வரலாற்று ஆவணம்: எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மறைவைத் தெரிவிக்கும் தினகரன், வீரகேசரி பத்திரிகைச் செய்திகள்!

அறிஞர் அ.ந.கந்தசாமியின் (A.N.Kandasamy) டிரிபியூன் ஆங்கிலக் கட்டுரைகள்! - வ.ந.கிரிதரன் -
அறிஞர் அ.ந.கந்தசாமி என அவரது பன்முகப் புலமை காரணமாக அழைக்கப்பட்ட எழுத்தாளர் அ.ந.கந்தசாமி ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். அவரது மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் நானா ஐம்பதுகளின் ஆரம்பத்தில் சுதந்திரனில் தொடராக வெளியானது. பேராசிரியர் பேட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத - அராபிய உறவுகள்' பற்றிய கட்டுரையின் கருத்துகளைத் தமிழில் விளக்கும் வகையில் இன்ஸான் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
1965 - 1966 காலகட்டத்தில் இலங்கையிலிருந்து வெளியான டிரிபியூன் ஆங்கிலச் சஞ்சிகையில் அர்த்தசாஸ்த்திரம் பற்றிய, வள்ளுவர் பற்றிய கட்டுரைகளுடன் மேலும் சில கட்டுரைகளை அ.ந.கந்தசாமி எழுதியுள்ளார். அவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து வெளியான வேறு பல ஆங்கில பத்திரிகை, சஞ்சிகைகளில் அவரது ஆங்கிலக் கட்டுரைகள் வெளியாகியிருந்திருக்கக் கூடும். அவை பற்றிய விபரங்கள் மேலதிக ஆய்வுகள் மூலம் பெறப்பட வேண்டும்.
பதிப்பாளர் 'ஜீவநதி' பரணீதரனின் ஓர் அனுபவம்: ஈழத்து எழுத்தாளர்கள், புத்தகம் போட்டவர்கள், போட இருப்பவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய குறிப்பு! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளரும், ஜீவசஞ்சிகை ஆசிரியரும், பதிப்பாளருமான க.பரணீதரன் யாழ் நகரிலுள்ள ஒரு புகழ்பெற்ற புத்தகக் கடையில் தனக்கேற்பட்ட அனுபவத்தை விபரித்திருந்தார். மிகுந்த அதிர்ச்சியைத் தந்த அனுபவமாக அதனை வாசிக்கையில் நானும் உணர்ந்தேன். அவர் அங்கு எழுத்தாளர்களின் நூல்களை விற்பனைக்காகப் பத்துப் பிரதிகள் கொடுப்பது வழக்கம். பின்னர் ஒரு வருடம் கழித்துச் சென்று விற்கும் நூல்களின் பணத்தைப் பெறுவது வழக்கம். விற்காதவற்றை அங்கு தொடர்ந்து விற்க வைப்பது வழக்கம். வழக்கம் போல் இவ்விதம் அங்கு விற்பனைக்கு வைத்து அவர் , மூன்று வருடங்கள் பின்னர் அங்கு சென்றபோது அங்கு அவர் கொடுத்திருந்த நூல்களின் நிலைகண்டு அதிர்ச்சி அடைந்தார். நூல்கள் மீண்டும் பாவிக்கவே முடியாத அளவுக்கு அழுக்கான சூழலில் வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் அப்புத்தக்கடையில் விற்கப்படும் நூல்களுக்கான பணத்தைப் பெறுவதிலுள்ள சிரமங்களையும், அங்கு பணியாற்றுபவர்கள் நடந்துகொள்ளும் முறையினையும் கவலையுடன் விபரித்திருந்தார். தான் இவ்விதம் இப்பிரச்சினையை வெளிப்படுத்துவதற்குக் காரணம் அப்புத்தக்கடை நல்ல முறையில் தவறுகளைக் களைந்து இயங்க வேண்டும் என்பதற்காகவே என்றும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜீவநதி ஆசிரியர் பரணீதரனுக்கு ஒரு தாழ்வான வேண்டுகோள். இப்புத்தக்கடை தன்னைச் சீரமைத்துக்கொள்ளாதவரை, எதிர்காலத்தில், உங்கள் பதிப்பகம் மூலம் என் நூல்கள் வெளியிடும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், என் நூல்களை அப்புத்தக்கடைக்குக் கொடுக்காதீர்கள்.
பரணீதரன் தனது பதிவில் புத்தகக் கடையின் பெயரைக்குறிப்பிடவில்லை. ஆனால் வேம்படி சந்தியிலுள்ள கடை என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார். கூகுள் வரைப்படத்தின் 'வீதிப்பார்வை' மூலம் அச்சந்தியை அவதானித்தபோது அதிலிருந்த ஒரேயொரு புத்தக்கடை பூபாலசிங்கம் புத்தகக் கடை என்பதை அறிந்து உண்மையில் அதிர்ச்சியடைந்தேன். பரணீதரனின் அக்கடையின் படத்தைக்காட்டி அதுவா கடை என்று கேட்டபோது அவர் ஆமென்றார்.
பூபாலசிங்கம் புத்தக்கடைக்கு இலங்கைத் தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமானதோர் இடமுண்டு. குறிப்பாக எழுத்தாளர்கள் சந்திக்கும் இடமாக, நூல்கள் வாங்கும் இடமாக அது விளங்கியுள்ளது. குறிப்பாக இலங்கை முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நனவிடை தோய்தல்களில் அது நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அண்மையில் கனடாவில் மறைந்த எழுத்தாளர் இராஜகோபாலன் மாஸ்டர் கூட அங்குதான் பலரை எஸ்.பொ. , டொமினிக் ஜீவா என்று சந்தித்திருக்கின்றார். அது பற்றி டொமினிக் ஜீவா நனவிடை தோய்ந்திருக்கின்றார். வாசித்திருக்கின்றேன். இவ்விதமானதொரு முக்கியமான புத்தகக் கடையில் புத்தகங்கள் இவ்விதம் அழுக்கான சூழலில், மீள்பாவனைக்குரியதல்லாத நிலையில் பேணப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதொன்றல்ல. விற்பனையான நூல்களுக்கான பணத்தைப் பெறுவதில் இவ்வளவு சிரமங்களைப் பதிப்பாளர்கள் எதிர்கொள்வதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. பூபாலசிங்கம் பதிப்பகத்தார் இது விடயத்தில் கவனம் எடுப்பார்களென்று நிச்சயம் நம்புகின்றேன்.
