எழுத்தாளர் அ.யேசுராசா மூலமே தனஞ்சன் குமார் பற்றி அறிந்துகொண்டேன். யாழ் பல்கலைகழகத்தின் இராமநாதன் நுண்கலை பீடத்தில்) சித்திரமும் வடிவமைப்பு துறையில் பட்டம் பெற்றவர். சிற்ப விரிவுரையாளர் மா.மனோகரிடம் சிற்பக்கலை கற்ற இவர் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். பல்கலைக்கழகத்தில் கண்காட்சி நடத்தியிருக்கின்றார். சிற்பங்களின் அழகியல் ஈர்ப்பு காரணமாக பல்கலைக்கழகம் சென்ற பிறகே சிற்பத்துறையில் ஈடுபட்டதாகக் கூறும் இவர் சிற்பங்கள் செய்வதற்காகக் காத்திருப்பதாகக் கூறுகின்றார். கலைத்துறையில் ஈடுபாடுள்ள வர்த்தக நிறுவனங்கள், தனியார் இவரது கலைத்திறமையினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவருடன் தொடர்பு கொள்ளப் பாவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். தொலைபேசி இலக்கம் - +94 77 803 3317 இவரது முகநூல் அடையாளம் - Thananshan Kumar
- இளஞ்சிற்பி தனஞ்சன் குமார் -
முன்னால் ஹாட்லி கல்லூரி மாணவர். இவரது மரம், கல், மண்ணாலான சிற்பங்கள் சிலவற்றைப் பார்த்தேன். அவற்றைப்பற்றி அறியத்தந்த தனஞ்சன் குமாருக்கு நன்றி.
இவரது எம்மவரின் அடையாளங்களுடன் கூடிய மானுட ச் சிற்பங்கள் என்னைக் கவர்ந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அத்துடன் இத்துறையில் மேன்மேலும் வளர்ந்திட, உயர்ந்திட வாழ்த்துகிறேன்.
மேலும் சில சிற்பங்கள்: