அமரர் எம்.எஸ்.கமலநாதனின் நனவிடைதோய்தல்!
- அண்மையில் மறைந்த 'சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?' பாடலை எழுதிய எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் எழுதிய கட்டுரையிது. இதில் அவர் தான் 'சின்ன மாமியே!' பாடலை எழுதி, மெட்டமைத்த விபரங்களைப்பதிவு செய்திருக்கின்றார். இதனைப் பதிவுகள் இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள். அவருக்கு எம் நன்றி. - பதிவுகள் -
வதிரியூரில் பல்வேறு குடும்பக் குழுமங்கள் மத்தியில் யாவத்தை என்ற நீண்டகால வர்த்தகம்,கல்விப் பாரம்பத்திற்குரிய குடும்பங்களில் சீனித்தம்பி தங்கரத்தினம் தம்பதியினருக்கு மூத்த மகனாக 1939 ஆம் ஆண்டு மாசி 26 ஆம் திகதி பிறந்தேன். யாவத்தையில் வசித்த கூட்டுக்குடும்பங்களின் மத்தியில் நான் மூத்தவன். ஆண் பிள்ளை என்பதனாலும் என்னிடம் பற்றுப் பாசம் என அபிரிமித்மாகக் கிடைக்கப் பெற்ற எனக்கு தேவையான சகல வசதிவாய்ப்புக்களும் ஏற்படுத்தப் பட்டிருந்தன.
கல்விப் பருவத்தையடைந்த நான் யா/தேவரையாளி இந்துவில் (அப்போதைய தேவரையாளிச் சைவ கலைஞானசபைப் பாடசாலை) ஆரம்பக்கல்வியினைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கற்றுப் பின் எனது தகப்பனார் தென்னிலங்கை மாத்தறையில் தொழில் நிமிர்த்தம் இருந்தமையால் தென்மாகாணம் மாத்தறை சென்தோமஸ் கல்லூரியில் (1946-1948) கல்விதனைத் தொடர்ந்தேன்.அதனையடுத்து யா/சென்யோன்ஸ் கல்லூரியில் 1949-1952 வரை கல்லூரி விடுதி (BOARDING) யில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்தேன். இக்காலப்பகுதியில்தான் அங்கு பதினொரு வயதுப் பிரிவு உதைபந்தாட்ட அணியில் ஒருவராக இணைந்து விளையாடினேன். இதுதான் எனது உதைபந்தாட்ட முதல் பிரவேசமுமாகும்.

நெருக்கடியான சூழ் நிலையில்தான் உன்னதமான கலை, இலக்கியங்கள் பிறக்கும்/ என்றான் ஒரு அறிஞன். இன்று நெருக்கடி மிக்க சூழ்நிலையில் தவிக்கின்ற யாழ் மண்ணுக்கு சமீபத்தில் சென்றபோது அந்த அறிஞனின் வார்த்தைகள்தான் எத்துணை அர்த்தம் பொதிந்தது என்பது புலனாகியது. ஷெல்கள் விழுந்தாலும், வானில் பறக்கும் ஹெலிகொப்டர் பறவைகள் "துப்பாக்கிச் சன்ன" எச்சில்களை துப்பினாலும், வரட்சிக்கு வசந்தம் வீசுமாப்போல் இலக்கிய அரங்குகளும், நூல் வெளியீடுகளும், கவியரங்குகளும் குறையேதுமின்றி நடந்து கொண்டிருப்பதை அங்கு காண முடிந்தது. இன்று தமயந்தியின் புகப்படக் கண்காட்சி - யாழ்.பீச் இன் ஹோட்டேலில் என்ற விளம்பரத்தை நாளேடு ஒன்றில் பார்த்ததும் ஆர்வம் மீதுற விரைந்தேன்.
மே மாதம் இரண்டாம் திகதி பதினோராவது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகின்றது. இவ் விழாவில் சுமார் பன்னிரண்டு குறுந்திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. போருக்குப் பின்னரான இலங்கை வாழ்வியலையும், புலம் பெயர் வாழ்வியலையும் கருவாக பெரும்பாலான படங்கள் கொண்டுள்ளன. விழாவிற்கு வருகை தந்து இப் படைப்பாளிகளை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சிறப்பு விருந்தினராக அம்சன் குமார் கலந்து கொள்கின்றார்.
வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்கள் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். இவர் முதலில் கலைப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார். பின்னர் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், மிக ஏழ்மையான மக்களைக் கொண்ட சுரங்கப் பகுதியொன்றில் சமயத் தொண்டு செய்தார். அங்குள்ள மக்களை இவர் வரையத் துவங்கினார். இங்கே தான் தனது முதல் முக்கியமான ஓவியமான உருளைக்கிழங்கு உண்போர் எனும் ஓவியத்தை வரைந்தார். மற்ற ஓவியர்களைப் போல் அன்றி தனது முப்பதாம் வயதுக்குப் பின்னரே இவர் ஓவியம் வரையத் துவங்கினார். இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.
சுப்பர் சிங்கர் ஜ+னியர் - 4 இன் முடிவுகள் வெளிவந்த போது ஆசை காட்டி மோசம் செய்து விட்டார்கள் தொலைக்காட்சியினர் என்று எல்லோருமே புலம்பினார்கள். ஆனால் ஒவ்வொருவரின் புலம்பலும் வித்தியாசமானவையாக இருந்தன. ஒவ்வொருவரும் தாங்கள் எதிர்பார்த்தபடியே நடந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் எல்லாமே தலை கீழாக நடந்து முடிந்து விட்டது. இது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சிதான், இதைப் பெரிது படுத்தக்கூடாது என்று நேயர்கள் நினைத்தாலும், இத்தனை மாதங்களாக நடுவர்களை வைத்து மிகவும் சிறப்பாக நடத்திய ஒரு நிகழ்ச்சியைக் கடைசி நேரத்தில் கோட்டை விட்டு விட்டார்கள் என்பதே பலரின் கருத்தாகவும் இருக்கின்றது. போட்டி என்று வந்தால் நேர்மையாக நடக்க வேண்டும் நடுவர்களின் தீர்ப்பபை ஏற்கவேண்டும். இதுதான் சரியான, நேர்மையான போட்டியாக இருக்கும். இதைத்தான் குழந்தைப் பருவத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம், இதைத்தான் சிறுவர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றோம். அந்த நேர்மையைத்தான் தொலைக்காட்சி நிறுவனத்தினரிடம் நேயர்களும், சிறுவர்களான போட்டியாளர்களும் எதிர்பார்த்தார்கள். 2010 ஆம் ஆண்டு நடந்த சுப்பர் சிங்கர் ஜூனியர் - 2 இல் அதிரடியாக அஜித்தைத் தெரிவு செய்து எப்படி சுதப்பினார்களோ அதே தவற்றை மீண்டும் செய்ய மாட்டார்கள் என்று நேயர்கள் எதிர்பார்த்தார்கள். மீண்டும் ஒரு தவறுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது வேறாகி விட்டது. பொருளாதார ரீதியாகப் பார்ப்போமேயானால் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வருமானம் தான் முக்கியம் என்பதை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். முடிவெடுப்பது அவர்களாகையால், நேயர்களாகிய நாம் விருப்பமோ இல்லையோ அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
சுப்பர் சிங்கர் ஜுனியர் - 4 போட்டி இம்முறை சர்வதேசத் தமிழர்களின் பார்வையை வெகுவாகத் திருப்பியிருக்கின்றது. காரணம் கனடியத் தமிழரான ஜெசிக்கா யூட் அதில் கலந்து கொண்டு சிறந்த பாடகிகளுள் ஒருவராக முன்னணியில் நிற்பதேயாகும். ஏற்கனவே கனடாவில் இருந்து பலர் இப்படியான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சண் தொலைக்காட்சியில் எனது தமிழ் வகுப்பில் தமிழ் கற்ற மாணவனான சுபவீன் சென்ற வருடம் முதலிடத்தைப் பெற்று எமக்குப் பெருமை தேடித்தந்தார். யார், எங்கேயிருந்து வந்தார் என்பதைவிட, திறமைக்குச் சண் தொலைக்காட்சி அங்கே முதலிடம் கொடுத்திருந்ததைப் பலரும் பாராட்டியிருந்தார்கள். அது போலவே கனடாவில் இருந்து பாடக, பாடகிகளான எலிசபெத் மாலினி, விஜிதா, மகிஷா, சரிகா, சாயிபிரியன் போன்றவர்களும் சென்ற வருடங்களில் விஜே தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் போட்டியில் பங்கு பற்றியிருந்தனர். விஜே தொலைக்காட்சி மூலம் தங்கள் திறமையைக் காட்டியிருந்தனர். இம்முறை 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் ஜெசிக்காவிற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. அதை எந்த அளவிற்கு அவர் பயன் படுத்துவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





