- பராசக்தி திரைப்படத்தில் நடிகர் திலகம் -

இலக்கியமும்.  இலக்கணமும் இங்கிதமாய் கொண்டமொழி எங்கள் இன்தமிழ் மொழி.அந்த மொழி இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழைப் பெற்று நிற்கின்ற மொழி.வரலாறு படைத்த மொழி.பேச்சு மொழியா யும் எழுத்து மொழியாயும் ஏற்றமுற்று இருக்கும் மொழி.சங்கம் வளர்த்த  மொழி. சன்மார்க்கம் சொன்ன மொழி.அறத்தை உரைத்த மொழி அன்பைப் பொழிந்த மொழி.என்றுமே இளமையாய் இருக்கும் மொழி. அதுதான் தீந்தமிழ் மொழி. சிறப்பான மொழி. மண்ணில் நல்லவண்ணம் வாழவைக்கும் மொழி.அந்த மொழி பட்டி தொட்டியெங்கும் பரவிட வைப்பதற்கு வாய்த்த ஒரு ஊடகம்தான் வெள்ளித்திரை, வெள்ளி த்திரையில் எங்கள் தமிழ் எழிலுடன் கொஞ்சி உலாவந்த பாங்கினை பார்ப்பது பரவசமாய் அமையும் அல்லவா ? பார்ப்போமா ! நீங்கள் ஆயத்தமா ? வாருங்கள் பார்ப்போம் ! திரையில் மலர்ந்த தீந்தமிழை !

  திரையில் காட்சிகளைப் பார்ப்பதும் , காட்சிக்கு ஏற்ற வசனங்களைக் கேட்பதும் , அந்தக் காட்சிகளுக்கு ஏற்றதான பாடல்களை இசையுடன் கேட்பதும் எல்லோருக்குமே பிடித்தமாய் இருக்குமல்லவா ? இந்த விருப் பம்தான் திரைத்துறையை வளரும் நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது எனலாம்.

நாடகங்களில் வசனம் வந்தது,பாட்டும் வந்தது. ஆரம்பகாலங்களில் வந்த திரைப்படங்கள் நாடகப் பாணி யிலே வந்தன, காரணம் ஆரம்ப நிலை எனலாம். ஆனால் காலம் மாற கருத்துகளும் மாற காட்சிகளும் மாறின. மாறிய மாற்றங்களுக்கெல்லாம் திரையும் இடங் கொடுக்கவேண்டியது அவசியமாய் அமைந்தது.

1931 ஆம் ஆண்டு அக்டோபர் 31 என்னும் நாள் திரைத்துறையில் மிகவும் முக்கியத்துவம் மிக்க நாளாகும். அன்றுதான் " "காளிதாஸ் " என்னும் பெயரில் பேசும் திரைப்படம் வெளி வருகிறது.பேசும் படந்தான் தமிழைத் திரையில் உலவவிட்டது எனலாம். அந்தவகையில் திரையில் தமிழைப் பேசவைத்த பெருமை முதல்வந்த காளிதாசுக்கும் அதன் குழுவினருக்குமே உரித்தான தெனலாம்.

  மேடையில் பெரும்பாலும் புராண இதிகாசக் கதைகளே நாடகங்களாக நடிக்கப்பட்டன. ஆரம்ப காலங் களில் வெளிவந்த திரைப்படங்களும் நாடகப் பாணியில் புராண இதிகாசக் கதைகளையே திரையில் காட்டி நின்றன. அங்கு மேடை நாடகங்களில் கையாளப்பட்ட தமிழே ஆரம்ப திரைத்தமிழாய் மலர்ந்ததது என்பதை மனமிருத்தல் வேண்டும் . அது அக்காலப் போக்கு எனலாம். அப்படியான நேரத்தில் வசனங்க ளிலும் பாடல்களிலும் சமஸ்கிருதம் கலந்து தமிழ் திரையில் வந்தது. அதனை அப்போதைய திரைத் தமிழாகவே கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் இந்த நிலையில் மாற்றம் வராமல் இல்லை. அந்த மாற்றம்தான் நல்ல இலக்கியத் தமிழை , அழகான தமிழை , உணர்ச்சி கொப்பழிக்கும் தமிழை, உயிரோ ட்டமான தமிழை திரையில் கொண்டுவந்த கொடுத்த மாற்றம் எனலாம்.

