முன்னுரை
இலக்கியங்கள் அவையவை தோன்றிய காலத்துச் சமுதாயத்தை வெளிக்கொணர்ந்து காட்டும் காலக்கண்ணாடிகள் எனலாம். இவ்வகையில் புதின இலக்கியமும் தான் தோன்றிய காலத்துச் சமுதாயத்தைப் படம்பிடித்துக் காட்டத் தவறவில்லை. இப்புதின இலக்கியம் தன் காலச் சமுதாயத்து நிகழ்ச்சிகளைக் கூறுவதன் வாயிலாக வருங்காலச் சமுதாயத்தைத் திருத்த அல்லது நல்வழிச் செலுத்த முனைகின்றது. தற்காலத்துப் புதின ஆசிரியர்கள் பலருள்ளும் சு.சமுத்திரம் சமுதாய சிக்கலை இலைமைறை காய்ப்போல் அல்லாமல், அங்கை நெல்லியெனப் பளிச்சிடக் கொணர்வதை அறிந்தேன். என் உணர்வுக்கு ஏற்றாற் போலவே அவருடய வேரில் பழுத்த பலாவும் சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றது. அவருடைய இன்னொரு நூலாகிய நெருப்புத் தடயங்கள் என் நினைவுக்கு வந்தது. நெருப்புத் தடயமும் வேரில்பழுத்த பலாவைப் போலவே சிறந்தது என எண்ணியதால், அப்புதினத்தின் சிறப்புக் கூறுகளான உரையாடல், மொழி நடை போன்றவை கதையில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் அவ்வாறு அமைய வேண்டியதன் அவசியம் என்ன என்பதையும், அது ‘நெருப்புத் தடயங்கள்’ என்னும் புதினத்தில் எங்ஙனம் அமைந்துள்ளது என்பதையும் ஆராய்ந்து விளக்கிக் கூறுவதே இவ்வாய்வின் நோக்கம்.
உரையாடல்
உலகம் இன்று துடிப்புடன் இயங்குகிறது என்றால் அதன் முக்கியகாரணம் ஒருவர் ஒருவரோடு மேற்கொள்ளும் கருத்துப் பரிமாற்றமே ஆகும். இந்தக் கருத்துப் பரிமாற்றம் உரையாடல்கள் மூலந்தான் நடைபெறுகிறது. அன்றாட மனித வாழ்வில் எவ்வாறு உரையாடல் இன்றியமையாத ஒரு இடத்தைப் பெறுகிறதோ அதுபோல் மனிதனால் படைக்கப்படும் அனைத்து இலக்கி;யங்களிலும் உரையாடல் அவசியமாகிறது. ஏனென்றால் இலக்கியம் என்பது, தான் வாழும் சமுதாயச் சூழல்களால் பாதிக்கப்பட்ட மனிதனால் அச்சமுதாயத்திலுள்ள பிற மக்களுக்காக அச்சமுதாயத்தை உணர்ச்சி மிக்க வார்த்தகளால் படைத்துக் காட்டுவதாகும்.
இலக்கியங்களில் வரும் உரையாடல்கள் பல வகையாக இருக்கும். சில இடங்களில் பாத்திரங்கள் தங்களுக்குள் உரையாடுவதாக அமையும். வேறு சில இடங்களில் பாத்திரங்களோடு உரையாடுவதாய் அமையும். இன்னும் சில இடங்களில் பாத்திரங்களுக்கும் வாசகர்களுக்கும் இடையில் உரையாடல் அமைவதாய் இருக்கும். இப்படி அமையும் உரையாடல்கள் இலக்கியத்தின் சிறப்புக்குத் துணை செய்ய வேண்டும். புதினத்தில் இடம்பெறும் உரையாடல்,
“நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ கதைக்கோப்பின் இயக்கத்திற்குத் துணை செய்ய வேண்டும், அல்லது பாத்திரங்களை விளக்குவதாய் அமைய வேண்டும்”1 என்பர்.
“மேற்கூறப்பட்ட இரண்டு தேவைகளுக்கும் உதவாத உரையாடல் இடம் பெறுமாயின் அது எவ்வளவு சுவையுடையதாக இருந்தாலும் அதைக் கடிந்து ஒதுக்க வேண்டும். இ;ல்லையேல், கதைக்குத் தொடர்பில்லாத உரையாடல் புதினத்தின் கதையைச் சிதைக்கும்”2
என தா.ஏ.ஞானமூர்த்தியின் கூற்று ஈண்டு நினையத்தக்கது.