காவிரி டெல்டா திருவாரூரும் பாலஸ்தீனமும்! தமுஎகச திருவாரூர் திரைப்பட விழா 2024! - சுப்ரபாரதிமணியன் -
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் ஒரு மாவட்ட தலைநகரில் உலகத் திரைப்பட விழாவை நடத்துகிறது இவ்வாண்டு கோவையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தாமதமாக திருவாரூரில் செப்டம்பர் மாதம் நடந்தது.. 15 நாடுகளைச் சேர்ந்த 22 படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் இந்தியப் படங்களும் இருந்தன
இந்த வருட உலகத் திரைப்பட விழாவில் பல்வேறு மையங்கள் இருந்தாலும் பாலஸ்தீனம் நாட்டுப் படங்கள் அதிகம் இடம் பெற்று கவனம் பெற்றன.. ஒவ்வொரு ஆண்டும் சிறப்புத் திரைப்படங்களாய் சிலவை கவனம் பெறும் . இந்தாண்டு பாலஸ்தீனப்படங்கள்.
இன்றைக்கு இஸ்ரேல் பாலஸ்தீனமும் சார்ந்து நடைபெறும் போர் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது இஸ்ரேல் பாலஸ்தீனமும் எல்லையில் அதன் நிலம் சார்ந்த எதிர்ப்பு வெளிப்பாடாகும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் குடியேற்றங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டதிலிருந்து இந்த மோதல் வெறிபிடித்துக் கொண்டிருக்கிறது. பல சமயங்களில் பல்வேறு நாடுகளும் இந்த மோதலில் கருத்து தெரிவிக்கின்றன. போரில் இறங்குகின்றன இஸ்ரேலை படைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் வெளியேற்றம் போன்றவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நீண்ட காலம் இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பில் பாலஸ்தீனம் இருந்து கொண்டிருக்கிறது. இது சார்ந்த மனித உரிமைகள் பல கேள்விகளை எழுப்புகிறது. அதற்கானத் தீர்வுகள் அவ்வப்போது பேசப்பட்டு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. பாலஸ்தீனத்தை தனிமைப்படுத்தும் முயற்சிகளும் அதன் பலவீனங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறன.
ரவி அல்லது கவிதைகள் இரண்டு!
1. அதன் பொருட்டான அறம்
குலவையிடும்
குளவிகளின்
பறத்தலுக்கு
காரணங்கள்
அநேகமிருந்தன.
அன்றைய
உணவு தேடலும்
அதன் பிறகான
கூடமைத்தலும்
கொஞ்சலில்
கூடி மகிழ்வதுமென.
கொத்த வேண்டுமென்ற
குறிப்புகளெவையும்
இல்லைதான்
கடுக்கிறதென
கதறும்
மனிதனின்
இடை புகுதலின்
இன்னல் வரை.
அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு - ஒரு கலைத் தரிசனம்! (பகுதி 3) - ஜோதிகுமார் -
VI“நடு இரவில் (?) விழிக்கும் இவன்! குறைமேகங்களுக்கு மத்தியிலிருந்து இறங்கிய மங்கிய நிலவு பூமி பரப்பின் மீதிருந்த பொருள்களின்; வெளிஉருவத்தை மட்டும் பிரித்துக்காட்டுவதாக இருந்தது… எதிரே ஒரு அரசமரம்… ஓர் அசைவும் காணப்படவில்லை சப்தமே போடாமல் ஃபோட்டோ சிந்தஸிஸ் நடந்துக்கொண்டிருந்தது” (பக்கம் 89-92). போட்டோ சிந்தஸிஸ் என்பது ஒளித்தொகுப்பு என விஞ்ஞானம் கூறுகின்றது. இதற்கு இத்தொகுப்பு நடக்க ஒளி ஓர் முக்கிய அவசியப்பொருள் எனக்கூறப்படுகின்றது.
மறுபுறத்தில், இஸ்லாமிய முரடர்களால், தாக்கப்பட்ட பின் சந்திரசேகரன் சைக்கிளைத்தள்ளிக்கொண்டு அநாதாரவாய் தனித்து நடந்து வருகின்றான். “அந்நேரத்தில் ஒரு மனித பிறவியையும் காண முடியவில்லை. சந்திரசேகரனைத் தடுத்து மூன்ற மாடுகள் குறுக்கே நின்றன”. சந்திரசேகரன் சைக்கிளைப் பிடித்துக்கொண்டே ஒரு மாட்டின் நெற்றியைச் சொறிந்துதர ஆரம்பித்தான். அந்தமாடு அப்படியே முகத்தை நீட்டி அதன் கழுத்தைக் சொறிவதற்கு காண்பித்தது. அந்த மாட்டைப் பார்த்து மற்ற மாடுகளும் சொறிய காத்து நின்றன. சந்திரசேகரனுக்கு விரல்கள் வலித்தன (பக்கம் -69).