அந்த நாள் இன்றும் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது..! 1972 -ம் ஆண்டு யாழ்ப்பாணம் புதிய வின்சர் திரையரங்கில் 'குத்துவிளக்கு" என்ற ஈழத்துத் திரைப்படம் வெளியாகியது. அதனைப் பார்ப்பதற்கு நண்பர்களுடன் போயிருந்தேன். திரைப்படம் 'ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே.." என்ற பாடலுடன் ஆரம்பமாகியது. கணீரென்ற குரலில் அந்தப் பாடல் தொடங்கியதும் 'ஆகா… அற்புதமான குரலில் பாடல் ஒலிக்கிறதே…" என வியந்தேன். நண்பர்களுடன் சேர்ந்து கைதட்டி மகிழ்ந்தது இன்றுபோல் எனக்கு ஞாபகமிருக்கிறது..! ஆமாம்.. அற்புதமாக அந்தப் பாடலைப் பாடியவர்தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அன்று இசைத் தயாரிப்பாளராக விளங்கிய சங்கீத பூசணம் எம். ஏ. குலசீலநாதன். பின்னர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிராமிய நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக விளங்கிய எமது குடும்ப நண்பர் ஏ. சிறிஸ்கந்தராசாவின் கொழும்பு - நாரங்கன்பிட்டி தொடர்மாடி வீட்டில் பலமுறை குலசீலநாதனைக் கண்டு பேசிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வேளைகளில் எமது வேண்டுகோளுக்கிணங்க அவர் பல பாடல்களைப் பாடுவார். சகோதரர் வி. ரி. தமிழ்மாறன் அவரிடம் எழுதிக்கொடுத்திருந்த 'கீற்றோலைத் தென்றலிலே கீதமொன்று கேட்குதையா.." போன்ற சில மெல்லிசைப் பாடல்களையும் அவர் பாடிக்காட்டுவார். நாம் அவரது இசைமழையில் நனைந்து மகிழ்வுறுவோம். அவர் எங்கள் அன்புக்குரிய 'பல்கலை வேந்தர்" சில்லையூர் செல்வராசனின் உற்ற நண்பர். இருவரும் ஒன்றாகவிருந்து பேசிக்கொள்வதை, பாடி மகிழ்வதைப் பார்ப்பதே ஆனந்தம். சில்லையூர் கவித்தூறல் சொட்ட, இவர் அதனை இசைமழையாகப் பொழிவார். ஆகா… அதனைக் கேட்பது தான் எத்தனை ஆனந்தம்..!
கவிஞர் வாலி நிறை வாழ்க்கை வாழ்ந்து மறைந்து விட்டார். அகவை 81 ஆண்டுகள் வாழ்ந்த அவர் படுக்கையில் வீழ்ந்த 4 நாள்களில் இவ்வுலக வாழ்வை நீக்கி எங்கோ பறந்து விட்டார். தனது மரச் சுரங்கத்தில் பூட்டி வைத்திருந்த பல்லாயிரம் பாடல்களோடு சென்றுவிட்டார். கவிஞர் வாலி இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்ற ஆதங்கம் ஒரு புறம் இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததே பெரிய சாதனை. அவரை தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு அவரது தோற்றத்தில் முதுமை காணப்படவில்லை. அவரது நகைச் சுவைப் பேச்சில் தடுமாற்றம் இல்லை. குரல் முன்னர் போல் கணீரென்று இருந்தது. மகாகவி பாரதி தனது 39 ஆவது அகவையில் இயற்கை எய்தினார். இருந்தும் மிகக் குறைந்த வாழ்நாளில் பாரதி வான் புகழ் கவிதைகள் படைத்தார். அவர் பதித்த சுவடுகள் காலத்தால் அழியாதவை. புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கில்லையெனும் வசை அவராற் கழிந்தது என்று அவரே சொன்னார். பாரதியாரின் பாஞ்சாலி சபதம் தாகூரின் கீதாஞ்சலியைக் காட்டிலும் உயர்ந்தது. தனக்குப் பின் தமிழ்க் கவிதைத் தளத்தில் ஒரு நீண்ட பரம்பரையைத் தோற்றுவித்தவர் பாரதியார். 
