இலக்கிய அநுபவ அலசல் - 14
- வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பூங்காவனம்' சஞ்சிகையில் வெளியான அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஏ.இக்பாலின் 'இலக்கிய அனுபவ அலசல்' தொடரின் ஓர் அலசலை மீள்பிரசுரம் செய்கின்றோம். அனுப்பி வைத்த வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு நன்றி. -பதிவுகள் -
இலக்கிய ஈடுபாடு பல்திறப்பட்ட நுணுக்கமான பார்வைக்கு வழிவகுக்கும். ஓர் இலக்கியப் படைப்பின் இயல்புகளை இனங்கண்டு அதனை விவரிக்கவும் விளக்கவும் இலக்கிய ஈடுபாடு ஏற்படுத்தும். வாசிக்கும் வல்லமையால் மனதை உறுத்திய குறிப்புக்களை எப்போதோ எழுதி வைத்திருந்தேன். அவற்றை இப்போது அலசும்போது புதுமையான எண்ணங்கள் எழுவதால் சிலவற்றை இங்கே தருகிறேன்.
01
1967 ஆம் ஆண்டு அ.ந. கந்தசாமி தினகரனில் ''மனக்கண்'' என்னும் சிறந்த நாவல் ஒன்றை எழுதினார். இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் ஒரு வாசகன் பெறும் தகவல்கள் அளப்பரியன. அவற்றை அட்டவணை செய்து பார்த்தல் அவசியம்.
''உயிருடனிருக்கும்போது கண்தானம் சட்டப்படி செய்ய முடியாது'' என்ற உண்மை, வைத்திய சம்பந்தமான நூல் பிரான்ஸ் டாக்டர் பீஸரெரோலன்ட் என்பவர் எழுதிய புத்தகம், வைத்திய நுணுக்கங்கள், கிரேக்க நாடகாசிரியரான செபாக்கிளிஸ் எழுதிய ஈடிபஸ் ரெக்ஸ் நாடகம், துஷ்யந்தன் சகுந்தலை காதல், துட்டகைமுனுவின் மகன் சாலிய குமாரனுக்கும் பஞ்சகுலப் பெண் அசோகமாலாவுக்கும் ஏற்பட்ட காதல், இளவரசி மார்க்கிரட் காதல், அரிச்சந்திர புராணம், காந்திமகான் வாழ்க்கையை மாற்றிய காரணத்துக்கான நிகழ்வு, இளவரசர் அலிகான் ரீட்டா ஹேவொர்த் அந்யோன்யம், ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியத், அறபு நாட்டுக் கதை லைலா மஜ்னு, பெர்னாட்ஷா கூற்றுக்கள், புறநானுற்றுச் செய்யுள்கள், இராமாயனக் கதை, நளன் தமயந்தி தூது, சிலப்பதிகார இந்திரத்திரு விழா, அலெக்சாந்தர் கோடியல் சந்திப்பு, சுவாமி விபுலானந்தர் செய்யுள், வள்ளுவர் குறள்கள், பழமொழிகள், வழக்குச் சொற்றொடர்கள், நீட்சேயின் தத்துவ விளக்கம், சத்தியவான் சாவித்திரி கதை, ஆங்கிலக் கவிஞன் மில்டனின் கவிதைகள், பிரசித்தி பெற்ற குருடர்கள் வரிசை:- துரியோதனனுடைய தந்தை திருதராஷ்டிரன், மாளவ தேசத்து சத்தியவானின் தந்தை, தேபஸ் மன்னன் ஈடிபஸ், யாழ்ப்பாடி, ஆங்கிலப் பெருங்கவிஞன் மில்டன், சிந்தாமணி என்னும் தாசியின் தொடர்பால் தன் கண்ணைத் தானே குத்திக்கொண்ட வைஷ்ணவப் பத்தன் பில்வமங்கள் கதை, சிந்தகன் என்னும் மேலைத்தேயச் சிற்பத் தோற்றம், பட்டினத்தார் பாடல்கள், இன்னோரன்னவைகள் அந்நாவலில் விரவிக் கிடப்பதைப் படிக்க முடியும்.