இது ஜீவகாருண்யம்தான். ஆனால், இதே காருண்யத்தை வைத்துக்கொண்டுதான், காந்தி, டாடா பிர்லாவின் நெற்றியையும் கழுத்தையும் ஆறுதலாக சொறிந்து கொடுத்தார் என்பது பதிவு. (காந்தியின் பீனிக்ஸ் ஆசிரமத்துக்காக ரூபா 25000 டாடா வால் வழங்கப்பட்டது என்பதும், இந்தியாவில் காந்தி தனது சத்தியhகிரகத்தை நடாத்த ரூபாய் 125000 அந்நாட்களில் டாடா வால், காந்திக்கு வழங்கப்பட்டது என்பதும் பதிவு. இதே போன்று பிர்லாவும், நன்கொடைகள் மாத்திரமின்றி, 1930ல் காந்தியை வட்டமேசை மகாநாட்டில் பங்கேற்கும்படி வற்புறுத்தியதாகவும் (1930) தீவிரவாதிகளான ஸ்வராஜ் கட்சியினருக்குக் காந்தி தரக்கூடியதாய் இருந்த ஆதரவை கேள்விக்கு உட்படுத்தியதாகவும் (1931) இரண்டாம் சட்டமறுப்பு இயக்கத்துக்கு எதிராகக் காந்திக்கு யோசனை கூறியதாகவும் (1932) மாகாண தேர்தலில் காந்தியைப் பங்கேற்கும்படி வற்புறுத்தியதாகவும் (1935) பதிவுகள் உண்டு). 18வது அட்சக்கோட்டில் மிளிரும் காருண்யம் யாரை சொறிவதற்கு உபயோகப்படும் என்பது தெளிவு. “ஒருவேளை இந்தக் காருண்யத்தின், இந்தக் கொடைகளின், இந்த அரசியலின் மறுபக்கமே, ஜெயமோகன்-அசோகமித்திரன்-பாலகுமாரன் ஆகியோரின் எழுத்துக்களின் தாண்டவமாடும் அகோரங்களான, மூத்திரவாடை அல்லது எச்சில் அல்லது அழுகல்கள் அல்லது அடக்குமுறைகள் – என்பதற்கான பின்புலமும் இவற்றாலேயே தோற்றவிக்கப்படுகிறது என்ற எண்ணப்பாடுகளும் இங்கே தோன்றாமல் இல்லை.”
அமேசன் - கிண்டில் பதிப்பாக வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' & 'என்னை ஆட்கொண்ட மகாகவி'
வ.ந.கிரிதரனின் 'என்னை ஆட்கொண்ட மகாகவி'
எனது பாரதியார் பற்றிய கட்டுரைத் தொகுதி 'என்னை ஆட்கொண்ட மகாகவி' தற்போது அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளியாகியுள்ளது - https://www.amazon.com/dp/B0DNRLX984
நூலிலுள்ள கட்டுரைகள் வருமாறு:
'1. மகாகவி பாரதியார் நினைவாக. 4
2, பாரதி ஒரு மார்க்ஸியவாதியா? 6
3. பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு! 12
4. பாரதியும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும் 15
5. பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி.... 18
6. எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் 'தாய்வீடு'க் கட்டுரையான ‘வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் நூலை முன்வைத்துச் சில குறிப்புகள்’ பற்றி...... 22
7. எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் எதிர்வினையும் அதற்கான என் பதிலும்... 28
8. என்னை ஆட்கொண்ட மகாகவி! 31
9. பாரதியை நினைவு கூர்வோம்! 33
10.பாரதியார் நினைவாக: பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி' மழைக்கவிதை!
அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு - ஒரு கலைத் தரிசனம்! (பகுதி 2) - ஜோதிகுமார் -
IIIஇன முறுகலை நாவல் கையாளும் முறைமை
பாரதி முதல் கார்க்கி வரை இனமுறுகலின் பாதிப்புக்களை ஆழ உணர்ந்திருந்தனர். பாரதி அல்லா அல்லா என்ற பாடலை (1920) எழுத நேர்ந்ததின் பின்னணி அன்றைய இந்தியாவின் யதார்த்தமாக இருக்கலாம்.
ஆங்கில ஆட்சியில், அவர்களது மறைகரத்தின், செயற்பாடுகள் அச்சம்தரும் விளைவுகளை அன்றைய இந்தியாவில் ஏற்படுத்தின.
1915ல் ரஷ்யப் புரட்சி சூழ்கொண்டு இயங்கியப்போது, யூதர்களுக்கு எதிரான இனவாத அலையைக் களமிறக்கி அதற்கூடு புரட்சிகர அலைகளைத் திசைதிருப்பிவிடலாம் என்னும் நப்பாசை ஆதிக்கச் சக்தியினரிடம் காணப்பட்டது. ஆக இனவாதம் என்பது ஆதிக்கச் சக்திகள் கையாளக்கூடிய பிரதானமான ஆயுதங்களில் ஒன்றாகக் காலம் காலமாக இருந்துள்ளது. இது மக்களைத் தூண்டி, வெறியர்களாக மாற்றி, எச்சில் வடிய ஒருவரை ஒருவர் கடித்து குதறித்தள்ளும் நிகழ்ச்சி நிரல்களுக்கு இட்டுச்செல்கின்றது.
கார்க்கியின் இறுதி நாவலான, “கிளிம்மின் வரலாறு” என்ற பிரமாண்டமான படைப்பில் இவ் இனமுரண்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட பக்கங்கள் ஏராளம்.
இதே போன்று இந்தியாவில் இனவாத ஆயுதமானது ஆதிக்கச் சக்திகளால் மிக நன்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உருவாக்கக்கூடிய பாதகங்களைப் பாரதி போன்ற கலைஞர்கள் மிக நுணுக்கமாக உள்வாங்கி இருந்தனர் என்பதனையே அவர்களது படைப்புகள் காட்டுவதாய் உள்ளன.
ஆனால், 1947ல் ஜின்னா-காந்தி தலைமையில் இந்தியா-பாகிஸ்தான் என இந்தியா பிரிப்பட்டபோது பத்து லட்சம் மக்கள் கோரமாய்க் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட பத்து இருபது லட்சம் மக்கள் நிரந்தரமாய் அகதிகளாயினர். இப்பிரளயம் விளைவித்த நன்மைகளை ஆதிக்கச் சக்தியினர் வாய்வுறிஞ்சிட குடித்தப்படி இருக்கின்றனர், இன்றுவரை.
அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு - ஒரு கலைத் தரிசனம்! (பகுதி 1) - ஜோதிகுமார் -
கிட்டத்தட்ட தனது 46வது வயதில் அசோகமித்திரன், இந்நாவலை எழுதியுள்ளார் (1977). இந்நாவலானது, வண்ணதாசன் முதல் பல்வேறு இலக்கிய கர்த்தாக்களாலாலும், விதந்துரைக்கப்பட்டு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்நாவல் பொறுத்து வண்ணதாசன் கூறுவார்: ‘இப்போது நினைத்தாலும் இதனை அசோகமித்திரனால் எழுதமுடியாது’.
நாவல் முகிழ்த்த காலப்பகுதி
இந்தியா சுதந்திரமடைந்து, ஆங்கிலேய ஆசிர்வாதங்களுடனும், பாகிஸ்தானின் ரகசிய உறவுகளுடனும் ஆட்சிப்புரிந்துவரும் நிசாம் மன்னருக்கு எதிராக, இந்திய துருப்புகள் ஐதராபாத்துக்குள் நுழைவது வரையிலான காலப்பகுதியில், மக்கள் அனுபவிக்கும் சிக்கல்களைத் தனது பார்வையில், பரிசீலிக்கும் விதமாக, இந்நாவலை அசோகமித்திரன் கட்டமைத்துள்ளார். இதன்போது, இரண்டாம் உலகப்போர் நடக்கின்றது என்பதும், அதன் தாக்கமானது உலகம் முழுவதும் அனுபவிக்கப்படுகின்றது என்பதும் இணைந்த விடயம்தான் - இவையும், நாவலில் இரண்டொரு வரிகளில் வந்துபோகின்றன.
ஐதரபாத்தின் முக்கியத்துவம்
நிசாம் மன்னரின் ஆட்சி, பாகிஸ்தானின் ஆட்சியைப்போலவே ஆங்கிலேய பின்னணியால் ஆசிர்வதிக்கப்படுகிறது. இதன்போது நாவலின் கதாநாயகனான, சந்திரசேகரின் தந்தையும் ஒரு வெள்ளைக் குமாஸ்தாவாக ரயில்வே சேவையில் பணிபுரிகின்றார். ஆங்கிலேயரைப் பொருத்தமட்டில் அக்குமாஸ்தா, பறங்கியராக இருந்தால் என்ன, தமிழராக இருந்தால் என்ன, இஸ்லாமியராக இருந்தால் என்ன - லாபத்தை ஈட்டித்தந்தால் சரி. ஆனால், இக்காலப்பகுதியிலேதான் ஒரு மத்தியதர வர்க்கத்தினரின் எழுச்சியும் இந்தியாவில் கிரமமாக நடந்தேறுகின்றது என்பதும் இதன் வளர்ச்சியும் செயற்பாடுகளும் இந்தியாவைச் சுதந்திரம்வரை இட்டுச்செல்கின்றன (ஏனைய சக்திகளுடன்) என்பதும் வேறு கதை. ஆனால், நாவல் முன்வைக்கும் கதையானது வித்தியாசமானது. இக்காலப்பகுதியில் இவ்விடயங்களின் மத்தியில், இங்கே வாழக்கூடிய ஒரு வித்தியாசமான இளைஞனை, இது எவ்வாறு பாதிக்கிறது என்பதுதான் அது. அவனில் எத்தகைய விளைவினை இது உண்டு பண்ணுகிறது என்பதுதான் கதையாகின்றது.
வரலாறு காடுகளை பூக்க வைக்கும்! பாடா அஞ்சலி! - வ.ஐ.ச.ஜெயபாலன் -
இலங்கைத் தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுதரீதியில் பரிணாமமடைந்தபோது பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்த போராளிகள், பொதுமக்கள், தமிழ் அரசியல்வாதிகள் எனப்பலர் தம் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரையும் நினைவு கூர்வோம். இது பற்றிய தனது கவிதையை முகநூலில் பகிர்ந்துகொண்ட கவிஞர் வ.ஐ,ச,ஜெயபாலன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"எங்கள் விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த அனைத்து அணிகளையும் சேர்ந்த ஈழத் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ், மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த மாவீரர்களது நினைவாக, போர்க்களத்தில் வீழ்ந்த விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த அத்தனை மாவீரர்களையும் என் மாகவிதைகளால் அஞ்சலிக்கிறேன்." - கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் -
அமைப்புகளின் போராளிகளுடன் யுத்தக்காலகட்டத்தில் பலியான பொதுமக்கள், உட்பகையால் மடிந்த போராளிகள், பலியான மனித உரிமைப்போராளிகள், எழுத்தாளர்கள், சமூக, அரசியற் செயற்பாட்டாளர்கள், தமிழ் அரசியல்வாதிகள், பல்துறை அறிஞர்கள் அனைவரையும் நினைவு கூர்வது அவசியம். இவர்கள் எல்லோரும் போராட்டம் காரணமாகப் பலியானவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. போராட்டம் மக்களுக்கானது என்பதை நினைவில் வைப்போம்.
.
வரலாறு காடுகளை பூக்க வைக்கும்! பாடா அஞ்சலி! - வ.ஐ.ச.ஜெயபாலன் -
.உதிர்கிற காட்டில்
எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்?
.
சுனாமி எச்சரிக்கை கேட்டு
மலைக் காடுகளால் இறங்கி
கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின்
கவிஞன் நான்.
பிணக்காடான இந்த மணல் வெளியில்
எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ
யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட.
.
வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ
ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது.
எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட
எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத...
கவிதை: நான் நானாக.. - வ.ந.கிரிதரன் -
எல்லைகளற்று பரந்திருக்கும் விரிவெளியில்
அகதிமேகங்கள் அலைகின்றன.
அலைச்சல் தாளாமல் அவை
அழுதுபொழிகின்றன.
இருப்பைத் தப்ப வைப்பதற்காய்ப்
புள்ளொன்று சிறகடிக்கின்றது.
அதனை விரைவை மீறித்
தொடர்கிறது பெரும்புள்.
பகல் இப்படியென்றால்...
இரவு வானை நோக்குகின்றேன்.
தொலைவில்
ஒளியாண்டுத் தொலைவுகளில்
மலர்ந்து உதிர்ந்து விட்ட
நாகரிகங்களின் பெருமூச்சுகளை
தனிமைகளில் பயணிக்கும் ஒளிச்சுடர்களில்
உணர்கின்றேன்.
இன்று எனக்கு என்ன நடந்தது?
எப்பொழுதும் இருப்பில்
அர்த்தம் கண்டு மகிழ்பவன் நான்.
இன்பம் கண்டு உவகையில் ஊறுபவன் நான்.
இன்று எனக்கு என்ன நடந்தது?
'இன்று உனக்கு என்ன நடந்தது?'
அதுதான் தெரியவில்லையடி கண்ணம்மா
என்றேன்.
வழக்கமான நான் அல்லன்
இன்றுள்ள நான் என்பது மட்டும் புரிகிறது.
இலங்கையின் ஒற்றையாட்சியும், தமிழ் அரசியல்வாதிகளும் , தமிழ்த்தேசியமும் பற்றி... - நந்திவர்மப்பல்லவன் -
ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க 2021.05.21 அன்று இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவின் குருநாகல் மாவட்ட மாநாட்டில் நிகழ்த்திய உரை. இனவாதம், மதவாதத்துக்கெதிராக அவர் தெரிவித்திருந்த கருத்துகள் என் கவனத்தை ஈர்த்தன. இவ்விதமாகத் தேசிய மக்கள் சக்தி கடந்த ஐந்து வருடங்களாகத் (தேசிய மக்கள் சக்தி 2019இல் ஆரம்பிக்கப்பட்டது) தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாட்டு அரசியலைப்பற்றி விமர்சித்து வந்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்டு நாட்டு மக்கள் ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் பேராதவரவு அளித்திருக்கின்றோர்கள். ஆனால் இதுவரையில் எம் மக்கள் மத்தியில் எம் அரசியல் பற்றி எம் அரசியல்வாதிகள் எவரும் சுயவிமர்சனம் செய்யவில்லை. தொடர்ந்தும் எதற்கெடுத்தாலும் ஜேவிபியைப் பற்றி எமக்குத் தெரியும் என்பார்கள். தமிழ்த்தேசியம் தேசியம் என்று கூச்சலிடுவார்கள்.
முதலில் தமிழ்த்தேசியம் என்று கூறி வாக்குகள் கேட்டுவரும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களைத் தம் அரசியல்நலன்களுக்காக ஏமாற்றி வருகின்றார்கள். தமிழ்த் தேசியம் என்றால் தமிழ்த்தேசத்துக்கான உரிமை பற்றியது. தமிழீழ விடுதலைப்புலிகள் தனிநாட்டுக்காகப் போராடினார்கள்.இறுதிவரை போராடி மடிந்தார்கள். அப்போராட்டம் தமிழ்த்தேசியப் போராட்டம். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்த்தேசியம் பேசுவது ஏமாற்று வேலை. தமிழர்கள் பலருக்குத் தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்று தெரியவில்லை. தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றையாட்சி முறையைக்கொண்டுள்ள இலங்கையின் அரசியல் அமைப்பை ஏற்பதாகச் சபதம் எடுத்துக்கொண்டே பதவியை ஏற்கின்றார்கள். அதனால் வரும் பயன்களை அனுபவிக்கின்றார்கள். இவர்களால் ஒருபோதும் தனிநாடு கோரிக்கையை முன் வைக்க முடியாது. இவர்கள் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டவர்கள். பிரிவினை கேட்பது தேசத்துரோகம்.
தமிழ்க்கட்சிகளுக்கு மத்தியில் தொகுதிப்பங்கீட்டுடன் கூடிய கூட்டணியொன்றின் அவசியம்! - நந்திவர்மப்பல்லவன் -
இலங்கைத் தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கை ஏற்படும் வரையில் தமிழர்கள் மத்தியில் தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ், ஏனைய தேசியக் கட்சிகள் எனப் பல கட்சிகள் தேர்தல்களைச் சந்தித்து வந்தன. தனிநாட்டுக் கோரிக்கையடுத்து தமிழ்கட்சிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஒன்றுபட்டுத் தேர்தல்களைச் சந்தித்து வந்தன. தற்போது மீண்டும் தனித்தனிக் கட்சிகளாகத் தேர்தல்களைச் சந்தித்து வருகின்றன. இது தவிர்க்க முடியாத நிகழ்வு. நாட்டில் மீண்டுமொரு தமிழர்களின் இருப்பு கேள்விக்குரியதாக மாறினால் ஒழிய இந்நிலை மாறப்போவதில்லை.
அதே சமயம் தமிழ்க் கட்சிகள் பலவும் தம் தனித்துவத்தை இழக்காமல், தம் வாக்கு வங்கிகளுக்கேற்பத் தொகுதிகளைப் பிரித்து கூட்டணி வைத்துக்கொண்டால் (தமிழகத்தில் கட்சிகள் செய்வதைப்போல்) நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பெரு வெற்றி அடையும் சாத்தியமுண்டு.
இவ்விதம் பல கட்சிகள் இருப்பதை நான் எதிர்மறையாகப் பார்க்கவில்லை. ஜனநாயகச் சூழலில் இதனை ஆரோக்கியமாகவே பார்க்கின்றேன். எல்லாக் கட்சிகளுக்கும் மக்கள் மத்தியில் தம் செயற்பாடுகளை, நோக்கங்களைக் கூறுவதற்குப் பூரண உரிமையும், வசதிகளும் உள்ளன. இவற்றைப்பயன்படுத்தி மக்களைத் தம் பக்கம் திரும்ப வைப்பதில்தான் அவற்றின் திறமை தங்கியுள்ளது.
