குமுளமுனை என்பது முல்லைத்தீவு நகரில் இருந்து பத்து மைல்கள் தொலைவில் உள்ள ஒரு வளம் நிறைந்த கிராமமாகும். முல்லைத்தீவுக்கு தென் மேற்குத்தி;சையில் அமைந்துள்ளது. தண்ணீரூற்றிலிருந்து ஆறு மைல்கள் தெற்காகவும் அளம்பில் என்னும் கிராமத்திலிருந்து இரண்டரை மைல் மேற்காகவும் இக்கிராமம் அமைந்துள்ளது. வடக்கே கணுக்கேணிக் குளம் அல்லது முறிப்பு எனப்படும் குளத்தையும் அதன் வயற்பரப்பினையும் எல்லையாகவும், கிழக்கே அளம்பில் கிராமத்தையும் தென் கிழக்கே செம்மலைக் கிராமத்தையும் நாயாறு கடல்நீர் ஏரியையும் மேற்கே தண்ணிமுறிப்புக் குளக்கட்டினையும், குருந்து மலை என்னும் பண்டைய வரலாற்று நகரத்தையும் வடமேற்கே பூதன் வயல் என்னும் குளக் குடியிருப்பையும் எல்லைகளாகக் கொண்ட கிராமமாகும்.

ஷகுமுள்; என்னும் ஒரு வகை மரங்கள் இங்கு காணப்படுகின்றன. இவ்மரத்தின் இலைகளை அரைத்து பசுக்கன்றுகளுக்கும் எருமைக்கன்றுகளுக்கும் மருந்தாகப் பயன்படுத்துவர். கீரைப்பூச்சி என்னும் நோய் வந்தால் இந்த இலையை உண்ணவைப்பதன் மூலம் அந்த பூச்சிகள் அழந்து கன்றுகள் நோயிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இம்மரத்தின் முக்கியத்துவம் கருதி இவ்வூரின் பெயர் காரணப் பெயராக அமைந்திருத்தல் வேண்டும் என்பது இவ்வூரவர்கள் கூறும் கருத்தாகும்.

இக்கிராமத்தில் கரிக்கட்டுமூலை வன்னிமத்தின் கீழ் பரிபாலனம் செய்யப்பட்ட முக்கியமான இடமாகக் காணப்படுகின்றது. பாண்டிய, சோழ, சேர நாடுகளைச் சேர்ந்த வன்னியர்கள் தென்னகத்திலிருந்து படையெடுத்து வந்தவேளை படைகளை நடாத்தி வந்தவர்கள். இவர்கள் முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், பொலநறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் குடியேறி அப்பிரதேசங்களைத் தமது ஆதிக்கத்துக்குள் வைத்திருந்தனர். இவர்கள் இருந்ததற்கான பல சான்றுகள் பல கிராமங்களில் காணக்கிடக்கின்றன. வன்னியை ஆண்ட வன்னி மன்னர்களின் வரலாறு இதுவரை நன்கு அறியப்படாததாகக் காணப்படுகின்றது. இன்று இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளான தென்னவன்மரவடி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேண், நித்தகைக்குளம், ஆமையன்குளம், சூரியன் ஆற்றுவெளி, அமெரிவயல் போன்ற பிரதேசங்கள் பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வசித்த பகுதியாகும். இப்பிரதேசங்களில் இன்று தமிழர்கள் திட்டமிட்டு அப்புறப்படுத்தப்பட்டதோடு பெரும்பான்மை இனத்தினரின் குடியேற்றத்திட்டங்களாக மாற்றப்பட்டுவருவதும் கண்கூடு.

இவ்வித ஆக்கிரமிப்புக்கு உள்ளான எல்லைக்கிராமமாக அமைந்துள்ளது குமுளமுனைக் கிராமம். இது முல்லைத்தீவி லிருந்து தென்மேற்கே பத்துமைல் தொலைவில் உள்ள ஒரு பழமை வாய்ந்த கிராமமாகும். ஆண்டான் குளம், ஆறுமுகத்தான் குளம், தண்ணிமுறிப்பு, தண்ணீருற்று, அளம்பில் செம்மலை ஆகிய கிராமங்களை எலலைகளாகக் கொண்டதே குமுளமுனைக் கிராமமாகும். இது முல்லைத்தீவில் இருந்து தென்கிழக்கே பத்து மைல் தொலைவில் உள்ளது. இங்கு போர்த்துக்சீசரால் சிதைத்து அழிக்கப்பட்டு பின்னர் ஊரவர்களால் புனரமைத்துக்கட்டப்பட்ட கற்பக விநாயகர் ஆலயமும்,, தலை வெட்டப்பட்ட நிலையில் உள்ள கொட்டுக்கிணற்று ஆலயமும் கிராமத்தின் கிழக்குப்பக்கத்திலும் தெற்குப்பக்கத்திலும் அமைந்து அருள்பாலித்து வருகின்றன. இக்கிராமத்தின் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை ஓரத்தில் அரியாத்தை என்னும் வீர வன்னிச்சியினால் மதம் கொண்ட யானை ஒன்று அடக்கிப் பிடிக்கப்பட்டுக் கட்டப்பட்ட புளியமரம் ஒன்று 1970 வரை நிலைத்து நின்றது. அது யானை கட்டிய புளி எனவே ஊரவர்களால் அழைக்கப்பட்டு வந்தது. கடெடுத்துக் கிடந்த இக்காணி அரசினரால் வழங்கப்பட்டபோது. குாடு அழித்துத் தீயிட்டபோது எரிந்து அழிந்துபோனது வேதனைக் குரியதாகும். மதம் கொண்ட யானையை அரியாத்தை அடக்கிக் கட்டினார் என்பது வரலாறு. கற்பக விநாகர் ஆலயத்திற்கு அண்மையாக வன்னியன் வளவும் வன்னியன் கிணறும் காணப்படுகின்றது. கிணறுகள் செங்கற் களால் கட்டப்பட்ட சிதைவுகள் இன்றும் காணப்படுகின்றன. இவ்வரிய சான்றுகள் வன்னியரது ஆள்புலப்பரப்பையும் அவர்கள் நிலை கொண்டிருந்த இடங்களையும் காட்டி நிற்கும் அரிய சான்றுகளாகக் காணப்படுகின்றன. இச் சான்றுகள் அழிந்து விடாது பாதுகாக் கப்பட வேண்டியவை என்பதன் முக்கியம் உணரப்படல் வேண்டும்.

கொட்டுக்கிணறு

கொட்டுக்கிணறு என்பது குமுளமுனைக் கிராமத்தொடு பிரிக்கமுடியாதபடி இணைந்துள்ளமைக்கு இங்கு காணப்படும் வயலும் அந்த வயலில் கண்டெடுக்கப்பட்ட பிள்ளையாரும் தான் காரணம் எனலாம். கொட்டுக்கிணறு என்பது நிலத்தைத் தோண்டி மண் தூராத வண்ணம் மரத்தின் கொட்டினை வைத்து நன்னீர் எடுக்கப் பயன் படுத்தப்படும் கிணறுதான் கொட்டுக்கிணறு எனப்படும். இக்கிணறு பல இடங்களிலும் தற்காலிகமாக அமைக்கப்பட்டு குடிப்பதற்கான நன்னீரைப் பெற்றுக்கொள்ளப் பயன்படுத்தப்படுகின்றது. கடலோரங்களிலும் இவ்விதமான கிணறுகள் அமைக்கப்படுவது வழமை. கடலோரத்தில் மணலாக இருப்பதால் கிணறைகத்தோண்டுவது மிக சிரமமானதாகும். ஆதற்க வட்டமாக உள்ள பெரும் மரகளின் கொட்டை எடுது;துப் பயன்படுத்துவார்கள். குமுளமுனைக் கிரமத்தோடு காணப்படும் கொட்டுக்கிணற்றுவயல் ஒரு சிறிய குன்றின் அண்மையில் அமைந்துள்ளது. நந்திக்கடலோரமாக உள்ளமையால் நீர் ஊற்றும் அதிகமாக உள்ளது. இவ்விதம் ஆக்கப்பட்டு நீர் எடுத்துப்பாவிக்கப்பட்டு வந்த ஊரின் அண்மையாகக் காணப்பட்ட திரு. அருணாசல உடையார் நல்லதம்பி அவர்களது வயலினைக் கொட்டுக்கிணற்று வயல் என இன்றும் அழைக்கப்படுகின்றது. நல்லதம்பி அவர்களின் பேரனார் காலத்தில் நிகழ்ந்த அற்புதமாகக் கொட்டுக்கிணற்று விநாயகர் வரலாறு காணப்படுகின்றது. இந்த வயலில் அறுவடை முடிந்து வைகாசி விசாகத்திற்குப் பின்னர் சோழகக் காற்றுக் காலத்தில் சூடுமிரியல் ஆரம்பமாகி நடை பெற்றுக் கொண்டிருக்கும் வேளை ஓர் இரவு பிள்ளையார் கனவில் தோன்றி இவ்விடம் ஒரு பட்டாணி (வியாபாரி) வருவான் அவன் இங்கு கல்லேதும் உண்டா எனக் கேட்டால் நெல்லுக்குள் உள்ள கல் தவிர வேறு கல் இல்லை என விடை கூறுக எனக் கூறிப்போந்தார். ஏன் இந்தக் கனவு எனப் புரியாமல் கண்விழித்த உடையார் அவர்களுக்கு வியப்பின் மேல்; வியப்பாக பட்டாணி (வியாபாரி) ஒருவன் அங்கு வந்து இங்கு கல்லேதும் உண்டோ என வினாவினான். அவர் விநாயகரின் கூற்றை அவ்விதமே நெல்லுக்குள் உள்ள கல் தவிர வேறு கல் இல்லை என விடை பகிர்ந்தார்.

சூடு மிரித்த பொலியி(நெல்லி)னைத் தூற்ற ஆரம்பித்து ஏழுநாட்கள் சென்றும் முடிவுறாது நெற்குவியல் பெருகிக் கொண்டே சென்றது. பெரும் அதிசயமாகவம் அற்புதமாகவும் இந்த விடயத்தைப்பற்றி ஊரவர்கள் எல்லாம் பேசிக்கொண்டனர். ஏழாம் நாள் இரவு பிள்ளையார் கனவில்த்தோன்றி நான்தான் நெற்குவியலுக்குள் இருக்கின்றேன் என்னை எடுத்து அங்குள்ள ஒரு மலையோரத்தில் வைத்து ஆதரிக்கும் வண்ணம் கூறிப்போந்தார். அதன் படி ஊரவர்கள் எல்லாரும் கூடி பிள்ளையாரின் பணிப்பின்படி திறந்த வெளி ஆலயம் ஒன்றை அமைத்து வழிபட்டு வரலாயினர். சில நாட்களின் பின் அதே பட்டாணி திரும்பவும் வந்து பிள்ளையார் இருப்பதனை அறிந்து அவரைத் தன்னுடன் கொண்டு செல்வதற்காக அவரை அண்மித்து நகர்த்த முனைந்தான். ஏவ்வளவோ முனைந்தும் பிள்ளையாரை அவனால் அசைக்க முடியவில்லை. ஆதனால் ஆத்திரமுற்ற பட்டாணி வாள்; கொண்டு அவரது தலையைத் துண்டித்தான். அத்துடன் தனது குதிரையில் ஏறி தனது பிரயாணத்தைத் தொடர்ந்தான். அவன் சிறிது தூரம் சென்றதும் அங்குள்ள வயலில் உள்ள கழிவு நீர் வடிந்தோடும் வாய்க்கால் ஒன்றினுள் அவனது குதிரை அவனது கட்டுப்பாட்டிற்கு அடங்காது துள்ளிக்குதித்துத் திமிர் எடுத்ததன் காரணமாக குதிரையில் இருந்து அவன் வீழ்ந்து மரணமானான். இன்றும் குளத்தில் ஊடு (குளத்தூடு)என்று வழங்கப்படும் வயலில் காணப்படும் கழிவு நீர் வாய்க்காலைக் குதிரை திமிர் எடுத்த வாய்க்கால் என்றே அழைக்கப்படுகின்றது.

