- அண்மையில் முகநூலில் அஞ்சலி' சஞ்சிகையின் ஆகஸ்ட் 1971 இதழில் வெளியான கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் 'ஒரு வரலாறு ஆரம்பமாகின்றது' சிறுகதை பற்றிய பதிவொன்றினையிட்டிருந்தேன். இங்கும் பதிவு செய்திருந்தேன்.அதற்கான ஜெயபாலனின் அவரது முகநூற் பக்கத்தில் வெளியான எதிர்வினையிது. - வ.ந.கி -
இக்கதை வெளிவந்தபோது என்னை பாராட்டிய கலாநிதி கைலாசபதி உலக மொழிகளில் மொழிபெயர்க்க இக்கதையை சிபார்சு செய்ததாக சொன்னார். என்னுடைய கதைகள் 1969 - 1974 காலக்கட்டத்தில் விவேகி, தினகரன், அஞ்சலி போன்ற பல சஞ்சிகைகளில் வெளிவந்தது. யாராவது தேடித் தர முடியுமா?
.
கிரிதரன் இக்கதையை முடிந்தால் தட்டச்சு பிரதியாக அல்லது செறெக்ஸ் பிரதியாக எனக்கு அனுப்பி உதவுங்கள்..
எங்கள் மண்ணதும் முன்னோரதும் கதைகளின் சுமை தாங்கமுடியல. இறக்கி வைக்க வழியில்லை. எப்படியும் எழுதித்தான் தீர்க்க வேணும். லண்டன் கொழும்பு முடிந்தால் கேக் ஆவணக் காப்பகங்களில் வாசிக்க வசதியில்லாத துயரில் சோம்பிப்போனேன். எப்படியும் மீண்டும் கதை எழுத ஆரம்பிக்க வேணும்
,
பருத்திக்கும் மந்தை வளர்ப்புக்கும் பேர்பெற்று பசுத்தீவு எனவும் பருத்தித்தீவுஎனவும் 1600 வரை அழைக்கபட்ட எங்கள்தீவுக்கு போத்துகீசரும் பசுத்தீவு என்றே (Ilha das Vacas ) பெயர் வைத்தனர். நெடுந்தீவில் வளமாக பள்ளத்தாக்கின் பெயர் வெல்லை. வெல்லை குதிரைகளின் வளமான மேச்சல் நிலம் என்பது மட்டும்தான் எனக்கு ஆரம்பத்தில் தெரியும்.
.
1970பதுகளில் எல்லோரையும் போலவே வெல்லை வெள்ளை மணல் என்கிற சொல்லின் திரிபு எனத்தான் நானும் எண்ணினேன். நெடுந்தீவு தெற்கில் இருந்து தென் கிழக்கு வரை நீண்ட நீவளமும் மண்வளமும் நிறைந்த பள்ளத்தாக்கான வெல்லை அண்ணளவாக 6 கிலோமீட்டர் நீழமும் 2 - 3 கிலோமீட்டர் அகலமுமுள்ள வளமான நிலமாகும்.
யாழ்பாணக்குடா நாட்டில் உள்ள பெரிய பள்ளத்தாக்கிற்க்கும் வல்லை என்றுதான் பெயர். இது என் மனசை உறுத்தியது. ஆனால் நெடுந்தீவு வெல்லை வெளிபோல யாழ்பாணம் வல்லை வெளிக்கு வெள்ளை மணல் கரைகள் இல்லை. ஆனால் இரண்டு வெல்லை வெளிகளுமே பள்ளத்தாக்குகள். அங்கிருந்துதான் என் தேடல் ஆரம்பமானது.
.
போத்துகீச டச்சு ஆவணங்களைல் வேலை செய்தபோதுதான் நெடுந்தீவு வெல்லையும் யாழ்குடாநாட்டில் வல்லையும் வெல்லாய் என்கிற டச்சு சொல்லில் இருந்து வந்ததை கண்டறிந்தேன். பள்ளத்தாக்கு என்ற சொல்லை டச்சு மொழியில் Vallei ’வெல்லாய்’ என அழைப்பார்கள்.