  இந்தமாற்றத்துக்கு வித்தாக பல வசனகர்த்தாக்களும், பாடல் ஆசிரியர்களும்  வந்தமைந்தார்கள் என்பது தான் முக்கியமாகும். இலக்கியத் தமிழை இளங்கோவனும் சாரியும் திரையில் மலரச் செய்தார்கள். உத்தம புத்தரனில் சாரியின் தமிழ் திரையில் தீந்தமிழாய் மலர்ந்தது. கண்ணகியில் இளங்கோவன் தமிழ் தித்தி த்தது. அடுத்து அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி வந்தது. அண்ணாவின் தமிழ் எதுகை மோனையாய் தீந்தமிழை திரைக்கு எடுத்து வந்தது. அடுக்குமொழி அண்ணாத்துரை என்றுதான் அவர் அழைக்கப்பட்டார். " சட்டம் ஓர் இருட்டறை ! அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு ! அந்த விளக்கு ஏழைகளுக்குக் கிடைப்ப தில்லை ! " இந்தவசனத்தை மறந்தவர்களும் இல்லை! மறக்கத் தான் முடியுமா ?  அவரின் இளவலாய் வந் தார் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் மலர்ந்த கலைஞர் அவர்கள் .கலைஞர் தீட்டிய வசனங்கள் இன்றளவும் பலரின் மனங்களில் சிம்மாசனமிட்டு இருக்கிறது எனலாம். கலைஞரின் வசனங்களை மனப்பாடம் செய்து பலரும் ஒப்புவித்து காட்டிப் பெருமைப்படுவதும் உண்டு. அந்த அளவுக்கு திரையில் தீந்தமிழை மலர்ந்திட வைக்கும் மாயம் கலைஞர் தமிழுக்கு இருந்திருக்கிறது என்பதை மறுத்து விட முடியாது.  திரைத்தமிழில் திருப்பமாய் பராசக்தியின் வசனங்கள் அமைந்தன.

" நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாகப் பாதிக்கப்பட்டேன் ! சுயநலம் என்பீர்கள் ! என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது ! ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் ! அதைப்போல ,

...... பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை ... என் பாதையில் ! படமெடுத்து ஆடும் பாம்புகளே நெழிந்திருக்கின்றன ! தென்றலைத் தீண்டியதும் இல்லை ... நான் ... ஆனால் தீயைத்தாண்டியிருக்கிறேன் !

தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான்

பிறக்க ஒரு நாடு ..... பிழைக்க ஒரு நாடு ! தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா !

காணவந்த தங்கையைக் கண்டேன் ! கண்ணற்ற ஓவியமாக ! கைம்பெண்ணாக ! தங்கையின் பெயரோ கல்யாணி ! மங்களகரமான பெயர் ....

ஆனால் .... கழுத்திலே மாங்கல்யம் இல்லை ! செழித்துவளர்ந்த குடும்பம் !

சிரழிந்துவிட்டது ! கையிலே பிள்ளை ! கண்களிலே கண்ணீர் !

.......... யார் குற்றம் ? விதியின் குற்றமா அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறுவளர்க்கும் வீணர்களின் குற்றமா ? "

இப்படி உணர்ச்சிப்பிளம்பாய் கலைஞரின் தீந்தமிழ் திரையில் வந்து மலர்ந்துபோய் இருந்தது. மறக்க முடியா வசனங்கள் அல்லாவா ?

இதேபோல் மனோகரா வந்தபொழுதும் கலைஞரின் தீந்தமிழ் திரையினை நிறைத்து நின்றது. கலைஞரின் பூம்புகார் வசனங்களும் திரையில் தமிழைக் கொட்டியது எனலாம். கலைஞர் காலம் திரையில் தமிழ் ஒலித்த காலம் எனலாம்.  கலைஞரின் மறக்கமுடியா தமிழை மனோகரா கொட்டியது.

" கட்டளையா இது ..... ? கரைகாண முடியாத ஆசை ... மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து .... கண்ணே ..முத்தே ..தமிழ்ப்பண்ணே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி .. தந்தால் ஆனகட்டிலிலே.... சந்தனத் தொட்டிலிலெ ...வீரனே ..! என் விழி நிறைந்தவனே ..! தீரர் வழிவந்தவனே ..... என்றெல்லாம் யாரைச் சீராட்டிப் பாராட்டி னீர்களோ ... அவனை அந்த மனோகரனை ...சபிநடுவே நிறுத்தி ... சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்களது தணியாத ஆசைக்கும் பெயர் கட்டளையா தந்தையே !

" கோமளவல்லி ... கோமேதகச்சிலை ..கூவும் குயில்... குதிக்கும் மான் ... என்றெல்லாம் உம்மால் புகழப்படும் இந்தக் கோணல் புத்திக்காரியின் கொள்ளிக் கண்களை ...கொடிய நாக்கை ... என் கூர்வாளுக்கு இரையாகத் தந்துவிட்டு .. அதை எதிர்த்தால் உம்மையும் ... உமக்குப் பக்கத் துணை வந்தால் அந்தப் பட்டளத்தையும் பிணமாக்கி விட்டு ..."

என்று கனல்பறக்கும் தீந்தமிழை கலைஞர் திரையில் கொட்டி நிற்பார்.அதனை சிவாஜிகணேசன் உயிராக்கி தமிழ் உள்ளமெலாம் உறைய வைப்பார்.

யார் கள்வன் ! என் கணவன் கள்வனா ?அவரைக் கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர்! நல்லான் வகுத்ததா நீதி ! இந்த வல்லான் வகுத்ததே நீதி ! இதுகோப்பேருந்தேவியின் சிலம்பு இல்லை! இது கோவலன் தேவியின் சிலம்பு ! நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே உனக்கு செங்கோல் எதற்கு ? மணிமுடி எதற்கு? வெண்கொற்றக் குடை எதற்கு? ( பூம்புகார் )

 கலைஞருடன் கைகோர்த்து கலையுலகில் வலம்வந்தவர் கவியரசர் கண்ணதாசன். நகரத்தாரிடமிருந்து முத்தையாவாக வந்தவர் கண்ணதாசனாய் கவி மன்னனாய் நாடறிய ஏடறிய உயர்ந்தார். அவரின் கைவண்ணத்தில் திரையில் வசனமாயும் பாடல்களாயும் தீந்தமிழ் செழித்து நின்றது.

