எம்ஜிஆரின் திரையுலக வெற்றிக்கு ஆரம்பத்தில் அவரும் , வி.என்.ஜானகியும் நடித்த திரைப்படங்கள் உதவின. 'மோகினி', நாம்' , 'மருத நாட்டு இளவரசி' (!950) போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். உண்மையில் எம்ஜிஆருடன் இணைந்து தொடர்ந்து நடித்த கதாநாயகிகளில் முதற் கதாநாயகி வி.என்.ஜானகி. திரையில் இணைந்தவர்கள் பின்னர் வாழ்விலும் இணைந்தார்கள்.
வி.என்.ஜானகியே தமிழகத்தின் முதற் பெண் முதல்வர். கூடவே முதல்வரான முதலாவது நடிகையும் கூட. அவ்வை சண்முகம் சாலையிருந்த தனது வீட்டை அ.தி.மு.க.வுக்குக் கொடுத்தார். அதுவே இன்று அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமாகவுள்ளது. தனது சொத்துகள் பலவற்றை கல்விக்காக வழங்கியவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
கலைஞரின் திரைக்கதை,வசனத்தில் உருவான 'மருத நாட்டு இளவரசி' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலைப் பாடியவர்கள் எம்.எம்.மாரியப்பா & K.V.ஜானகி. இசை எம்.எஸ்.ஞானமணி. படத்துக்குப் பாடல்களை C. A. லக்சுமணதாஸ் & K. P. காமாட்சிஉ சுந்தரம் எழுதியதாக விக்கிபீடியா கூறுகின்றது. அவர்களில் இப்பாடலை எழுதியவர்கள் யார் என்பது தெரியவில்லை.
தெளிவான காணொளி. இளம் எம்ஜிஆரும், ஜானகியும் காதலர்களாக காதல் மீன்களாக நீந்தி விளையாடி மகிழும் காட்சி. சுவையான காதலர்களின் உரையாடலை உள்ளடக்கியுள்ள பாடல்.
'ஆனந்தக் கடலினில் அதிலொரு மீன் போல் மகிழ்வேன்' என்கிறாள் அவள். அதற்கு அவன் 'மீனுருவானால் பேச முடியாதே'என்கின்றான். பதிலுக்கு 'வண்ண மீன்களில் காதலை முதலில் கூறுவது ஆண் மீன் தானே'என்று கேள்வி கேட்கின்றாள். இவ்விதமாக உரையாடி , நீராடிக் காதலர்கள் மகிழும் காட்சியை விபரிக்கும் இனிய பாடலிது.
https://www.youtube.com/watch?v=FRrLEtBtxt8