“புதினம், சிறுகதை, கவிதை, நாடகம் என எந்த ஒரு இலக்கிய வகையிலும் இடம்பெறும் உரையாடல், உரையாடுபவரின் ‘தராதரம்’ கல்வியறிவு, உலகத்தை அறிந்திருக்கும் தன்மை, உணர்வுகள், பிறரோடு கொண்டுள்ள உறவுகள் போன்றவற்றைத் தெளிவாகக் காட்டும்”3 என்பர்.
“நவீனத்தில் உரையாடல் என்பது மிகச் சாதாரணமாக பொதுச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் வாயிலல்ல, வாசகர்களுக்கு வெறும் தகவல்களைத் தரும் சாதனமும் அல்ல, ஒரு குறிப்பிட்ட மனிதரையோ இடத்தையோ வருணிப்பதற்கு அதைப் பயன்படுத்துவது கூடாது”4 என்பார் கூற்றும் உடன்பாடுடையதே.
தமிழில் உரையாடல்
“பல நாவலசியர்கள் தங்கள் புலமையைக் காட்டிக் கொள்ளும் வகையில் எழுதி வந்தனர்”5
என்று சிதம்பர ரகுநாதன் கூறியதாக ந.பிச்சமுத்து கூறுகிறார். ஒரு சிலர், காதலாயினும், கையறு நிலையாயினும் ஒரே மாதிரி நடையில், ஒரே மாதிரி வேகத்துடனும் பாவத்துடன் எழுகின்றனர்”6
என்பர் டாக்டர் கைலாசபதி.
பாத்திரப் பேச்சு அல்லது உரையாடல் என்பது, இக்காலப் புதினங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.
“நன்கு அமைந்த உரையாடல் படிப்போர்க்கு இன்பம் தருகிறது. பாத்திரங்களைப் பற்றி நன்கறிந்து கொள்வதற்கும் நாவலில் அமைந்துள்ள கதை உண்மையில் நிகழ்ந்திருக்கலாம், என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்துவதற்கும் உரையாடல் பயன்படுகிறது. நல்ல முறையில் எழுதப்பெற்ற உரையாடல், கதையை நன்கு விளக்குகின்றது என்றும், அளவாகவும் பொருத்தமான இடங்களில் கையாளப்படும் உரையாடல் நாவலாசிரியரின் கலைத் திறனுக்குச் சாட்சியாகக் கருதலாம்”7 என்றும் கூறுவர்.
உரையாடல் கதைப்பின்னலின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. அதன் முக்கியப் பணி கதைமாந்தர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு அவர்களுடைய உணர்ச்சிகள், நோக்கங்கள், இன்ன பிறவற்றை வெளிப்படுத்துவதாகும். கதை நிகழ்ச்சிகளில் தொடர்பு கொள்ளும் கதைமாந்தர்கள், கதை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அவர்கள் அடையும் நிலை ஆகியவற்றையும் உiராயடல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
“கதையில் அமையும் உரையாடல்கள், வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் உரையாடல்களின் போக்கை ஒட்டியிருந்தால் போதும். அன்றாட உரையாடல்கள் அப்படியே இருத்தல் தேவையில்லை. தெளிவில்லாத சொற்களையும் தேவையற்ற சொற்களையும் விட்டுக் கருத்தையும் உணர்ச்சியையும் உணர்த்தும் சொற்களை மட்டும் அமைத்தால் போதும். சுவையற்றப் பகுதிகளை விட்டுக் கதைக்கு இன்றியமையாத, சுவையான பகுதிகளை மட்டும் அமைத்தல் வேண்டும். கற்பவரின் சிந்தனையை வேறு போக்கில் ஈர்;த்துச் செல்லாமல் கதைக் கருவையே நோக்கிச் செல்வதாக அமைத்தல் வேண்டும். கதை மாந்தரின் பண்புகளையும் விளக்கவல்லதாக அமைதல் வேண்டும்”8
என்பார் கூற்று இவண் நினைக்கத் தக்கதாகும்.
“யார் யார் வாயில் எத்தகைய கருத்துக்களும் சொற்களும் பிறக்கும் என்பதைக் கற்பனையில் உணர்ந்து, அரவர்களுக்கு ஏற்ற சொற்களை அமைத்தல் வேண்டும். நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு அமைந்த உரையாடலாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு அமையும் போது, சில இடங்களில் அன்றாடப் பேச்சிலேயே அழகான தொடர்களும், சொல்லோவியங்களும் வாய்த்தல் காணலாம்”9
என்பர் டாக்டர் மு.வ. அவர்கள்.
நெருப்புத் தடயங்களில் வரும் உரையாடல்கள்
காதலர்களான தமிழரசியும், தாமோதரனும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் போது நடைபெறும் உரையாடல்களைக் காணலாம்.