“நான் சாதாரண குடியில் பிறந்தவன், பலமில்லாத மாடு, உழ முடியாத கலப்பை, அதிகாரம் இல்லாத பதவி, இவைகளை நாங்கள் விரும்புவதேயில்லை”.

“மக்களின் நிலையறியாதவன் நானா?, நீங்களா?. நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கி றவர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கின்றவன்.”

“என் உருவம் மாறி இருக்கிறது. என் உள்ளம் மாறவில்லை.” “அப்படி என்றால் பணக்காரர்களே இருக்க மாட்டார்கள்.” “தவறு, பணக்காரர்கள் இருப்பார்கள், ஏழைகள் இருக்க மாட்டார்கள்.” “என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு, நம்பிக்கெட்டவர்கள் இன்றுவரை இல்லை.”

மக்கள் திலகத்தின் நாடோடிமன்னனில் கவியரசரின் தமிழ் அருவியைப் பருகாதார் இருக்கவே முடியாது ! மக்கள் திலகம் வாழ்க்கையில் இவ்வசனங்கள் உரமாய் வரமாய் வந்தமைந்தது எனலாம்.

மக்கள் திலகத்தின் மதுரை வீரனில் திரையில் கவியரசரின் தீந்தமிழ் பொழிகிறது கேளுங்கள் !

'தேம்பி அழும் இந்தப் பச்சைப் பசுங்கிளியைப் பார்! நான்கு புறமும் வேடர் சூழ நடுவில் சிக்கிய மான்போல தவிக்கும் இந்த இல்லறச் செல்வியைப் பார்! மாலை இழந்து, மஞ்சள் அழிந்து, கூந்தல் அவிழ்ந்து, குங்குமம் கலைந்து, பச்சைப் பருவத்திலே பட்டுப்போன மரத்தைப் பார்! பார் மன்னா! நன்றாகப் பார்!'

'அன்பு தவழும் கணவன் முகத்தை ஆசையோடு பார்க்கவேண்டிய கண்கள். அதிலே ஆறாக ஓடும் கண்ணீர்! அத்தான்! அத்தான்!’ என்று பாசத்தோடு அழைக்கவேண்டிய உதடுகள்! அதிலை சோகத்தின் துடிதுடிப்பு! நீதியற்ற மன்னவனே! உன் ஒரு வார்த்தையிலே உயிரற்ற நடைப்பிணமாகி விட்ட இந்த உத்தமியைப் பார்! ஏன் அசையாமல் நிற்கிறாய்?'

‘வீடு தட்டி வந்த கள்வன் யார்?’ என்று கேட்க, ‘தட்டியவன் நானே!’ என்று, வெட்டி வீழ்த்திக் கொண்டான் கையை, பொற்கைப் பாண்டியன். குற்றமற்ற கோவலனைக் கொலை செய்தோம் என்பதை உணர்ந்த தும், சிங்காதனத்திலிருந்து வீழ்ந்து உயிர்விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். கன்றைக் கொன்றான் சோழமன்னன். கற்பு நிறைந்த மணிமேகலையைக் கெடுக்க முயன்றான் மகன் என்று தெரிந்ததும், ‘ஊரார் கொன்று விட்டார்களே! அவனை நானல்லவா கொன்றிருக்க வேண்டும்!’ என்று நீதி முரசு எழுப்பினான் பூம்புகார்ச் சோழன். ஏன்? ஆண்டி முதல் அரசர் வரை ஒரே நீதி வழங்கியதே மூவேந்தர் பரம்பரை! அந்தச் சிங்காசனத்திலே நீ! அந்தச் சிங்கனத்திலே நீ!'

மன்னிப்பு!

வானகமே! வையகமே! வளர்ந்து வரும் தாயகமே! ஆராய்ச்சி மணி கட்டிப் போர்க்களத்திலே சிரிக்கின்ற பொன் மதுரை மண்டலமே! மறையப்போகிறது ஒரு மாபெரும் ஜீவன்! மன்னிப்புக் கேட்கிறார் திருமலை மன்னர்! மாபாதகம் தீர்க்க மண்டியிடுகிறார் திருமலை மன்னர்! மன்னியுங்கள்! மன்னா போ! அவர் காலிலே விழு! புரண்டு அழு! கண்ணீரால் உன் களங்கத்தைக் கழுவு! போ! போ! போ

பள்ளிக்கூடமே போகாத ஒருவர் தீந்தமிழை திரையில் கொண்டுவருகிறார். கேட்டுத்தான் பாருங்களேன் !

கலைவாணி ! கருணாகரி ! கல்விக்கரசி ... சொல்லின் செல்வி ! கற்றவர் போற்றும் கலாதேவி ! வித்தை படித்தவர் வணங்கும் வேதவல்லி ! காவிய நாயகர்கள் பாராட்டும் கலை உலகில் நாயகியே ! நற் சான்றோ ர்க்கு அருள் புரியும் நாமகளே ! வெள்ளைத் தாமைரைப் பூவில் அமர்ந்து வீனை மீட்டிப் பண்பாடி விவேகத்தை வழங்கும் அருள்வடிவே வணக்கம் !

