மிகவும் எளிமையான, மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் சொற்களைக் கொண்டு காதல் வயப்படும் ஒரு பெண்ணின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் இப்பாமாலையைக் கோத்திருக்கின்றார் கவிஞர் கண்ணதாசன். மெல்லிசை மன்னர்களின் இன்னிசை, பி.சுசீலாவின் குரலும், ஈ.வி.சரோஜாவின் நடன அசைவுகளுடன் கூடிய நடிப்பும் இப்பாடலின் ஏனைய சிறப்பம்சங்கள். பாடலைக் கேட்டு மகிழ:
"நாளெல்லாம் திருநாளாகும்.
நடையெல்லாம் நாட்டியமாகும்.
காதலெனும் வடிவம் கண்டேன்.
கற்பனையில் இன்பம் கொண்டேன்."
இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி
காதலெனும் வடிவம் கண்டேன்.
கற்பனையில் இன்பம் கொண்டேன்.
காதலெனும் வடிவம் கண்டேன்.
கற்பனையில் இன்பம் கொண்டேன்.
மயங்குகிறேன், ஆசைக்கன்னி.
காதலெனும் வடிவம் கண்டேன்.
துள்ளாமல் துள்ளும் உள்ளம்.
மின்னாமல் மின்னும் கன்னம்.
துள்ளாமல் துள்ளும் உள்ளம்.
மின்னாமல் மின்னும் கன்னம்.
துவண்டுவிடும், கொடியைப்போல.
துவண்டுவிடும், கொடியைப்போல.
காதலெனும் வடிவம் கண்டேன்.
கற்பனையில் இன்பம் கொண்டேன்.
மயங்குகிறேன், ஆசைக்கன்னி.
நடையெல்லாம் நாட்டியமாகும்.
நடையெல்லாம் நாட்டியமாகும்.
காதலெனும் வடிவம் கண்டேன்.
கற்பனையில் இன்பம் கொண்டேன்.
மயங்குகிறேன், ஆசைக்கன்னி.