“எப்டி இருக்கீங்க…
எப்டி இருக்கீங்க…
மெட்ராஸ் எப்டி இருக்கு?....
மண்டைக்காடு எப்டி இருக்கு?....
எப்போ புரமோ~ன்?....
ஒங்களுக்கு எப்போ?....”10
இப்படி எதார்த்தமாகத் தூய தமிழில் இல்லாமல் பேச்சுத் தமிழில் அப்படியே அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. ஏனெனில், இதுவே இயல்பான நடை.
காதலர்கள் இருவர் பேசிக் கொண்டிருக்கும்போது இடையே ஒருவர் திடீரென்று பிரவேசித்தால் அவர்கள் தப்புத்தப்பாக உரையாடுவதைக் காணலாம். அதைச் சமுத்திரம் அவர்கள் கதையிலும் அப்படியே குறிப்பிட்டிருப்பது அவருடைய எதார்த்த நடையைக் காட்டுகிறது. தமிழரசியும் தாமோதரனும் காதல்மொழி பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கே கலாவதி திடீரென வருகிறாள். இதை அறிந்த தாமோதரன் தமிழரசியிடம் காதல்மொழி பேசியதை மறைக்க,
“தமிழில் காலேஜ்தான எடுத்தீங்க… ஸாரி…பி.ஏ.வுல எக்னாமிக்ஸ் எடுத்தீங்க….பிறகு ஏன் எம்.ஏ.வுல தமிழ் எடுத்தீங்க? க~;டமாய் இருந்திருக்குமே”11
என்று தப்பாகப் பேசுகிறான்.
சில புதினங்களில் பாத்திரங்கள் தங்களுக்குள்ளே பேசுவதைப் போல அமைக்கிறார்கள். இப்புதின ஆசிரியரும் சில இடங்களில் பாத்திரங்கள் தங்களுக்குள் பேசுவதைப்போல அமைத்திருக்கிறார். தன் காதலன் தாமோதரனும் கலாவதியைக் கொடுமைப்படுத்தியதாக நினைத்த தமிழரசி மனசுக்குள்ளேயே பேசுகிறாள்.
“அப்படியானால் என் காதல்.. காதல்… மண்ணாங்கட்டிக் காதல் நாசமாய்ப் போற காதல், ஒரு ஏழைப் பெண்ணைத் தனது தொழில் பலத்தால், போலீசை ஏவி அடித்த இந்த மனிதரோடு, என்ன காதல் வேண்டிக்கிடக்கு? இதோ… இங்கே ஈரக் காயங்களோடு துடிக்கும் இவர்களை அனுதாபத்துடன் நோக்கக்கூட மறுக்கும் இந்த மனிதரை, ஒருத்தி காதலிப்பவளாக இருந்தால், அவள் நிச்சயம் வாழ்க்கையின் மெல்லினங்கள் தெரியாத வல்லினக்காரியாகத்தான் இருப்பாள்”12 என்கிறாள்.
இப்படி அவசியம் ஏற்படுமிடத்தில் பாத்திரங்கள் தங்களுக்குள்ளே உரையாடுவதை ஆசிரியர் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. ஏனெனில், பாத்திரங்களின் அறிவுநிலைக் கேற்ப இத்தகைய உரையாடல்கள் படைக்கப்பட்டுள்ளன.
பொதுவாகக் கிராமத்தில் இரு பெண்களுக்கு நடுவே சண்டை ஏற்பட்டால் எப்படி இருக்குமோ, அதை அப்படியே ஆசிரியர் தம் புதினத்தில் அமைத்திருப்பதைக் காண முடிகிறது. பகவதியம்மாள், கலாவதியைப் பார்த்துத் திட்டும்போது,
“போதுமாடி… இப்பாவது ஒன் மனசு குளிந்துதாடி? சண்டாளி கைகேயி… என் மவுனுக்கு என்ன மருந்துடி போட்டு மயக்கினே? சண்டாளி… அடுத்துக் கெடுத்த முண்ட”13
எனத் திட்டுகிறாள். ஆசிரியர் இப்படி அமைத்திருப்பது அவரது எதார்த்தத்தைக் காட்டுகிறது.
மொழிநடை
பாத்திர உரையாடல்களை, சிலர் தனித் தமிழில்தான் இருக்க வேண்டும் என்றும், வேறுசிலர் பேச்சுமொழியில்தான் இருக்க வேண்டும் என்றும் வாதிடுவர்.