In 1997, Chandragupta Thenuwara coined the term 'Barrelism' as a way of conceptualizing his opposition to militarization. As the barrels kept invading city squares, urban streets and many other public spaces, he converted the barrels painted in camouflage into works of art. Instead of artistic reproduction of landscapes, he created 'barrelscapes' using the empty exhibition spaces of the art galleries. "If someone asked me to portray the present state of Sri Lankan society, I have nothing to draw but barrels. Barrels have occupied the space around us. Barrels have blocked my view. How can I paint the sky as it hardly can be seen?" he asked during an interview in 1999. Since then more than a decade has elapsed and the war has paused. "We now live in a post-barrelist stage, surrounded by new symbols of militarization" he said to JDS, while his latest exhibition of sculpture and drawings - 'The Monument and Other Works' - is being held at Lionel Wendt Art Gallery in Colombo. Returning to the island in 1993 after completing his postgraduate studies at the Moscow State Art Institute, Thenuwara became head of the Vibhavi Academy of Fine Arts - better known as VAFA - apart from lecturing at the Faculty of Aesthetic Studies at the Colombo University. He was an artist in residence at CAIR, Centre for Art International Research at Liverpool John Moores University and served as a Board Member of the Architectural Association Foundation in London in 1996-97.
விஜய் தொலைக்காட்சியின் 'ஏர்டல் சுப்பர் சிங்கர் ஜூனியர்' நிகழ்ச்சியின் மூலம் உலகத் தமிழர்களின் மத்தியில் மிகுந்த ஆதரவையும், அன்பையும் பெற்ற இளைய பாடகி மகிஷாவின் இசைப்பயணம் நிறைவு பெற்றாலும் , அந்நிகழ்ச்சியில் முதல் 12 இடங்களில் ஒருவராகத் தேர்வுசெய்யப்பட்டு தன் பாடும் ஆற்றலை வெளிப்படுத்திய மகிஷாவின் ஆற்றலும், முயற்சியும் பாராட்டுக்குரியன. அவரது இசைப்பயணம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அங்கு எஞ்சியிருந்த ஏனைய பாடகர்களும், பெற்றோர்களும் கண்ணீர் விட்டழுதனர். அது அவர்களுக்கிடையில் நிலவிய அன்பினை வெளிப்படுத்தியது. நடுவர்களாகச் செயற்பட்ட பிரபல பாடகர்களான 'சின்னக்குயில்' சித்ரா, 'மாங்குடி' சுபா, மனோ ஆகியோர் எழுந்து நின்று தங்களது வாழ்த்தைத் தெரிவித்ததுடன், கனடாவின் சிறந்த பாடகியாக அவரை குறிப்பிட்டும் மகிழ்ந்தனர். மகிஷா தன் முயற்சியையும், திறமையையும் மூலதனமாக்கித் தமிழக மக்களை, உலகத் தமிழ் மக்களைக் கவர்ந்தார். அனைவருமே அவரைத் தம்முள் ஒருவராக இனங்கண்டார்கள். மகிஷாவின் முயற்சிக்காகவும், ஆற்றலுக்காகவும் அவரைப் பாராட்டுகின்றோம்.
அன்புடையீர் வணக்கம், கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல, அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமாகும். மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இதைச் சொல்லலாம். மலிந்து பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள தொல்கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் நுண்கலைகளின் தாய்வடிவம் அவற்றில்தான் கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு.மரபார்ந்த தொல்கலைக்ககூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை ஆற்றுப்படுத்திக் கொள்வதுடன், சக உயிர்களின் மீதான கரிசனத்தையும், அக்கறையையும், அதிகாரங்களுக்கு எதிரான போர்க்குணங்களையும், கலகக்குரல்களையும் நாம் அங்கிருந்துதான் பெறவேண்டியிருக்கிறது. அத்துடன் ஒரு உடல் உழைப்பாளிக்கு தன்னை மறந்து ஒன்றிக்கிடக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வேறெந்த கொம்பு முளைத்த கலையிலக்கிய உற்பவனங்களும் தந்து விட முடியாது.