 திருவே ! திருவின் உருவே ! திருவை அளிக்கும் உலகிற்கு திருமகளே ! தினம் துதிக்கும் தொண்டர்க்கு திரவியத்தை அள்ளி வழங்கும் திருவருளே ! தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து .... திக்கெட்டும் செல்வச் சிறப்போடு செழிக்க வைக்கும் திருப்பெரும் வடிவே ! திருப்பாற்கடலில் தோன்றிய திவ்வியப் பொருளே ... நின் திருமலரடி தொழுகின்றேன் ..வணக்கம்

இப்படித் தீந்தமைழை திரையில் காட்டியவர் வேறு யாருமல்ல ... நவராத்திரியை, திருவருட்செல்வரை, திருவிளையாடலை, குலமகள் ராதையை எமக்களித்த ஏ,பி. நாகராஜன் அவர்கள்.

" அங்கம் புழுதிபட அறுவாளில் நெய் பூசி ...பங்கப்பட இரண்டு கால் பரப்பி ... சங்கதனை கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ ... என் கவிதையை ஆராய்ந்து சொல்லத்தக்கவன் "

" சங்கறுப்பது எங்கள் குலம் ...சங்கரனார்க்கு கேது குலம் ... சங்கை அரிந்துண்டு வாழ்வோம் ...அரனே உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை " தீந்தமிழ் சொட்டுகிறதல்லவா திரையில் !திரு விளையாடலில் வரும் இத்தமிழைப் பாடமாக்கிப் பாருங்கள் !

 " உன்னை ஒழிப்பத்ற்கென்றே உலகில் தோன்றியவன் ! வேலோடு வந்திருப்பவன் ! உன்னால் வேதனைப்படும் அமர்களை விடுவிக்கப் போகிறவன் ! வேலன் .. ! வேதற்கிற்கு சீலன் ! பார்வைக்குப் பாலன் ! பகைவர்க்குக் காலன் ! கந்தனென்பார்  கடம்பனென்பார் ! கார்த்திகேயனென்பார் ! சண்முகனென்பார் ! ஆறுமுகனென்பார் ! உன்னையும் வதைத்தபின் ...சூரனையும் வதைத்த சூரனென்பார் ! சொல்லுக்கும் பொருளுக்கும் முத்தமிழு க்கும் ...தமிழ் இனிமைக்கும் ...ஆயகலை அறுபத்து நான்கிற்கும் ..முன்னைப் பழமைக்கும் .. பின்னைப் புதுமைக்கும் ... தலைவன் அவன் ! அவனே வேலவன் ! அவனனுப்பிய தூதுவன் வீரபாகுத் தேவன் !

கேட்கக் கேட்க தமிழ் இன்பம் பெருகுதல்லவா ?

 பாடசாலை நாட்களில் பாடமாக்கி பேச்சுப் போட்டி ஒத்திகைக்கு நாங்கள் ஒப்புவித்த தீந்தமிழ்தான் இது .... இத்தமிழை உணர்ச்சி பொங்கிடப் பேசினால் தமிழ் ஆசிரியர் தலைகால் தெரியாமல் மகிழ்ச்சியில் மிதப்பார். கேட்டுத்தான் பாருங்களேன் .

" நீல வானிலே செந்நிறப் பிளம்பு ! அந்த வட்ட ஒளியின் பெயர் சூரியன் ! சுட்டெரிக்கும் செஞ்சுடர் அது ! அதுதான் நீ என் நெற்றியிலே இட்ட இந்த வட்டநிறமான இரத்தநிறப் பொட்டு ! பரமனுக்கு முக்கண் ! அது ... தேவையில்லை .. ஒரு வீரனுக்கு ..இந்த வெற்றி வடு ஒன்றே போதும் ! வாளை ஓட்ட அவர்கள் மீது வேலைப் பாய்ச்ச ! இதனால் விளைவது என்ன வெண்ரு கேள் ! வெண் மணல் நிலமெல்லாம் ... செக்கர் வானம் போல் .. செம்பவள மலைபோல் . செப்புத் தகடடித்த செப்பநிட்ட தரைபோல் ... மாணிக்க கரைகட்டி மடை திறந்த நெருப்பாற்றை இடையில் ஓடவிட்ட அழகுபோல் ...எதிரியின் இரத்தம் குபுகுபுவென பொங்கி யெழுந்து .. எங்கும் நிறைந்த பொருளாய் .. நம் ஏற்றமிகு செயலாய் .. களத்தில் நிறையப் போவதுதான் ..!  

"திறை, வரி, வட்டி. வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் கொடுப்பது வட்டி ? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனிவாழ் உழவருக்கு கஞ்சிக் கலையம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங்கெட்ட வனே! எதற்குக் கேட்கிறாய் திறை, யாரைக் கேட்கிறாய் வரி? போரடித்து நெற்குவிக்கும் மேழிநாட்டு உழ வர் கூட்டம், பரங்கியரின் உடலையும் போரடித்து, தலைகளை நேர்க்கதிர்களாய் குவித்துவிடும் ! " 

சக்தி கிருஷ்ணசுவாமியின் திரையில் வந்த தீந்தமிழ் எப்படி இருக்கிறது ? ஒரு முறை நீங்களும் பேசித்தான் பாருங்களேன் !