பட்டாணி என ஊரவர்களால் அழைக்கப்படும் அந்த அராபிய வியாபாரி வியாபாரத்திற்காக மூன்று விநாயக விக்கிரகங்களை கருவாட்டுடன் கலந்து ஒரு கப்பலில் ஏற்றி இந்தியாவிலிருந்து கொண்டுவரும்போது கருவாட்டுடன் இருக்கப் பிடிக்காத மூன்று விநாயக விக்கிரகங்களும் கடலில் குதித்துத் தப்பித்துக் கொண்டன. இவை மூன்றும் முல்லைத்தீவின் தென்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களான குமுளமுனை, கருநாட்டுக்கேணி, தென்னவன்மரவடி ஆகிய கிராமங்களுக்குச் சென்று சேர்ந்தன என்பது வரலாறு. கோட்டுக்கிணற்றுப்பிள்ளையார் என ஊர்மக்களால் அழைக்கப்படும் கழுத்து வெட்டிப்பிள்ளையார் குமுளமுனையிலும் பட்டாணியால் கைதுண்டிக்கப்பட்ப நிலையில் கருநாட்டுக்கேணியில் உள்ள கோட்டகக் கேணி என்னும் இடத்தில் அமைந்துள்ள விநாயகரைக் ;கூளங்கைப்பிள்ளையார்; எனவும் தென்னமரவடியில் உள்ள அமரிவயலில் உள்ள பிள்ளையார் தலையில் மிதித்ததன் காரணமாக கூனிய நிலையில் காணப்படுவதனால் ;கூன் பிள்ளையார்; எனவும் அழைக்கபட்டு வருகின்றது. இம் மூன்று பிள்ளையார் ஆலயங்களும் திறந்த வெளி ஆலயங்களிலேய காணப்படுகின்றன. குமுளமுனையில் அமைவுற்றிருக்கும் கொட்டுக்கிணற்று விநாயகரைப்பல தடவைகள் மறைத்து சுவர் எழுப்ப ஊரவர்கள் முயற்சி செய்தும் பலனளிக்க வில்லை. ஆரம்ப காலத்தில் ஊரவர்கள் பிள்ளையாரின் தலையினை ஒருமரத்தின் பொந்தில் வைத்து வழிபடும் வேளைகளில் எடுத்து வைத்து வழிபட்டார்கள் என்பதும் பின்னர் அந்த மரப் பொந்தைச் சுற்றி திடீரென ஒரு ஆலமரத்தின் விழுது துதிக்கைபோன்று சுற்றி மறைத்துக் கொண்டதால் அதனை யாரும் தொட முடியாத நிலை ஏற்பட்டது. மிக அண்மையில் அந்த மரம் பட்டுப் போனதால் விநாயகரின் தலையைத்தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதெனினும் யாராலும் அதனைக் கண்டு கொள்ள முடியவில்லை.

கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் மீது பாடப்பட்ட ஒரு சிந்து ஏட்டில் இருந்துபெற்று அதனை ‘நாட்டார் பாடல்கள்’ என்னும் நூலில் பதிப்பித்துள்ளார் மெட்டாஸ்மெயில்:

பிள்ளையார் சிந்து

வீசுகர மேகநிற வேதநுத லான்கருணே
மேவுமத வாரண வினாயக வினோத
கூசுதமி; சேர்முதல் கோமளவள்ளிக் கிளைய
குஞ்சுமத ழை;ககிளையகுங்சரமு கத்தோன்
பேசுதிக ஞன்கதைகள் ளிசைபாடு தற்குபொரு
பிழைககள் வராமலே கார்பேணை வயிறு
கோம்பிற் சிறந்தகனி பால்பருப்பு பௌ;ளுருண்டை
குடவயிறு நிறையவரு குங்சுர முகத்தோன். 1

உம்பற்கும் மெட்டாத ஒருமருப் பவனே
உலகுபதி னாலையும் ஒன்றாக்கி நின்றாய்
அம்பொற் றடங்கிரி யிலேபாரதம் தன்னை
அழகுபெற வேஎழுது மானைமுக வேனே
......................................................
தம்பிக்கு வந்துதவு தும்பிக்கை யோனே
தாடனை மீதேறி வரணேம் முருகா.

கொம்பொன்று குடவயிறு காண்டபரி நூலொன்று
கோவர்ணமொடு பொற்பட்டதுவம் எந்தி
கம்பொன்று கையில் கமண்டலமு; மொன்று
காதுதனி லேகவிக்ஷேச குண்டலமி ரண்டு
நம்பொன்று விளியொன்று நானுனை நினைந்தோன்
நாராயண சுமாமிக்கு நல்மருகன் நீரே
வம்பநெதிர் கொம்பனே வள்ளியைத் தம்;பிக்கு
வாரணத்தாலே வதை செய்யலாமோ?

கூளா வடியாம் குளர்ந்த நிழலாம்
குளக்கட்டு நீளம் புளியம் நிழலாம்
ஆரடா எந்தன் புளியடி தன்னில்
நாங்கள்தான் அஞ்சாறு சிந்துகவி பாடிகள்
நாயைப் பிடித்ததின் தௌ;ளை யுறத்து
நல்லதோர் ஈட்டி வாள் கைதனிலேதரித்து
பாசக் கயிறுருபிப் பண்டிக்கு நாய்விட்ட
பரம சிவனைப் பாடியே வாறோம்.

அலைகடல் கலந்தமிர்த நஞ்சையள்ளி யுண்ட
அன்றுதலை ஓடதனிலே இரந் துண்டாய்
யுயைனுடை எச்சிலை இனிதென்று உகந்தாய்
புல்லரவர் வில்லினால் யானடிகள் பட்டாய்
தலையிலே மாறுசடை தன்னைத் தரித்தாய்
தையலுக் காகவே தூது நடந்தாய்
மலைமகளை ஒருபாக மிடமீதில் வைத்தாய்
வள்ளலே வாரிவன நாதன்எனவரு தம்பிரானே!
மட்டுப் படாதடி யார்உனை வணங்க
வலம்வந்து செங்கைதனில் மாங்கனியை வாங்கி
முட்டுப் படுத்தியே முருகர்முன் வள்ளியை
மோகனம் செய்வித்த முத்தமழ்க் கரசே
அட்டத்தில் முப்புரத் தோர்களை எரித்தாய்
அரநேறி தேர்புரவி அச்சறுத் தாயே
கொட்டுக் கிணற்றடியில் வாழுமைங் கரனே
குடவயிற்ற னேகுமாரர் முன்வந்த கோவே.

எண்ணரிய வேதமுத லாகிநின் றவனே
ஈசருடை திருமடியில் இறைவர் திருமகனே
வெண்ணையுட னேமண்ணை யுண்டமால் மருகனே
வேடர்முன் வேங்கையாய் நின்றவன் தமயன்
கண்ணுதல் படைத்தசக் கிரவான முனக்கென்று
சகலகலை தனில்உதவு தந்தமா முகனே
விண்ணவர்கள் துணைவனே விக்கினே சுபரனே
வினாயகனை மனதிலுள்ள வினைஅடவி போமோ?

கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் மிகவம் அற்புதமானவர் என ஊரவர்களால் அவர் நிகழ்த்;திய அற்புதச் செயல்கள் நினைவுகூரப்படுகின்றன. குமுளமுனையில் உள்ள கூட்டுறவுப் பண்டகசாலையில் முகாமையாளராகக் கடமையாற்றிய திரு. கந்தப்பிள்ளை சண்முகம் என்பவர் கொட்டுக்கிணற்று விநாயகரைத்தனது குலதெய்வமாகக் கொண்டவர். அவரது அற்புதங்களை நினைந்து கும்பிப்பாட்டு, கோலாலப்பாட்டுக்கள்; போன்றவற்றை இயற்றி புத்தாண்டு தினத்தில் சிறார்களைப் பழக்கி கோலாட்டமாடுவது வழக்கமாக இருந்துவந்தது. அவரால் இயற்றப்பட்ட பாடல்களில் இரண்டினை இங்கு தருவது அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் செய்யும் கைமாறாக அமையும் என உணர்கின்றேன்.

'வன்னிவள நாடு” என்னும் 1983ம்ஆண்டில் இடம்பெற்ற வன்னிப்பிராந்திய தமிழராய்சி மகாநாட்டு மலரில் மாங்குளம் எஸ. கதிர் சிவலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையில் கொட்டுக்கிணற்று பிள்ளையார் மீது பாடப்பட்ட கும்மிப்பாடல் பின்வருமாறு அமைகின்றது.

“கொட்டுக்கிறற்றடிப் பிளளையாரைக்
கும்பிட்டுக் கம்பை எடுத்திடுங்கோ
வட்டமதாகவே வளைந்திடுங்கோ
வன்ன வசந்தன் அடித்திடுங்கோ
சட்டமதாய்ப் புகழ் பாடிடுங்கோ
இந்தத் தாரணியோர்கள் தங்;கிடவே”

கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கும்மிப் பாடல்கள்

நாட்டார் பாடல்கள் - மெட்டாஸ்மெயில்

தானன்னத் தானன்னத் தானானே -தன்ன
தானன்னத் தானன்னத் தானதான.

கொட்டுக்கிணற்றடிப்பிள்ளையாரே பாலர்
கூடிக்க ளிகொண்டு உன்புகழைக்
காட்டச்சி றுகம்மி பாடஅ ருள்தந்து
காத்திடு வாய்விழி பாத்திடு வாய். 1

பாரத கண்டமி ருந்தொடு பட்டாணி
பாதையி லேற்றிக் கரிமுகன் மூன்றினை
நீதிமு றையின்றி மச்சங் களோடு
நினைவின் றிக்கொண்டு வந்தானுமடி. 2

“கும்மியடிக்கிற பெண்கள் ஒரு
கோளாறு சொல்லுறன் கேளுங்கடி
அம்மியைத்தூக்கி மடியில் வைத்து
அமர்ந்து கும்மியடிங்கடி”

பரத்தை வெட்டுப் பாடல்

“வீசுகரமேவ நிறை வேதநதலாழ்
கருணை மேவமதவாரண விநாயக -விநோத
கூசுதமிழ’ சேர் மதலி கோமளவரிக்
கட்குங்சுமழலைகிய குங்கரமுகத்தோன்
பேசுதமிழ் உன்கதையே பாடுதற்கா
மொருபிழைகள் வாராமலேகார் பேழை வயிறே

நல்லைநகர் வாழவருந்தசுவாமியை
நன்றா நிநை;து கையலர் அரிவாளெடுத்து
தொல்லுலகு கைைலாயு}ர் வாழும்
இற்நதாரிமார் தோராமலர் நிைலாயருவி விளையாடினாரே”

தன்னனத் தன்னனத் தன்னானே தனத்
தான தன்னனத் தன்னானே

கும்மியடி பெண்யே கும்மியடி
கூடிக்குலவிக் கும்மியடி
கொட்டுக்கிணற்றான் புகழ்பாடிக்
கூடிக் குலவிக் கும்மியடி
கருவாட்டுடன் கற்பூம் கலந்தது போல்
கொண்டு சென்றான் அவன் பிள்ளையாரை