“அன்றாட வாழ்வில் இடம்பெறும் மனிதன், ஆசாபாசம், வெற்றி, தோல்வி, விருப்பு, வெறுப்புகளைக் கொண்ட சாதாரண மனிதன். எனவே புதினத்தில் எழுத்து வடிவம் பெறும்போது தனித்தமிழில் பேசப்பட வேண்டும்”14
என்பர். மேலும்,
“உணர்வுகளை எழுப்ப உதவும் வகையிலேயே படைப்பிலக்கியத்தில் மொழிநடை பயன்படல் வேண்டும்”15
என்று டாக்டர் கைலாசபதி கூறும் கூற்று ஈண்டு நினைக்கத் தக்கது.
“நவீனம் எவ்வளவு தான் கதைக் கட்டுப்கோப்பு நிறைந்ததாக இருந்தாலும், பாத்திரங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஏற்ற மொழிநடை இல்லை என்றால் அஃது ஒரு பயங்கரமான விலங்கு போன்றது”16
என்பர். ஒரு எழுத்தாளளை அடையாளங் காட்டுவது அவனின் மொழிநடையே. ஆகவே,
“நவீனம் யதார்த்தமாக அமைய வேண்டுமென்றால் உரையாடல், சமகால மொழிநடையில் அமைய வேண்டும்”17 என்பர்ஷ
“ஓரிரு வருடத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்திற்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்”18
என்பார் கூற்றும் நோக்கத் தக்கதாகும்.
“புதுமைப்பித்தன் நடையின் தலையாய பண்பு கற்பனை வளமும், சிந்தனை வளமும், மிகுந்த நகைச்சுவையும், கி;ண்டலும், குத்தலும் கலந்திருப்பதுதான். இவை மூன்றும் உறவு உடையது தான். ஆனாலும், அவை வேறுபட்டன. படிப்போரிடத்து பெருஞ்சிரிப்பையோ, புன்சிரிப்பையோ தோற்றுவிப்பதுதான் நகைச்சுவை. அதுதவிர அதற்கு வேறு நோக்கம் இல்லை. நகைச் சுவையோடு குறைகளைக் ‘கூறாமல் கூறுவது’ நயம்பட உரைப்பது, போட்டுடைப்பது கிண்டல் எனப்படும். குறை கூறுதலே ‘குத்தல்’ ஆகும் என்று கூறுவர்”19
இது இப்பதின ஆசிரியர் சமுத்திரத்திற்கும் பொருந்தும். இனி இப்புதின ஆசிரியரின் மொழி நடையைக் காணலாம்.
திரு.சமுத்திரம் அவர்களின் நடை மிகவும் எளிமையானது. திருநெல்வேலி மாவட்டப் பேச்சு வழக்கிலே புதினத்தை அமைத்து இருக்கிறார். இவரது நடையில், கிண்டல், குத்தல், நகைச்சுவை முதலியன காணப்படுகின்றன. மேலும் இப்புதினத்தை யதார்த்த நடையில் எழுதியிருக்கிறார். இவரது கதையில் ஆங்காங்கே பழமொழிகளும், உவமைகளும், ஆங்கிலச் சொற்களும் காணப்படுகின்றன.
கிண்டல் நடை
தமிழரசியை எல்லோரும் தமிழு…தமிழு…. என்று கூப்பிடுகிறார்கள். அதை ஆசிரியர் சொல்லும்போது,
“தமிழு…தமிழு…தமிளு.. என்று பல சத்தங்கள் கேட்டதே தவிர தமிழன் சாரம் கேட்கவில்லை”20
என்று கிண்டலாய்க் கூறுகிறார். தமிழரசியைப் பார்க்க வந்த பொன்மணியை ஆசிரியர் பெயர் மட்டும் சொல்லாமல்,
“பத்தொன்பது பொன்மணி”21
என்று வயதையும் சேர்த்துக் கிண்டலாகக் கூறுவதையும் பார்க்க முடிகிறது.
தமிழரசியைப் பகவதி அம்மாள்,
“குளிச்சிட்டு சாப்புடப் போறியா? சாப்பிட்டு குளிக்கப் போறீயா? அம்மா சொல்வது சென்னையிலும் இதர நகரங்களிலும் இப்போது நடைபெறும் பட்டி மன்றங்களுக்கு அருமையான தலைப்பு என்பது போல், பல பட்டி மன்றங்களில் கலந்து கொள்ளும் தமிழரசி ரசித்தபடி நின்றாள்”22
என்று ஆசிரியர் கூறுகிறார்.