-வானொலி என்றால் அது இலங்கை தான். அது போல வானொலிக் குரலுக்குச் சொந்தக்காரி மதிப்பிற்குரிய அம்மா திருமதி இராஜேஸ்வரி சண்முகம். குழல் இனிது, யாழ் இனிது, மழலைச்சொல் கேளாதவர், ஆனால் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது குரலில் ஒரு ஈர்ப்புச் சக்தி இருக்கின்றது.எழுத்துக்கள் உச்சரிக்கும் பொழுது வார்த்தைகள் சகா வரம் பெறுகின்றன. சொல் நயம், ஒலி நயம், அதற்கெல்லாம் மேலாக இயற்கை கொடுத்த குரல் நயம் அதை உபயோகிக்கக் கூடிய "சூழ் கலை நயம்". வானொலி செய்த பாக்கியமோ, நேயர்கள் செய்த பாக்கியமோ, இலங்கைசெய்த பாக்கியமோ, எல்லாவற்றிக்கும் மேலாக நாம் கேட்கும் பாக்கியம்! மழையின் சாரல்களை அவரின் குரலில் செவிமடுக்கின்றோம். அலங்காரத்தின் அலங்காரமாய் ஜொலிக்கிறார் அவர் குரலால் கேட்கிறோம்.
ஒரு கலைஞன் தான் பார்த்து கேட்டு அனுபவித்த விடயங்களை தனக்கு கை வந்த ஊடகத்தினூடாக வெளிப்படுத்தும் போது அது கலையாகின்றது. கலைஞர்களுக்கிடையே வெளிப்படுத்தும் முறையிலும் கையாளும் உத்திகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது அவர்களது அனுபவத்தினாலும் பயிற்சியினாலும் சூழலினாலும் வேறுபடுகின்றது. ஒரு கலைப்படைப்பில் சமூகத்திலுள்ள பிரச்சினைகளும் அதிலிருந்து மீள்வற்கான வழிமுறைகளும் கூறப்படும் போது அதன் பெறுமதி இன்னும் அதிகரிக்கின்றது. கலையாக்கங்களில் சமூகத்தின் நிலைமைகளை பிரதிபலிப்போரில் பழைய கதைகளுக்கு புதிய வியாக்கியானங்களையும் புதிய கருத்தேற்றங்களையும் செய்வோரும் உள்ளனர். இது தழுவலாகவோ அல்லது அதே கதையமைப்புடன் சிறு மாற்றத்தினை மேற்கொள்ளும் முறைமையுடையதாகவோ அமைந்து காணப்படும். இராமாயணம் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பல விடயங்களை உள்ளடக்கி யுள்ளது. இதனால்தான் பல இராமாயணங்கள் (கம்பர், வால்மீகி, வசிட்டர், போதாயினர், துளசி, சம்பூர்ணர்,….இராமாயணங்கள்) உருவாயின. இராமாயணம் சமூகத்திற்கான பல்வேறுபட்ட கருத்துக்களை முன் வைக்கின்றது. அந்தவகையில் இராமாயணக் கதையினை அடிப்படையாகக் கொண்டு, 2010ல் இராமாயணத்தைத் தழுவியதான கதையமைப்புடன் மணிரத்தினத்தின் இராவணணனும் (சினிமா) இராமாயணத்தின் யுத்த காண்டத்தை அடிப்படையாகக் கொண்டு மௌனகுருவின் இராவணேசனும்(நாடகம்) படைத்தளிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தாரால் நடத்தப்பெற்ற , புகழ் பெற்ற நிகழ்சிகளிலொன்றான 'சுப்பர் சிங்கர் 3' இறுதி நிகழ்வின் முடிவுகளையிட்டு நீதிபதிகளாகவிருந்த பின்னணிப் பாடகர்கள் சிலர் அதிருப்தியடைந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இவர்கள் எல்லோரும் ஒன்றினை மறந்து விட்டார்கள். மேற்படி 'சுப்பர் சிங்கர் 3' நிகழ்வில் பங்குபற்றிய அனைவரினதும் முக்கியமான கனவு தமிழ்ச் சினிமாவின் பின்னணிப் பாடகர்களிலொருவராக ஆவதுதான். அந்த அடிப்படையில் மக்களிடத்தில் மேற்படி பாடகர்கள் தங்கள் பாதிப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இறுதியில் மக்களின் வாக்களிப்பில் மேற்படி நிகழ்வின் வெற்றியாளரைத் தெரிவு செய்திருப்பது ஒருவிதத்தில் நியாயமானதும் கூட. ஆனால் ஒருவருக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் தெரிவு செய்திருந்தால் அதுவே நியாயமானதாகவிருந்திருக்கும். இருந்தாலும் நீதிபதிகளாகவிருந்தவர்கள் ஏன் நல்ல பாடகரான சத்தியபிரகாஷ் மக்களின் அமோகமான வாக்குகளைப் பெறவில்லை என்பதை ஆராய்வதும் நல்லதே.