தன்னனத் தன்னனத் தன்னானே தனத்
தான தன்னனத் தன்னானே

நாற்றம் தாங்காத பிள்ளையாரோ
கடலில் குதித்து வந்தாரே!
கொட்டுக் கிணற்று வயலினிலே அவர்
கொட்டும் பொலியினில் ஒழிந்தாரே
பொலியோ பொலிந்தது மலையாக
போற்றியே நின்றாரே உடையவரும்

தன்னனத் தன்னனத் தன்னானே தனத்
தான தன்னனத் தன்னானே

கனவினில் தோன்றினார் பிள்ளையாரும்
கல்தேடி வருவான் பட்டாணி
கண்டதும் இல்லைநாம் கல்லேதும்
நெல்லினில் உள்ள கல்தவிர வேறு
கல்லில்லை என்றே இயம்பிடுவாய் என்றாரே
தேடி வந்தான் அங்கே பட்டாணி
கல்லேதும் வந்ததோ என்றனனே

தன்னனத் தன்னனத் தன்னானே தனத்
தான தன்னனத் தன்னானே

வேறு கல்லிங்கில்லை நெல்லுக்குள் உள்ள கல்தவிர
வேறு மொழிபகராது இருந்தார் உடையவரும்
வேறு இடந்தேடி ஆலாயப்பறந்தான் பட்டாணி

உண்மையை உணர்ந்தனர் ஊரவரும்
ஒன்றாய்க் கூடிப் பொலியினிலே
தோண்டி எடுத்துமே தூய்மைசெய்தார்
தோப்புக்கரணங்கள் போட்டனரே

அருள்செய்ய வந்த விநாயகரை
அருள்கொண்டு போற்றி ஏற்றினரே
இருள்நீக்க வந்தவர் கொட்டுக்;கிணறு
மருள்கொண்டார் வயலின் ஓரத்தினிலே

தன்னனத் தன்னனத் தன்னானே தனத்
தான தன்னனத் தன்னானே

மறைத்தே வைக்க வேண்டுமென்றார்
மறைநூல் உணர்ந்த உடையவரும்
கறையேதும் இல்லாக் காட்டருகே
முறையோடு வைத்தனர் விநாயகரை.

ஊரின் அயலில் வைத்துமங்கே
ஆதரிக்க வேண்டினார் என்றாரே
ஆலமரக் கூடலிலே ஆருமறியா
ஆலயம் அமைத்தனர் ஊரவரே

மீண்டும் வந்தான் பட்டாணி
மீட்டுப் போக வந்த அவன்
மீண்டும் மீண்டும் முயன்றனே
மீட்க முடியாப் பொருளானார்

கண்டே கொண்டான் பட்டாணி
கூவி அழைத்தான் பிள்ளையாரை
கூட வந்து சேரும் என்றே
மோடா செவிடா என்றே திட்டினானே
அசையாதிருந்தார் அமைதியுற
விசையைக்கூட்டிப் பட்டாணி தன்
திசைக்கு இழுத்தான் பட்டாணி
அசைவே இல்லா உலகானார்
கடுஞ்சினம் கொண்டான் பட்டாணி
வெஞ்சினம் கூறி நின்றவனோ
அஞ்சா நெஞ்சன் நானென்றே
விஞ்சியே வாளை உருவினானே

தன்னனத் தன்னனத் தன்னானே தனத்
தான தந்த னத் தன்னானே

வாளை உயர்த்தியே பட்டாணி
ஆளை முடிப்பேன் என்றே – தன்
ஊளை அறியாதுரைத் தனனே
ஊழை இட்டான் அக்கணமே

விநாயர் தலையைக் கொய்திடவே
விநயமாய் நின்றான் பட்டாணி
நட்டமே எனக்கு என்றுணர்ந்து
நயவஞ்சகம் கொண்டான் பட்டாணி

பாதகம் செய்யத் துணிந்திட்டான்
மோதகம் வேண்டிய விநாயகரை
சேதகம் செய்திட திடமும் கொண்டான்
சோதனை ஏதும் உணரா திருந்தனனே!

தனக்கே உதவாஇவ் விநாயகனை
தகர்த்திட முடியாது நின்றவனாய்
அனர்தம் வருவதை உணராது
அகம்பாவம் கொண்டான் பட்டாணி

உரக்கஊழை இட்டவனாய்
உருவிய வாளை விநாயகரின்
மருவிய சிரத்தை வீழ்த்திடவே
கருதியே வீசினான் பட்டாணி

குருதி வெள்ளம் பாய்ந்ததுவே
கருதிய குற்றச் செயலாலே
விரவியே குதிரை மீதமர்ந்தான்
விரைந்தே செல்ல ஏவினனே

கண்படு தூரம் செல்லமுன்பே
கண்ணை மூடிய குதிரையுடன்
மாண்டு வீழ்ந்தான் பட்டாணி
மானுடம் எழுந்து ஆர்ப்பரிக்க

குளத்தின் ஊட்டில் சாய்ந்தானே
குதூகலம் கொண்டார் ஊரவரே
குட்டிக் கும்பிட்டு அருள்வியந்து
கூடிக் கும்மி அடித்தனரே

குதிரை திமிரெடுத்தது காண்
குதிரை கனைத்து வீழ்ந்ததுவே
குதிக்கால் தலையில் அடித்திடவே
குதித்தே மாண்டான் பட்டாணி

தன்னனத் தன்னனத் தன்னானே தானத்
தான தன்னனத் தன்னானே

கும்மியடி பெண்யே கும்மியடி
கூடிக்குலவிக் கும்மியடி
கொட்டுக்கிணற்றான் புகழ்பாடிக்
கூடிக் குலவிக் கும்மியடி

கோலாட்டப்பாட்டு

வந்தனம் தந்தோம் நாங்கள் வந்தனம் தந்தோம்
வாரணமுகவருக்கும் வந்தனம் தந்தோம்

வேறு

காசறி காட்டு விநாயகருக்கு வந்தனம்
கற்பகப்பிள்ளையாருக்கும் வந்தனம் தந்தோம்
வந்தனம் தந்தோம் நாங்கள் வந்தனம் தந்தோம்
வாரணமுகவருக்கும் வந்தனம் தந்தோம்
கோலமுகமுடைய கொட்டுக்கிணற்றானுக்கும்
மூசிகவிநாயகர்க்கும் வந்தனம் தந்தோம்
சீரறி சித்தி விநாயகருக்கும் வந்தனம்
சிற்றம் பலவனுக்கும் வந்தனம் தந்தோம்
காசறி காட்டு விநாயகருக்கும் வந்தனம்
கற்பகப் பிள்ளையாருக்கும் வந்தனம் தந்தோம்
வந்தனம் தந்தோம் நாங்கள் வந்தனம் தந்தோம்
வாரணமுகவருக்கும் வந்தனம் தந்தோம்


வேறு

ஐங்கரனே வா வா அருள் எமக்குத் தா தா
ஐயம் போக்கி அருள் புரிய வா வா
பேரிய வெளி வயல் விளைய
பேரின்பம் நாம் கொள்ள
வுரம் தந்து அருள் புரிய
ஐங்கரனே வா வா
மாதம் மும்மாரி பொழிய
மோதக வயிற்றனே
மாதேவன் மைந்தனே
மா விளக்கின் நாயகனே
வள்ளி மணவாளன் அண்ணனே
அள்ளி எமக்கின்பம் தா தா

என்னும் பாடல்கள் போன்றன அக்கிராமத்தவர்களால் ஒவ்வொரு சித்;திரைப் புத்தாண்டு தினத்;திலும் கொட்டுக்கிணற்றான் முன்றலிலும் பின்னர் ஊரக்குள்ளும் பெரியவர்கள் தனித்தும் சிறிய் பிள்ளைகளைப் பழக்கியும் கோலாட்டம் ஆடுவது வழக்கம்.

இந்தக் கோலாட்டத்தை நான் சிறியவனாக இருந்தபோது 1956ம் ஆண்டளவில் அப்பகுதியில் இறைவரி உத்தியோகத்தராக இருந்த எப். ஏக்ஸ். சேல்லத்தம்பு அவர்கள் இடமாற்றாலாகிச் சென்ற வேளை அப்போதைய கூட்டுறவுச் சங்கக் கடையின் விற்பனை முகாமையாளராக இருந்து திரு. கந்தப்பிள்ளை சண்முகம் அவர்கள் பழக்கி எம்மை அரங்கேற்றினார். இறைவணக்கப் பாட்டோடு வேறு பாடல்களுக்கும் கோலாட்டம் கும்மி அடிப்பது வழக்கம்.

‘ஏறாத மலை தன்னிலே சோரான கௌதாரி இரண்டு
தாராளமாய் இங்கே வந்து ததிங்கின தாம் தாளம் போடுதம்மா அட போடு …
ஏறாத மலை தன்னிலே …….

என்பன போன்ற தருவோடு கூடிய பாடல்களுக்கு கோலாட்டம் ஆடுவது மனதிற்கு இன்பம் தருவதாக அமைந்திருந்தது. நான் 2003இல் அங்கு சென்றிருந்தபோது திரு. சண்முகம் அவர்களின் பணியைத் தொடர்ந்து அவரின் மூத்த புதல்வன் மேற்கொண்டு வருவதனைக் கண்டு புழகாங்கிதம் அடைந்தேன். எமது நாட்டுக்கூத்துப் பாரதம்பரியத்தோடு ஒட்டிய கிராமிய நடனவகையைச் சார்ந்த கோலாட்டம் அழிந்துவிடாது தொடர்ந்தும் பேணிப்பாதுகாக்கப்பட்டுவருவது பாராட்டத்தக்கதே.

அது மட்டுமன்றி அங்கு காத்தவராயன் கூத்து, பூதத்தம்பி நாடகம், சத்தியவான் சாவித்திரி கோவலன் கூத்து போன்ற நாட்டுக்கூத்துக்கள் ஆடப்பட்டு வந்துள்ளன எனினும் இலகுவாக ஆடக்கூடிய காத்தவராயன் கூத்து இன்றும் அங்கு தொடர்ந்து வருடாவருடம் இடம்பெறுவதனைக் காணமுடிகின்றது. ஆரம்பத்தில் தென்னவன் மரவடிக் கிராமத்தைச் சேர்ந்த பேச்சுமுத்து அண்ணாவியார், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சரவணமுத்து அண்ணாவியார் போன்றோர் இங்கு சித்திரை மாதமளவிலர் வந்து வைகாசி மாதத்தில் காத்தவராயன் கூத்தை அரங்கேற்றம் சய்வது வழமை. கோயில் முன்றலில் இந்தக் கூத்துக்கள் பெரும் பாலும் இடம்பெறும். இல்லையேலர் ஊரின் நடுவண் அமைந்து பலாவடி வளவில் இந்தக் கூத்துக்களுக்கு மேடை அமைத்து மேற்கொள்ளுவார்கள். இந்தக் கூத்துக்கான மேடை அலங்காரம் காட்சித் திரைகள் வெளி;யிடத்திலிருந்து வருவிக்கப்படும். மேடைகள் தென்னைமரக்குற்;றிகள் காட்டுமரங்களாலர் ஆக்கப்பட்டிருக்கும். ஊரவர்கள் அனைவரும் இணைந்து இந்த முயற்சியில் பங்கேற்று சிறப்பாக நடத்துவர்.

