கடைசி இலை - ஆங்கிலத்தில்: ஒ.ஹென்றி தமிழில்: அகணி சுரேஷ் -
- அமெரிக்க எழுத்தாளர் ஒ ஹென்றியின் (O. Henry) “The last Leaf” என்னும் சிறுகதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் எழுத்தாளர் அகணி சுரேஷ். -வாசிங்டன் சதுக்கத்தின் மேற்கே நகரின் ஒரு சிறிய பகுதியில் தெருக்கள் காட்டுத்தனமாகப் போயுள்ளன. அவை வெவ்வேறு திசைகளில் திரும்புகின்றன. அவை "இடங்கள்" என்று அழைக்கப்படும் சிறிய துண்டுகளாக உடைக்கப்படுகின்றன. ஒரு தெரு ஒன்று அல்லது இரண்டு முறை குறுக்கறுத்துச் செல்கிறது. ஓர் ஓவியர் இந்த தெருவில் சாத்தியமான மற்றும் மதிப்புமிக்க ஒன்றைக் கண்டுபிடித்தார். ஓர் ஓவியரிடம் அவர் பணம் செலுத்தாத சில ஓவியப் பொருட்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவரிடம் பணம் இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஒரு மனிதன் பணம் எடுக்க வந்தான் என்று வைத்துக்கொள்வோம். அந்த மனிதன் அந்தத் தெருவில் நடந்து, ஒரு சதமும் பெறாமல் திடீரென்று திரும்பி வருவதைச் சந்திக்கலாம்! நகரின் இந்தப் பகுதி கிரீன்விச் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. பழைய கிரீன்விச் கிராமத்திற்கு ஓவியர்கள் விரைவில் வந்தனர். இங்கு அவர்கள் விரும்பும் அறைகள், நல்ல வெளிச்சம் மற்றும் குறைந்த செலவில் கிடைத்தன. சூ மற்றும் ஜான்சி மூன்று தளங்களைக் கொண்ட ஒரு கட்டிடத்தின் உச்சியில் வசித்து வந்தனர். இந்த இளம் பெண்களில் ஒருவர் மைனேவிலிருந்து வந்தவர், மற்றவர் கலிபோர்னியாவிலிருந்து வந்தவர். அவர்கள் எட்டாவது தெருவில் உள்ள ஒரு உணவகத்தில் சந்தித்தனர். அவர்கள் ஒரே மாதிரியான கலை, ஒரே மாதிரியான உணவு மற்றும் ஒரே மாதிரியான ஆடைகளை விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் அங்கு கண்டுபிடித்தனர். எனவே ஒன்றாக வாழவும் வேலை செய்யவும் முடிவு செய்தனர்.