இடைக்காலத்தில் இடம் பெற்ற ஒரு திரைத்தீந்தமிழ்>

ஆண்களுடைய கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகித்தான் தீர வேண்டும் என விதி இருந்தால் அந்த விதியை ஒழுங்குபடுத்த வேண்டாமா?  மண்புழுக்களாக இருக்கும் பெண்களை பாதிக்கக் கூடிய மனுதர்மம், மனுநீதி, மனு சாஸ்திரம் இவைகளை திருத்தி எழுத வேண்டாமா?

அன்று தன் தந்தை செய்த அதே தவறை இன்று அவருடைய மகன் செய்கிறான். இது வம்ச பரம்பரை! வாழையடி வாழை! வீண் பழிக்கு ஆளான இந்தப் பாவப்பட்ட பெண்ணுக்கு நியாயம் வழங்குங்கள்! வஞ்சகம் அறியாத அவள் வயிற்றில் வளரும் அந்தப் பூந்தளிரைக் காப்பாற்றி, அதன் தந்தை இதோ இந்த ராஜாதான் என்று நீதி வழங்குங்கள்!  நீதி வழங்குங்கள்!’ ( விதி- ஆரூர்தாஸ் )

இலக்கிய பாங்கான வசனங்கள், இலட்சியப் பாங்கான வசனங்கள், அரசியல் பூசிய வசனங்கள், ஆன்மீ கம் தழுவிய வசனங்கள் , என்றெல்லாம் வனங்களை தீந்தமிழால் நிறைத்து திரைவாயிலாக வெளிக் கொணர்ந்தவர்கள் என்னும் வகையில் பல ஆளுமைகள் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். ஆனால் தீந்தமிழைத் திரையில் வசனமாய் தந்த காலம் சற்று தளர்வினை நாடிவிட்டதுபோல் தெரிகிறது. காரணம் காலத்தின் கோலமது ! இன்று திரையில் தமிழ் வருகிறது ! ஆனால் அது பேச்சுத்தமிழாய் வட்டாரத் தமி ழாய் வலம்வந்து அன்னியத்தையும் அரவணைத்து நிற்கிறது எனலாம்.

 வசனத்தின் வழியில் திரையில் தீந்தமிழ் தவழ்ந்ததுபோல் பாட ல்களின் வாயிலாகவும் திரையில் தமிழ் இசையுடன் கலந்து உள் ளங்களை நிறைத்தது. அது இன்னும் தொடர்கிறது என்று தான். சொல்ல வேண் டும்.

 பாபநாசம் சிவன் தொடக்கம் இக்கால பா.விஜய் வரை தீந்தமிழ் செப்பி நிற்கும் திரையிசைப் பாடல்க ளைத் தந்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் பங்களிப்பும் நல்ல தமிழை, இலக்கியத் தமிழை திரையில் இசை யின் மூலம் கொடுத்து யாவர்மனத்திலும் தமிழைப் பதியச் செய்ய வேண்டும் என்பதுதான் என்பதில் எள்ளளவும் ஐய்யம் இல்லை. திரையில் தமிழ் தந்த கவிஞர்களை அறிமுகம் செய்து அவர்களின் பங்களி ப்பைப் பற்றி எடுத்துச் சொல்லுவ தென்றால் அதற்கு பல மணி நேரங்கள், பல நாட்கள் எடுக்கும் என்பதால் - அந்தச் சமுத்திரத்தினுள் இருந்து சில முத்துக்களை பொறுக்கலாம் என்று எண்ணுகிறேன்.

மருதகாசியின் தென்றலைத் தொட்டுப் பார்ப்போம் -- இன்றும் மனதில் பதிந்து பாடினால் பரவசம் தரும் தீந்தமிழ் அல்லவா ?

-உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டிற்கென்றே தாளம் போடுதே

- சத்தியமே லட்சியமாய் கொள்ளடா

- ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை

- மணப்பாரை மாடு கட்டி

தஞ்சையின் மைந்தன் தஞ்சை ராமையாதாஸின் தீந்தமிழும் நெஞ்சில் நிற்கிறது

- பிருந்தாவனமும் நந்தக்குமாரனும்

- மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ  

எந்த முத்தை எடுப்பது ? எந்தமுத்தைப் பார்ப்பது என்பதுதான் சிக்கலான நிலை. என்றாலும் முயல்கிறேன்.

அச்சம் என்பது மடைமையடா ! மயக்கமா கலக்கமா ! எனத் தொடங்கியவர்

கண்ணதாசன் என்னும் பெரிய சமுத்திரம். அந்த சமுத்திரத்தில் மூழ்கினால் வெளியில் வரவே முடியாது. அத்தனை உயர் முத்துக்களும் அங்கேதான். மூழ்கி எடுத்த முத்துக்கள் உங்களுக்கு -

அந்தாதியாய் . 'வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' எனத் தொடங்கி 'பலே பாண்டியா' படத்திற்காக கண்ணதாசன் எழுதியிருக்கும் பாடலில் இடம்பெற்றிருக்கும் பின்வரும் வரிகள் அந்தாதி நலம் பொருந்தியவை:'

பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்!'