வேட்டையும் உணவுப் பரிமாறலும்

ஆடி ஆடிப் படிக்க இன்பம் பொங்க மகிழ்வது வழக்கம். இக்கிராமத்தின் மத்தியில் காணப்படும் சிறப்பு அம்சங்களில் ஒன்று கூட்டு வாழ்க்கை முறை. ஆங்கு உள்ள மக்கள் அனைவரும் எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இன்றி எல்லோரும் எல்லா நிகழ்சிகளிலும் பங்கு கொள்வார்கள். உணவு தேடி வந்தாலும் சரி, தேன், பாலைப்பழம், முரலிப்பழம், போன்ற காடுபடு திரவியங்களாக இருந்தாலும் சரி, வேட்டையாடிக் கொண்டுவரும் இறைச்;சியாக இருந்தாலும் சரி அவர்கள் பங்கிட்டு பரிமாறிக் கொள்ளவதினைக் காணலாம். வேட்டைக்குச் செல்லும் போது தாவாடி வேட்டை என்று குறிப்பிடும் ஒரு வழக்கமும் அவர்களிடம் காணப்பட்டது. அதாவது ஊரில் உள்ள வேட்டை நாய்களுடன், வேட்டையிற் கைதேந்தவர்களும் காட்டின் திசைபற்றி அறிந்தவர்களுமான அநுபவ சாலிகளுடன் சேர்ந்து ஒரு குடுவாக அவர்கள் உணவுப்பொருட்கள், சமையலுக்கான பாத்திரங்கள் முதலியவற்றோடு காட்டில் வெகுதூரம் சென்று தங்கி இருந்து வேட்டையாடி வருவது வழக்கம். அப்படி வேட்டையாடப்படும் மான், மரை, பன்றி போன்றி விலங்குகளின் இறைச்சியை தீயில் வேகவைத்து கருவாடாக்கியும், தோல்களைப் பதனிட்டும் கொண்டு வருவார்கள். மான், மரைத் தோல்கள் அவர்கள் இருப்பதற்குப் பாவிப்பார்கள். கிணற்றில் வாளி போன்ற பொருட்கள் விழுந்துவிட்டால் மான் கொம்பினை உபயோகித்து மிக ஆழமான கிணறுகளிற்கூட அவற்றை இலகுவாக வெளியே எடுப்பார்கள். கத்தி, தாள்கத்தி அல்லது அரிவாள் எனப்படும் நெல் வெட்ட பயன்படுத்தப்படும்; கத்திகள், போன்றவற்றிற்கு கைப்பிடிகளைப் போடுவது வழக்கம். சாதாரணமாக கையடக்கமான கத்திகளை அவர்கள் கொம்புக்கத்தி என்றே அழைப்பர். இதற்கு இவ்வித கத்திகளுக்கு கொம்பாலான பிடிகளைப் போடுவதே காரணமாகும். காட்டுக்கத்தி அல்லது கைக்கத்தி என அவர்கள் குறிப்பிடும் கத்திக்கு மிக நீண்ட கைப்பிடியினைப் போட்டு வைத்திருப்பதற்கு முட்களாலான பற்றைகளை வெட்ட அக்கத்திகள் உதவுவதாலேயே. குரக்கன் போன்ற தானியங்களை அரைக்கும் திருகை எனப்படும் கருவிக்கும் கைபிடித்துச் சுற்றுவதற்கான பிடி கொம்பிலேயே செய்து போடுவர். இங்கு உள்ள மக்கள் யானைத் தந்தத்தில் மோதிரம் செய்து கையில் அணிவது, யானை யின் வால்மயிரைக் கொண்ட காப்பினை அணிதல், புலிப்பல்லு, புலி நகம் வைத்த பதக்கங்களை கழுத்தில் தொங்கவிடுதல் போன்றன நன்மை தருவதோடு நோய்கள் அணுகாது என்னும் நம்பிக்கையையும் கொண்டுள்ளனர். இவற்றை உற்றுநோக்கும்போது சங்க இலக்கியங்கள் தரும் புலியை வென்ற வீரத் தமிழர்களின் வாழ்வியல் நினைவில் நிறைகின்றது.

வேட்டையாடக் காட்டில் செல்வது என்பது மிகுந்த ஆபத்தானது. யானை, புலி, பன்;றி, குழுவன் எனப்படும் காட்டெருமை போன்றவற்றால் ஆபத்துக்கள் வருகின்றன. யானை வருமுன்னர் மணியோசை வரும்’ என்பது காட்டில் வரும் யானைக்கும் பொருந்தும் காட்டில் அவை வரும்போது வழியில் உள்ள மரம்செடிகளை முறித்துத் துவைத்தவண்ணமே வருவதால் ஒலி எழும்பும்பும். அதனை மக்களால் உணர்ந்துகொள்ளமுடியும். புலி வருவதை குருங்குகள் அவதானத்தால் எச்சரிக்கை செய்வதால் அறிந்துகொள்ளமுடியும் ஆனால் எதிர்பாராதவிதமாக இவ்வித விலங்குகள் நேர்ப்பட்டால் ஆபத்தைத் தவிர்ப்பது சுலபமல்ல.

புலிகடிப் பொன்னர்

புலியால் கடியுண்ணட ஒருவரைப் பாதுகாத்துத் தூக்கி வந்து வைத்தியசாலையில் வைத்துக் குணப்படுத்திய செயல் நான் இளைஞனாக இருந்தவேளை இடம்பெற்றது. பொன்னையா என்பது அவரது பெயர். ஊிரில் உள்ளவர்கள் சேர்ந்து வேட்டையாடச் செல்வது அவர்களின் ஓய்வுநேரப் பொழுதுபோக்கும் உணவு சேகரித்தலுமாகும். தேன் எடுக்கவும், விலங்குகளை வேட்டையாடவும் செல்லும் வழக்கம் இக்கிராமத்தவர்கள் மத்தியில் மிக நீண்டகாலமாக நிலவிவந்துள்ளது. அவ்விதம் ஒருமுறை சென்றவர்களில் எதிர்பாராத விதமாகப் புலியை எதிர் கொண்டு அதனை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளனர். அது மிக அண்மையில் வந்தமையால் எல்லோரும் மரத்தில் ஏறிவிட்டார்கள். புலியால் கடியுண்ணடவர் முகமாலைப் பொன்னர் என அழைக்கப்படும் பொன்னையா. இவர்கள் முகமாலையில் இருந்து வந்து குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் இவருக்கு முகமாலைப் பொன்னர் என்ற பெயரே நிலைத்திருந்தது. ஏறத்தாழ எட்டுப்பேர் தங்குவேட்டைக்குச் சென்றுள்ளனர். தங்குவேட்டை என்பது அல்லது தாவாடி வேட்டை என்பது காட்டில் வெகுதூரம் சென்று கோடைகாலத்தல் வற்;றி மிக அற்பமாக உள்ள நீர் நிலைகளுக்கு வரும் விலங்குகளை வேட்டையாடுவதைக் குறிக்கும்.

நீர் நிலையை எவ்வித விலங்குகள் வருகின்றன என்பதனை அவற்றின் காலடிகளை அவதானித்து தீர்மானித்துக்கொண்டு காற்றையும் கவனித்து அருகாமையில் உள்ள மரத்தில் ‘ஏற்று’ எப்படும் உயரத்தில் இருக்கையை தடிகளைப் பரப்பி கட்டிக்கொள்ளுவதைக் குறிக்கும். ஆனால் இவர்கள் செல்லும் வழியில் பெரியதொரு சிறுத்தை இவர்கள் எதிர்பாராத விதமாக மிக அண்மையில் வெளிப்பட்டுள்ளது. அதனை நோக்கி துப்பாக்கி வைத்திருந்து ஒருவர் சுட்டுள்ளார் ஆனால் சூட்டை வாங்க் கொண்ட அந்தப் பயங்கரச் சிறுத்தை அவரக்ளை நோக்கிப் பாய்ந்துள்ளது. இதனால் அனைவரும் மரத்தில் ஏறியுள்ளனர். மரத்தின் அடிப்பாகத்தில் ஏறிக்கொண்டிருந்த ஒருவரின் மீது தாவி மேலே இருந்த வெள்ளை வேட்டி கட்டியிருந்த இவரை அது தாக்கியதனால் அவரோடு அது கீழே விழுந்து அவரைக் கடித்துள்ளத, அவரின் உடலில் 16 கடிக்கப்பட்ட காயங்கள் இருந்ததாக யாழ் வைத்தியசாலை மருத்துவர்கள் சொன்னதாகக் கேள்விப்பட்டுள்ளேன். அவரைப் பாதுகாக்க கந்தையா என்பவர் கீழே மறைந்திருந்தவர் வந்து புலியின் வாயினுள் துப்பாக்கியை திணித்து வெடிக்கவைத்து அதனைக் கொன்று கடியுண்ணடவரை மீட்டு வேட்டையாடிய விலங்;கை காவிவருவதுபோன்று தூக்கி வந்துள்ளனர். அதன் பின்னர் அவர் முல்லைத்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்:து அவசர வாகனத்தின் மூலம் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டு மாதக்கணக்காக கவனிக்கப்பட்டுக் குணமடைந்து வந்து பின்னர் நீண்டகாலம் உயிர் வாழ்ந்தவர்.

உப்பு விளையும் கடலோரம்

முளமுனைக் கிராமத்தின் ஒரு எல்லையாக அமைந்துள்ள நாயாறு நந்திக்கடல் கோடைகாலத்தில் நீரற்று வற்றிவிடுவதோடு உப்பு விளையும் இடமாகவும் காணப்படுகின்றது. செம்மைலாக்கிராமத்திற்கு அண்மையாக உள்ளமையால் அக்கிராமத்தவர்களும் வந்து உப்பைச் சேகரித்து செல்வது வழக்கம், கிராமத்தலைகை;காரரின் கெடுபிடி இல்லாத நிலையம் பொலீசாரின் கெடுபிடிகள் இன்மையும் இத்தொழிலை வேட்டை போன்ற மனப்பாங்குடன் செய்துவருவது இயல்பாகக் காணப்பட்டது. ஆவணி, புரட்டாதி மாதத்தில் ஊரவர்கள் தமக்குத் தேவைக்கான உப்பினை இங்கிருந்து சேமித்து வைத்துக்கொள்வது வழமை. உப்பைச் சேமித்து வைப்பதற்கு குண்டான் எனப்படும் பெரிய மட்பாண்டங்களைப் பயன்படுத்துவர். இவை உப்பினால் அரித்து அழிக்கப்படமுடியாதவை என்பதையும் உருகினால் கூடச் சேதாரமடையாதவை என்பதனையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதுதான் உண்மை. இப்பிரதேசத்தில் ஒரு உப்புச் சேகரிப்புக்களஞ்சியம் ஒன்றினை ஆக்கிக்கொள்ள அரசின் உதவியினை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.தா. சிவசிதம்பரம் அவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் எனினும் இப்பிரதேசம் தமிழர் தாயகமாக இருந்தமையால் அது விரைவில் கைகூடாமற் போனது எனலாம்.

