பதினெட்டாம் திருப்பூர் குறும்பட  விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை தாராபுரம் சாலை   சேவ்அலுவலக அரங்கில் சுசீலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சமூக ஆய்வாளர் வியாகுல  மேரி அவர்கள் விருதுகளை வழங்கினார். அவர் உரையாற்றும் போது இப்படி குறிப்பிட்டார்  : 

“ இளைஞர்கள் தங்களுடைய சமூகம் சார்ந்த உறவுகளையும் விமர்சனங்களையும் வெவ்வேறு வகையில் படைப்புகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இலக்கிய படைப்புகள் அதில் முதன்மை வைக்கின்றன. இப்படி குறும்படங்கள் சார்ந்தும் நிறைய இளைஞர்கள் இயங்குகிறார்கள் .இது திரைப்படத்திற்கு ஒரு படிக்கட்டாக இருக்கிறது.  சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற கைபேசி மூலம் திரைப்படங்கள் தயாரிக்கும் ஒரு நாள் பயிற்சியில் நிறைய  இளைஞர்கள் பங்கு பெற்றார்கள் அவர்களிடமிருந்து நல்ல  குறும்படங்களும் திரைப்படங்களும் வெளிவரும் என்ற  நம்பிக்கை இருக்கிறது  “

 திருப்பூர் சந்தோஷ் கிருஷ்ணன் இயக்கிய களிறு ஆவணப்படம் , ஈரோடு பெண் இயக்குனர்  வைசியா தமிழ் இயக்கிய கொல்லம்மாள் , குறும்படம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து எட்டுக் குறும்படங்களை தேர்வு செய்து விருதுகள் தரப்பட்டன. 

இந்த விழாவில் சுப்ரபாதிமணியின் எழுதிய ட்ரீம்ஸ் சேடோ என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நாவல் வெளியிடப்பட்டது .இது அவர் எழுதிய திரை என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகும் சென்னை கோரல் பதிப்பகம் இதை வெளியிட்டிருந்தது .திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட அனுபவங்களை சுப்ரபாரதி மணியன் இதில் நாவலாக தந்திருக்கிறார். 

இந்த நாவலை எல் ஆர் ஜி கலைக்கல்லூரி பேராசிரியர் திவ்யா வெளியிட சிறுகதை எழுத்தாளர் அங்கு லட்சுமி பெற்றுக்கொண்டார். தூரிகை சின்னராஜ் எழுதிய இலையுதிர்காலம் என்ற பறவைகள் உலகம் பற்றிய நூல் வெளியிடப்பட்ட்து. திருப்பூர் கனவு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

குறும்பட இயக்குனர்கள் எஸ் எல் முருகேஷ் ,சரவணன், பவானி கணேசன் , திவ்யா, அங்குலட்சுமி , கவிஞர்கள்  ஆரோ ,எத்திராஜ் ,வாகை துரைசாமி உள்ளிட்டோர்  திரையிடப்பட்ட குறும்படங்கள் பற்றிப் பேசினார்கள் .

சமூக ஆர்வலர்களும் குறும்பட ஆர்வலர்களும் கலந்து கொண்டார்கள் க்றும்படப் படைப்பாளிகள் சார்பில் இயக்குனர்    கோவை அருண்  நன்றி கூறினார்.

திருப்பூர் கனவு இலக்கிய அமைப்பு ,கனவு திரைப்பட ச் சங்கம் ஆகியவை இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தன . தூரிகை சின்னராஜ், புவனா உட்பட பலர் முன்னிலை வகித்தார்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



[வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட  பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.]


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்