- நாவல் அனுபவம் சுப்ரபாதிமணியனின் உரை ராசிபுரம் பாவை இலக்கிய விருதுகள் விழாவில். பாவை இலக்கிய விருதுகள் இவ்வாண்டு நாவலுக்காக இமயம் , சுப்ரபாரதிமணியன்., மொழிபெயர்ப்புக்காக குறிஞ்சிவேலன் ஆய்வுக்காக ஸ்டாலின் ராஜாங்கம், கவிதைக்காக இசை, இள்ம் பிறை சிறுவர் இலக்கியத்திற்காக உதய சங்க, ர் முருகேஷ் சிறுகதைக்காக வேணுகோபால் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. சிறப்பு விருதுகளை ஆர். பாலகிருஷ்ணன், பவா செல்லத்துரை, திரைப்பட இயக்குனர் நிகிலேஷ் கிருஷ்ணா ஆகியோர் பெற்றனர். -
இலக்கிய விமர்சகர்கள், நண்பர்கள் என் நாவல்களை பற்றி சொல்கிறபோது இரட்டை நகரங்களில் கதை சொல்லி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இரட்டை நகரங்கள் என்றால் நான் 8 ஆண்டுகள் வசித்த ஹைதராபாத் மற்றும் நான் தற்போது வசித்து வரும் திருப்பூர் ஆகிய நகரங்கள்.
ஹைதராபாத் நகரத்தில் தமிழர்களின் கலாச்சார ரீதியான அந்நியமாதலும் மொழி சிறுபான்மையினர் என்ற வகையில் அவர்களுடைய அனுபவங்களும் மற்றும் மத கலவர சூழல் சாதாரண மக்களின் பலி கொண்டு அரசியல் அதிகாரம் ஆட்சி புரிவதை என் மூன்று ஹைதராபாத் நாவல்கள் மூலம் சொல்லி இருக்கிறேன்.