ஓவியர் ரவி (சோ.ராஜ்குமார்) பற்றி.. - ஊர்க்குருவி -

- ஓவியர் ரவி (சோ.ராஜ்குமார்) -
அண்மையில் எனது முகநூற் பதிவொன்றுக்கு எதிர்வினையாற்றிய தர்சினி யோகி என்பவர் தன் சகோதரர் ஓவியர் ரவி பற்றிச் சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார். ஓவியர் ரவி தற்போது மறைந்து விட்டார்.
இவர் சிரித்திரனிலும் சில ஓவியங்கள் வரைந்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர் இலங்கையில் திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கும் திரையரங்குகளுக்கு முன் வைப்பதற்காக ஓவியங்கள், 'கட் அவுட்'ட்டுகள் வரைந்திருப்பதாகவும் , அத்துடன் அவர் யாழ்ப்பாணத்தில் திரைப்படங்களுக்குக் 'கட் அவுட்'டுகள் வடிவமைத்ததில் புகழ்பெற்றிருந்த ஒவியர் மணியத்தைத் தன் குருவாகக் கருதியவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அவரது ஓவியங்கள் சிலவற்றையும் பகிர்ந்திருந்தார். அவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
இவரைப்பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அறிந்தவர்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.




83 கலவரத்தைத் தொடர்ந்து முதல் முதலாக அந்நிய நாடொன்றில், அமெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற நியூயோர்க் மாநகரில் அகதியாக அலைந்து கொண்டிருந்தபோது பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த பாடகர்கள் நால்வர். அதனால் அப்பாடகர்கள் பற்றிய நினைவுகள் எழும்போதெல்லாம் எனக்கு அமெரிக்க மண்ணில் அகதியாக அலைந்து திரிந்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்து விடும். லயனல் ரிச்சி, சிந்தி லோப்பர், பில்லி ஜோயெல், மைக்கல் ஜாக்சன் இவர்கள்தாம் அப்பாடகர்கள். மைக்கல் ஜாக்சனின் 'திரில்ல'ரும் வெளியாகியிருந்த காலம். கறுப்பினப் பதின்ம வயதுச் சிறுவர்கள் ஆங்காங்கே நடைபாதைகளில் கசட் பிளேயரில் மைக்கல் ஜான்சனின் பாடல்களை ஒலிக்கவிட்டு உடம்மை வளைத்து, முறுக்கி, வெட்டி 'பிரேக் டான்ஸ்' ஆடுவார்கள்.




இலக்கியமும். இலக்கணமும் இங்கிதமாய் கொண்டமொழி எங்கள் இன்தமிழ் மொழி.அந்த மொழி இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழைப் பெற்று நிற்கின்ற மொழி.வரலாறு படைத்த மொழி.பேச்சு மொழியா யும் எழுத்து மொழியாயும் ஏற்றமுற்று இருக்கும் மொழி.சங்கம் வளர்த்த மொழி. சன்மார்க்கம் சொன்ன மொழி.அறத்தை உரைத்த மொழி அன்பைப் பொழிந்த மொழி.என்றுமே இளமையாய் இருக்கும் மொழி. அதுதான் தீந்தமிழ் மொழி. சிறப்பான மொழி. மண்ணில் நல்லவண்ணம் வாழவைக்கும் மொழி.அந்த மொழி பட்டி தொட்டியெங்கும் பரவிட வைப்பதற்கு வாய்த்த ஒரு ஊடகம்தான் வெள்ளித்திரை, வெள்ளி த்திரையில் எங்கள் தமிழ் எழிலுடன் கொஞ்சி உலாவந்த பாங்கினை பார்ப்பது பரவசமாய் அமையும் அல்லவா ? பார்ப்போமா ! நீங்கள் ஆயத்தமா ? வாருங்கள் பார்ப்போம் ! திரையில் மலர்ந்த தீந்தமிழை !

முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆயினும் 1980 மட்டில் தான் எனக்கு அந்தப் படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. தெல்லிப்பழை துர்க்கா தியேட்டருக்கு அப்பொழுதுதான் முள்ளும் மலரும் வந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் மனதை ஒரு உலுப்பு உலுப்பி உறங்கவிடாமல் செய்த திரைப்படம் இது. இல்லாவிட்டால் துர்க்கா சினிமாத் தியேட்டரின் அருகேயிருந்த நூல்நிலையத்திற்கு ஒரு பைத்தியக்காரன் போல அடிக்கடி சென்றிருப்பேனா? நூல்நிலையத்தையும் தியேட்டரையும் பிரித்து நிற்கும் வேலிக்குள்ளால் பாய்ந்து வரும் பாடல்களையும், திரைக்கதையை நினைவூட்டும் இசைவெள்ளத்தையும் காது குடுத்துக் கேட்பதில் ஒரு அலாதி இன்பம் பிறக்கும். அடிக்கடி வேலிக்கருகே நின்றால் பைத்தியம் பிடித்துவிட்டதென ஆக்கள் நினைத்துவிடுவார்கள் என்பதற்காக இடையிடையே லைபிறறிக்குள் சென்று பேப்பரைப் புரட்டுவேன். ஆனால் மனம் திஜேட்டருக்குள் குதித்து நிற்கும். உறி அடிக்கும் காட்சி, விஞ் இயங்கும் காட்சி, உறக்கத்தில் இருக்கும் வள்ளிக்கு காளி மருதாணி இடும் காட்சி என இசைவெள்ளம் என்னை மீளவும் வெளியே கொண்டுவந்துவிடும். அது நடிகர்களின் தனித்தன்மை வாய்ந்த குரல், அவர்களின் தோற்றத்தை என் மனக்கண் முன் கொண்டுவந்துவிடும்.











முன்பு ஒரு காலத்தில் ஊருக்குள் நம்ப முடியாத செய்திகளை நம்ப வைத்ததில் தெருச்சித்திரங்களுக்கும் பங்கிருந்தது. பாடசாலை கழிவறைகள் தொடக்கம் தெரு மதகுகள் சிதிலமடைந்த மதிற் சுவர்கள் மயான மண்டபங்கள் போன்றன கரித்துண்டுகளாலும் பச்சிலைகளாலும் கிறுக்கர்களின் களமாகி கிறங்கடித்தன. அசுத்தமான இடங்கள் அவர்களுக்கு தடையாக இருந்ததுமில்லை. அசிங்கமான வார்த்தைகளுக்கு அவர்கள் தடை விதித்ததுமில்லை. வியப்பு – திகைப்பு – தவிப்பு – முறைப்பு – வெறுப்பு – கடுப்பு என பல உணர்வுகள் பாதிப்படைந்தவர்களிடம் மட்டுமல்ல அவற்றை பார்த்தவர்களிடமும் ஏற்பட வேண்டும் என்ற கற்பனையுடன் அந்த கிறுக்கர்கள் அநாமதேயமாகவே சிரித்தார்கள். - அந்த கிராமிய நினைவுகள் பலருக்கு இப்பொழுதும் மங்கலாக ஞாபக இடுக்குகளில் அப்பியிருக்கும்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









