இப்பாடலின் சிறப்பு 'திரையிசைத்திலகம்' கே.வி.மகாதேவனின் இசை, டி.எம்.எஸ்ஸின் குரல், கவிஞர் அ.மருதகாசியின் கருத்துமிக்க வரிகள் ஆகியவைதாம். 'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' போன்ற வரிகள் கேட்கையிலேயே உள்ளத்தில் உற்சாகம் பொங்கி எழும். உழைத்து பிறந்த மண்ணை முன்னேற்ற வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும்.
இப்பாடல் இடம் பெற்றுள்ள 'விவசாயி' திரைப்படம் பற்றிய ஒரு தகவல்: எம்ஜிஆர் 67இல் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சமயம் அங்கு அவரைப்பார்க்கச் சென்ற சாண்டோ சின்னப்பா தேவர் அவருக்கு இப்படத்தில் நடிப்பதற்காக முற்பணம் கொடுத்தாராம். படமும் 67 தீபாவளியன்று வெளியாகி நூறு நாட்களைக்கடந்தோடி வெற்றி பெற்றது.
என் பால்ய பருவத்தில் வவுனியா றோயல் திரையரங்கில் பார்த்த திரைப்படங்களிலொன்று 'விவசாயி'. இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் கூற்றொன்றும் இச்சமயம் நினைவுக்கு வருகின்றது. ஒரு முறை அவர் கூறினார்: 'கே.வி. மகாதேவனின் பல பாடல்களை நான் இன்றும் என் நினைவின் பொக்கிஷங்களாக வைத்திருக்கிறேன்.' இப்பாடலும் அத்தகைய பொக்கிசங்களில் ஒன்று.
https://www.youtube.com/watch?v=0CNplJ-qiN4
கவிஞர் அ.மருதகாசியின் பாடல் வரிகள் முழுமையாகக் கீழே:
இசை: 'திரையிசைத்திலகம்' கே.வி.மகாதேவன்
பாடல் வரிகள் : கவிஞர் அ.மருதகாசி
பாடகர்: டி.எம்.எஸ்
நடிப்பு: எம்ஜிஆர்
திரைப்ப்டம்: விவசாயி
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ....
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ...
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி
விவசாயி ... விவசாயி ....
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி .... விவசாயி ....
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
விவசாயி .... விவசாயி ....
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
விவசாயி .... விவசாயி ....
'விவசாயி' படத்தில் இடம் பெற்றுள்ள கவிஞர் உடுமலை நாராயண கவியின் 'காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது' என்னும் பாடலும் காலத்தால் அழியாத கானங்களிலொன்றுதான். காதலர்களுக்கிடையில் நிகழும் உரையாடலாக அமைந்துள்ள இப்பாடல் சுவையானது. கேட்கையில் இனிக்கிறது.
பாடல் வரிகள் முழுமையாக:
பாடல் வரிகள்: கவிஞர் உடுமலை நாராயண கவி.
இசை: 'திரையிசைத்திலகம்' கே.வி.மகாதேவன்
பாடகர்கள்: டி.எம்.எஸ் & பி.சுசீலா
நடிப்பு: எம்ஜிஆர் & கே.ஆர்.விஜயா
திரைப்ப்டம்: விவசாயி
- கவிஞர் உடுமலை நாராயண கவி -
https://www.youtube.com/watch?v=x1a1HSXVWbA
பெண்:
காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது
தாலிகட்டிக் கொள்ளத் தட்டிக் கழித்தால்
கவலைப் படுகிறது மனசு கவலைப் படுகிறது
காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது
தாலிகட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்
கவலைப் படுகிறது…….
ஆண்:
கட்டிக் கரும்பே கனியே உன்னைத்தட்டிக் கழிப்பேனோ?
நேரம்காலம் பார்த்து முறையாய்ப் பெண்ணும்
கேட்டுக்க வேண்டாமோ? நாளும்பார்த்துக்க வேண்டாமோ?
கட்டிக் கரும்பே கனியே உன்னைத்தட்டிக் கழிப்பேனோ?
நேரம்காலம் பார்த்து முறையாய்ப் பெண்ணும்
கேட்டுக்க வேண்டாமோ?
பெண்:
காலம் நேரம் கடந்தால் இனிமேல்உனக்கு நானில்லை
அன்பே எனக்கும் நீயில்லை
என்னை வேலி போட்ட நிலம் போல் காக்க
தாலி போடோணும் கழுத்தில்மாலை சூடோணும்
ஆண்:
எண்ணம் போலே எல்லாம் நடக்கும்எதுவும் தப்பாது
இனிமேஎதுவும் தப்பாது
இன்னும் என்ன என்ன வேணும்
கேளு என்னை இப்போது
நீயும் என்னை இப்போது
பெண்:
காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது
ஆண்:
நேரம்காலம் பார்த்து முறையாய்ப் பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ?
பெண்:
வீட்டைக் கட்டிக் குடித்தனம் நடத்தி பாத்துக்க வேணும்
என்னை காத்துக்க வேணும்
பட்டினில் மெத்தை கட்டில் அங்கே போட்டுக்க வேணும்
சுகத்தை கூட்டிக்க வேணும்
ஆண்:
முகத்துக்கு மேலே முகத்தை வச்சு
ஒண்ணு கொடுக்க வேணும்
கொடுத்ததை திருப்பி எடுக்க வேணும்
பிறகு தொட்டில் போட வேணும்
கொழந்தைய தூங்க வைக்க வேணும்
நீயும் பாட்டு பாட வேணும்
(காதல்)