என் பல்கலைகழக காலங்களில் (1976 - 1980) ) போத்துக்கீச டச்சு ஆங்கில ஆவணங்களில் தமிழர் சமூக பொருளாதார அரசியல் வரலாற்றை இரவு பகலாகத் தேடினேன். அப்போபோதுதான் வெல்லை எங்கள் மூதாதையரின் பருத்தித்தோட்டங்களாக இருந்த சேதியை அறிந்தேன்.
அரேபிய மற்றும் மாப்பிள முஸ்லிம் கப்பல் வாணிகர்களின் கொச்சி தமிழநாட்டில் வேதாளை (மண்டபம்) நெடுந்தீவு வர்த்தக கப்பல் வலைப்பின்னல் ஊடாக நெடுந்தீவவின் பருத்தி பாற்பொருட்கள் ஆடு மாடு மந்தை பனை மர வர்தகம் செளித்தது. முஸ்லிம் கடலோடிப் போராளிகளான குஞ்சாலி மரைக்கர்கள் எங்கள் முன்னோர்களுடன் சேர்ந்து போத்துக்கீஅருக்கு சிம்ம சொற்பனமாக இருந்தனர். சோழநாட்டில் பெளத்த மதம் ஒடுக்கப்பட்டபோது நெடுந்தீவு கலகக்காரரின் பூமியாகவே இருந்தது. அதனால் பெளத்த அகதிகளையும் நெடுந்தீவு மக்களையும் பிழவு படுத்தவும் கிளர்ச்சிக்கார நெடுந்தீவு மக்களை அடக்கவும் சோழர்காலத்திகேயே நெடுந்தீவில் ஒரு கோட்டை கட்ட வேண்டி இருந்தது. அதற்க்கு மீகாமன் கோட்டை என பெயர். போத்துக்கீசருக்கும் முஸ்லிம் கடலோடிகளையும் நெடுந்தீவு மக்களையும் பிழவு படுத்தவும் பருத்திபோன்ற ஏற்றுமதி பொருளாதாரத்தை அழிக்கவும் கோட்டை அவசியமாக இருந்தது. மீகாமன் கோட்டையை போத்துக்கீசர் மீழமைத்தார்கள். பருத்தி தோட்டங்களை அழித்தார்கள்.
போத்துக்கீசருக்கு எதிரான கடல்போர்கள் நெடுந்தீவிலும் நடந்துள்ளது. டொன் பீத்ரோ றொட்றிகோ என போத்துகீசரால் குறிப்பிடப்படும் கடற்போராளி அலி மரைக்காருடன் சேர்ந்து நெடுந்தீவில் இருந்து சிலகாலம் போத்துக்கீசரை துரத்தி அடித்த வரலாறும் நெடுந்தீவுக்கு உண்டு. இத்தகைய போர்குணத்தின் ஆதாரம் பருத்திச் செய்கைதான்.
போத்துகீசர் முதலில் பருத்தி தோட்டங்களை அழித்து புல்வெளிக்யை உருவாக்க முனைந்தனர், கிழக்கூரில் இருந்து சாறாப்பிட்டிவரை நீண்டிருந்த எங்கள் பருத்தி தோட்டங்களை போத்துகீசரும் டச்சுக்காரரும் தடை பண்ணிறதும், அழிக்கிறதும் எங்கள் முன்னோர் போராடி மீண்டும் பருத்தி பயிர் செய்வதுமாக கலகங்களிலேயே 1620 - 1800 வரைக்கும் இரண்டு நூற்றாண்டுகள் ஓடியிருக்கு, பருத்தி வளர்க்கவே கூடாது என டச்சுக்காரர் வெளியிட்ட அரசாணைகள் பற்றி மொழி பெயர்ப்பு ஆவணங்கள் கொழும்பு ஆவணக் காப்பகத்திலும் கிடைக்கிறது.
