” அதிகாரத்திற்கு எதிரான குரலாக இலக்கியச் செயல்பாடுகள் இன்றைக்குத் தேவையாக இருக்கிறது . உயர்ந்த விழுமியம், லட்சியம் கொண்டவை இலக்கியப் படைப்புகள். லட்சியவாதம்கொண்ட படைப்புகள் வாழ்க்கையை உயர்த்தும். அவ்வகைப்படைப்புகளை வாசகர்கள் படைக்க வேண்டும்.எழுத்தாளர்கள் எழுத வேண்டும்”
என்று திரைப்பட இயக்குனர் வ. கீரா “திருப்பூர் இலக்கிய விருது 2025 “ பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது குறிப்பிட்டார். அவரின் வீரா நாவலுக்காக அவருக்கு “திருப்பூர் இலக்கிய விருது 2025 “ வழங்கப்பட்டபோது ஏற்புரையில் இவ்வாறு பேசினார். ( வீரா நாவல் டிஸ்கவரி புக் பேல்ஸ் , சென்னை வெளியீடு )
மற்றும் சென்னை ஓவியக்கல்லூரி முதல்வர் புகழேந்தி உட்பட30 படைப்பாளிகளுக்கு நேற்று அவ்விருதுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கு தூரிகை சின்னராஜ் தலைமை தாங்கினார்.
சுப்ரபாரதிமணியனின் “ புலரியின் சாம்பல் நிறம் ” என்ற சுற்றுச்சூழல் நூலை அகில் ரத்னசாமி ( திருப்பூர் ஏற்றுமதியாளர், நொய்யல் காப்போம் இயக்கத் தலைவர் ) நூலை வெளியிட சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் மேனாள் துணைவேந்தர் ப. க பொன்னுசாமி பெற்றுக்கொண்டார்.அந்த நூலை சென்னை கோரல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது ரூ330.
விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தனுபவங்களை விவரித்தனர். முத்துபாரதி நன்றி கூறினார். கீழ்க்கண்டோர் “திருப்பூர் இலக்கிய விருது 2025 “ பெற்றனர்.
ஓவியர் புகழேந்தி, தொல்லியலாளர் மூர்தீஸ்வரி, திரைப்பட இயக்குனர் வ.கீரா, திருக்குறள் க.காமராசு, பேரா. ரமணி
எழுத்தாளர்கள் கோ.கலியமூர்த்தி மு.யாழினிஸ்ரீ,,ஞானசூரியன், மலர்வதி, ஆர்னிகாநாசர், அய்யனார் ஈடாடி, கோவை தனபால், சசிகுமார், இலக்கியா நடராஜன், ராணி சீதரன்,
கோவை ஆனந்தன்,செந்திரு, க.ஜெய்சங்கர், மா. காளிதாஸ், ரம்யா அருண்ராயன், பிரசாந்த்.வே , ஆங்கரை பைரவி, துவாரகா சாமிநாதன், காப்பியன், நாகஜோதி, செல்வராஜா, லீலா...கோ
மொழிபெயர்ப்பாளர்கள் சுந்தரராமன், கன்னிமாரி தினேஷ், ஆர். முத்துமணி
இடம்: சேவ் அலுவலகம், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி பொது மருத்துவமனை வீதி., கலைஞர் அறிவாலயம் அருகிலான கிளை வீதி, தாராபுரம் சாலை, திருப்பூர்
சேவ் அலோசியஸ், சுசிலா, கிரிஜா சுப்ரமணியன் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
எழுத்தாளர்கள் கீழ்க்கண்டத் தலைப்புகளில் உரை நிகழ்த்தினர்.
0 கவிதை அரசியல்
0 சோறு அரசியல்
0 கை வரை ஓவியங்கள் மதிப்பிழந்து விட்டனவா,.
0 ஆடியோ புத்தகங்கள் இன்றைக்கு ஏன் தேவை
0 தொல்லியல் அரசியலாகி விட்டதா.
0 இன்னும் திருக்குறளை பரப்ப வேண்டி உள்ள அவலம் ஏன்
0 பெண்ணெழுத்து தீவிரமாக உள்ளதா நியாயமாக உள்ளதா
0 விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் தமிழில் சரியாக கொண்டு வரப்பட்டுள்ளதா
0 0 பெண் அனுபவம் எப்படி படைப்பாகிறது
0 மொழிபெயர்ப்பு இலக்கியம் தமிழுக்கு சவால் விடுகிறதா
0 சுற்றுச்சூழல் இலக்கியம் போதுமானதாக வருகிறதா
0 திரைப்பட அனுபவங்கள் இலக்கியத்திற்கு சவாலா..
:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









