- முன்னொரு காலத்தில் பான்ஸ்கி பற்றி நான் எழுதிய கட்டுரையை மீண்டும் பார்க்க வைத்தது கிறிஸ்டியின் கட்டுரை. இலங்கையில் சுவரோவியங்கள் வீதி ஓரங்களில் உயிர் பெற்ற பொழுது இந்தக் கட்டுரையை பரணில் இருந்து தூசி தட்டி எடுத்து வீதிகளில் காதல் ஆக்கியிருந்தேன். - எஸ்.ஜெகதீசன் - -
முன்பு ஒரு காலத்தில் ஊருக்குள் நம்ப முடியாத செய்திகளை நம்ப வைத்ததில் தெருச்சித்திரங்களுக்கும் பங்கிருந்தது. பாடசாலை கழிவறைகள் தொடக்கம் தெரு மதகுகள் சிதிலமடைந்த மதிற் சுவர்கள் மயான மண்டபங்கள் போன்றன கரித்துண்டுகளாலும் பச்சிலைகளாலும் கிறுக்கர்களின் களமாகி கிறங்கடித்தன. அசுத்தமான இடங்கள் அவர்களுக்கு தடையாக இருந்ததுமில்லை. அசிங்கமான வார்த்தைகளுக்கு அவர்கள் தடை விதித்ததுமில்லை. வியப்பு – திகைப்பு – தவிப்பு – முறைப்பு – வெறுப்பு – கடுப்பு என பல உணர்வுகள் பாதிப்படைந்தவர்களிடம் மட்டுமல்ல அவற்றை பார்த்தவர்களிடமும் ஏற்பட வேண்டும் என்ற கற்பனையுடன் அந்த கிறுக்கர்கள் அநாமதேயமாகவே சிரித்தார்கள். - அந்த கிராமிய நினைவுகள் பலருக்கு இப்பொழுதும் மங்கலாக ஞாபக இடுக்குகளில் அப்பியிருக்கும்.
பரவலாக ஆசியாவில் மட்டுமே இவ்வகை கிறுக்கல்கள் வம்பை வதந்தியாக்கிட ஏனைய கண்டங்களில் அரசை விமர்சித்தும்இவிழிப்புணர்வை ஏற்படுத்தியும்இரகஸிய தகவல்களை பகிரங்கமாக்கியும்இநாட்டு நடப்புடன் கேலி பேசியும் மனங்களை வெள்ளை அடித்தன. மன்னிக்கவும் கொள்ளை அடித்தன. அதனால் அங்கெல்லாம் மறைவிடங்களை விட்டு வெளியேறி பொது இடங்களுக்கு வந்து சிரிக்கும் சந்தியாக சாட்சியளிக்கின்றன. தெருச் சித்திரம் (STREET ART) வரைகலை (GRAPHIC) கிறுக்கல்; (GRAFFITI) சுவரோவியம் (MURAL) போன்ற பல பெயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து தற்காலத்தில் வாழும் சுவர் ( LIVING WALL) என்ற புதுப் பெயர்; பொலிவு பெறுகின்றது.
மனங்களை கிறுக்கியவர் மறைந்தார் என அண்மையில் இங்கிலாந்து நாட்டவர்; முகநூலில் ஆரம்பிக்க பாங்ஸியின் பெயர்சொல்லியே எக்கச்சக்கமான குறிப்புகள் மிகவும் குறுகிய நேரத்தில் குவிந்தன. பாங்ஸி என்றால் யார் என அறியும் ஆவல் பலரின் தூக்கத்தைத் துரத்தியது.மறுநாள் பார்த்த பொழுது அச்செய்தி தவறு என்ற குறிப்புடன் முன்னையது வாபஸ் பெறப்பட்டிருந்தது. எனினும் கடைகண் பார்வையுடன் மட்டும் எவரையும் கடந்து போக விடாதவர் - பாங்ஸி! மேற்குலகில் குறிப்பாக இங்கிலாந்தில் பல காலமாக வாழும் சுவர்;களுடன் பாங்ஸி (BANKSY) என்ற பெயரும்; விழிக்கும் வீதிகளில் சுவர்களுடன் வாழ்கின்றது. அவர் சுவர்களில் புதுமை புகுத்தும் சைத்திரிகர் மட்டுமல்ல தீவிர அரசியல் ஈடுபாடு உடையவர் திரைப்பட இயக்குனர். உலகின் பல நாடுகளி ன் தலைநகரங்களில் பாங்ஸியின் கைவண்ணம் மக்களின் மகோன்னத வரவேற்பு பெற்றுத் திகழ்கின்றது.