'கரையில் மோதும் நினைவலைகள்' - தர்மினி -
. வெளியீடு மகிழ் பதிப்பகம்( கிளிநொச்சி) டிசம்பர் 2023 -தமிழ்நாட்டில் பயணம் செய்யும்போது ஏதாவது ஒரு சொல்லில் கண்டுபிடித்து விடுவார்கள். 'நீங்க சிலோனா?இலங்கையா? ஈழமா?' என்று கேட்டு அடுத்துக் கேட்பது 'நாட்டு நிலமைகள் எப்படியிருக்கு?' உரையாடல் தொடரும். பொது மக்கள் கவலையோடும் அக்கறையோடும் விசாரிப்பது உண்மை. ஓலா ஓட்டுனர் ஒருவர் சொன்ன விடயம் மறக்க முடியாதது, படிக்கும் காலத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி பின் தன் படிப்பு இடையில் நின்று தன்னுடைய வாழ்வு எப்படிப் பாதிக்கப்பட்டதென்று கவலையாகப் பேசினார். இப்படிப் பலர் உண்மையாகவே உறவுகளின் துன்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று களமிறங்கியதும் உதவியதும் பதவிகள் இழந்ததும் அறிவோம்.
பக்கத்திலிருந்து ஆயுதப்பயிற்சி கொடுத்து இச்சிறு தீவில் விளையாடியவர்களின் அரசியலும் நோக்கங்களும் வேறு. இனவாதம் எப்போதும் அருவருப்பானது, பயங்கரமானது. ஈழத்தமிழர், ஈழம் என்று சாதாரண மக்கள் கொண்ட பற்று இந்த அரசியல் சூதுக்களை அறியாத நிலை. ஆனால், அப்போது பயிற்சிகளை எடுத்த இயக்கங்களின் மத்திய குழுக்களும் தலைவர்களும் இதையெல்லாம் அறிந்திருக்க வாய்ப்புண்டு. இல்லையென்றால் அந்த அரசியலும் தெரியாமல் தான் தனி நாடு கேட்டுப் போராடியிருக்கிறார்கள் என்பது அவலமானது. ரோவும் கியு பிராஞ்சும் இயக்க அலுவலகங்களுக்குப் போய் வந்து எல்லாவற்றையும் பார்த்து நடத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
இயக்கங்களில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் எழுதிய நுால்களும் கட்டுரைகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆயுதங்களை நம்பி நீதியைப் பெற முடியாது என்ற பாடத்தை அடுத்த சந்ததியினர் கற்றுக் கொள்ள இது உதவும்.
நடந்து முடிந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் பற்றி ... - நந்திவர்மப்பல்லவன்-
இலங்கையென்னும் நாட்டில் அனைத்து மக்களும் சரிக்கு சமமாக இணைந்து வாழ்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம். நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சிமுறையினை நீக்குவோம். புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம். அதுவரை மாகாண சபையினை இயங்க வைப்போம். அரசியல் கைதிகளை விடுவிப்போம். ' இவ்விதம் பல வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்குகளைக் கேட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு இன, மத, மொழி பேதமின்றி மக்கள் 2/3 அறுதிப் பெரும்பான்மையினை வழங்கியிருக்கின்றார்கள். பெரு வெற்றியை ஈட்டிய அவருக்கும் , ஏனையோருக்கும் வாழ்த்துகள். அநுர குமார திசநாயக்கவுக்கு இனித் தன் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்குத் தடைகள் எவையுமில்லை. அவர் அவற்றை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம்.
அவருக்குப் பெரு வெற்றியைக் கொடுத்த தமிழ் மக்கள் மட்டக்களப்பு மூலம் எச்சரிக்கையொன்றையும் கொடுத்திருக்கின்றார்கள். தன்னை நம்பி வாக்களித்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம். மகிந்த ராஜபக்சவுக்குக் கொடுக்காத வெற்றியை அநுர குமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கியுள்ளார்கள். இவ்வெற்றியைப் படிக்கல்லாக வைத்து நாட்டின் அனைத்துப் பிரச்னைகளையும் அவர் தீர்க்க வேண்டும். தீர்த்தால் வரலாற்றில் சரித்திர புருசனாக நிலைத்து நிற்பார். தவறின் வரலாறு மீண்டுமொரு தடவை சுழலும் பழைய இடத்தை நோக்கி.
தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளரும், தலித்தியச் சிந்தனையாளருமான பேராசிரியர் ராஜ் கெளதமன் மறைந்தார்!
பேராசிரியர் ராஜ் கெளதமன் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர். தலித்தியச் சிந்தனையாளர். நாவலாசிரியர். மொழிபெயர்ப்பாளர். இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரும் இழப்பு. தமிழ்ப் பண்பாடு, தலித் இலக்கியம் என்றால் நினைவுக்கு வரும் ஆளுமைகளில் ஒருவர். தனது எழுத்துகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர் அவர். அவரது மறைவால துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரில் பங்குகொள்கின்றோம்.
அவரை நினைவு கூரும் முகமாகப் பேராசிரியர் அ.ராமசாமி தனது வலைப்பதிவில் பதிவேற்றியிருந்த 'ராஜ்கௌதமனின் தலித்தியப்பங்களிப்புகள்' என்னும் கட்டுரையினை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.
காலமும் மனிதனும் - முனைவர் சி. இரகு, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, மெட்டாலா, நாமக்கல் மாவட்டம். -
'காலமே காலமே
நீ எப்படி இயங்குகின்றாய்?'
'நான் நானகவே
இருக்கின்றேன்.
யாருக்கும் பாரபட்சம்
பார்ப்பதில்லையே…! – அதனால்
எல்லோருக்கும்
என்னைப் பிடிக்கும்.'
'ஏன் எல்லோருக்கும்
உன்னைப் பிடிக்கும்?'
'அனைவருக்கும்
சமமான நேரத்தைதான்
கொடுக்கின்றேன்.
அன்போடு நடத்துகின்றேன்.
எல்லோருடைய வாழ்விலும்
யான் இன்றியமையாத
பங்களிப்பாக இருக்கின்றேன்.
