகள். அவற்றின் நடுவே ஒரு புத்தகசாலை. அந்தப் புத்தகசாலையின் உள்ளேயும், வாசலிலும் தினசரி பல இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்களைக் காணலாம். உள்ளே ஓர் உயர்ந்த கறுப்பு உருவம், வெள்ளை வேட்டி, அதற்கேற்ற வெள்ளை நாசனல் - சேட், சிவப்பு நிற 'மவ்ளர்" தோளில் - சிலவேளை நாரியில் இறுக்கக்கட்டியபடி, சிலவேளை நெற்றியில் சந்தனப் பொட்டு, பளிச்சிடும் வெண்ணிறப் பற்கள் தெரிய சிரிக்கும் அழகு, அன்பாகப் பண்பாகப் பேச்சு. ஆமாம்.. அவர் தான் அந்தப் புத்தகசாலையின் உரிமையாளர் ஆர். ஆர். பூபாலசிங்கம்.
ஈழத்து சிறுகதைகளின் மீதான பார்வை தமிழக விமர்சகரிடையே பரவலாக தென்படவிலையோ என்பதான ஆதங்கம் எம்மிடையே இருப்பதை மறுக்க முடியாது. விமர்சகர்களின் வாசனைத் தளம் பலரை உள் வாங்காமல் இருந்திருக்கலாம். விமர்சகர்களும் தங்கள் பரப்பை விட்டு வெளி வரத் தயாராகவும் இல்லை. ஈழத்து விமர்சகர்கள் முன்வைத்த சிறுகதைகள் பல தளங்களிலும் பேசப்படாமல் போயும் இருக்கலாம். மேலும் அவ்வாறான சிறுகதைகளின் ஆசிரியர்களால் மீண்டும் எழுதாமல் போனதுவும் நமது துரஷ்டமுமாகும். குறிப்பாக திருக்கோவில்.கவியுவன், கோ.றஞ்சகுமார் போன்றோரிடமிருந்து சிறுகதைகள் பேசும் படியாக வரவில்லை. கோ.றஞ்சகுமாரின் 'மோகவாசல்' தொகுப்பு மீள் பிரசுரம் பெற்றிருந்தாலும் அதில் அவரின் தொடர்ச்சியான வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
இலங்கையிலிருந்து வெளிவரும் 'நந்தலாலா' , முன்பு வெளிவந்த 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாருடன் நடைபெற்ற நேர்காணல். இந்த நேர்காணல் 1997இல் ஜோதிகுமார் தொராண்டோ வந்திருந்த சமயம் எடுக்கப்பட்டது. பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் கருதிப் பதிவுகளுக்காக இங்கு பதிவு செய்கின்றோம். பேட்டி கண்டவர் வ.ந.கிரிதரன்.- 

எங்கள் வீடு ஒரு செய்தி நிறுவனம் போன்று பல்லாண்டுகள் இயங்கியது. மூத்த சகோதரர் நாவேந்தன் முதல் கடைசிச் சகோதரர் வரை எங்கள் சகோதரர்கள் யாபேருமே சுமார் நாற்பது வருடங்கள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவரெனக் காலத்துக்காலம் பத்திரிகை, வானொலிச் செய்தியாளர்களாகச் செயற்பட்டோம். நாவேந்தன் பதினாறு வயதில் வீரகேசரியில் ஒப்புநோக்காளராகச் சேர்ந்து சில மாதங்கள் கடமையாற்றிவிட்டு ஊருக்குத்திரும்பிச் சில வருடங்கள் வீரகேசரியின் நிருபராகச் செயற்பட்டார். துரைசிங்கம் அண்ணர் தினகரன் நிருபராக விளங்கினார். பின்னர் அக்கா ஞானசக்தி, சிவானந்தன் அண்ணர், யான், தங்கை சரோஜினி, தம்பி தமிழ்மாறன் என எல்லோருமே காலத்துக்காலம் இலங்கையிலிருந்து வெளிவந்த சகல பத்திரிகைகளுக்கும் நிருபர்களாகக் கடமையாற்றினோம். வீரகேசரி, தினகரன் குறூப், தினபதி குறூப், டெயிலி மிரர் - ஈழமணி, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, செய்தி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் யாவற்றுக்கும் எமது வீட்டு மேசையிலிருந்து விதம்விதமாகச் செய்திகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அனுப்பப்பட்டன.
புதுக் கவிதையின் வரவானது பலநூறு கவிஞர்களை உருவாக்கி விட்டிருக்கிறது. அது எப்படியென்றால் இடறி விழுந்து நிமிர்ந்து பார்த்தால் அவன் அநேகமாக ஒரு கவிஞனாகவே இருப்பான். இந்தச் சூழலில் கணினியின் கைங்கரியத்தாலும் வசனத்தை உடைத்துப் போட்டால் கவிதை என்கிற வசதியினாலும் கவிதை என்கிற பெயரில் வெளிவரும் பல்லாயிரம் கவிதையின் வடிவ எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுப் பல நூறு நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான நூல்களுக்குள்ளும் ஒரு சில நல்ல கவிதைகள் இடம்பெறவே செய்கின்றன. ஒரு சில வரிகள் மின்னிக் கொண்டுதானிருக்கின்றன.