2010 ம் ஆண்டு உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 100 மனிதர்களில் பாங்ஸியும் ஒருவர் என்றது டைம் சஞ்சிகை. ஆனால் அவர் யார் என்பதே தெரியாது சர்வ தேச காவல் துறை நீண்ட நெடுங் காலம் தேடி அல்லாடிக் கொண்டிருந்ததுதான் விசித்திரம். பாங்ஸி என்ற பெயருக்குரியவர் ஆணா? பெண்ணா? அல்லது ஒரு குழுவா? என்பதற்கு ஒரு சிறு தடயம் கூட சிக்காமல் காவல் துறை திணறித் தவிக்க - ஆர்ப்பரிக்கும் அவரது ரஸிகர்கள் அவரது சமூக உணர்வுப் பணிக்காக இதுவரை பல விருதுகளுக்காக சிபார்சு செய்துள்ளனர். அவர் எதனையும் ஏற்கவில்லை.
பாங்ஸியின் தெருச் சித்திரங்கள் வித்தியாசமானவை. ஒரு முறை லண்டன் காவல் துறை சி.சி.ரி.வி(C.C.T.V) கண்காணிப்பு கருவிகளை அவரது சுவரோவியங்களின் புகைப்பட கண்காட்சி நடைபெறவிருந்த மண்டபமெங்கும் பரவ விட்டது. மறு நாள் மண்டப வாசல் மதிற் சுவரில் மிகவும் பெரிய எழுத்துகளில் காவற்துறையை வரவேற்ற வாசகம் ஓர் உலகம் கண்காணிப்பு கமராவின் கீழ் என்றிருந்து பிரமிப்பூட்டியது. - இரவோடிரவாக எழுதிச் சென்றவர் பாங்ஸி. பராமரிப்பதற்கு நிதி பற்றாக் குறை காரணமாக மாநகர சபை சிறாருக்கான விளையாட்டுப் பூங்காக்களை குறைப்பதற்குத் தீர்மானித்த பொழுது PARKING என காணப்பட்ட இடங்களிளெல்லாம் Pயுசுமு என சுருக்கி யு என்ற எழுத்துள் சிறுவர் ஊஞ்சல் கட்டி ஆடுவதாகச் சித்தரித்து எதிர் காலத்தில் வாகன தரிப்பிடங்கள் விளையாடும் திடல்களாகும் என எச்சரித்தார்.
இளவரசி டயானாவை மக்கள் மகாராணி என மகுடமிட்டு BANK OF ENGLAND என்பதை BANKSY OF ENGLAND ஆக மாற்றிய அவரது சாதுரியத்தால் - தாங்கள் வைத்திருக்கும் பணத்தில் இளவரசி டயானா இருக்கின்றாரா என மக்கள் ஆராய முற்பட அப்பொழுது புழக்கத்திலிருந்த போலி நோட்டுகளின் பாவனை இல்லாதொழிந்தது.
அவசர அலுவல்களுக்குக் கூட அசையாதவர்கள் அரண்மனை சிப்பாய்கள் என்பது பொதுவான அபிப்பிராயம். அதனையும் சித்தரிக்கும் விதத்தில் சித்தரித்தார். தொலைபேசி சாவடிகளின் உயிரிழப்பால் உறையும் குருதி பொது மக்களின் குருதியாகவே அந்த நாட்களில் பார்த்தவர்கள் கண்களில் பிசுபிசுத்தது. வெற்றுச் சுவர்களா? அவை போன்ற கொலைக்களங்கள் வேறில்லை என்றார். இது செய்திகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக சுவரில் கிறுக்கியது. தண்ணீரில் அரைவாசி மூழ்கியபடி ஒரு வாசகம் சொல்வது நான் உலக வெப்பமயமாதலை நம்பவில்லை. வீடற்றவர்களை நீங்கள் வீதியோரம் கண்டிருக்கலாம். அவர்களுக்கு தேவையானது மாற் றம் மட்டுமே என்பதனை அவர் அரசினருக்கு உணர்த்;திய விதம் சில்லறைத்தனமானதல்ல! பாதிப்படைந்தவர்கள்தான்; முண்டியடித்துக் கொண்டு சுவரோவியங்களைப் பார்ப்பார்கள் என்ற நிலைமாறி பரவசப்படுபவர்கள்தான் முதலில் பார்ப்பார்கள் என்ற மாற்றத்தை தந்தவர் பாங்ஸி என்பதை காலம் கட்டாயம் சொல்லும். ஓன்றுக்கும் அஞ்சாத அவரின் அலட்சிய கர்வம் அப்பொழுது போற்றப்படும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.