இங்கே ஆசிரியர் இன்றைய பட்டி மன்றங்களின் தலைப்புக்களைக் கிண்டல் செய்வது புலனாகிறது. கலாவதியைக் கொடுமைப் படுத்தியவர்களைத்
“தோட்டத்துப் பாண்டவர்கள்”23
என்றும்,
“கொலைதேச பிரஜைகள்”24
என்றும்,
“கொலைப் பாசம்”25
கொண்டவர்கள் என்றும் கிண்டலாய்க் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
குத்தல் நடை
தமிழரசியைப் புலன் விசாரணை செய்யக் காவல் அதிகாரிகள் போலிஸ் ஸ்டேசனுக்கு அழைக்கிறார்கள். அப்புலன் விசாரணைப் பற்றி ஆசிரியர் கூறும்போது,
“புலன் விசாரணை பற்றி எங்களுக்குத் தெரியாதா? ஏழை பாளைகளுடைய… கண், காது, மூக்கு முதலிய ஐம்புலன்களையும் லத்திக் கம்பால விசாரிக்கறதைத்தான் நீங்க புலன் விசாரணைன்னு சொல்றீங்க”26
என்று புலன் விசாரரணயைப் பற்றிக் குத்தலாகக் குறிப்பிடுகிறார். புலன் விசாரணை என்பது துப்புத் துலக்கும் விசாரணை எனவும் புலன்களை (உறுப்புகளை) விசாரிக்கும் விசாரணை எனவும் இருபொருள் பட இங்கே அமைத்துக் குத்தல் அமைத்துள்ளதைக் காண்கிறோம்.
வீதியில் ஏதோ சப்தத்தைக் கேட்ட தமிழரசி வெளியே வருகிறாள். சித்தப்பா வீட்டுக்குப் போக நினைத்தவள்,
“தெருவில் போலிஸ் ஜீப்பைப் பார்த்தாள், முத்துலிங்கம் மச்சானின் மோட்டார் பைக்கையும் கண்டாள். அவர் போலிசிற்கு வேண்டப்பட்டவன் என்பதைக் காட்டும் வகையில் அவரது பைக், போலிஸ் ஜீப்பை உரசிக் கொண்டிருந்தது”27
என்று காவல் அதிகாரிகளைக் குத்தலாகக் குறிப்பிடுகிறார்.
நகைச்சுவை நடை
தமிழரசியும் தாமோதரனும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்து உரையாடுகிறார்கள். அதை ஆசிரியர்,
“ஒருவரை ஒருவர் கண்முட்டப் பார்த்து, வாய்முட்டப் பேசிக்கொண்டிருந்தார்கள்”28
என்று நகைச்சுவையோடு கூறுகிறார். இப்புதினத்தில் வரும் ஒரு கதாபாத்திரமான மண்டயனைப் பற்றி ஆசிரியர் கூறும்போது,
“இருபத்தி நான்கு வயதுள்ள அந்த உள்;ர் டெய்லருக்குத் தலையின் பரப்பளவு அதிகம், எப்போதும் தையல் தொழிலை விட்டுவிட்டுத் தையல்களைப் பார்ப்பதையே தொழிலாகக் கொண்டவன்”29
என்று நகைச்சுவை கலந்த கிண்டல் நடையில் உணர்த்துகிறார். இங்குத் தையல் என்றது தைத்தலையும், பெண்ணையும் குறித்து நகை தோற்றுவிப்பதைக் காணலாம். பேருந்திலிருந்து கீழே இறங்கிய தமிழரசி அவளுடைய தோழிகளுக்குக் கையை ஆட்ட அதற்குப் பதிலாக டிரைவர் “கீரை’ ஆட்டினர் என்று நகைச்சுவை சுவையோடு குறிப்பிடுகிறார்.
புழமொழிகள்
பழமொழிகள் எல்லாம் சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டுவனவாகும். அக்கால மனிதர்கள் நாம் கண்ட அனுபவங்களைப் பழமொழியாக வைத்து, வளரும் சமூகத்திற்கு ஒரு வாழ்க்கைப் பாடமாக வைத்தனர். இப்புதினத்திலும் ஆங்காங்கே பழமொழிகள் இடம்பெற்று மிளர்கின்றன. அவ்வகையில் இப்பதினத்தில் இடம்பெறும் பழமொழிகள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. அவை,
“பள்ளிப் படிப்பு பள்ளிகளுக்கு உதவுமா”30
“இனம் இனத்தோடு, வெள்ளாடு தன்னோடு”31
“படுகளத்தில் ஒப்பாரி கூடாது”32
“ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம்
உள்ளே இருக்குமாம் ஈறும்பேனும்”33
“ஊருக்குச் சொல்லுமாம் பல்லி…
காடிப்பாணைக்குள்ளே விழுமாம் துள்ளி”34
“யானை இறந்தாலும் ஆயிரம் பொன்”35
“ஒன் கண்ணில் உள்ள உதிரத்தைக் கவனிக்காமல்,
பிறத்தியார் கண் துரும்பை கவனிக்காதே”36
“தொட்டிலையும் ஆட்டி குழந்தையும் கிள்ளி விடல்”37
“ஊருக்கு உபதேசம் ஒனக்கில்லை”38
ஆகியனவாகும்.