விவசாய முயற்சிகள்

குமுளமுனை ஒரு விவசாயக் கிராமம். விவசாயமே இதன் அடிப்படையாக அமைந்திருந்தது. விவசாயத்திற்குத் தேவையான மாட்டு வளர்ப்பும் முக்கியம் பெற்றிருந்தது. வயலை உழுவதற்கும், அறுவடை செய்த நெல்லை பிரித்தெடுக்கும் சூட்டடிப்புக்கும் மாடு மிகமுக்கிய மூலதனமாகக் காண்பபட்டது. மாடுகள் இல்லாதவர்கள் மாடுகள் உள்ளவர்களிடமிருந்து பொலிசை எனப்படும் அறுவடையில் நெல்லைக் கொடுக்கும் ஒரு கூலிமுறை காணப்பட்டது. பொலிசைக்கு விதை நெல்லை வாங்குதல், மாடுகளை வாங்குதல், குத்தகைக்கு நிலத்தை வாங்குதல் என்பன அக்காலத்தில் வழக்கத்திலர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குமுளமுனையில் கொட்டுக்கிணற்று வயல், நடுத்துண்டு, பெரியவெளி, சாரலிவயல், ஆற்றங்கடவை, மருதமடு மறிச்சிக்கட்டி, இளங்கலயன் வயல், ஆறுமுகத்தான் குளம், கரியல் என்னும் பெயரிய வயல் நிலங்களோடு குமுளமுனைக் கிராமத்தை அண்டிய கிராமத்தவர்களுக்கும் பங்கீடு செய்து கொடுக்கப்பட்ட தண்ணீமுறிப்புக்குளத்திட்டம் இக்கிராமத்தின் வளத்த்ிற்கு முக்கியமானதாக அமைகின்றது. இக்கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட ஆறு மைல் தூர்த்திலுள்ள இக்குளக்கட்டு இலங்கையின் முதல் பிரதம் அமைச்சராக இருந்த டி.டிஸ். சேனநாயக்க அவர்களின் மைந்தனான் டட்லி சேனநாயக்க அவர்கள் நீர்ப்பாசன அமைச்சராக இரந்தபோது இக்குளம் கட்டுவிக்கப்பட்டது. இரண்டு பெரும் வாய்க்கால்களைக் கொண்ட பெரும் நீர்த்தேக்கமாக இது அமைந்துள்ளது. இதனால் நன்கு மழை பெய்து நீர்த்தேக்கப்படும் காலங்களில் சிறுபோக நெற்செய்கையும் இப்பிரதேசத்திற்கு வளந்தருவதாக அமைந்துள்ளது. இக்குளம் குளக்கோட்டு மகாராசாவால் கட்டப்பட்டது என்பது இவ்வூரவர்கள் பேசிக்கொள்ளும் வராலாற்று உண்மையாகும்.

இங்கு வண்ணான் ஆறு, தேரோடும் வீதி, நித்தகை அல்லது நீத்துக்காய் ஆறு, மூண்டு ஆத்துப்பவிர் என்பன மாரிகாலத்தில் மழை பெய்யும் காலங்களில் பெருக்கெடுத்து ஓடுவனவாகக் காணப்படுகின்றன.

குமுளமுனையில் உள்ள சிறிய குன்றுகளில் காணப்படும் செம்பூரான் கலந்த மண்ணோடு உள்ள கோளங் கற்பார்கள் செந்நிறமானதாக இருந்தாலும் மிகவும் உறுதியானவையாகக் காணப்படுவதனால் அவை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிதளம் போடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. முல்லைத்தீவு, தண்ணீரூற்று, முள்ளியவளை, நீராவிப்பிட்டி, வற்றாப்பளை, முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் அளம்பில், செம்மலை போன்ற கிராமங்களில் உள்ள கட்டிடங்கள், பாலங்கள் போன்றவற்றிற்கு இக்கிராமத்துக் கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கிராமத்திற்கும் வடமராட்சியில் உள்ள கரணவாய், வரணி போன்ற கிராமங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இங்குள்ள பிள்ளையார் ஆலயங்களில் ஒன்றான கற்பகப் பிள்ளையார் கோவிலை மிக நீண்ட நெடுங்காலமாக நிருவகித்த பெருமை கரணவாய்யிலிருந்து வந்த சைவக் குருக்கள் பரம்பரையினரையே சாரும். வுரணிக் கிராமத்துடன் தொடர்புடைய மாணிக்க விதானையார் என்பவர் சைவக் குருக்கள் பரம்பரையைச் சார்ந்தவர் என்பதும் ஆங்கில் ஆட்சிக்காலத்திலும் பின்னர் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலும் விதானையாராக கடமையாற்றியவர் என்பதும். கற்பக பிள்ளையார் ஆலயத்தினைப் போர்த்துக்கீசர் அழித்த பின்னர் அதனைப் புனருத்தாரணம் செய்வித்து கும்பாவிசேசம் செய்வித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் இக்கோயில் ஊரவர்களால் நிருவகிக்கப் பட்டு வருகின்றது. இக்கோயில் கிராமத்தி;ன் கீழக்குப்பாகத்தி;ல் நந்திக் கடலோரமாக அமைந்திருக்க கொட்டுக்கிணற்றுப்பிள்ளையார் ஆலயம் ஊரின் மேற்குக்கரையோரமாக பெரிய வெளி எனும் வயல் வெளியினருகே அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சம். இவ்விரு ஆலயங்களும் கிராமத்தினை இருபுறத்தேயும் இருந்து காவல் செய்வதாக ஊரவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

குமுளமுனை கல்வி வரலாறு:

குமுளமுனையில் சரவணமுத்துப் புலவர் எனப்பெயருடன் ஒரு புலவர் இருந்ததாககும். ஆவர் வாழ்ந்துவந்த குடிமனைக்கான காணி ‘சரவணையார் வளவு” எனவும் அழைக்கப்பட்டுவருவது சான்றாக அமைகின்றது. குமுளமுனையில் ஆரம்பத்தில் திண்ணைப் பள்ளிமுறை இருந்திருக்கலாம் என ஊகிக்கமுடிகின்றது. எனினும் குலத்தொழிலாகக் காணப்படும் விவசாயமே இக்கிராமதின் முக்கிய தொழிலாகவும் வருவாயை ஈட்டும் வளமாகவும் காணப்படுகின்றது. ஆடு, மாடு மேய்த்தல் விவசாயத்தோடு தொடர்புடையதாகவே இருந்துவருகின்றது. மந்தைமேய்ப்போர் என்னும் ஒரு பிரிவினர் இங்கு வேறுபட்டவர்களாக காணப்படவில்லை. அதிகளவு ஆடு, மாடுகள் போன்ற மந்தைகளின் உரிமையாளர்களும் நிலத்தின் உரிமையாளர்களாகவே காணப்பட்டனர். கல்வி தொடர்பான ஆரம்பம் பற்றிய தெளிவான வராற்றைப் பெற்றுக்கொள்ளுவது மிகக் கடினமாக உள்ளது.

போர்த்துக்கீசரின் வருகையின் காரணமாக மதம்பரப்பும் நோக்கத்திற்காக தாங்கள் கைப்பற்றிய பிரதேசங்களில் பாடசாலைகளை அமைத்து கல்வியின் மூலம் சமயத்தை இலகுவாகப் பரப்பமுனைந்தார்கள். இதற்காக ஒரு காணியையும் வாங்;கியிருந்தார்கள். இப்பாடசாலையில் தண்ணீருற்றைச் சேர்ந்த நெல்லிநாதர் அவர்கள்தான் அப்பாடசாலையின் இறுதி ஆசிரியராக இருந்தார் என அறியமுடிகின்றது. எனது தந்தையார் அவரிடம் கல்வி கற்றதாகக் குறிப்பிட்டமையை நான் அறிவேன். இதன்காரணமாக குமுளமுனையிலும் ஒரு பாடசாலை அரம்பிக்கப்பட்டது. அதில் அங்குள்ள மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், இக்கிராமத்தில் வாழ்ந்தவரதளில் பெரும்பாலனவர்கள் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ‘வீரசைவர்’களாக இருந்தமையால் போர்த்துக்கீச பாதிமாரின் முயற்சி பயனளிக்கவில்லை. இதன்காரணமாக அரசாங்கப்பாடசாலை ஒன்று இங்கு ஆரம்பிக்கப்பட்டது. இக்கிராமத்தின் மத்தியில் 1932ம் ஆண்டு நிரந்தரக் கட்டிடம் ஒன்று அரசினால் கட்டப்பட்டது. பிரித்தானிய முடியின் சின்னம் இக்கட்டடித்தில் பொறிக்கப்பட்டிருந்ததை நான் படிக்கும் காலத்திலேயே பார்த்துள்ளேன். அந்த முடியின் கீழ் 1932 என்பது பொறிக்கப்பட்டிருந்தது. இதுதான் இக்கட்டிடம் கட்டப்பட்ட காலம் என்பதனை அது உறுதி செய்வதாக அமைந்திருந்தது.

இப்பாடசாலையில் தக்காளி வாத்தியார் என அழைக்கப்பட்ட கனகரத்தினம் ஓராசிரிர் பாடசாலையின் தலைமை ஆசிரியராகவும் கடமையாற்றினார். இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான காலப்பகுதியில் நான் ஆரம்பக் கல்வ்ியைத் தொடர்ந்த வேளை 1950 களில்; கரவெட்டியைச் சேர்ந்த சின்னையா அவர்கள் அசிரியராகப் பணியாற்றினார். அதன்பின்னர் நாரந்தனையைச் சேர்ந்த கந்தையா என்னும் ஆசிரியர் தலைமை ஆசிரியராக வந்து பணியாற்றினார். அப்போது மூன்று ஆசிரியர்கள் பணியாற்றினார்கள். தொடர்ந்து கரவெட்டியைச் சேர்ந்த வீரகத்தி ஆசிரியர் தலைமை ஆசிரியராக வந்தவேளை மாணவர்கள் அப்பொழுது நான் ஐந்தாம் வகுப்பில் கற்றுக்கொண்டிரந்தேன். அங்கு கரவெட்டியைச் சேர்ந்து கணபதிப்பிள்ளை அவர்களும், உடுப்பிட்டியைச் சேர்ந்த கந்தசாமி அவர்களும் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அவர்களோடு பராசக்தி, மங்கையற்கரசி போன்றவர்களும் வந்து சேர்ந்தனர். அதிகரித்தமையால் மேலும் ஆசிரியர்கள் 6 ஆக அதிகரிக்கப்பட்டனர்.

கட்டப்பட்ட அரசினர் பாடசாலை வளர்ச்சி அடைந்து இன்று உயர்தர வகுப்புக்கள் வரை கல்வி புகட்டும் நிலையமாக வளர்வு பெற்றுள்ளது. அறுபதுகளின் பிற்பகுதிவரை இங்குள்ள வசதி படைத்த ஒருசிலரின் பிள்ளைகளே வெளியூர்களுக்குச் சென்று கல்வி கற்று வந்தனர். ஆனால் பின்னர் போக்குவரத்து வாய்ப்புக்களின் காரணமாக முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் தொகை சற்று அதிகரித்தது.

வீரமும் தீரமும் துணிவும் மிக்க பெண்மணி அரியாத்தை

இக்கிராமத்தின் சிறப்பிற்கு இன்னுமொரு கதை உண்டு அரியாத்தை என்னும் வேலப்பணிக்கனின் மனைவியான இப்பெண்மணியின் வீர வரலாறு இம்மக்களிடையே மங்காத ஒன்றாக அமைந்துள்ளது.