”மயிரை விட்டான் நெடுந்தீவான்” என ஒரு சொல்’ அடை உண்டு. ‘ஒரு கடகம் சுண்ணாம்பில அடிபட்ட நெடுந்தீவான்’ என்று இன்னொரு சொல்லடை யாழ்ப்பாணத்தில் வளங்கியது, இவை நெடுந்தீவு மக்களின் ஆதிவாசி கலகக்கார இயல்பை உணர்த்தும் சொல்லடைகளாகும்.
இந்த காலகட்ட நிகழ்வுகளை ஒரு கதைபோல நம்முன்னோர் மொழியில் சொல்ல விருப்பமாய் இருக்கு.
”மயிரை விட்டான் நெடுந்தீவான், எங்க்யோ இருந்து வந்த பீக் குண்டிகழுவாத ’உலாந்தாகாரன்’ எங்களுக்கு உலுப்ப ஏலுமே? சட்டம் போட்டு தோட்டங்களை தடுத்ட் பருத்திஹாய், தோட்டம் தோட்டமாய் பருத்திக்கு நெருப்பு வைச்சாய். பருத்தி எங்களுக்குத் தோட்டப் பயிர் மட்டுமில்ல, பருத்தி எங்கிட பூங்கண்டடா. பூங்கண்டை நாங்க வீட்டு முத்ததில வளப்பம் கோடியில வளப்பம் கிணத்தடியில வளப்பம் ஏன் ஆட்டுப் பட்டியிலகூட வளப்பம். ஏலுமெண்டா உலாந்தாக் காரனை வந்து தொட்டுப்பாக்கச் சொல்லு” என சவாலாக வீட்டு முற்றங்களில் பூஞ்செடிகளாக பருத்தியை வளர்க்க ஊர்கூடி தீர்மானமெடுத்தது. இந்த வீரமரபை நாங்கள் கைவிடக்குக்கூடாது என்பது எனது வேண்டுகோள்.
இறுதியில் பருத்திச் செய்கையை தடை செய்து டச்சுக் காரர் கடும் சட்டம் போட்டனர். . எங்கள் முன்னோர் ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கள் முன்னோர் தமது பணியாமையின் அடையாளமாக வீடுகளில் பருத்தியை பூங்கன்றுகளாக வளர்த்தனர். இதன் மூலம் எங்கள் முன்னோரின் போராட்ட உணர்வும் பருத்தி விதைகளும் எதிர்காலங்களுக்காகக் காப்பாற்றப் பட்டது. மேலும் பூங்செடிகளாக வளர்பதையும் டச்சுக்காரர் தடுத்தால் போராடி ஊரோடு அழிவோம் என்கிற ஆதிவாசி மனமும் அங்கிருந்தது.
எனது தந்தையார் நெடுந்தீவு, என் அம்மாவுக்கு தாய்வழி உடுவில். 1950ல் சின்ன வயசில் உடுவிலில் இருந்து என் தந்தையாரதும் தாய்வழிப் பாட்டனாரதும் ஊரான நெடுந்தீவுக்குக் குடிபெயர்ந்து சென்றபோது நெடுந்தீவு வீடுகளின் முற்றங்களில் பருத்தி பூங்கன்றாக வளர்க்கப் படுவதைக் கண்டேன். மூன்று நூற்றாண்டுகள் நெடுந்தீவு மக்களின் பணியாமைக்கும் வீரத்துக்கும் அடையாளமாகப் பாதுகாக்கப் பட்ட பருத்தியை எங்கலால் பாதுகாக்க முடியவில்லை என்பது வெட்க்ககேடாகும். தயவு செய்து நெடுந்தீவு இளைஞர்கள் மீண்டும் எங்கள் வாழ்வின் வரலாற்றின் வீரத்தின் சின்னமான பருத்தியை தேடிக் கண்டுபிடித்து வீடுகளிலும் பள்ளிக்கூடங்களிலும் வளர்க்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோளாகும்.