அயலவர் இசை அறிவோம்: டி.எம். ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)
இதன் சிங்கள மூலத்தை கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் மொழிபெயர்த்ததில் அதன் கூறு பொருளை அறிய முடிந்தது. கூகுள் மொழிபெயர்ப்பு முற்றும் முழுதாகச் சரியாகவிருப்பதில்லை. இருந்தாலும் பாடல் கூறும் பொருளை அறிவதற்கு உதவுகின்றது. அதன் மூலம் இப்பாடலானது இனிமையான கடந்த காலக் காதல் நினைவுகளை இரை மீட்டுவதை அறிய முடிகின்றது. இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். இதயத்தை வருடிச்செல்லும் இசையும், குரலும் எம்மை மெய்ம்மறக்க வைப்பவையென்பதை உணர்வீர்கள்.
இப்பாடல் டி.எம்.ஜயரத்னவின் சிறந்த பாடல்களிலொன்று. இதற்கான வரிகளை எழுதியவர் இவரது மனைவி : மாலினி ஜயரத்ன (Malini Jayaratne). இசையமைப்பு: ரோகனா வீரசிங்க (Rohana Weerasinghe)
https://www.youtube.com/watch?v=uM2KYmdakeo
தென்னக்கோன் முதியான்செலாகே ஜயரத்ன (Tennakoon Mudiyanselage Jayaratne) டி.எம்.ஜயரத்ன (T.M. Jayaratne) என்று அழைப்படும் சிறந்த சிங்களப்பாடகர்களிலொருவர். இவர நான்கு தடவைகள், 1978, 1979, 1980 & 1987 ஆகிய வருடங்களுக்கான, ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். குருணாகல நகரிலுள்ள மலியதேவா கல்லூரியில் கல்வி கற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நாட்டுப்புற ஆய்வுப்பிரிவினால் பாடகராக உருமாறியவரிவர். அங்கு பணியாற்றிய சி.ஜே.எஸ் குலதிலக இவரைப் பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும்படி வேண்டியதையடுத்துப் பல அவ்வகைப்பாடல்களைப் பாடியுள்ளார்.

தினகரன் வாரமஞ்சரி யூன் 6, 20 : தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு கூழாங்கற்களும் அவர் கைகளில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாகும் - பி. பொன்னுத்துரை -


"எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று 
"பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் எனக்குக் காற்சட்டையும், சேர்ட்டுமாகப் பால்ய காலத்தில் வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டம் நினைவுக்கு வரும். உண்மையில் இப்பாடலை முதலில் கேட்டபோது நான் நண்பர்களுடன் வவுனியா நகரசபை மைதானத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் பல்வேறு வழிகளில் திரும்புவது வழக்கம். அதிலொரு வழி நகரசபை மண்டபத்துக்குப் பின்புறமாக , புகையிரத இருப்புப்பாதைக்குமிடையில் மரங்கள் நிறைந்திருந்த பகுதியினை ஊடறுத்துச் சென்ற பாதை. அப்பாதை வழியாக காமினி வித்தியாயலயத்துக்கு முன்புறமாகச் சென்று கொண்டிருந்த மன்னார் வீதிக்கு வர முடியும்.
எனக்கு பிடித்த இலங்கைத்தமிழ்ப்பாடகர்களில் இவருமொருவர். இவரது பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று இவர் பாடிய "வான நிலவில் அவளைக் கண்டேன் நான். வாசமலரில் அவளை கண்டேன் நான் ." இப்பாடலை எழுதியவர் அல்வாய் சுந்தரம். பாடலுக்கு இசையமைத்திருப்பவகே. சவாஹிர். எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து நேற்று (16.02.2020) மறைந்த செய்தியினை முகநூலில் நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். என்னைப்போன்ற பலரைத் தன் குரலால் இன்பமூட்டியவர் ராமச்சந்திரன் அவர்கள். அவருக்கு என் அஞ்சலி. அவரிழப்பால் வாடும் அனைவர்தம் துயரத்திலும் நானும் 'பதிவுகள்' சார்பில் பங்குகொள்கின்றேன். அத்துடன் ஜூலை 15, 2012 ஞாயிறு தினகரன் வாரமஞ்சரியில் வெளியான "பொப்இசை பாடகர் எஸ். இராமச்சந்திரன்" என்னும் இவரைப்பற்றிய கட்டுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
கவிஞர் கண்ணதாசனின் கவித்துவத்தையும், மொழியாற்றலையும் வெளிப்படுத்தும் சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. மானுட வாழ்க்கையைப்பற்றிய சிந்தனையைத்தூண்டிவிடும் கருத்துகளின் பெட்டகம் இப்பாடல். கே.பாலச்சந்தர் படப்பாடல்களில் முதலிடத்திலுள்ள பாடல்களிலொன்று. வாணி ஜெயராம் பாடிய சிறந்த பாடல்களிலொன்று. அவரது பாடல்களைப்பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது மல்லிகை என் மயங்கும் பாடல். கூடவே நினைவுக்கு வரும் பாடலிப்பாடல். எம்,எஸ்.வி இசையமைத்த சிறந்த பாடல்களிலொன்று. 
எம்ஜிஆர் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலும் சரி , இன்றும் சரி எம்ஜிஆரின் படங்களென்றால் அவை ஒரே மாதிரியானவை. கருத்துள்ள பாடல்களைக் கொண்டவை. காதல் பாடல்கள் இனிமையானவை. இவற்றுடன் தம் கருத்துகளை நிறுத்தி விடுவார்கள். ஆனால் எம்ஜிஆர் சண்டைக்காட்சிகளில் மட்டுமல்ல இன்னுமொரு விடயத்திலும் நன்கு சிறப்பாக செயற்படக்கூடியவர். அது அவரது நடனத்திறமை. திரைப்படங்கள் பலவற்றில் எம்ஜிஆரின் நடன அசைவுகளை அவதானித்தால் அக்காலகட்டக் கதாநாயக நடிகர்களில் அவரைப்போல் நடனமாடக் கூடிய நடிகர்கள் வேறு யாரையும் என்னால் உடனடியாக நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. நடிப்புத்திறமை மிக்க நடிகர் திலகத்தால் 'வண்டி தொந்தி'யுடன் விரைவாக, சிறப்பாக ஆட முடிவதில்லை. ஆனால் முறையான உடற் பயிற்சியினால் உடலைச் சிறப்பாகப்பேணிய எம்ஜிஆர் தனது இளமைப்பருவத்தில் மட்டுமல்ல வயது ஐம்பதைத்தாண்டிய நிலையிலும் மிகச்சிறப்பாக ஆடியுள்ளார்.
இலங்கையில் வசிக்கும் ஓவியர் கெளசிகன் நடிகர் திலகத்தின் பிறந்ததினத்தையொட்டி அனுப்பிய நினைவுக் குறிப்புகள் இவை. 1997இல் நடிகர் திலகம் இலங்கை வந்தபோது அவரைச் சந்தித்ததையும், அவருக்குத் தான் வரைந்த ஓவியத்தைக் கொடுத்ததையும் நினைவுகூர்கின்றார். அத்துடன் அந்நிகழ்வுக்கான காணொளியினையும் பகிர்ந்துகொள்கின்றார். மேலும் அந்நிகழ்வில் நடிகர் திலத்தை வைத்துத் தான் வரைந்த இன்னுமோர் ஓவியத்தையும் காட்டி அதில் நடிகர் திலகத்தின் 'ஆட்டோகிராப்'பையும் வாங்கிக் கொள்கின்றார். அவ்வோவியத்தையும் நம்முடன் பகிர்ந்துகொள்கின்றார் கெளசிகன். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. - பதிவுகள் - 

இலண்டன் இந்திய திரைப்பட விழாவில் மெக்சிக்கன் பல்கலைக்கழகத் திரைப்படத்துறைப் பேராசிரியரும், குறுந்திரைப்படம், ஆவணப்படம், திரைப்படம் என்பவற்றின் இயக்குனருமாகிய சுவர்ணவேல் ஈஸ்வரன் அவர்களின் நெறியாள்கையில் மிஸ்கின், அனுஷா பிரபு, பிரீதி கரன் ஆகியோர் நடித்த கட்டுமரம்” திரைப்படத்தை BFI Southbank எனும் இடத்தில் 21.06.2019 அன்று பார்க்கக் கிடைத்தமை நல்லதொரு பொழுதாக அமைந்தது.
இந்திய நாடகத் துறையில் முக்கிய ஆளுமைகளிலொருவர் கிரீஸ் கர்னாட். அவரது மறைவு பற்றிய செய்தியைத்தாங்கிய பல பதிவுகள் முகநூலில் நேற்று பதிவு செய்யப்பட்டன. இவர் இந்திய சினிமாவின் வெற்றிகரமான நடிகர்களிலொருவரும் கூட. இலங்கைத்தமிழ் நாடகத்துறையின் முக்கிய ஆளுமைகளிலொருவரான க.பாலேந்திரா அவர்கள் எண்பதுகளில் தினகரனில் கிரீஸ் கர்னாட் பற்றி எழுதிய 'நாடக ஆசிரியர் கிறீஸ் கர்னாட்' என்னும் கட்டுரையைப் பதிவு செய்திருந்தார். அக்கட்டுரையை அமரர் கிரீஸ் கர்னாட் அவர்களை நினைவு கூரும்பொருட்டு இங்கு நன்றியுடன் பகிர்ந்து கொள்கின்றோம். - பதிவுகள்-.
ஆண், பெண் சராசரி மாதிரிகளையும், திருமண உறவில் ஒரு பெண்ணின் பங்கினையும் விமர்சனத்துக்குள்ளாக்கும் A doll's house என்ற Henrik Ibsenஇன் நாடகம் அந்த நேரத்தில் ஐரோப்பாவில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருந்ததாக அறிகின்றோம். அந்த நாடகம் முன்வைக்கும் கேள்விகள் இன்றும் எங்களுக்குப் பொருத்தமானவையாகவே உள்ளன, துரதிஷ்டவசமாக சமூகம் இன்னும்தான் மாறவில்லை. 