- எழுத்தாளர் ஹெச்.ஜி் ரசூல் காலமான தகவலினை முகநூலில் கவிஞர் மேமன்கவி அறிவித்திருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்வதுடன் , எமது அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் 'பதிவுகள்' இதழில் அன்று அவர் எழுதிய கட்டுரையொன்றினையும் இத்தருணத்தில் நினைவு கூருகின்றோம். - பதிவுகள் -
- எழுத்தாளர் மேமன்கவி அவர்கள் எழுத்தாளர் ஏ.இக்பாலின் மறைவு பற்றி முகநூலில் அறியத்தந்திருந்தார். அவரது செய்தியினைப் பகிர்ந்துகொள்வதுடன் எமது ஆழ்ந்த அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றோம். - பதிவுகள் -
மரபுக்கவிதை எழுதுவது இலகுவான விடயம் அல்ல என்பது கவிதை எழுத முயன்றவர்கள் கண்டறிந்த அனுபவ உண்மை. யாப்பு எதுகை, மோனை, முரண், இயைபு எல்லாம் கவிதை இலக்க ணத்துக்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். இலக்கணம் மீறாத கவிதையாக இருந்தாலும் அந்தக்கவிதை எத னைச் சொல்ல வருகின்றது என்பதும் முக்கியம். எதுகைக்கும் மோனைக்கும் ஏற்றவாறு சொற்களைத் தேடி எடுத்துக் கவிதை யாக்கும்போது சொல்லவந்த விடயத்தைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லையோ என்ற ஏக்கம் வேறு தோன்றுவது உண்டு. சொல்ல வந்ததைச் சுவைபடச் சொல்லிவிட்டாலே போதுமே. இதற்கு இலக்கணம் எதற்கு? எதுகையும் மோனையும் எதற்கு? என்ற உணர்வுடன் தம் எண்ணப்படி எழுதிவிட்டு இதுவும் கவிதைதான் என்று சொல்லும் கவிஞர்களும் உள்ளனர். இவர்களின் படைப்புக்களையும் இன்று இரசிப்பவர்கள் ஏராளம். இத்தகைய ஒரு காலகட்டத்தில் மரபுக்கவிதை எழுதுவதற்கும் ஒரு துணிச்சல் தேவைப்படுகின்றது.
‘தினமணி கதி’ரில் எழுதத் தொடங்கிய காலத்தில் நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் மூலமாக தொடர்பேற்பட்ட முக்கியமான நண்பர்களில் ஒருவர் ராஜமார்த்தாண்டன். எனக்கும் அவருக்குமிடையில் இணைவான பழக்கங்களும், இலக்கிய ஆர்வங்களும் இருந்தவகையில் அந்தத் தொடர்பு மேலும் விரிவு கண்டது. ராயப்பேட்டை நாகராஜ் மேன்சனில் ராஜமார்த்தாண்டன் தங்கியிருந்த காலப் பகுதியில், அனேகமாக ஒவ்வொரு ஞாயிறும் சந்திப்பதாக அது வளர்ந்திருந்தது. கும்பகோணத்தில் நடைபெற்ற நிறப்பிரிகை சார்பான புதுமைப்பித்தன் கருத்தரங்கில் இருவரும் ஒன்றாகவே சென்று நிகழ்வில் கலந்து கொண்டிருந்தோம். இவை இன்னொரு நெருங்கிய வட்டத்தில் எம்மை இழுத்திருந்தன. அக்காலத்தில் ராஜமார்த்தாண்டன் மூலமாக அவரது நண்பராக எனக்கு அறிமுகமான பெயர்தான் கவிஞர் சுகுமாரன். சில ஞாயிறுகளில் சுமுமாரனும் வரவிருப்பதாக ராஜமார்த்தாண்டன் சொல்லியபோதும், என்றைக்கும் அவரை அங்கு சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. நிறைய எழுதுகிறவரில்லை சுகுமாரன். அவரின் எழுத்தின் ஆழங்களால் இன்னுமின்னும் காணுதலின் விழைச்சல் அதிகமானபோதும், 2003இல் நான் இந்தியாவைவிட்டு புறப்படும்வரை அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் என்னை எட்டவேயில்லை. நாகர்கோவில் காலச்சுவடு தலைமை அலுவலகத்தில் 2014இல் அவரைக் காணவும் பேசவுமான முதல் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே, அவரது பெரும்பாலான நூல்களை நான் வாசித்திருந்தேன். அறிமுகப் படுத்தாமலே இருவரும் அறிமுகமாகியது அந்த ஆரம்பத்தின் முக்கியமான அம்சமெனக் கருதுகிறேன்.
பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களின் தமிழ், ஆங்கில மொழிகள் மூலமான 2009 வரை இலக்கிய முயற்சிகள் பற்றிய சிறு பதிவாக இக் கட்டுரை அமைகின்றது. 

- அவுஸ்திரேலியா, மெல்பனில் நடந்த 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் இலங்கை ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் " ஈழத்து இலக்கியத்தின் இன்றைய நிலை" என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் முழுவடிவம். 'பதிவுகள்' இணைய இதழுககு அனுப்பியவர் எழுத்தாளர் முருகபூபதி-
சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.
எழுத்தாளர் மேமன்கவியையும் இலங்கைத்தமிழ் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது. இத்தனைக்கும் இவரது தாய்மொழி தமிழ் அல்ல. தமிழ்மொழி தாய் மொழி இல்லாதபோதும் , தமிழ் மொழிக்குத் தன் எழுத்தால் வளம் சேர்த்தவர், சேர்ப்பவர். எழுத்தாளர் மேமன்கவி. இவரது மணிவிழா எதிர்வரும் மே 6 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெறவுள்ளது. அதனையொட்டித் தமிழ் விக்கிபீடியாவில் இவரைப்பற்றிய தகவல்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். எழுத்தாளர் மேமன்கவி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வரலாற்றை இவரைத்தவிர்த்துக் கூற முடியாது என்னுமளவுக்கு அச்சங்கச்செயற்பாடுகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டவர். எழுத்தாளர் மேமன்க்வி அவர்களின் மணிவிழா சிறப்புய் அமையவும், தொடர்ந்தும் இவரது இலக்கியச்சேவை சிறக்கவும் வாழ்த்துகிறோம்.




குடிவரவாளன் கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப்பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப்பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும் போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப்படுகொலையினைத்தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.
“தீவகம் தொட்டுத் துறைபனிச் சாரலும்
ஆயிரத்தித் தொழாயிரத்தித் தொண்ணூறுகளில் மல்லிகைப் பந்தல் வெளியீடாகக் கவிஞர் தில்லைச்சிவன் 'நான்’ என்றொரு கையடக்கப் புத்தகத்தை வெளியிடுகிறார். அந்தப் புத்தகம் என்னிடம் கனடாவில் இருக்கிறது. வேலணை, வங்களாவடிச் சந்தியை மையமாக வைத்து, ஒரு மூன்றுமைற் கற்கள் விட்டத்தில் ஒரு ஆரை கீறினால், அதற்குள் வரலாறாக இருக்கும் ஐம்பது புலவர்கள் என்ற பதிவைக் கொண்ட 'வேலணைப் புலவர்கள் வரலாறு" தான் அந்த நூல். அந்நூல் வெளிவந்த உடனேயே விற்றுத் தீர்ந்தது என்ற தகவலையும், கவிஞர் தில்லைச்சிவன் எனக்குத் தந்தார்.
(அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கன்பரா கலை இலக்கிய வட்டமுமATLAS Function04் இணைந்து 04-06-2016 அன்று நடத்திய விழாவில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனது கெளரவிப்பு நிகழ்வின்போது ஆற்றிய உரை)
தமிழ்ச் சிறுகதை என்னும் இலக்கியம் தோன்றி ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. செய்யுள் வடிவாக இருந்த தமிழ் இலக்கியம் மேலைத் தேயத்தவர் வருகையால் உரைநடை இலக்கியம் என்ற புதிய வடிவத்தையும் பெற்றுக் கொண்டது. அந்த வடிவம் இன்று மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. செய்யுள் இலக்கியம் படிப்பதற்குக் கடினமானது என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது. அதனால் சிறுகதை இன்று தமிழ் வாசகர்களிடையே வாசிப்புப் பழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஊடகங்களும் பேருதவியாக உள்ளன. நாளேடுகள், பருவ இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி என்பன சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை மக்களுக்கு விரைவாக அறிமுகம் செய்தன. பல சிறுகதை ஆக்கங்கள் உருவாகின. அவற்றை எழுதிய எழுத்தாளர்கள் தொகையும் பல்கிப் பெருகியது.
[எழுத்தாளர் ஆ.சி.கந்தராஜா 'ஆசிகந்தராஜாவின் முற்றம்' என்னும் தனது வலைப்பதிவில் பகிர்ந்துகொண்டிருந்த இக்கட்டுரையினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம் ஒரு பதிவுக்காக. - பதிவுகள் -]
- 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய அந்தனி ஜீவாவின் இக்கட்டுரைத் தொடர் ஈழத்தில் தினகரன் வாரமஞ்சரியில் 12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடராகும். 'பதிவுகள்' இணைய இதழிலும் மே 2003இலிருந்து அக்டோபர் 2003 வரை தொடராக மீள்பிரசுரம் செய்யப்பட்டது. தற்போது அ.ந.க.வின் நினைவு தினத்தினை ஒட்டி மீள்பிரசுரமாகின்றது. பெப்ருவரி 14, 1968 அவர் அமரரான நாள். - பதிவுகள் -
“பொதுசன நூலகங்களில் இருக்கின்ற கனமான புத்தகங்கள் எனக்கு வாழ்வின் பல மோசமான உண்மைகளை கற்று தந்திருக்கின்றன” – இது நாம் அதிகம் அறிந்திராத தனது இளவயதில் மரணித்த ஈழத்து எழுத்தாளர் முனியப்பதாசன் ஒரு தடவை கூறிய வாசகம். இதனை வாசித்ததிலிருந்து கனமான தடித்த புத்தகங்களை காணும்போதெல்லாம் இந்த வாசகம் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆயினும் அவையனைத்துமே வாழ்வின் மோசமான உண்மைகளைக் கற்று தருபனவாக இல்லாதிருந்த போதிலும் விதிவிலக்காக ஒரு சில புத்தகங்கள் சில வேளைகளில் அமைந்ததுண்டு. அவற்றில் அண்மையில் வெளிவந்த தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ எனும் மகா நாவலைக்குறிப்பிடலாம். அது கடந்த பல தசாப்த காலமாக நீடித்த ஈழப்போரின் பின்னணியில் மறைந்திருந்த பல மோசமான உண்மைகளையும் வரலாற்றையும் விபரித்துக் கூறிச்சென்றது. இப்போது சயந்தனின் ‘ஆதிரை’ எனும் 664 பக்ககங்கள் அடங்கிய கனமான தடித்த நாவலொன்று எமது பார்வைக்கு கிட்டியுள்ளது. இது வாழ்வு குறித்தும் வரலாறு குறித்தும் எத்தகைய உண்மைகளை வெளிக்கொணரப் போகின்றது என்ற ஆவலுடனேயே இந்நூலினில் நாம் உள் நுழைகிறோம்.

இலங்கையில் இலக்கியம் பேசி எழுதி வாழ்ந்த ஒருவரை அந்நியதேசத்தில் கொண்டு சென்றுவிட்டால், அது கண்ணைக்கட்டி காட்டில் விட்டதற்கு சமம் என்று சொல்வார்கள். இலங்கையில் அவ்வாறு இதழ்களிலும் வானொலியிலும் தனது பெயரை ஆழமாகப்பதித்திருந்த அருண். விஜயராணி கணவருடன் மத்திய கிழக்கு, இங்கிலாந்து என்று பயணித்து இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபொழுது இங்கும் கண்ணைக்கட்டிய வாழ்க்கைதானோ...? என யோசித்திருப்பார்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









