ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடனொரு நேர்காணல்! காண்பவர் இயக்குநர் மனோபாலா!
இயக்குநர் மனோபாலாவின் 'Manobala's Waste Paper யு டியூப் சானலில் அண்மையில் வெளியாகியிருந்த இந்திய சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவிவர்மனுடான நேர்காணல் என்னை மிகவும் கவர்ந்தது.
எவ்வித ஒளிவு மறைவின்றி தான் இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளார் என்பதை ரவிவர்மன் இந்நேர்காணலில் விபரிக்கின்றார். ஆரம்பத்தில் சென்னையிலுள்ள புகையிரத நிலையங்களில் மாறி மாறித் தூங்கிய அனுபவங்களை, டிக்கற் இல்லாமல் புகைவண்டியில் பயணித்துச் சிறை சென்ற அனுபவங்களை, சினிமாத்துறையில் சிறு சிறு வேலைகள் செய்து பெற்ற அனுபவங்களையெல்லாம் விபரிக்கின்றார் ரவிவர்மன்.
சுயமாகக் கற்று ஒளிப்பதிவுத் துறையில் இன்றுள்ள சிகரத்தினைத் தொட்டுள்ளார் ரவிவர்மன். இப்பயனுள்ள காணொளி வாழ்க்கையில் முன்னேற விரும்பும் எவருக்கும் வழிகாட்டுமொரு நேர்மறையான கருத்துகளை உள்ளங்களில் விதைக்குமொரு காணொளி.
அண்மையில் வெளியான இயக்குநர் மணிரத்தினத்தின் 'பொன்னியின் செல்வன் பகுதி ஒன்'றின் ரவிவர்மனின் ஒளிப்பதிவைப் பார்த்துப் பிரமிக்காதவர் எவருமிலர். நானும் அவர்களில் ஒருவன்.
https://www.youtube.com/watch?v=jR3EvYhmKl4
என்னைக் கவர்ந்த யு டியூப் சானல்களிலொன்று தேசாந்திரி கஜனின் யு டியூப் சானல்!
இந்தக் காணொளி சமுதாயப்பயன் மிக்கதொரு காணொளி. யு டியூப் சானலுக்காகப் படிப்பை விட்டு விடாதீர்கள் என்று கூறியிருப்பது உங்களது சானல் மீதான மதிப்பை அதிகரிக்கின்றது. உண்மையில் இதனை நல்லதொரு பகுதி நேரப் பணியாகச் செய்யும் அதே சமயம் படிப்பில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானது. காலமும், இளமையும் போனால் கல்வியும், அதனால் வரும் வேலை அனுபவமும் இல்லாமல் போய்விடும். உங்களுக்குப் பிடித்த துறையில் படித்து பணி புரிகையில் , யு டியூப் சானல் மூலமும் உழைத்துக்கொள்ளுங்கள். ஒரு கல்லில் இரு மாங்காய்களை அடியுங்கள்.
இந்தக் காணொளி யு டியூப் மூலம் சானல் உருவாக்கி, வருமானம் ஈட்ட விரும்பும் எவருக்கும் இந்தக் காணொளி ஆரோக்கியமான பயனைத்தருகின்றது. யு டியூப் மூலம் வருமானம் எதிர்காலத்தில் நிச்சயம் பல்கிப் பெருகும். உங்களுக்கு அதற்கான திறமை உண்டு. உழைப்பு உண்டு. ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் வருமானம் பெறும் நிலை உங்களுக்கு வரும். வாழ்த்துகள்.
https://www.youtube.com/watch?v=4b0aCkReKpk&t=1049s