2012 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். கொழும்பில் அசோகா ஹந்தகமயின் இனி அவன் எனும் திரைப்படம் முன்னோடிக்காட்சியாக கொழும்பு புல்லர்ஸ் வீதியில் இருந்த இலங்கைத் திரைபடக் கூட்டுத்தாபன சினிமா திரைஅரங்கில் திரையிடப்படுகிறது. நண்பர் அசோகா ஹந்தகம எனக்கும் ஓர் அழைப்பு அனுப்பியிருந்தார். இடையில் சந்தித்தபோது அவசியம் வாருங்கள் என்றும் கூறியிருந்தார். திரை அரங்கினுள்ளே சிங்கள சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர்களான அசோகா ஹந்தகம, தர்மசேன பத்திராஜா, தர்மசிரி பண்டாரநாயக்க, சுனில் ஆரியரத்தினா முதலான சிங்கள சினிமா நெறியாளர்களும் ,சுவர்ணமல்லவாராய்ச்சியும் அமர்ந்திருந்தனர். (இவர்கள் அனைவரும் நாடகத்தால் எனக்கு நண்பரானவர்கள்) மற்றும் நான் அறியாத சிங்கள பிரபல சினிமா நடிகர்களும் ,சினிமா விமர்சகர்களும்,பத்திரிகையாளர்களும் பிரசன்ன விதானகே முதலான முக்கிய சிங்கள சினிமா நெறியாளர்களும் காத்திரமான சினிமா ரசிகர்களும் அரங்கை நிறைத்த வண்ணம் அமர்ந்திருந்தனர். அரங்கு நிறைந்த சபை. படம் இன்னும் ஆரம்பமாகவில்லை. திடீரென அனைவரும் எழுந்து நின்றனர். மகிழ்ச்சியோடு கர ஒலி எழுப்பினர். யாரையோ வரவேற்றது போல இருந்தது. பின் வாசல் வழியாக தொண்டு கிழவரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை அவர் மனைவி சுமித்ரா சக்கர நாற்காலிவண்டியில் வைத்துத் தள்ளிய வண்ணம் அரங்கினுள் பிரவேசித்தார்,
தாய்மொழியை பேசுவதற்கு கூச்சப்பட்டுக்கொண்டு ஆங்கில மோகத்தில் டாம்பீகமாக வாழ்ந்து வருபவர்கள் அதிகம். அந்நிய நாடுகளுக்குச் சென்ற சிலருக்கு தனது சொந்த நாட்டின் பெயரை சொல்தற்கே வெட்கம். அப்படிச் சென்று அங்கு தொழில் புரிபவர்கள் மத்தியில் ஒரு சிலர் சொந்த பந்தங்களை அனுசரித்துப் போவதும் அரிது.
தன் பாடல்களைத் தானே எழுதி, நடித்து, பாடி, தயாரித்து, கிட்டார் இசைக்கருவியினையும் வாசித்து சாதனை புரிந்த பாடகர் கிராமி விருதுகளை, ஆஸ்கார் விருதினை எனப்பல்வகை விருதுகளையும் பெற்றவர் மட்டுமல்லர் சமுதாயப்பிரக்ஞை மிக்க கலைஞரும் கூட. Rolling Stone சஞ்சிகை இவரை உலகின் சிறந்த கிட்டார் வாத்தியக்கருவியை வாசிப்பதில் 33ஆவது இடத்தில் வைத்துப்புகழாரம் சூட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எண்பதுகளில் தனது இசைக்குழுவுக்கு 'புரட்சி' (Revolutio

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