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைத்த விந்தை மனிதனும் தலை குனிந்தான் என்பதை மெய்ப்பித்து வன்னி மண்ணில் வாழ்ந்தவள்; அரியாத்தை. வன்னி மண்ணில் குமுளமுனை என்னும் ஒரு கிராமம் உண்டு. அங்கு பல ஆண்டுகளுக்கு முன் மதம்கொண்டது யானை ஒன்று. கிராமத்தவர்களின் பயிரினங்களை எல்லாம் அழித்தது மதயானை. யானையைப் பிடிப்பது பணிக்கனின் வேலை. வேலைப்பணிக்கனோ நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்துவிட்;டான். மதம் கொண்ட யானையை அடக்கத் தானே சென்றாள் அவனது மனைவி. யாரும் அறியாமலே மிகவும் பயங்கரமான மதயானையை நோக்கி விரைந்தாள். வேறு எங்குமல்ல பேய்கள் உறங்கும் சுடுகாட்டுப்பகுதிக்கு விரைந்தாள். அங்கு நின்று அட்டகாசம் புரிந்த மதயானையை அடக்கி ஒரு புளியமரத்தில் கட்டினாள். தன் கணவனுக்குக் களங்கம் ஏற்படக்கூடாது என்னும் எண்ணமே அவளை உந்தியது. இன்று எமது மண்ணில் தீரம்புரியும் மகளிரின் வழிகாட்டியாக இன்றும் எம்மிடையே வாழ்கின்றார் அரியாத்தை என்னும் வீராங்கனை. ஷகுமுளமுனை; என்ற கிராமத்தில் வாழ்ந்ததாகவும் தன் கணவனான வேலப்பணிக்கன் அடக்கிப் பிடிக்கமுடியாத மதம்; கொண்டயானையை அடக்கி வென்றார் எனவும் குறுநில வன்னி அரசனின் ஆணையை மீறமுடியாத பயத்தினால் கணவன் படுக்கையில் ;மனச்சோர்வு;என்னும் நோய்வாய்ப்பட்டதால் மனைவியான அரியாத்தை கணவனுக்காக மதம் கொண்ட யானையை அடக்கிக் கட்டினாள் எனவும் கட்டப்பட்ட புளியமரத்தில் யாரும் அணுகாமல் யானை இறந்தது எனவும் கதை ஒன்று வழக்கில் உள்ளது. குமுளமுனையில் கற்பகப்பிள்ளையார் கோவிற்புறப் பகுதியில் ஒரு புளியமரத்தை ;ஆனை கட்டியபுளி; என இன்றும் கூறுவர்.

அரியாத்தையின் சொந்த மாமன் மகனான நீலப்பணிக்கன்;, அவள் தனக்குக் கிடைக்க வில்லை என்ற ஆத்திரத்தினால் வேலப்பணிக்கனுக்கு அரசன் இட்ட கட்டளையைச் சந்தர்ப்பமாகக் கொண்டு அரியாத்தையைப் பழிவாங்க எண்ணினான். யானையை அடக்கக் கூடியவன் வேலப்பணிக்கன் அல்ல அவனது மனையாள் அரியாத்தையே என இகழ்வு சிறப்பாக ஏளனம் செய்தான். பயிர்;களை அழித்து வந்த மதம் கொண்ட யானையை அடக்கும் வழியைச் சின்னவன்னியன் சபையோரிடம் கேட்டபோது சபையினர் வேலப்பணிக்கனே தகுந்தவீரனாகக் கணித்துக் கொண்டனர். இந்த ஒளிப்பேழையில் அரியாத்தை வடிவம் வீரம் மிக்கதாகச் சித்தரிக்கப்படாது, வழமையாகப் பெண்களைச் சித்திரிக்கும் நளினம், பதுமை, அடக்கஒடுக்கம் நிரம்பிய நங்கையாக வர்ணிக்கப்பட்டு யானைமுகனை வீழ்ந்து வணங்கி அக்கடவுளின் சக்தியைப் பெற்றுக் கடவுள் கருணையினால்;;;;;;;;;;;;; அந்த யானையை அடக்கியதாகக்கதை வர்ணிக்கப்பட்டிருந்தது எனக் கூறப்படுகிறது.(நிவேதினி: செல்வி திருச்சந்திரன்)

இன்னொரு கதை வடிவில் நீலப்பணிக்கன் தன் மாமன் மகளை அடையத் தடையாயிருந்த வேலப்பணிக்கனுக்கு சின்னவன்னியன் ஏவிய கட்டளையை நிறைவேற்றாது அவன் அந்தரப்பட்டால் அது அரியாத்தைக்கு ஒரு பாடமாகவும் அவள் தன்னை இரந்து உதவும்படி கேட்க ஒரு வழியாகவும் இருக்கும் என எண்ணினான் எனக் கூறப்படுகின்றது. அதனால் வேலப்பணிக்கனின் உணவில் நஞ்சைக்கலந்து அவனை நோயாளியாக்கினான் எனவும் கூறப்படுகிறது.

வன்னியில் சில பெண்கள் மாடுகளைத் துரத்திவந்து கட்டுதல், பால் கறத்தல், பிடிக்கமுடியாத நிலையில் கட்டாக் காலிகளாக ஓடித்திரியும் ;நாம்பன்; மாடுகளை கயிறுஎறிந்து படுத்துக் கட்டும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. அரியாத்தைஎன்ற பெண் வீரம் நிறைந்தவளாக இருந்திருக்கக் கூடிய சந்தர்ப்பம் வன்னிச் சூழலில் இருந்திருக் கின்றது. இன்றும் இருந்து வருகின்றது. அரியாத்தையின் வீர வரலாறு குமுளமுனைக் கிராமத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது.

குமுளமுனையில் இன்றும் வன்னியன் வளவு, வன்னியன் கிணறு என்பன காணப்படுவதோடு, வன்னியிற் தெய்வத்திற்கு மிக ஆசாரமாக பெண்கள் குழந்தைகள் செல்லாத ஒதுக்குப்புறமான உள்ள காட்டுப்பகுதியல் அல்லது வயலில் பொங்கிப் படைப்பது வழமை.

குமுளமுனைக்கு வடமேற்குப்பக்கமாக நாகஞ்சோலை என்னும் நாக மரங்கள் நிறைந்த காடு உண்டு. இங்கிருந்து யாழ் மாவட்டத்தில் உள்ள பல கோயில்களுக்கு நாகமரங்கள் கொடிக் கம்பத்திற்காக வெட்டப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின கொடிக்கம்பப் புனருத்தாரணத்திற்காக அறங்காவற் சபையின் செயலாளராக இருந்த திரு. சபாநாதன் அவர்கள் குமுளமுனைக்கு வந்து நாகமரம் ஒன்றை வெட்டி நயினாதீவுக்குக் கொண்டு சென்றார் என்பதேர்டு, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஒரே தேர்தற்தொகுதியாக இருந்த அரசாங்க சபைக்காகத் தேர்தலில் நின்ற டி.எம். சபாரத்தினம் அவர்களின மகனான புலெந்திரன் அவர்கள்; வல்லிரக் கோயிலுக்கு ஒரு நாகமரத்தை எடுத்துச் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பண்டார வன்னியனும் அவனது சகாக்களும் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஆங்கிலேயர் குமுளமுனையில் ஒரு சுற்றுலா விடுதியினை அங்குள்ள உயரமான குன்றின் மீது அமைத்திரந்தார்கள். அதில் தேசாதிபதியின் பிரதிநிதி வந்து தங்கிச் செல்வது வழக்கம் எனவும், நீதி விசாரணைகள் அங்குதான் நடைபெறுவது வழக்கம் எனவும் ஊரவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளதோடு அந்த மண்டபத்தின் எச்ச சொச்சங்களைக் கண்டும் உள்ளேன். கல்லுத் தோண்டி எடுப்பதற்காக அவை அழிக்கப்பட்டுவிட்ன.

கதிர்காமக் கந்தனிடம் கரைப்பாதை

கரையோரமாகக் கதிர்காம யாத்திரைசெய்யும் கந்தனின் அடியார்கள் குமளமுனையில் மூன்று நாட்கள் தங்கியிருந்து இளைப்பாறித் தமது பிரயாணத்தைத் தொடர்வார்கள். அவ்விதம் தங்கியிருந்கும் வேளை இவ்வூரவர்கள் மிக்க பக்தி சிரத்தையோடு அடியவர்களை வரவேற்று உபசரிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். அப்பூதியடிகளின் தொண்டை நினைவுகூரும் வகையில் இக்கிராமத்தவர்களின் பணி அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கந்தவனத்தாரின் தண்ணீர்ப்பந்தல்

குமளமுனைக்கும் தண்ணீரூற்றுக்கும் இடையே உள்ள தூரம் ஆறு மைல்கள் ஆகும். .இந்த தூரத்தைக் கடக்க குறைந்தது ஒன்றரை அல்லது இரண்டு மணிகள் எடுக்கும். நடக்க முடியாத வயோதிர்களுக்கு இன்னும் கூடிய நேரம் எடுக்கலாம். நடுவழியில் நீர் வசதிகிடையாது அதனைக் கருத்திற்கொண்டு நடுவழியில் முறிப்புக் குளத்திற்கு அண்மித்ததாக நீர்ப்பந்தல் ஒன்றை தற்காலிகமக ஏற்படுத்தி தாகசாந்தியும் இளைப்பாறிச் செல்லவும் வசதிகளைச் செய்து கொடுப்பதை குடுமுளமுனையைச் சேர்ந்த சின்னத்தம்பி கந்தவனம் ஏற்பாட்டைச் செய்து வருடாவருடம் செய்துவருவது வழக்கம்.

மா, பலா, வாழைப் பழத்தோடு விளாம்பழம், தென்னை, தோடை, அன்னமின்னா, பனம் பழம் என்பனவற்றிற்கும் குமுளமுனை பெயர்போன கிராமமாகும். இவற்றை விட காட்டில் சில காலங்களில் கிடைக்கும் முரலிப்பழம் மிகவும் சுவை வாய்ந்த பழங்களில் ஒன்று. இப் பழங்கிடைக்கும் காலங்களில் கிடைக்கும் தேன் மிகவும் சுவையானது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்விதமே பாலைப்பழமும் மிகவும் சுவைவாய்ந்ததோடு பாலைப்பாணி காய்ச்சி அதனைப் இனிப்புப்பலகாரங்கள் செய்வதற்கும் உபயோகிக்கும் தன்மை அக்கிராமத்து மக்களிடம் உண்டு. விளாப்பழம் வயலோரங்களிலும் குளக்கரைகளிலும் மிக அதிகமாகக் கிடைகின்றது. பல விழாம்பழங்கள் முழுமையாக விழுந்து கிடந்தாலும் வெறும் கோதாக இருக்கும். அவ்விதம் இருப்பதை யானை உண்ட விளாங்கனி என்று கூறுவர். கறுத்தைக் கொழும்பான் வெள்ளைக் கொழும்பான், அம்பலவி, விலாட்டு என்னும் இன மாம்பழங்கள் அங்கி பெருந்தொகையாகக் காணப்படுகின்றன. பலாப்பழங்களில் கூழன் என்பது மிகவும் இனிமைவாய்ந்தது. வரிக்கை என்பது உண்ண இலகுவானது பலவகையாகப் பலாப்பழங்கள் காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் கதலி, தேன்கதலி, சீனிக் கதலி அல்லது இறப்பர் கதலி, இரதை, கப்பல், செவ்வாழை, மருத்துவ வாழை, கறிவாழை, சாம்பல்மொந்தன், கிளிமொந்தன் போன்ற வாழை இனங்களும் இங்கு காணப்படுகின்றன. இவற்றை விட கானல் வாழை என மழையை நம்பி வாழை நடும் வழக்கமும் உண்டு. காட்டை வெட்டி அழித்துப் அதனைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும்போது அதனைப் புதுப்புலவு என அழைப்பார்கள். அவ்விதம் செய்துவிட்டு பின்னர் பயன்படுத்தப்படாமல் விடும் நிலங்கள், மழையைமட்டும் நம்பி மேற்கொள்ளப்படும்போது அது சேனைச் செய்கை எனவும் அழைப்பர். ஏள்ளு, கொள்ளு, குரக்கன், சாமை, தினை, சோளம், இறுங்கு போன்ற தானியங்கள் சேனைச் செய்கையாக மேற்கொள்ளப்படுகின்றது. புதிதாக் காடழித்து மேற்கொள்ளப்படும் புதுப் புலவுகளில் இவ்வித பயிரினங்களே ஆரம்ப காலங்களில் பயிரிடப்பட்டன.