உவமைகள்
எந்த ஒரு பொருளையும் உவமைப்படுத்திக் கூறுவது எக்காலத்திலும் மாந்தர் இயல்பு. ஒருவர் ஒரு பொருளை விளக்குவதற்கு, அந்தப் பொருள் போலுள்ள தமக்குத் தெரிந்த பொருளைக் கொண்டு உவமை காட்டுவதியல்பு. இவ்வடிமைப்படையில் இப்புதின ஆசிரியரும் ஆங்காங்கே உவமைகளைக் காட்டிச் செய்திகளை விளக்குகிறார். அவ்வகையில் இப்புதினத்தில் இடம் பெறும் உவமைகள் சில கீழே தரப்பட்டிருக்கின்றன. அவை
1. ராமபானம் துளைத்த ராவணன் போல் (ப.102)
2. ஆலங்கட்டி மழைபோல் (ப.103)
3. மகாத்மா காந்தி பார்த்த கன்றுக்குட்டி போல் (ப.143)
4. வறண்ட கிணற்றில் சிறிய இடைவெளியில் ஊறிய நீர்போல் (ப.145)
5. பாம்பு படமெடுத்து ஆடுவது போல் (ப.147)
6. கட்டுவிரியன் பாம்பு போல் (ப.149)
7. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல் (ப.172)
8. பிரஷ்ஷர் குக்கர் மாதிரி (ப.200)
9. கோப்பெருந்தேவி போல் (ப.264)
ஆகியவைகளாகும்.
இதில் வரும் பிரஷ்ஷர் குக்கர் மாதிரி, கோப்பெருந்தேவி போல் போன்ற உவமைகள் இவ்வாசிரியரால் புதியதாகக் கூறப்பட்டிருக்கின்றன.
ஆங்கிலச் சொற்கள்
சங்க இலக்கிய உரையாசியர்கள் சிலர் தங்கள் உரையில் தமிழும் வடமொழிச் சொற்களும் கலந்த நடையில் எழுதியுள்ளனர். சில வைணவ நூற்களின் உரையில் தமிழும் நிறைய வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதியிருப்பதைக் காண முடிகிறது. மறைமலையடிகள் போன்றோர்கள் தனித் தமிழ் நடையில் எழுதியிருப்பதைக் காண்கிறோம். ஆங்கிலேயரின் வரவால் தனித்தமிழ் ஆங்காங்கே ஆங்கிலமும் கலக்கலாயிற்று. இந்நடையைத் தமிழ் ஆங்கில மணிப்பிரவாள நடை என்று கூடச் சொல்லலாம். இன்று நாம் பேசும் போதுகூட, தூய தமிழில் பேச முடிவதில்லை. ஆங்கிலம் கலந்துதான் பேச வேண்டிருக்கிறது. அந்த அளவிற்கு ஆங்கிலத்தின் தாக்கம் தமிழில் ஏற்பட்டுள்ளது. இத்தாக்கம் இக்காலப் புதின ஆசிரியர்களிடமும் ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்புதினத்தைப் படிப்பார்க்கு புலனாகும். அவ்வகையில் இப்புதினத்தில் இடம் பெறும் ஆங்கிலச் சொற்களைப் பார்ப்போம்.