மூன்று முடிச்சு' படத்தில்

வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மிதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் தொடர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்
மலர்க்கணைகள் பாய்ந்துந்தால் மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும் தலையணைவகள்
தலையணையில் முகம்புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்..

என்ற முத்திரைப் பாடல் முழுக்க அந்தாதியில் அமைந்த அற்புதமான பாடல். பல அணிகளைக் கவியரசர் கையாண்டிருப்பார். அவையெல்லாம் முத்துக்கள்.

உவமை அணி :.'குடும்பத் தலைவன்' திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதிய அற்புதமான பாடல்:

திருமணமாம், திருமணமாம்! தெருவெங்கும் ஊர்வலமாம்!
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்!...

அவள் கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம்!
ஒரு கூடை நிறையப் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்!

மாலை சூடும் அந்த மணமகளின் பருவ அழகினை ஐந்து அருமையான உவமைகளை அடுக்கிக் கையாண்டு படம்பிடித்துக் காட்டுவார் கண்ணதாசன்:'

சேர நாட்டு யானைத் தந்தம்போல் இருப்பாளாம்! - நல்லசீரகச் சம்பா அரிசி போலசிரித் திருப்பாளாம்!...செம்பருத்திப் பூவைப் போலக் காற்றில் அசைந்திருப்பாளாம்!செம்புச் சிலை போல உருண்டு திரண்டிருப்பாளாம்! - நல்லசேலம் ஜில்லா மாம்பழம் போல்கனிந் திருப்பாளாம்!'

தற்குறிப்பேற்ற அணி

 'தாயைக் காத்த தனயன்' படத்திற்காகக் கண்ணதாசன் படைத்திருக்கும் பாடலின் தொடக்க வரிகள்..

.'மூடித்திறந்த இமையிரண்டும் 'பார் பார்!' என்றன!
முந்தானை காற்றில் ஆடி 'வா வா!' என்றது!'

இமை இரண்டும் மூடித் திறப்பது இயல்பு. இது காதலனைப் 'பார், பார்' என்பது போல் இருக்கின்றதாம். இதே போல் முந்தானை காற்றில் ஆடுவது என்பதும் இயல்பாக நிகழ்வதுதான். இது 'வா வா' என்று காதலியை நோக்கி அழைப்பது போல் உள்ளது எனக் கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி.  

முத்துக்கள் குவிகின்றன.......

"மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றுளவெல் லாமுறங்கும்
கண்ணுறங்கேன் எம்மிறைவர் காதலாற் பைங்கிளியே"

என்னும் வரிகளும், கம்பர் இயற்றிய

"நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்"

பாடலில் பயின்று வரும் வரிகள் -திரையில்
(படம்: மாலையிட்ட மங்கை).

"காட்டில் மரமுறங்கும் கழனியிலே நெல்லுறங்கும்
பாட்டில் பொருளுறங்கும் பாற்கடலில் மீனுறங்கும்
காதல் இருவருக்கும் கண்ணுறங்காது அதில்
காதலன் பிரிந்துவிட்டால் பெண்ணுறங்காது"

இனி, வேறொரு பாடலைப் பார்ப்போம்:

"இருந்தவளைப் போனவளை என்னை அவளைப்
பொருந்த வளைபறித்துப் போனான்--பெருந்தவளை
பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
மாத்தத்தன் வீதியினில் வந்து".  

தனிப்பாடல்திரட்டில் காணப்படும் கம்பரின் பாடல்.

கண்ணதாசன் புதிய பூமி என்ற திரைப்படத்தில்

"சின்னவளை முகம் சிவந்தவளை நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு;
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு"

என்ற பாடலில் வளை என்ற சொல் பலமுறை வருமாறு இயற்றியுள்ளார். நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெலாம் கனவலைகள்

இராமச்சந்திர கவிராயர் இயற்றிய கீழ்க்கண்ட பாடல்
மிகப் புகழ்பெற்றது:

"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான்  கற்பித் தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான்  இரட்சித் தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்
நோவத்தான்  ஐயோ! எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
புவியில்தான்  பண்ணி  னானே."

இந்தப் பாடலால் கவரப்பட்ட கவிஞர் கண்ணதாசன் பாவமன்னிப்பு என்ற படத்தில் " அத்தான், என்னத்தான், அவர் என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி" என்ற திரைப்படப் பாடலை இயற்றினார்.

இனி, திருக்குறளில் பயின்றுவரும் கீழ்க்கண்ட பாடல் எவ்வாறு கவிஞர்க்கு உதவியது என்பதைப் பார்ப்போம்:

"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்".(குறள்:1094).

இப்பாடலின் கருத்தை வாழ்க்கைப் படகு என்னும் திரைப்படத்தில்

"நேற்றுவரை நீயாரோ நான்  யாரோ?
இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ?
காணும்வரை நீ எங்கே நான் எங்கே?
கண்டவுடன் நீ அங்கே நான் இங்கே
உன்னைநான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே;
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே."