குடியிருப்புக்களில் கிணற்றைச் சுற்றி வாழை பயிரிடப்பட்டு உள்ளூர்;த்தேவைகளுக்குப் பயன் படுவனவாகக் காணப்பட்டன. தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டு, கோயில் திருவிழாக்கள், பொங்கல்கள், மடைகள் போன்றவற்றிற்கு வாழைப்பழம் இவ்விதமாகப் பயிரடப்படும் வாழைகளிலிருந்தே பெறப்படுவது வழக்கம். இக்காலங்கள் போக ஏனைய காலங்களில் வாழையிலிருந்து கிடைக்கும் வருமானம் இன்மையால் இதனை பணப்பயிராகப் பயிரிட முடியாதநிலை ஆரம்ப காலங்களில் அதாவது ஐம்பதுகளிலும் அதற்கு முன்னரும் காணப்பட்டன. குடியேற்றங்கள், பிறப்பு வீத அதிகரிப்புப் போன்றவற்றால் சனத்தொகையில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டதோடு மக்கள் வாழ்வியலிலும் மாற்றங்கள் காணப்பட்டன. இதன்வழி போக்குவரத்துப் பாதைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து வாய்ப்புக்களைப் பல கிராமங்கள் பெற்றுக்கொண்டமையால் அயல் கிராமங்களோடும் பட்டினங்களோடும் தொடர்புகள் இலகுபடுத்தப்பட்டமையால் கால் நடையாகவும், மாட்டுவண்டி, இரண்டு சில்லு உதை வண்டி போன்றவற்றின் பாவனைகளால் மட்டுப்படுத்தப்பட்டிருந்த போக்குவரத்து பஸ் போக்குவரத்து 1960களின் பின்னர் பல கிராமங்களுக்கும் தொடர்புகளை விரைவாக ஏற்படுத்தக் காலாக அமைந்தது. குமளமுனைக் கிராமம் 1950க்குப்பின்னர் துரித விருத்தி காண்பதற்கு அப்போது நீர்ப்பாசன அமைச்சராக இருந்த டட்லி சேனநாயக்க அவர்களால் மேற்கொள்ளப்பட்ட தண்ணிமுறிப்புக் குளப் புனருத்தாரணம் காலாக அமைந்தது. துண்ணிமுறிப்புக் குளம் புனருத்தாரணம் செய்யப்படுவதற்கு முன்னர் குமளமுனைக்கு அணித்தாக உள்ள பலசிறு குளங்கள் புது நிர்மாணம் பெற்றன. இதனால் ஆறுமுகத்தான் குளம் எனப்படும் சிறிய 1000 மீற்றர் வரை நீளமுள்ள சிறிய அணைக்கட்டு கட்டப்பட்டு அக்கிராமத்திலுள்ள மிகவும் ஏழ்மை நிலையில் காணியற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் குமளமுனையில் இருந்து சிலகுடும்பங்கள் அதாவது விவசாயம் செய்வதற்கு நிலமற்ற கூலி விவசாயிகளாயிருந்த வள்ளுவர் சமூகம் என ஒதுகி;கப்பட்டவர்களுக்கு வளங்கப்பட்டது. இது ஒருவருக்குத் தலா ஐந்து ஏக்கர் நன்செய் நிலம் நீர்ப்பாசன வசதியோடும் ஒரு ஏக்கர் புன்செய் நிலம் குடியிருப்புக்காகவும் வழங்கப்பட்டது. இதனை அப்போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த மாணிக்க இடைக்காடர் (பேராசிரியர் கைலாசபதியின் மாமனார்) அவர்கள் வழங்கியிருந்தார். ஒதுக்கப்பட்ட மக்களின் நன்மை கருதி அவர் இந்த மக்களுக்கே அந்தக் குளத்தின் கீழ் அமைந்த காணிகளைப் பகிர்ந்தளித்தார் என்பது அவரின் உயர்ந்த மனப்போக்கைக் காட்டி நிற்கின்றது. உயர் சாதியினர் சிலர் ஏழைகளாயிருந்தும் தங்களுக்கு அந்த மக்களோடு இணைந்து விவசாயம் செய்ய விரும்பவில்லை எனத்தெரிவித்தமையை அடுத்து அயலூரான கணுக்கேணி, ஆண்டான் குளம் அகிய கிராமங்களில் இருந்த மக்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் தண்ணி முறிப்புக் குளக்கட்டுப் புனருத்தாரணம் செய்யப்பட்டு 1958ம் ஆண்டு அதன் கீழ் உள்ள காணிகள் தலா மூன்று ஏக்கர்கள் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் குமுளமுனையில் இருந்து நாக்கு மைல்களுக்கு அப்பால் வயல்காணிகளைப் பெற்றுக்கொண்டனர்.

தண்ணிமுறிப்புக் குளத்தினை 1ம் அக்கபோதி மன்னன் கட்டுவித்தான் எனவும், குளக்கோட்ட மன்னன் கட்டுவித்தான் எனவும் வரலாற்றில் குறிப்;புக்கள் காணப்படுகின்றன. இக்குளத்திற்கு அண்மையில் குரந்து மனை எனும் உயரமான ஒரு இடம் உண்டு. இங்குள்ளவர்கள் அந்த மலைக்குன்றில் ஐயன் கோயில் ஒன்றை வைத்து வழிபட்டு வந்துள்ளதோடு இன்றும் வழிபட்டு வருகின்றனர். வருடாவருடம் இந்த ஆலயத்திற்கு மடை போட்டுப் பூசை செய்து வழிபடுவது இவ்வூர் மக்களின் வழக்கமாகும். ஆனால் இந்த மலைக்குன்றில் புத்த கோயில் முன்னர் இருந்தது எனக்குறிப்பிட்டுக்கொண்டு 1977-78களில் சில புத்த பிக்குக்கள் அங்கு வந்து புத்த தேவாலயம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். வவுனியாவில் இருந்து கருங்கல், கட்டிடப் பொருட்களோடு இரவோடு இரவாக இங்குவந்து அதற்கான அடிக்கல்லை நாட்டிப் பணிகளை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டனர். இதனை அறிந்த குமளமுனைக் கிராம வாசிகள் அங்கு சென்ற தங்கள் கோயிலை நிரந்தரமான கட்டிடத்தை கட்டி வழிபாட்டை மேற்கொண்டனர். இவ்வரிய பணியில் அவ்வூரைச் சேர்ந்த நாகநாதி நாகலிங்கம் (பூசகர்), தங்கராசா இராமநாதன், நமசிவாயம் கருணாகரன், தம்மையா அழகராசா, கந்தையா மயில்வாகனம், தண்ணீரூற்றைச் சேர்ந்த செல்லையா நித்தியானந்தம் (கணக்காளர் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை) போன்றோர் முன்நின்று செய்ததோடு புத்த பிக்குக்களால் கொண்டுவரப்பட்ட பொருட்களும் அகற்றப்பட்டன. புத்த பிக்குவிற்கு இதனை எடுத்துக்காட்டி இங்கு சிங்களக் குடியேற்றத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்தவர்களுள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த சிங்கள இனத்தினர் ஒருவரும், ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையில் பணியாற்றிய சிங்கள இனத்தைச் சேர்ந்த முகாமையாளர் ஒருவரும் இதற்கு முக்கிய காரணிகளாகவும்ம, ஒத்தாசைகள், ஒத்துழைப்புக்களை நல்கியும் வந்தனர். ஓட்டுத் தொழிற்சாலையில் இருந்து கட்டிடத் தேவைகளுக்கு இலவசமாக பொருட்களைக் கொடுத்தமை அங்கு பணியாற்றிய தமிழ் உள்ளங்களிடையே விழிப்பை ஏற்படுத்தியது. இதனால் இரவோடு இரவாக அங்கு ஐயன் ஆலயம் அமைக்க அது தூண்டியது. ஊரவர்கள் கிட்டத்தட்ட 300 ஆடிகளுக்கு மேல் உயரமான அந்த மலைக்குன்றின் மீது கட்டிடப்பொருட்கள் அனைத்தையும் கொண்டு செல்வதற்கு ஒன்று கூடி உழைத்தமை பாராட்டத்தக்கது. இதற்கிடையே குமளமுனையில் ஒரு வீட்டில் கூலி வேலைக்காக வந்து ததங்கியிருந்த அப்புகாமி என்னும் சிங்கள இனத்தினன் இந்தப் பிரதேசத்தில் அமைந்திருந்த குரந்து மலைபற்றிய தகவல்களையும் அதனைச் சென்றடையும் வழிகளையும் காட்டிக்கொடுத்து உதவினான். இவன் இந்தக் கிராமத்திற்கு வந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக ஊரவர்களோடு உறவாடி வந்தவன். அனைவராலும் மாமா என அழைக்கப்படுவான். வேட்டையாடுவதிலும், காட்டில் தனியே செல்வதிலும் மிகவும் கெட்டிக்காரன். இவனின் உதவியை புத்த பிக்கு பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைந்தமை அவன் சிங்களவன் என்பதும் இடங்களை நன்கு அறிந்தவன் என்பதுமே. ஊரவர்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய புத்த பிக்கு தனது முயற்சி கைகூடாது பின்வாங்கிச் சென்றார். இதன் பின்னரும் இந்த ஊரில் வாழ்ந்த இவன் பின்னர் என்ன ஆனான் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. அவன் தன் ஊரக்குத் திரும்பிச் சென்றிருக்கலாம் என ஊரவர்கள் பேசிக்கொள்வதனைக் கேட்கக்கூடியதாக இருந்தது.