இப்புதினத்தில் இடம் பெறும் ‘ஆங்கிலச் சொற்கள்’ (பக்க எண்களுடன்)
(பிளான், எவர்சில்வர், சிமெண்ட்சிலாப், ப.1), (டிஸ்ஸிபிளின், லா அண்ட் ஆர்டர், மெச்சூர், இம்மெச்சூர்;, ஜெனரல், ப.21), (பி.ஏ.வுல எக்னாமிக்ஸ், எம்.ஏ.வுல, ப.25), (ஹைஸ்கூல், டீச்சராய், பம்ப்செட், ப.28), (போலிஸ், இன்ஸிடெண்ட், ப.29), (டிராமா, யூனிபாரம், ப.30), (அஸில்டெண்ட் புரபசராகி, டூட்டில, சப்-இன்ஸ்பெக்டர், ஒயரிங், கனெக்ஷன், ப.32), (டச்சப், கலர் பல்புகளும், ப.33)
(ஒரு செக்ஷனை, ப.40), (காமிரா, அட்ஜெஸ்ட், போட்டோ, போஸாக, கிளாஸ்மேட், ப.45), (ஆல்ரைட், டிபார்ட்மெண்ட், டிரான்ஸ்பர், டைரக்டர் ஜெனரல் டி.வி., இன்டர்வியூ, போலிஸ் கமிஷன், ஹப்பிக், புரமோஷன், ஆப்டர் ஆல், ரிசப்ஷன், ப.52), (ஸ்டெடியாக, ப.56), (மோட்டார் பைக், ஸ்டார், லெதர்பேக், ரூட்,ப.56), (பைவர், ப.61) (ஜாக்கெட், ப.76), (காபியை, கலர்.ப.77), (பாலன்ஸ், ரவுடிங்க, ப.81), (பெட்டிஷன், டிக்னிட்டி, ப.82), (மேடம், லிமிட், ஆக்ஷன், கவர்மெண்ட், அக்கூஸ்ட், பிளீஸ், டெல்மி, மைனர், ரிக்கார்ட்,ப.91), (செக்கப், ஸ்டேட்மென்ட்டாய், அபி~pயலாய், ப.92), (பிளீஸ்..டூ.. சம்திங்….ப.96), (கியூவில், ஸ்டேஷன், குயிக்,ப.127), (ரைட்டர், வேட்டாகுமன்னால், கேஸ், பட், லோகல், ஆப்,ப.131), (ஐ டோன்ட் கேர்,ப.133), (லோகல் லீPடர், ரிப்போர்ட், சூட்கேசுடன், ப.134).
(அரெஸ்ட் வாரண்ட், எக்ஸ்பிரஸ் பஸ், ஐ அம் சாரி தமிழு, மிஸ், ப.135), (ரயில்வே ஸ்டே~ன், ப.136), (லூட்டி, சேடிஸம்,ப.141), (லாட்டரி, பப்ளிசிட்டி,ப.148), (மிஸ்டர், சர்வீஸ், ஆக்~ன்,ப.161), (எஸ்டேட், கார், ஒர்க்கர்ஸ், அசோசியே~ன், லேபர், யூகேன் கோ, ப.162), (பேப்பர் வெயிட்,ப,163), (நம்பர், மோட்டார் சைக்கிள், ப.164), (இன்டர்பியரன்ஸ், டிரங்கால், லேட்டஸ்ட் சுட்சுவே~ன், பிளட்பிர~;~ர், டெலிபோன்,ப.166), (லைட்னிங், ஹலோ, நைட்ல, தேங்யூ, சீரியஸா, ரிஸீவர், ப.167)
(கெட் அவுட்,ப.168), (ஹாஸ்டல் பீஸ், பெஞ்சில், சலூட்,ப.169), (லாக்கப், இன்புளுயன்ஸ், மிஸ்ஸஸ், ப.175), (எப்.ஐ.ஆர்., ப.176), (டிஸ்ஐர்ஜ்,ப.177), (எம்.ஜிஆர்.ப.179), (ஃபாதர், டீக்கடை, ப.180), (கம்பெனி செகரட்டரி, ஸ்வீட் சிக்ஸ்டீன், ப.187), (டான்ஸ், பெட்~Pட், டிரான்ஸிஸ்டர், டீலக்ஸ் பஸ் டிரைவர், மைனாhரிட்டி, கிளீனர், ஹாஸ்டல் மேட், ப.188), (ஓட் இஸ்திஸ், டேலண்ட், போர், டாக்டரேட், சப்ஜெக்ட், ப.192), (டாபிக், எம்.ஃபில்., ப.193), (ஹோல்டான், ஹோல்டான், ப.195), (பஸ் ஹார்ன், ப.199), (ஜ…ஸீ…, பிரஷ்ஷர் குக்கர், பிளாக்மெயில், ப.200), (நோ.. தேங்க்ஸ், பிரதர், நீர், ப.201), (லீவ், ஸாரி, ஒனர், சப்ரிஜஸ்டிரார், கம்ப்ளெய்ன்ட், ப.206), (ரிஜிஸ்டர், பிளஸ்டூ, மைனஸ், சினிமா, டூர், ப.207), (பேட்மிட்டன், ப.208), (மைனர் செயின், டிரிம், ப.210).
(ஏஸி, பொலிடிக்கல், டொனேன், காக்டெயல், ஜெயில், ப.21), (எஸ்.பி., எஸ்டேட், ப.212), (இன்சார்ஜ், ஜீனியர், ப.213), (“டேட்டஸ், ஆபிஸர்),ப.214), ( போஸ்ட்மார்ட்டம், வெர்~ன், குயிகைட், பார்ட்டி, ப.216), (பாரேட், ப.218), (கோ… மேன் ஐ சே…ஓபேய் மை ஆர்டர்…, பெர்மி~ன், ப.223).
