என் எழுத்தார்வத்தை ஊக்குவித்தவர் ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கம்! - வ.ந.கிரிதரன் -

- இன்று பாரிஸில் நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் 'ஈழநாடு' எஸ்.கே. காசிலிங்கம் அவர்களின் அமுத விழாவினையொட்டி வெளியான மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை. -
என்னால் ஒருபோதுமே ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கத்தை மறக்க முடியாது. ஒரு வகையில் என் எழுத்துலக வாழ்க்கைக்குச் சுழி போட்டது ஈழநாடு மாணவர் மலர் என்றால், அதற்குக் காரணமானவர் அப்போது மாணவர் மலருக்குப் பொறுப்பாக் இருந்த 'காசி' அவர்கள். அண்மைக்காலம் வரையில் அவரைக் காசி என்னும் பெயரிலேயே அறிந்து வைத்திருந்தேன். எஸ்.கே.காசிலிங்கம்தான் அவர் என்பதை அறிந்திருக்கவில்லை.
ஈழநாடு மாணவர் மலர் காசி அவர்கள் எப்போதும் என் மனத்திலிருப்பார். காரணம் - நான் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் பத்திரிகை, சஞ்சிகைகளில் வரும் சிறுவர் பக்கங்களை விரும்பி வாசிப்பேன். கண்ணன், அமபுலிமாமா போன்ற சஞ்சிகைகள், பொன்மலர், பால்கன் காமிக்ஸ் சஞ்சிகைகள் இவையெல்லாம் அப்பருவத்தில் என் மனங்கவர்ந்த சஞ்சிகைகள். இவற்றுடன் கல்கி, ஆனந்தவிகடன், கலைமகள் போன்றவற்றின் தீபாவளி மலர்களின் சிறுவர் பக்கங்கள், கலகி சஞ்சிகையில் வாரா வாரம் வெளியான 'சிறுவர் விருந்து' பக்கங்கள், ராணி வாராந்தரியில் வெளியான் சிறுவர் பக்கங்கள், இவற்றுட்ன ஈழநாடு பத்திரிகையின் வாரமலரில் வெளியாகும் 'மாணவர் மலர்' பக்கம் ஆகியவற்றை விரும்பி வாசிப்பேன். கல்கி சிறுவர் விருந்தில் வெளியாகும் வாண்டுமாமாவின் எழுத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுபோல் ராணியின் சிறுவர் பக்கத்தில் வெளியான தொடர்கதையான 'பேசும் சிலை' இன்னும் நினைவிலுள்ளது.


ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸிலிருந்து பாரிஸ் ஈழநாடு, தமிழன் ஆகிய இரண்டு வாரப் பத்திரிகைகள் வெளியாகிக்கொண்டிருந்தன.
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவிலுள்ள தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருந்து அழைத்து வரப்பட்டு 200 ஆவது ஆண்டைக் கடந்து செல்லுகின்றது. அந்த வகையில் மலையக எழுச்சிக்காக பங்காற்றிய பல ஆளுமைகள் உள்ளன. அதில் கோ. நடேசய்யரின் பங்களிப்பு மகத்தானது. இத்தருணத்தில் கோ. நடேசய்யர் எழுதிய “இலங்கை இந்திய ஒப்பந்தம்” என்ற நூலை கலாநிதி பெருமாள் சரவணக்குமார் அவர்கள் மீளவும் பதிப்பித்து வெளியிடுவது இன்றைய இளைய தலைமுறையினர்களுக்கு மிகவும் அவசியமான தொன்றாகும்.


வள்ளுவர் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு சமுதாயச் சிற்பி. மக்கள் அனைவரும் ஒரே குலத்தவர் போன்று வாழவேண்டும் என்று விரும்பினார். அவர்கள் வாழ்ந்து சிறப்படைவதற்கு அறமே சிறந்த அடிப்படை என்று கண்டார். உலகம் பல சமுதாயங்களால் ஆனது என்றாலும் ஒவ்வொரு சமுதாயம் அச்சமுதாயத்தில் உள்ள எல்லாக் குடும்பங்களும் சமுதாயத்தின் நன்மைக்கு என அமைந்த அரசாங்கமும் அறத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்குமானால் உலகில் உள்ள எல்லா சமயங்களும் பிணக்கு இன்றி, பகையின்றி அன்போடும், நட்போடும் விளங்கும் எனவும் ஒரு குலம் போல் வாழும் எனவும் உணர்ந்தார். ஆகவே, ஒவ்வொரு நாடும் அதனைச் சார்ந்த குடும்பங்களும், சமுதாயமும், அரசாங்கமும் அறத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு குலத்தார் போல் வாழ்வதற்கு திட்டமிட்டார். அத்திட்டமே திருக்குறளாக விளங்குகிறது. மறுபிறப்புச் சிந்தனைகள் குறித்த செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.


’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று பாவிக அணியாகும். கம்பர் தன் காப்பியமான கம்பராமாயணத்தில் பாவிக அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை தண்டியலங்காரத்தின் வழி ஆராய்வோம்.


