பாதுகாக்கப்பட வேண்டிய மந்திரிமனை! இன்னும் காலம் கடந்து போய்விடவில்லை! பாதுகாப்போம்! வரலாற்றைப் பேணுவோம்! - வ.ந.கிரிதரன் -

ஏற்கனவே போதிய பராமரிப்பற்ற நிலையில் இருந்த யாழ் மந்திரிமனைக் கட்டடம் அண்மைக்காலப் பெருமழையினால் மேலும் சிதைவுகளுக்கு உள்ளாகியுள்ளது.. அதன் நிலையினை வெளிப்படுத்தும் காட்சிகள் இவை. மந்திரிமனைக்கு இந்நிலை ஏற்படாமல் தடுத்திருக்கும் வல்லமை எமக்கிருந்தது. ஆனால் அதனை நாம் செய்யவில்லை. இது வருந்தத்தக்கது.
கட்டடங்கள் பல காரணங்களால் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஒரு குறிப்பிட்ட காலக் கட்டடம் என்னும் வகையில், கட்டடக்கலைப் பாணிகளை வெளிப்படுத்துகின்றன என்னும் வகையில், வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை என்னும் வகையில், இனமொன்றி ன் வரலாற்று அடையாளம் என்னும் வகையில் கட்டடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. அவ்வகையில் இக்காரணங்கள் அனைத்தும் மந்திரிமனைக்குப் பொருந்தும்.
இக்கட்டடத்தின் கட்டடக்கலை அம்சங்கள் திராவிட , ஐரோப்பியக் கட்டடக்கலை அம்சங்களை உள்ளடக்கியது. பாவிக்கப்பட்ட கட்டட மூலப்பொருட்கள். கட்டடக்கலை அம்சங்கள், கட்டப்பெற்ற காலகட்டம் எல்லாம் இக்கட்டடம் வரலாற்றுச் சின்னங்களிலொன்றாகக் கருதப்பட்டு பேணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. இக்கட்டடத்தின் முகப்பிலுள்ள தகவல்களின்படி இக்கட்டடம் 1890இல் கட்டப்பட்ட விபரம் தெரியவரும்.
இக்கட்டடத்துக்குரிய சுருங்கை வழியொன்று இருந்ததாகவும், அது தற்போது அடைக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. அது பற்றிய மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
இக்கட்டடம் அமைந்துள்ள காணியின் பெயர் 'சங்கிலித்தோப்பு', இதனை நான் இப்பகுதிக்குரிய நிலஅளவைத்திணக்கள வரைபடங்களை அவதானித்தபொழுது அவதானித்துள்ளேன். தற்போது இக்கட்டடம் அமைந்துள்ள காணியின் பெயர் சங்கிலித்தோப்பு என்றிருப்பதும், இங்குள்ள கட்டடம் மந்திரிமனை என்றிருப்பதும் இதன் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. இப்பகுதிக்கண்மையில் பண்டாரக்குளம், சங்கிலியன் வீதி, அரசகேசரி வளவு போன்ற பல அரச முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இருப்பதால் இக்கட்டடம் அமைந்துள்ள பகுதியானது தமிழரசர் காலத்தில் பின்வரும் வகைகளில் முக்கியத்துவம் பெற்றிருந்திருக்கலாமென்றே எனக்குத் தோன்றுகின்றது.



]


கட்டடக்கலையின் முக்கிய அம்சமே வடிவமைப்புத்தான். கட்டடச் சூழலை வடிவமைப்பதே கட்டடக்கலை என்று சுருக்கமாகக் கூறலாம். ஒரு நகரானது கட்டடங்களால் நிறைந்துள்ளது. கட்டடங்கள் நிறைந்த அச்சூழலை உருவாக்குவதே கட்டடக்கலை. கட்டடக்கலை எவ்விதம் கட்டடங்களை உருவாக்குகின்றது? இங்குதான் வடிவமைப்பு முக்கியமாகின்றது. கட்டடக்கலையானது வெறும் கட்டடங்களைக் கட்டுவது மட்டுமல்ல. அக்கட்டடங்களைக் கட்டுவதற்கு முன், வடிவமைப்பதற்கு முன் பல விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும்.









கட்டடக்கலை ஒரு அற்புதமான கலை. பின்நவீனத்துவம் தோன்றிய களமும் அதுதான். இப்போ கட்டடக் கலையில் புதிய சகாப்தமொன்றை Vertical Forest (செங்குத்துக் காடு) நிறுவியிருக்கிறது. செங்குத்து காடு என்றால் என்ன. அதன் கருத்தாக்கம் (concept) என்ன. 
இந்திய தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் 55% முதல் 60% வரை தமிழ் மொழியில் உள்ளன. இந்திய தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட 100,000 கல்வெட்டுகளில் சுமார் 60,000 கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் இருந்ததையும் , கல்வெட்டும் பட்டியலில் தமிழ் மொழியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் தான் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. சில தமிழ் கல்வெட்டுகள் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும், இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல பர்மாவில் காணப்படும் அயல் மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளின் பட்டியலில் தமிழும் ஒன்று. 