என்ற திரையிசைப் பாடலில் திருக்குறள் கருத்து பதியப் பட்டிருக்கும்.னவலைகள் தொடர்வதற்கு காமனவன் மலர்க்கணைகளமலர்க்கணைகள் பாkEய்ந்துவந்தால் மடியிரண்டும் பஞ்சணைகள்

கேள்விகளும் பதிலுமாய் சில முத்துக்கள்

கண்ணிலே நீர் எதற்கு?
காலமெல்லாம் அழுவதற்கு

நெஞ்சிலே நினைவெதெற்கு?
வஞ்சகரை மறப்பதற்கு

இன்பமெனும் மொழி எதற்கு?
செல்வத்தில் மிதப்பதற்கு

துன்பமெனும் சொல்லெதெற்கு?
உள்ளமென்ப துள்ளவர்க்கு

கையிலே வளைவெதெற்கு?
காதலியை அணைப்பதற்கு

காலிலே நடையெதெற்கு?
காதலித்துப் பிரிவதற்கு

பாசமென்ற சொல்லெதெற்கு?
பார்த்திருந்து துடிப்பதற்கு

ஆசை கொண்ட வாழ்வெதெற்கு?
அன்றாடம் சாவதற்கு

பூவிலே தேனெதெற்கு?
வண்டு வந்து சுவைப்பதற்கு

வண்டுக்குச் சிறகெதெற்கு?
உண்ட பின்பு பறப்பதற்குப

கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா

பாடல் வந்ததும் தாளம் வந்ததா
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
பாவம் வந்தது ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவம் வந்ததா
கண் திறந்ததும் காட்சி வந்ததா
காட்சி வந்ததும் கண் திறந்ததா
பருவம் வந்ததும் ஆசை வந்ததா
ஆசை வந்ததும் பருவம் வந்ததா

கவியரசர் திரையிசைத் தீந்தமிழ் தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும்.காலங்கருதி அந்த ஆழிக்குள் இருந்து மேலெழுகின்றேன்.

கவியரசர் பாட்டா வாலி பாட்டா என்று அடையாளம் காணா வகையில் கவித்துவத்தை திரையில் தீந்தமிழால் பதித்தவர் வாலிபக் கவிஞர் வாலி. அவரின் முத்துக்குவியல்களும் அழவில. தொட்டுப்பார்த்த முத்துக்களைத தந்திருக்கிறேன் .....சkகaகவியரசணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும்தலையணைகள்

அத்தைமடி மெத்தையடி ,
ஆடி விளையாடம்மா,
ஆடும்வரை ஆடிவிட்டு..,
அல்லிவிழி , மூடம்மா..,
அத்தைமடி மெத்தையடி....... ,காமுகம்புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்

மூன்றாம்பிறையில் தொட்டில்கட்டி..,
முல்லை மல்லிகை மெத்தையிட்டு..,
தேன்குயில்கூட்டம் பண்பாடும்..,
மான்குட்டிகேட்டு கண்மூடும்..,
இந்த , மான்குட்டிகேட்டு , கண்மூடும் ,பு

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான்
மலர்ந்தேன்
சுட்டால் பொன்
சிவக்கும்
சுடாமல் கண்
சிவந்தேன்துக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்..

பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்

பால் மனம் பால் இந்த மதிப்பால்
தந்த அழைப்பால் உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்

உந்தன் பிறப்பால் உள்ள வனப்பால்
வந்த மலைப்பால் கவி புனைந்தேன் (2)

அன்பின் விழிப்பால் வந்த விருப்பால் (2)
சொன்ன வியப்பால் மனம் குளிர்ந்தேன்

விழி சிவப்பால் வாய் வெளுப்பால் (2)
இடை இளைப்பால் நிலை புரிந்தேன்

இந்த தவிப்பால் மன கொதிப்பால் (2)
கண்ட களைப்பால் நடை தளர்ந்தேன்

முத்து சிரிப்பால் முல்லை விரிப்பால் (2)
மொழி இனிப்பால் என்னை இழந்தேன்

இந்த இணைப்பால் கொண்ட களிப்பால்
இந்த இணைப்பால் கொண்ட களிப்பால்
தொட்ட சிலிர்ப்பால் தன்னை மறந்தேன்

வைரமுத்து - திரையில் கால்பரப்பி இன்றும் தொடர்கிறார். இவரின் தீந்தமிழ் திரையினை வளமூட்டி , உரமூட்டி நிற்கிறது என்பதை மறுத்துவிட முடியாது.கவியரசர் வாலிக்குப் பின் திரையினைத் தமிழால் ஆளும் பேராளுமைதான் வைரமுத்து! தமிழ்த் திரைப்பாடல்களில் மிக நீளமான பாடலாக இவர் எழுதிய ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடல் கருதப்படுகிறது.

தானே உறங்கும் விழியைக் கேட்டேன் தலையைக் கோதும் விரலைக்கேட்டேன்
நிலவில் நனையும் சோலைக் கேட்டேன் நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன் கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன் எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன் பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்

* திரைப்பாடலில் அதிகமாக புதிய சொற்களைப் புகுத்திய பெருமைக்குரியவர். பொன்மாலை, அந்திமழை, தாவணி விசிறிகள், தீயின் தாகம், ஆனந்த தாகம், , அமுதகானம், பன்னீர் மேகம், ஒளிமகள், இளஞ்சிரிப்பு, பூக்களின் மாநாடு, , பொன் வானம், , சேலைப் பூக்கள், ஆசை நதி, பூவுக்குள் பூகம்பம், இதயம் கருகும் ஒரு வாசனை,

அடுக்குத் தொடரும் இரட்டைக் கிளவியும் 'பாம்புபாம்பு' என்பது அடுக்குத் தொடர்; 'பாம்பு' எனப் பிரித்தாலும் இது பொருள் தரும். 'சலசல' என்பது இரட்டைக் கிளவி; 'சல' என்று பிரித்தால் இது பொருள் தராது. இதுதான் அடுக்குத் தொடருக்கும் இரட்டைக் கிளவிக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு.

