அன்பின் நண்பர்களுக்கு! எதிர்வரும் சனிக்கிழமை நவம்பர் 23, 2024 பி.ப 4:00 மணிக்கு எனது இரு நூல்களின் வெளியீடு இடம்பெறவுள்ளது. தேடகம் இந் நிகழ்வை ஒருங்கமைக்கிறது. இந்நிகழ்வில் நூல் பற்றிய உரைகளை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர் க. நவம், எழுத்தாளர், இதழாசிரியர் காலம் செல்வம், இதழாசிரியர் அன்பு ஆகியோர் நிகழ்த்தவிருக்கிறார்கள். சிறுகதை, நாடக வாசிப்புகளை தர்சன், யோகா வளவன், இலங்கதாஸ், களப்பூரான் தங்கா, சுடரகன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளார்கள். பாடல்களை களப்பூரான் தங்கா, சரிகா, நரேஷ் ஆகிய கலைஞர்கள் பாட இருக்கிறார்கள். இந்நிகழ்வை சிறப்பிக்க நண்பர்கள் அனைவரையும் நட்புடன் அழைக்கின்றேன். சந்திப்போம்.