தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெற்ற நூல்களில் மிகவும் தொன்மையானது. இதன் காலம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இருப்பினும், இந்நூலுக்கு காலந்தோறும் உரை வெளிவந்த வண்ணம் உள்ளது. தொல்காப்பியச் சொல்லதிகாரத்தினை மொழியியல் அறிவு கொண்டு பார்க்கும் பொழுது சொல்லியல், பொருண்மையியல், தொடரியல், அகராதியியல் குறித்துப் பேசப்படுவதாக உரையாசிரியர்களும் அறிஞர்களும் கருதுகிறார்கள். இக்கருத்தின் அடிப்படையில் தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவரான தெய்வச்சிலையாரின் மொழியியல் சார்ந்த தொடரியல் கருத்துக்களை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
தொடரியல் நோக்கு
மொழியில் சொற்றொடர் அமையும் நெறிகளையும், முறைகளையும் பற்றி அறிவது தொடரியல் என்பதனை “Syntax is the study of the principles and processes by which sentence are constructed in particular languages” (Noam Chomsky, 2002 : 11) என்று நோம் சோம்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். கிளவியாக்கம் என்பது சொற்களை ஆக்கிக் கொள்வது. அதற்கு விளக்கமளிக்க வந்த தெய்வச்சிலையார், “அது கிளவிய தாக்கமென விரியும். அதற்குப் பொருள், சொல்லினது தொடர்ச்சி யென்றவாறு. சொற்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து பொருண்மேலாகு நிலைமையைக் கிளவியாக்க மென்றார்” (தெய்வச்சிலையார், 1984 : 7). என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஒரு சொல் தனிப்பொருள் தரும் தன்மையது. அச்சொல்லுடன் மற்றொரு சொல் சேர்ந்து தொடராகும் பொழுது பொருள் மாற்றம் ஏற்படுகின்றது. இதற்குத் தொடரியல் உறவு பெரும்பங்கு வகிக்கிறது. ஆகையால் தான் கிளவியது ஆக்கம் என விரியும் என்று தொடரியல் சார்ந்த நிலையில் தெய்வச்சிலையார் விளக்கமளித்துள்ளார். ..மேலும் வாசிக்க
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.