(ஒன்மினிட், பிளீஸ், கம், பேக்டரி, ப.224), (டெலிபோன், என்குயர், இன்குயரி, இன்வெஸ்டிகே~ன், எவிடென்ஸ், ஒ.பி.அட்மி~ன், இன்குஸ்ட், ப.225), (லைன், அக்கூஸ்ட், ப.227), (ஐ..ஸே..யூ.. கெட்அவுட்..ஓபேய் மை கமாண்ட், அக்கூஸ்ட், ஆண்டிஸிபேட்டரி, பெய்ல், ஸ்டேட்மெண்ட், ப.228), (சார்ஜ், லீங் பெட்டர், நந்திங் டூயிங், ப.229), (ஆட்டியன், கிளாவர், சூட்கேஸ், ப.235), (வாபஸ், ப.239), (என்.ஸி.ஸி, ப.243), (அஸிஸ்டென்ட், ஹைகமிஷன், ப.244), (குட், பேட், ப.256), (சர்வர், லாட்ஜ், டாக்சி, அட்ரஸ், அவென்யூ, வாட்ச்மேன், ப.259), (ஸ்கௌண்டிரல், ப.263), (வார்டன், டைகர், ப.265).
(ஜென்டல்மேன், லேடி…கில்லர், டர்ட்டி பெல்லோ. டாங்கி, ப.266), (செக்ணட் ப.267), (பீ ஹீயர், ~வில்கட், பீகாம், இண்டலிஜெனட், கேர்ல், ப.270), (பூவர்மேன், ப.274), (செண்ட்ரல் ஸ்டே~ன், டிக்கட், ப.276), (பிளாட்பாரம் பம்பாய் மெயில், சிட்டி, ப.277), (கலெக்டர், ப.288), (பிளாக் மார்ச், கமி~ன், கோர்ட், ப.296). போன்றவையாகும்.
முடிவுரை
இதுகாறும் கூறியவற்றான் மொழிநடை, உலகியல்பாய் அமைந்துள்ளமை புலப்படுத்தப்பட்டுள்ளது. உரையாடல்கள் யதார்த்தமாக அமைந்துள்ளமை காட்டப்பட்டுள்ளது. பாத்திரங்கள் தங்களுக்குள்ளே உரையாடும் போது, கிண்டல் நடை, குத்தல் நடை, நகைச்சுவை நடை ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளமை புலப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே பழமொழிகளையும் உவமைகளையும் ஆங்கிலச் சொற்களையும் பயன்படுத்தி இருப்பதும், கண்டறிந்து சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அடிக்குறிப்புகள்
1. தா.ஏ.ஞானமூர்த்தி, இலக்கிய திறனாய்வியல், ப.314
2. மேற்படி, ப.314
3. ந. பிச்சமுத்து, திறனாய்வும் தமிழ் இலக்கியக் கொள்கைளும், ப.239
4. மேற்படி, ப.239
5. மேற்படி, ப.240
6. மேற்படி, ப.240
7. W.H.Hudson, Good dialogue greatly brightens of harrative and its judicious and finally
use is to be negarded as evidence of is writer is technical skill, An Introduction to study
of Literature,P.154.
8. மு.வரதராசனார், இலக்கிய மரபு, ப.32
9. மேற்படி, ப.34
10. சு. சமுத்திரம், நெருப்புத் தடயங்கள், ப.22
11. மேற்படி, ப.25
12. மேற்படி, ப.87
13. மேற்படி, ப.89
14. ந.பிச்சமுத்து, திறனாய்வும் தமிழ்இலக்கியக் கொள்கைகளும், ப.239
15. மேற்படி, ப.241
16. மேற்படி, ப.242
17. மேற்படி, ப.239
18. மேற்படி, ப.240
19. தி.முருகரத்திரனம், புதுமைப்பித்தன் சிறுகதைக் கலை, ப.121
20. சு.சமுத்திரம், நெருப்புத் தடயங்கள், ப.1-2
21. மேற்படி, ப.3
22. மேற்படி, ப.10
23. மேற்படி, ப.141
24. மேற்படி, ப.142
25. சு.சமுத்திரம், நெருப்புத் தடயங்கள், ப.143
26. மேற்படி, ப.93
27. மேற்படி, ப.78
28. மேற்படி, ப.34
29. மேற்படி, ப.13
30. மேற்படி, ப.69
31. மேற்படி, ப.74
32. மேற்படி, ப.96
33. மேற்படி, ப.112
34. மேற்படி. ப.125
35. மேற்படி, ப.172
36. மேற்படி, ப.189
37. மேற்படி, ப.191
38. மேற்படி, ப.279
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.