கனடாவில் கார்த்திகைக் காந்தளும் பாப்பி மலரும் கனடாவில் கார்த்திகைக் காந்தளும் பாப்பி மலரும் - குரு அரவிந்தன் -
கனடாவில் நினைவுதினம் என்பது போர்க்காலத்தில் நாட்டுக்காக உயிர் தந்தவர்களையும், அக்காலத்தில் போர்முனையில் தம் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியவர்களையும் கௌரவிக்கும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி அனுசரிக்கப்படுகின்றது. இதில் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த மரணித்த போர் வீரர்களும் அடங்குவர். இந்த வாரம் முழுவதும் கனடியர்கள் சிகப்பு நிறத்திலான பாப்பி மலர்களை அணிவதன் மூலம் மரணித்தவர்களை நினைவேந்தல் மூலம் கௌரவிக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த மொய்னா மைக்கேல் என்பவர்தான் சிவப்பு பாப்பி மலரை 1918 ஆம் ஆண்டு இதற்காக அறிமுகம் செய்தார். 1921 ஆம் ஆண்டு கனடாவில் இந்த சிவப்பு பாப்பி மலர் இதற்காக அறிமுகமானது. கனடாவில் சில அமைப்புக்கள் வெள்ளை பாப்பி மலரை அறிமுகம் செய்தாலும் அது பெரிதாக மக்களிடையே பிரபலமடையவில்லை.
இதற்கு முன்பு தென்னாபிரிக்கப் போரின் நினைவு நாளாகக் கனடாவில் இந்தத் தினம் இருந்தது. முதலாம் உலப் போரின் போது சுமார் 61,000 கனடியர்கள் கொல்லப்பட்டனர். 1918 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் தான் போர்நிறுத்தத்திற்கான கையெழுத்திடப்பட்டது. இதன் காரணமாக 1919 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி கனடியர்கள் போர் நிறுத்தத் தினத்தை நினைவேந்தல் தினமாக நினைவு கூர்ந்தாலும், உத்தியோக பூர்வமான நினைவேந்தல் 1931 ஆம் ஆண்டுதான் இத்தினத்தில் இடம் பெற்றது. அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளும் வெவ்வேறு பெயர்களில் இந்தத் தினத்தையே கடைப்பிடிக்கின்றன.
இந்த நினைவேந்தல், இரண்டாம் உலகப் போர், கொரியப் போர் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர், அமைதி காக்கும் பணிகள் மற்றும் பிற சர்வதேச இராணுவ ஈடுபாடுகளின் போது போரில் இறந்தவர்களின் நினைவாகவும் இடம் பெறுகின்றது. இதுவரை சுமார் 118,000 க்கும் அதிகமானோர் வெளிநாட்டு மோதல்களில் இறந்துள்ளதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 2020-2021 ஆண்டு கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக பொது இடங்களில் நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெறவில்லை.
ஓராயம் அனுசரணையுடன் கிளிநொச்சியில் விதைப்பந்து வீசும் நிகழ்வு!
நாம் வாழும் இந்த அழகான, வளமான பூமிக்கோளை போர்களினால், தவறான அணுகுமுறைகளினால் சீரழித்து வருகின்றோம். இதனைப்பாதுகாப்பது மனித குலம், சக உயிர்கள் தொடர்ந்தும் வாழ்வதற்கு அவசியம். இதற்கு முதற் படி இயற்கை வளங்களைப் பேணுவதாகும். இங்குள்ள உயிரினங்கள் அனைத்தும் வாழ்வதற்கு உணவுச்சங்கிலி முறையாகப் பேணப்படுவது அவசியம். இதற்கு முதற்படி காடுகளைப் பேணுவதாகும். அபிவிருத்தி என்னும் பெயரில் காடுகளை அழித்துக்கொண்டே வருகின்றோம். இப்படியே நிலை நீடித்தால், உணவுச்சங்கிலி சீர்குலைந்தால், இந்த நீலவண்ணக் கோளில் உயிரினங்கள் வாழும் நிலையே இல்லாது போய்விடும். இதனால்தான் சூழலியலாளர்கள் சூழலைப்பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றார்கள்.
கம்பராமாயணத்தில் வாழ்த்து அணி! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
முன்னுரை’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று வாழ்த்து அணியாகும். தண்டியலங்காரத்தில் வாழ்த்து அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
வாழ்த்து அணி
இன்ன தன்மையுடையவர்களுக்கு இன்ன நன்மைகள் ஆகுக என உரைப்பது வாழ்த்து என்னும் அலங்காரம் ஆகும்.
"இன்னார்க்கு இன்னது இயைக என்றுதாம்
. முன்னியது கிளத்தல் வாழ்த்து என மொழிப"
(தண்டியலங்காரம் 60)
அயோத்தி மக்கள் இராமனை வாழ்த்துதல்
அயோத்தி நகரத்து மகளிர் அனைவரும் வலிமையுடைய ஆடவரும் கௌசல்யா தேவியும், தசரத சக்கரவர்த்தியும் போலவே இக்குமாரர்கள் வாழ்க என்று அவரவர் மனதுக்குப் பொருந்திய கடவுளை வணங்கி வேண்டுவார்கள். 60,000 வருடங்கள் பேரோடும், புகழோடும் நாட்டு மக்களின் நலத்தையேப் பெரிதாக எண்ணி தசரதன் ஆட்சி புரிந்தார். அவ்வாறு பன்நெடுங் காலம் மக்கள் போற்றும் மன்னனாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றனர்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா-2024 - குரு அரவிந்தன் -
* படங்களைத் தெளிவாகப் பார்க்க ஒரு தடவை அழுத்தவும்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘விருது விழா -2024’ஸ்காபரோ சிவிக்சென்றர் மண்டபத்தில் 26-10--2024 அன்று இணையத்தின் தலைவர் திரு. கனகசபை ரவீந்திரநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 31 ஆண்டுகளாக இந்தக் கனடிய மண்ணில் சிறப்பாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர்களாக திரு. தெ.சண்முகராசா, திரு. திருமாவளவன், திரு. வி.கந்தவனம், திரு.சின்னையா சிவநேசன், திரு.ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு.சிவபாலு தங்கராசா, திரு. சின்னையை சிவநேசன், திரு.சி. சிவநாயகமூர்த்தி, பேராசிரியர் திரு.இ. பாலசுந்தரம், திரு.குரு அரவிந்தன், திரு. அகணி சுரேஸ், திரு.க. ரவீந்திரநாதன் ஆகியோர் இதுவரை பணியாற்றியிருந்தனர்.