இதனைக் கவிஞர் வைரமுத்து 'ஜீன்ஸ்' படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் தமக்கே உரிய தனித்தன்மை துலங்க நயமாகப் புலப்படுத்தியுள்ளார்:'

சலசல சலசல இரட்டைக்கிளவிதகதக தகதக இரட்டைக்கிளவிஉண்டல்லோ... தமிழில் உண்டல்லோ?பிரித்து வைத்தல் நியாயம் இல்லைபிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லைஒன்றல்லோ... ரெண்டும் ஒன்றல்லோ?'

 வைரமுத்து திரையில் கொட்டிய தீந்தமிழ் இன்னும் தொடர்கிறது.அத்தமிழைப் பேசுவதாக இருந்தால் அதற்குத் தனியாக ஒரு நிகழ்ச்சியே வேண்டும்.

  திரையில் தீந்தமிழினைத் தந்த ஆளுமைகள் பலர் இருக்கிறார்கள்.இன்னும் வந்து கொண்டும் இருக்கிறார்கள். நேரம் கருதி , காலம் கருதி பலவற்றை சொல்ல முடியா நிலையில் இருக்கிறேன்.என்றாலும் சொல்லாமல் இருக்கவோ தொடாமால் இருக்கவோ முடியாதிருக்கிறது. ஆசையால் சில .....

'ஐய அணி' என்பது அதிசய அணியின் ஒரு வகை. 'தெய்வப் பெண்ணோ? மயிலோ? கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகின்றதே!' என்னும் பொருளைத் தரும் திருக்குறள் காமத்துப் பாலின் முதல் குறட்பா, ஐய அணியில் அமைந்தது.

'மாஞ்சோலைக் கிளிதானோ? மான்தானோ?

வேப்பந் தோப்புக் குயிலும் நீதானோ? -

இவள்ஆவாரம் பூதானோ? நடை தேர்தானோ?

சலங்கைகள் தரும் இசை தேன்தானோ?'  

எனக் 'கிழக்கே போகும் ரயில்' படத்திற்காக கவிஞர் முத்துலிங்கம் பாடி இருக்கும் பாடல் ஐய அணிக்கு நல்ல உதாரணம்.

முரண் அணி :ஒன்றுக்கொன்று மாறுபட்ட சொல்லும், பொருளும் வருவது முரண் அணி.

'இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம்'

என 'ஒருதலை ராகம்' படத்திற்காக டி.ராஜேந்தர் எழுதிய பாடலில் முரண் அணி இடம் பெற்றது. தாய் குழந்தைக்காகப் பாடுவது தாலாட்டு; கவிஞரோ 'இது குழந்தை பாடும் தாலாட்டு' என்கிறார். பூபாளம் காலையில் பாடப்பெறுவது; கவிஞரோ, 'இது இரவு நேர பூபாளம்' என்கிறார். இதே போல 'இது மேற்கில் தோன்றும் உதயம்' என்றும், 'நதியில்லாத ஓடம்' என்றும் பாடுவது அழகிய முரண்கள் ஆகும்.

இன்னும் என் தாகம் அடங்கவில்லை. நிறைவாக கே.டி.சந்தானம் என்னும் ஆளுமையின் தீந்தமிழைக் கேட்டுப்பாருங்கள்.

வெண்நிலவைக் குடைபிடித்து
வீசுதென்றல் தேர் ஏறி
மென் குயில்தான் இசை முழங்க
மீன் வரைந்த கொடியசைய
கண்கவரும் பேரழகி
கனகமணிப் பொற்பாவை
அன்ன நடை ரதியுடனே
அழகுமகன் வில்லேந்தி
கண் முல்லை, தாமரை,மா
தனி நீலம், அசோகமென
வண்ணமலர்க் கணை தொடுத்தான்
வையமெல்லாம் வாழ்கவென்றே!

அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா
மண் உயிர் பிம்பம் வழங்கும்
உன் புகழ் சொல்லவா

கதம்பம் செண்பகம் தங்கும்
கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் கயர் கன்னியே
அன்பெழுந்தங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே

ஆடலும் பாடலும் அன்பின்
ஊடலும் கூடலும் இன்பம்
தேடலும் உன் செயல் அல்லவா
நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா

அழகு தமிழே பழகும் இசையே
அமுத நிலையே உனது செயலால்
அந்தரங்கச் சிந்து பாடுவார்
சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவார்

மனம் கொஞ்சும் மலர் மஞ்சம்
அடைந்துள்ளம் குளிர் தங்கம்
கலந்தன்பின் நலம் காணுவோம்
குணம்கொள் பெண் அணங்கே
உன் மனம் கொண்டே மனம் தந்தேன்
இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
 வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here