பழம் பெருமைகளைச் சொல்லி மார்தட்டிக் கொள்வதில் யாழ்ப்பாணத்தவராகிய நாம் வல்லுனர்கள். லெமூரியாக் கண்டத்தில் தொடங்கி, சிந்துவெளியூடாக உலகின் நாகரிகம் வளர்ந்த இடங்களை அலசி எல்லாமே எங்களுடையதுதான் என்று பெருமை பேசிக்கொள்ளும் பலர் நம் மத்தியில் உள்ளனர். பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என்ற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகின்றது. உள்ளூரில் எங்களுடைய வரலாறு, நம் முன்னோருடைய வாழ்வியல், பண்பாடு போன்றவற்றை வெளிப்படுத்தும் சின்னங்களைப் பார்க்கவேண்டும் என்று நமது பிள்ளைகள் கேட்டால், அவர்களுக்குக் காட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் நாம் எவற்றை விட்டுவைக்கப் போகிறோம் என்று முதலில் சிந்திக்க வேண்டும். 
அண்மையில் எழுபதுகளில் யாழ் இந்துவில் கல்வி கற்று , உலகமெங்கும் பரந்து வாழும் மாணவர்களில் சிலர் உருவாக்கிய அமைப்பான 'ஓராயம்' அமைப்பின் ஆதரவில். 'பண்பாடும் வீட்டு வடிவமைப்புகளும்' என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட மெய்நிகர் நிகழ்வினைக் கனடாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் தர்மகுலராஜா ஒருங்கிணைந்து நடத்தினார். இந்நிகழ்வில் கட்டடக்கலைஞர்களான மயூரநாதன் (யாழ்ப்பாணம்), குணசிங்கம் (ஆஸ்திரேலியா) மற்றும் சிவகுமார் (கனடா) ஆகியோர் கலந்து கொண்டனர்.
1980களில் நான் சென்னையிலிருந்த காலத்தில், என் மாணவப் பருவத்து நண்பனான இரகுபதியை சந்தித்ததேன். அக்காலத்தில்தான் இரகுபதியின் ஆய்வு நூல் சென்னையில் பதிக்கப்பட்டது. இராமாயணத்தில் அணிலாக Early Settlements in Jaffna என்ற ஆய்வு நூலின் பதிப்பில் எனது பங்கும் இருப்பதால் சில உண்மைகளை விளம்ப விரும்புகிறேன்.
'தலைமுறை தாண்டிய பயணம்: பத்மநாப ஐயர் - 80!' என்னும் மெய்நிகர் நிகழ்வில் (வணக்கம் லண்டன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நிகழ்வு) உரையாற்றிய கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் கூறிய வரலாற்றுத் தகவலொன்று என் கவனத்தை ஈர்த்தது. அது முனைவர் பொ.ரகுபதியின் Early Settlements in Jaffnaஅ நூல் பற்றியது.
வாழ்நாளில் பெரும்பகுதியை ஆராய்ச்சித் துறைக்கே அர்ப்பணித்துச் சமஸ்கிருதத்துறைக்கும், நுண்கலைத்துறைக்கும் சிறந்த பங்களிப்பு வழங்கியவர் பேராசிரியர் வி.சிவசாமி. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமஸ்கிருதத் துறைத் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் வி. சிவசாமி வெளியிட்டுள்ள ஆய்வு நூல்களிலும், வெளியிட்ட கட்டுரைகளிலும், அவரது ஆராய்ச்சித் திறமை நன்கு புலப்படுவதாக அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். தாம் விரும்பிய முறையில் விடுமுறை பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று பார்க்கின்ற சந்தர்ப்பங்களையும், பெரும் பொருட் செலவுகளோடு கூடியதாக உரிய வாய்ப்புகளையும் பயன்படுத்திப் பல நாடுகளைப் பார்க்கும் சந்தர்ப்பங்களையும் தியாகம் செய்து சமஸ்கிருதத் துறையையும், அதனோடு தொடர்பான கலைகள் குறிப்பாக நுண்கலைகள், வரலாறு ஆகிய துறைகளில் மட்டுமன்றி இசை, பரதநாட்டியம், சிற்பம் முதலிய துறைகளிலும் பெரிதும் அபிமானமுள்ள இவர் நூல்களையும், கட்டுரைகளையும் எழுதித் தமது ஈடுபாட்டினைப் புலப்படுத்தியுள்ளார் எனப் பாராட்டுகள் பெற்றவர்.
மதுரை மாவட்டம் வைகை ஆற்றின் கரையிலிருந்து வடக்கே 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கீழடி. மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவைச் சேர்ந்தவர்கள் 2014 தொடங்கி 2017 வரையில் மூன்று கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டனர். பலவகை அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அவை திராவிடப் பண்பாட்டை மேலும் செழுமைப்படுத்துவதாக இருந்தமையால் இவ்வாய்வு மேலும் தொடர பலத் தடைகள் உருவாக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை இதைக் கையில் எடுத்து 2017 இல் தனது நான்காவது கட்ட ஆய்வை மேற்கொண்டது. அதேபோல 2018 இல் ஐந்தாம் கட்ட ஆய்வும் செம்மையாகச் செய்து முடிக்கப்பட்டது.
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