கொழும்பில் 60களில் நடைபெற்ற நிழல் நாடகவிழா என்னைப்போன்ற நாடக அபிமானிகளுக்கு நல்விருந்தாக அமைந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தினமும் ஒன்றாக புகழ்பெற்ற இயக்குனர்களின் நாடகங்கள், சிறந்த கலைஞர்களின் பங்களிப்புடன் மேடையேறின. அவற்றில்; ஒன்றுதான் நடிகவேள் லடிஸ் வீரமணி இயக்கி நடித்த :'சலோமியின் சபதம்' பைபிளில் வரும் சலோமியின் கதையை ஒஸ்கார்வைல்ட் நாடகமாக எழுதியிருந்தார். அதுவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு லடிஸ் வீரமணியால் மேடையேற்றப்பட்டது. பார்த்தவர்கள் முற்றுமுழுதாக அந்த நாடகத்தின் தன்மையினால் கவரப்பட்டார்கள். ஆரம்பக்காட்சியில் ரோமாபுரி வீரர்கள், கலீலி வீரர்கள் கவர்ச்சியான ஆடை, அணிகலன்களுடன் மேடையில், நிரம்பியிருந்தார்கள். ஏரோது மன்னனின் மாளிகையின் முன்னுள்ள புற்றரையில் கைகளில் மதுக்கிண்ணங்களுடன் அவர்கள் பேசிக்கொள்வதும், உலாவிவருவதும் மிகச்சிறந்த நெறியாள்கையின் வெளிப்பாடாக சீருடன் இருந்தது. ஓஸ்கார் வைல்ட்டின் வசனங்களை அவர்கள் அழகு தமிழில் பேசினார்கள். நிலவைப் பார்த்து அவர்கள் பேசினார்கள். சிரியநாட்டு இளைஞன், நிலவு இளவரசி சலோமி போல இருப்பதாக சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஹேரோதியா அரசியின் பணியாளோ 'நிலவு மரணக்குழியிலிருந்து எழுந்து வந்ததுபோல இருக்கிறது. அது சாவின் துர்க்குறி' என்கிறான். அவர்களுக்கு நடுவே கம்பீரமாக நடந்து வரும் ஏரோது அன்ரிபாஸ் (லடிஸ் வீரமணி) என்ற குறுநிலமன்னன். அவனது பிறந்தநாளைக் குறிக்குமுகமாக நடனமாடும் அவனது பெறாமகள் சலோமி(சந்திரகலா). பாதாளச்சிறையில் இடப்பட்டபோதும், அஞ்சாமல் யேசுவின் வருகையைக்கூறும் ஜோவான் (கலைச்செல்வன்) போன்ற பாத்திரங்கள். தனது பெறாமகளின் ஆட்டத்தினால் மகிழ்வுற்ற ஏரோது அன்ரிபாஸ், 'நீ எதை விரும்புகிறாயோ.. அது உன்னதாகட்டும்' என்று சலோமிக்கு சொல்கிறான். தனது தாயின் தூண்டுதலினால், தனது ஆட்டத்திற்கு பரிசாக ஜோவானின் தலையை ஏரோதுவிடம் கேட்டுப் பெறுகிறாள் சலோமி.
A North American premiere, this exhibition of original vintage Bollywood cinema artworks features the greatest Bollywood celebrities and award-winning films from India's recent film history. These pieces embody the quirky and colourful style of India's cinema culture, which holds a growing fascination in the West, and is a deep cultural tradition in the East. With an emphasis on cinema showcards from the 1950s to the 1980s, the exhibition includes more than 60 original showcards from the Hartwick collection, a private collection assembled in Mumbai over several decades. Commissioned to promote Bollywood films, these showcards were produced by local artisans who used a combination of photo collage and hand painting to create dynamic and colourful interpretations of scenes from Bollywood films. Along with posters, lobby cards, cinema booklets and photographs from the ROM's collection, Bollywood Cinema Showcards traces a historical and visual journey through the world of Bollywood Cinema.
Last week, I went for the Homai Vyarawalla retrospective, currently exhibited in Mumbai. The beautiful black and white photos of a bygone era, captured moments of history in a special way that made you want to see and re-see the pictures. They also told the story of a fiery, gutsy young woman ahead of her time, wielding her camera and immortalising precious instances of political history as India’s first woman photojournalist. Confined to a wheelchair, this nonagenarian belies the spirit that went behind her photographs. What a pity it took 90 odd years for her contribution to be recognised with a Padma award just this year!

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