ஒருவர் வாழும்போதே அவரைக் கௌரவிக்கும் முகமாக அவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ்க்கலாச்சார வளர்ச்சிக்காக ஆற்றிய அரிய சேவைகளைப் பாராட்டி மட்டுமல்ல, புலம்பெயர்ந்த மண்ணிலும் தமிழ் மொழியை வளர்ப்பதில் ஆர்வத்தோடு இவர்கள் காட்டும் ஈடுபாட்டைப் பாராட்டியும், இந்த ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கும் நிகழ்வு கனடாவில் இடம் பெற்றிருந்தது. கனடாவில் ஒரு இணையத்தால் வழங்கப்படும் உயர் இலக்கிய விருதாக இந்த விருது மதிக்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது. இந்த விருதுகளைப் பெறுவதற்காகக் கனடா தமிழ் சமூகத்தில் இருந்து மதிப்புக்குரிய ஆறு பெரியோர்களை செயற்குழுவினர் இம்முறை தெரிவு செய்திருந்தார்கள்.
மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து கனடாப்பண், தமிழ்தாய் வாழ்த்து ஆகியன செல்வி சோலை இராஜ்குமார், சென்னி இராஜ்குமார், சோழன் இராஜ்குமார், டிலன் கென்றிக் பிளசிடஸ் ஆகியோரால் இசைக்கப்பெற்றன. அடுத்து அகவணக்கம் இடம் பெற்றது. இணையத்தின் துணைத்தலைவர் திரு. குரு அரவிந்தனின் வரவேற்புரையைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம் பெற்றது. இதில் திருமதி வனிதா குகேந்திரனின் கலைக்கோயில் மாணவிகளான செல்வி ஆதுரா கமலராஜன், செல்வி ஆனிரா கமலராஜன், செல்வி வஸ்மிகா ராகுலன் ஆகியோர் பங்கு பற்றினர். இதைத் தொடர்ந்து திரு. க. ரவீந்திரநாதனின் தலைவர் உரை இடம் பெற்றது. அடுத்து செல்வன் தருண் செல்வம், செல்வி வைஸ்ணவி சதானந்தபவன் ஆகியோரது இளையோர் உரையும், காப்பாளர் சிந்தனைப்பூக்கள் திரு. எஸ். பத்மநாதனின் உரையும் இடம் பெற்றன.
வ.ந.கிரிதரன் பாடல் - இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
இசை & குரல் - AI SUNO | ஓவியம் - AI
யு டியூப்பில் கேட்க
இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.
நேரம் கடந்து சிந்திப்பேன் எப்போதும்.
தூரம் பற்றிச் சிந்திப்பேன் அப்போது.
காலத்தின் அடுக்குகள் தாங்கி நிற்கும்
விண் பற்றிச் சிந்திப்பேன் தப்பாமல்.
இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.
இரவு வானில் சுடர்கள் ஒளிரும்.
உறக்கம் மறந்து கிறக்கம் கொள்வேன்.
இரவு வான் அறிவியல் புத்தகம்.
இவ்விதமே நான் எப்போதும் எண்ணுவேன்.
இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.
ஐ.நா. தொடக்கம் அறுகம்பே வரை : அய்னாவின் கட்டுரையை முன்னிறுத்தி! - ஜோதிகுமார் -
1இஸ்ரேலியர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த இருப்பதாக, இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்களில் ஒருவரைத்தவிர மற்ற அனைவரும் இலங்கையைச் சார்ந்தவர்கள் எனவும், ஒருவர் மாத்திரம் மாலைத்தீவு பிரஜை எனவும் கூறப்படுகின்றது. பிரதான நபர் இன்னும் கைதாகவில்லை எனக்கூறப்பட்டாலும் இன்றுவரை அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்துச் சரியான தகவல்களில்லை. தாக்குதல் தொடர்பிலான கைதுகளும், எழுந்த களேபரமும் கடந்த ஒக்டோபர் மாத இறுதியை ஒட்டி இடம்பெற்ற நிகழ்வுகளாகும்.
தமிழ்த் தீவிரவாதத்தைப் போலவே, இஸ்லாமியத் தீவிரவாதத்தின் தலையெடுப்பும் இலங்கைக்கு ஒன்றும் புதிதானதில்லை. ஆனால், முன்னைநாள் சட்டமா அதிபர் லிவேரா முதல் முன்னைநாள் புலனாய்வு இயக்குனர் ஷானி அபேயசேகர வரையில், எடுத்துரைக்கும் பிரதான விடயம் யாதெனில், இவற்றில் அரச பங்கேற்பு உண்டு என்பதும் இத்தீவிரவாதிகள் அரசால் தீன்போட்டு வளர்க்கப்பட்ட சக்திகளாவர் என்பதுமேயாகும். இவ்அடிப்படையில், இத்தீவிரவாதிகள் முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு, ஓர் ஆழமான அரசியல் சதி உண்டு என்பதும் - அதற்கூடு நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற (அல்லது மாற்றியமைக்க) செய்யப்படுகிறது, என்பதுமே மேலவர்களின் கூற்றில் முக்கியத்துவப்படும் செய்தியாகிறது.
இது உண்மையாக இருக்கலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டு, அதற்கூடு நாட்டில் இனவாதத்தைத் தலைவிரித்து ஆடச்செய்துவிட்டு, அதற்கூடு கோட்டாபாய ஆட்சிக்கு வந்தார் என, வாதிடுவோரும் உண்டு.
முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் மறைந்தார்!
முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் அவர்கள் மறைந்த தகவலினை இணைய வாயிலாக அறிந்தோம். இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர் மு.பொ. இவர் எழுத்தாளர் மு.தளையசிங்கத்தின் சகோதரர். யாழ் புங்குடுதீவைச் சேர்ந்தவர், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல். திறனாய்வு, சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் பன்முகப் பங்களிப்பாளர். இவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர் துயரிலும் நானும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். ஆழ்ந்த இரங்கல்.