இங்கு எல்லாமே காலம் போடும் 

உலகமே நடு நடுங்கிய, அமெரிக்காவின், தேசிய செயலாளர், அந்தனி பிளிங்கன் (2021-2025), ரஷ்ய வெளிநாட்டமைச்சர் லெப்ரோவை, சந்திக்கக் கோரியபோது, லெப்ரோவ் அதனை மறுத்து விட்டார் என்ற செய்திகள் வெளிவந்திருந்தன. உலகத்தைத் திகில்கொள்ளச் செய்த விடயம் இது. கிட்டத்தட்ட முதல் தடவையாக, இவ்வித மறுப்பானது, இவ்விரு நாடுகளுக்குமிடையே எழுவதாய் இருந்தது. “காசா-உக்ரைன்” படுகொலைகளுக்குத் தலைமை பொறுப்பு வகித்தவர் அந்தனி பிளிங்கன் என நியுயோர்க் டைம்ஸ் கோடிட்டிருந்தது (18.01.2025).




'மயிலியப்புலக்குளம் பற்றிய நினைப்பு ' மனதில் வட்ட அலைகளை ஏற்படுத்த , ஏக்க மூச்சுக்கள் புகையாய் எழ அந்த செந்தாமரைக் கிராமம் ...சித்திரமாக விரிகிறது . அவ்விடத்து வெற்றிக்கழகம் , சட்ட கோப்புகளை வைத்துக் கொண்டு பல விசயங்களை சாதித்து வருகிறது , கோவில் வளவுக்குள் கலை நிகழ்ச்சிக்கான மேடை ஒன்றை அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக உப அரசாங்க முறையிலான சிரமதானம் நடைபெற்றது , அந்த குளத்தில் சிறிதளவு கனமண்ணை வெட்டிய போது , செவ்வேலும் வேல்முருகு , பரமானந்தம் ... அவன் என வகுப்பு தோழர்கள் பலருடன் கூடையில் மண்ணை ஒருத்தர் ,மாறி ஒருத்தரிடம் கொடுத்து குளத்து அணையில் கொட்டியது நினைவுக்கு வந்தது . அலுவலகர்கள் வந்து வெட்டியதை பார்வையிட்டு அதற்கான தேனீர்ச்செலவை கொடுப்பர் , அவ்வலுவலகத்தில் வேலை பார்க்கிற கிராமத்தைச் சேர்ந்த தவபாலண்ணரின் புத்தியில் உதித்த புத்திசாலித்தனம் . தேனீர் , வடை ...போன்றவற்றை ஊர்க்காரர்களே வீடுகளிலிருந்து கொண்டு வந்து வழங்கினர் . கிடைக்கிற பணத்துடன் வெளிநாட்டிலிருக்கிறவர்களும் அதற்கு நிதியளிக்க சம்மதித்திருந்தார்கள் . கூட்டு முயற்சி இல்லாமல் இப்படியான திட்டங்கள் வெற்றி பெற முடியாது . கிராமத்தின் தலையாய கால்பந்துக்குழுவும் அவர்களுடையது தான் .

ஏப்ரில் 26 சனிக்கிழமையன்று மறைந்தார் நாவலாசிரியர், திருப்பூரின் மூத்த எழுத்தாளர் தி. குழந்தைவேலு அவர்கள், அவருக்கு வயது 89. திருப்பூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். மின்சார தொழிலாளர்கள் சார்ந்த சிறந்த நாவல்களை உருவாக்கினார். புகழ்பெற்ற எழுத்தாளர் நீல பத்மநாபன் அவர்கள் எழுதிய ’மின் உலகம்” போல் பல பரிமாணங்கள் கொண்ட நாவல்கள் அவை. விளிம்புநிலைமக்களுடைய வாழ்க்கையை, சிரமங்களை பல சிறுகதைகளாக எழுதினார். சமீபத்தில் பல ஆண்டுகளாக ஒரு மாதிரி கோமோவில் இருந்தார. சுயநினைவு இல்லாமல் இருந்தார். அவருடைய படைப்புகள் எல்லாம் திரும்பத் திரும்ப மறுபடியும் மறுபிரசுரம் செய்யப்பட வேண்டும் என்று வாசகர்கள் விரும்பினார்கள்.

அச்சு இயந்திரம் கண்டுபிடிப்பு அறிவுலகத்தில் ஒரு பெரும் புரட்சியைச் செய்தது. கருத்துப் பரவலுக்கு நூல்கள் - பத்திரிகைகள் முதன்மைக் கருவிகளாயின. ஈழத்தி;ல் அமெரிக்க மிசனரிமார் முதன்முதலாக 1841 -ல் (07 - 01 - 1841) 'உதயதாரகை" (Morning Star) என்னும் பத்திரிகையை ஆரம்பித்தனர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இது வெளிவந்தது. இதன் ஆசிரியராகக் கரோல் விசுவநாதபிள்ளை விளங்கினார் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