ஸியா என்பவன் பழஞ்சீன மாமன்னரின் காதலன். ஒருநாள், அரசருடன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தவன், கனிந்து சாறு சொட்டும் பீச் பழத்தைக் கடித்து ருசித்து அதன் சுவையில் மயங்கி பாதி கடித்த அந்தக்கனியை அரசருக்குக் கொடுக்க அவர் அதை வாங்கிச் சுவைத்தபடியே, “ஆஹா ! பழத்தை நான் ருசிக்க வேண்டும் என்பதில் உனக்குத் தான் எத்தனை அக்கறை ! உனது பசியை விட என் மீதான காதலே உனக்குப் பெரிதாக இருக்கிறதென்றறிந்து யாம் மிக மகிழ்ந்தோம்’, என்று கசிந்துருகுவார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்து வருடங்களுக்கு முன்பு (2000) 'ஞாயிறு தினக்குரல்" பத்திரிகையில் தோழர் 'பாரதிநேசன்" வீ. சின்னத்தம்பி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். 'கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள்" என்பது அக்கட்டுரையாகும். அடுத்த ஆண்டு அவர் காலமாகிவிட்டார். அவரது நினைவாக அக்கட்டுரையைச் சிறு நூலாக யான் வெளியிட்டேன். அக்கட்டுரையில் வேதவல்லி கந்தையா, தங்கரத்தினம் கந்தையா, பரமேஸ்வரி சண்முகதாசன், வாலாம்பிகை கார்த்திகேசன், பிலோமினம்மா டானியல் ஆகிய மாதரசிகளின் பணிகள் குறித்துச் சுருக்கமாக விளக்கியிருந்தார். இம்மாதரசிகளையும் அவர்தம் பணிகளையும் யான் நன்கறிவேன். அவர்களது பணிகள் மெச்சத்தக்கவை தான்.பாடசாலைக் காலத்திலிருந்தே மூத்த சகோதரர்களைப் பின்பற்றி கலை இலக்கிய, அரசியல்துறைகளில் யான் ஈர்ப்புக்குள்ளானேன். அக்காலத்திலேயே யானும் மேடையேறத் தொடங்கினேன். அறுபதுகளின் முற்பகுதியிலிருந்தே பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்களோடு பழகும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அன்று சிறந்த பெண் பேச்சாளர்களாக வடபகுதியில் பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம், பண்டிதை பொன் பாக்கியம், பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, புஸ்பா செல்வநாயகம், வேதவல்லி கந்தையா, உருத்திரா கந்தசாமி ஆகியோர் விளங்கினர். இவர்களது பேச்சுக்களைக் கேட்கவும், இவர்கள் சிலரோடு மேடையேறும் சந்தர்ப்பமும் அன்றே எனக்கு வாய்த்தது.
"'நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை' என்று ஆரம்பத்திலிருந்தே பிரகடனப்படுத்தி வருகின்றேன்" (விவாதங்கள் சர்ச்சைகள், பக்கம்263) என்று தன்னைப்பற்றி வெங்கட் சாமிநாதன் கூறிக்கொண்டாலும் இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற கலையின் பல்வேறு துறைகளிலும் ஆழமான, காத்திரமான பங்களிப்பினைச் செய்த கலை விமர்சகர் இவரென்பது மறுக்கமுடியாதவுண்மை மட்டுமல்ல நன்றியுடன் விதந்துரைக்கப்பட வேண்டியதுமாகும். 1960இல் 'எழுத்து' இதழில் வெளியான 'பாலையும், வாழையும்' கட்டுரையின் மூலம் எழுத்துலகிற்குக் காலடியெடுத்து வைத்த வெ.சா.வின் க்லைத்துறைக்கான பங்களிப்பு ஐம்பதாண்டுகளை அடைந்திருக்கிறது. இந்த ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் 'சாமிநாதனது பேனா வரிகள் புலிக்குத் தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது என்றபடி சகலதையும் பதம் பார்க்கும்' என்னும் சி.சு.செல்லப்பாவின் கூற்றின்படி அனைவரையும் பதம் பார்த்துத்தான் வந்திருக்கிறது. ஒரு சில வேளைகளில் உக்கிரமாகவும் இருந்திருக்கிறது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த 14-ம் திகதி வெள்ளிக்கிழமை (14 - 01 - 2011) மாலை இடம்பெற்ற 'இலக்கியக் களம்" நிகழ்ச்சியில் 'டானியல் நினைவலைகள்;" என்ற தலைப்பில் எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் (பிரான்ஸ்) நிகழ்த்திய உரையின் சுருக்கம். 'ஞானம்" சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்தார். டானியல் யார்? என்ன அவர் சாதனை? அவரை இன்றும் நினைத்துக்கொள்ள, அவர் என்ன செய்துவிட்டார்? டானியல் ஓர் அற்புதமான மனிதர் - கலைஞர் - மனிதாபிமானி - எல்லாவற்றுக்கும்மேலாய் தமிழில் ஓர் அருமையான படைப்பாளி - நாவலாசிரியர் - சமூக விடுதலைப் போராளி - தடம்புரளாத அரசியல்வாதி.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