இவ்விதமாக வெளியிடத்திலிருந்த யாரும் அங்கு வந்து வாலாட்ட முடியாத ஒரு ஒற்றுமை மிக்க ஒரு கிராமமாக குமளமுனை திகழ்ந்து வந்துள்ளது. அளவில் சிறிய கிராமமாக இருந்தாலும் அங்குள்ளவர்களிடையே ஒற்றுமை மேலோங்;கி இருப்பதனைக் காணலாம். எனது தந்தையாரின் காலத்தில் இருந்தே இக்கிராமத்தில் கள்ளுக் கட்டுவதற்கோ அன்றி விற்பனை செய்வதற்கோ அனுமதிப்பதில்லை. கள்ளுக் குடிக்கவிரும்புபவர்கள் அயல் கிராமங்களுக்குச் சென்று குடிக்கலாமே ஒழிய இக்;கிராமத்தில் அந்த அனுமதி அண்மைக் காலம் வரை வழங்கப்பட்டிருக்க வில்லை. அளம்பில் கிராமத்தில் கோடைகாலத்தில் கள்ளுக் கட்டி விற்பனை செய்யும் தவறணை முறை நடைமுறையில் இருந்தது. இதற்கான குத்தகையினை வேற்றிடத்தவர்களே மேற்கொண்டு வந்தனர். ஒரு முறை இக்கள்ளு வியாபாரிக்கும் குமுளமுனைக் கிராமத்தவர்களுக்கும் இடையே முறகல் நிலை தோன்றியுள்ளது. அந்த வியாபாரியோ மிகுந்த பராக்கிரமசாலி. ஆவன் ஒரே தரத்தில் பத்துப் பேருக்குப் பதில் சொல்லக்கூடியவன் என எனது தந்தை குறிப்பிடுவார். ஆந்தக் காலத்தில் முல்லைத்தீவில் பொலிஸ் நிலையம் கூட இருந்ததில்லை. அனைத்துக்கும் மாவட்ட இறைவரி அதிகாரி (னு.சு.ழு) தான் பொறுப்பு பொலீஸ் அதிகாரம் அவருக்கு உண்டு. அப்பொழுது அரசாங்க இறைவரி அதிகாரியாக கடமையாற்றியவர் திரு. எக்ஸ். செல்லத்தம்பு அவர்கள். பின்னர் அவர் காணிப் பகுதி ஆளநராகவும் பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். முல்லைத்தீவில் இவர் கடமையாற்றிய வேளை சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த கள்ளுத் தவறணை வியாபாரியின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போக அனைவரும் அரசாங்க அதிகாரியிடம் முறையிட்டனர். ஆவர் அவனை வரும்படி கட்டளை அனுப்;பியும் அவன் வரவில்லை. அவனை யாரும் நெருங்கவே பயப்பட்டனர். இந்த நிலையில் நமக்கேன் வம்பு என்று அளம்பில் கிராமத்தவர்கள் வாய்பொத்தி மௌனிகளாகவே இருந்தனர். இவனது அட்டகாசம் அயல் கிராமங்களின் மீதும் வியாபித்தது. குமளமுனைக் கிராமத்திற்கு வந்து அங்கு கள்ளுக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டதோடு பொருட்களை பணம் கொடுக்காது எடுத்துச் செல்லவும் முற்பட்டான். அற்புதன் எனப் பெயர் கொண்ட இவன் ஊரவர்களுக்கு ஒரு அற்புதனாகவே காணப்பட்டான். ஒரு சமயம் எமது ஊரவர் ஒருவருக்கு இவன் தனது கைவரிசையைக் காட்டிவிட்டான். ஆவர்கள் சென்ற வண்டில் மாட்டை அவன் பறித்துச் சென்றுள்ளான். அதனை அறிந்த ஊரவர்கள் திரண்டனர். ஆப்போது துணிந்தவர்கள் நான்கு ஐந்துபெர் இவனிடம் சென்று நியாயம் கேட்க வந்தபோது இவன் வாள் எடுத்து வீசி இருக்கின்றான். அப்போது ஒரு சூரன்போரே தொடங்கிவிட்டது. நான்குபெர் அவனை அடித்து வீழ்த்;தி கட்டிப்போட்டுவிட்டு அரசாங்க அதிகாரிக்கு அறிவித்துள்ளார்கள். நீண்ட நாட்களாக அவனை எதிர்பார்த்திருந்த அரசாங்க அதிகாரி அவனைக் கைதுசெய்து நீதி மன்றத்தில் கையளித்துள்ளார். இவன் பாதிக்கப்பட்டவனாச்சே அவனை நீதிமன்றம் வெளியே விட்டது. வெளியே வந்த அவன் தன்னைத் தாக்கியவர்களைத் தேடி தனது வண்டிலில் குமளமுனைக் கிராமத்திற்கு வந்து சவால் விட்டதோடு அவர்களை வம்புக்கு அழைத்திருக்கின்றான். வுிட்டார்களா ஊரவர்கள் அவனைத் துரத்திச் சென்று அவன் கொண்டுவந்த வாளினாலேயே வெட்டி காயப்படுத்தி இருக்கின்றார்கள். நீதி மன்றம் விசாரணை என்றெல்லாம் அலைந்தான். ஆனால் அவனுக்கு யாருமே சாட்சியம் அளிக்க வில்லை. யார் செய்தார்கள் என்பதனையும் அறிந்து கொள்ளமுடியவில்லை. விசாரணை படுக்கைக்குப் பேனதுதான் ஊரவரின் ஒற்றுமையாக அமைந்தது.

துண்ணி முறிப்புக் குளம் கட்டப்பட்டபோது அங்கு அழிபாடுகளில் இருந்து ஒரு பிள்ளையார் சிலையும், நாகதம்பிரான்சிலையும் கண்டெடுக்கப்பட்டன. பிள்ளையார் சிலையையும் நாகதம்பிரான் சிலையையும் பிரதிட்சை செய்து கோயில் கட்டி ஆதரித்து வருகின்றனர். இக்கோவில் குளக்கட்டின் அடிவாரத்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் திருவிழாக்கள் ஒழுங்காகச் செய்யப்பட்டு வந்தன. புின்னர் நாட்டின் நிலைமை காரணமாக அவை நின்றுவிட்டன.

நெய்தல், குறிஞ்சி, மருதம், முல்லை, பாலை ஆகிய ஐந்திணை இயல்புகளும் ஒருசேர அநை;துள்ள ஒரு கிராமமாக குமுளமுனை விளங்குகின்றது. மிகவும் அமைதியும், குளிர்மையும் நிறைந்த ஒரு இனிய கிராமம் என்பதனை இங்கு சென்றுதிரும்பிய பல வேற்றிடத்தினர் புகழ்ந்துரை பகர்வது குறிப்பிடத்தக்கது.

1985இல் இக்கிராமத்திற்கு கூலிவேலைக்காக வந்த சிங்களக் கூலி விவசாயிகளை அழைத்துச் சென்று அவர்களுக்கு வேலைதருவதாகக் கூறி கொலைசெய்யப்பட்டு, புதைக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் இடவிளக்கப்படத்தில் சிவப்பு அடையாளம் இடப்பட்டு இக்கிராமத்தவர் அனைவருமே பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளுக்கு துணைபோகின்றவர்கள் என சிங்கள அரசாலும் அப்போதிருந்த வடமாகாணத்திற்கான பிரிகேடியர் கொப்பேகடுவவின் துணிபாகும். இதனால் சிங்கள இராணுவத்தின் சீற்றத்திற்கு இக்கிராமம் உட்பட்டதோடு ஏதும் அறியாத அப்பாவிக் குடும்பத்தலைவர்களான சகோதரர்கள் ஐவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு இராணுவமுகாமில் வைத்துப் படுகொலைசெய்யப்பட்டமை, பழிக்குப் பழி வாங்கலாக அமைந்தது. குடும்பஸ்த்தர்களான இவர்களுக்கும் அந்தக்கொலைகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது ஊரவர்கள் அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் சந்தவர்ப்பவசமாக இவர்கள் மீது பழி வருவதற்கு அந்த கூலி விவசாயிகள் இறுதியாக வேலை செய்தது இவர்களின் தந்தையின் வயலில் என்பது குறிப்பிடத்தக்கது. நான் வவுனிக்குளம் மகாவித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றிய்ககொண்டிருந்தமையால் சிறிது காலங்களித்து அங்கு சென்றபோது இவர்களின் வீட்டிற்குச் சென்று புத்திரசோகத்தில் துன்பச்சாகரத்தில் ஆழந்து கதை, பேச்சு, சிரிப்ப என்பனவற்றை எல்லாம் இழந்து தவித்துக்கொண்டிருந்து வயோதிபத் தாய் வள்ளியம்மை அவர்களையும் கணவர் பொன்னம் பலம் அவர்களையும் கண்டு ஆறுதல் கூறினேன். ஆவர்கள் ஏதுமறியாத தங்கள் குடும்பத்திற்கு இப்பழி வந்ததற்கான காரணத்தை நான் அறியேன் எனக் கண்ணீர்மல்ல உரைத்தமை இன்றும் எனது நெஞ்சத்துள் ஆழப்பதிந்துள்ளது. 1964 பாராளுமன்ற தேர்தலில் வவுனியாத் தொகுதியில் அடங்காத்தமிழன் எனப்பெயர் கொண்ட திரு.சி.சுந்தரலிங்கம் அவர்களை எதிர்த்துப்போட்டியிட்ட இளவலபான தாமோதரம்பிள்ளை சிவசிவதம்பரம் அவர்கள் வெற்;றியீட்டியைப் பாராட்டி குமுளமுனைக் கிராமத்தவர்கள் சேர்ந்து பெருவிழா ஒன்றை எடுத்தனர். அவர் வருகைதந்தவேளை அவரை வரேவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு திரு. பொன்னம்பலம் அவர்களும் திரு. கந்தவனம் அவர்களும் காவடி ஆடி மகிழ்வித்தமை இன்றும் என் கண்முன்னே நிழலாடுகின்றது. அவ்விதமாக மிக்க மகிழ்ச்சியோடிந்து பொன்னம்பலம் அவர்கள் இடியோசை விழுந்த நாகம்போன்று ஏங்கிப்போய் இருந்ததைக் காண நேர்ந்தது எனது மனதில் தீராத கவலையைத் தோற்றிவித்தது. நாளாந்தம் காலையில் முள்ளியவளையில் இருந்துவரும் தபால்காரருக்காக காத்திருப்பார் பொன்னம்பலம் அவர்கள். ஏனென்றால் ஊரில் பத்திரிகை வாசிக்கும் ஒரு சிலரில் ஒருவராக அவர் இருந்தமைதான். ஆந்தநேரத்தில் அருணாசலம் விதானையாரைத் தவிர வேறுயாரும் புதினப் பத்திரிகை எடுப்பித்த வாசித்ததாக நான் அறிந்திருக்வில்லை. நாட்டு நடப்புக் கதைப்பதானால் அது பொன்னம்பலம் அவர்களின் கடையடிக்குத்தான் செல்லவேண்டும். அவ்வளவிற்கு அவருக்கு நாட்டின் அரசியல் தொடக்கம் எல்லாவிடயங்களிலும் ஈடுபாடு கொண்டவராகக் காணப்பட்டார்.

இக்கிராமத்திற்கு வளம் தருவன தண்ணீர்முறிப்புக் குளம், ஆறுமுகத்தான் குளம், மறிச்சுக்கட்டி, ஆண்டான் குளம், ஆலடிக்குளம் என்வனவற்றோடு இங்கு மாரிகாலத்தில் ஓடிவரும் தேரோடும்வீதி, வண்ணான் ஆறு, போன்ற அருவிகளும் முன்பொரு காலத்திலர் மருதமடு என அழைக்கபட்ட விவசாய நீர்த்தேகம் தண்ணிமுறிப்பு நீர்ப்பாசனத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுவிட்டது. வளம் நிறைந்த வண்ணடல் மண்படிந்த விவசாயத்திற்கேற்ற நிலவளமும் காட்டுவளமும், கடல்வளமும் நிறைந்த இக்கிராமத்தை ஒட்டிய நிலப்பரப்பு தண்ணீர் முறிப்புக் குளத்தோடு இணைந்தது. அவை அனைத்துமே இன்று புனர்நிர்மாணம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டமையும் இக்கிராமத்தின் செழிப்பை இழக்கச் செய்துள்ளன.

ஆலடிக்குளத்திற்கு வடக்காக காடுமண்டிக்கிடந்த புன்செய்நிலமாக மாறிவிட்ட நித்தகைக்குளம் இன்று திருத்தப்படாத நிலையில் அதற்கான காணிகள் பதவிய பெரும் பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டு அப்பகுதியைச் சேர்ந்த சிங்களக் குடியேற்றங்களாக மாறிவருவதும். அதேபோன்று ஆமையன் குளம் கெலியோயா திட்டம் என பெயர்மாற்றப்பட்டு குடியேற்றம் செய்யப்படுவதும் இன்று இடம்பெறும் அரசியற் செயற்பாடுகளாகும். ஆலடிக்குளத்திற்கு தென்மேற்கே காடுமண்டிக்கிடக்கும் ஒரு கிராமம் கணுக்கேணியா குளம் என அழைக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் இன்றும் செங்கல் கட்டிட இடிபாடுகளும் கிணறுகளும் காணப்படுகின்றன. இக்கிராமத்தவர் குமுளமுனைக்கும் தண்ணீருற்றுக்கும் இடையே வன்னியர் காலத்தில் அமைக்கப்பட்ட குளம்தான் இன்று கணுக்கேணிக்குளம் என அழைக்கப்படுகின்றது. கணுக்கேணியா குளத்தில் இருந்தவர்களைக் குடியேற்றி இன்று கணுக்கேணி என அழைக்கப்படும் ஊர் உருவாக்கப்பட்டுள்ளதான குமுளமுனை முன்னாள் கிராமசேவையாளர் திரு. நல்லதம்பி உடையார் அருணாசலம் அவர்கள் குறிப்பிடுகின்றார். தான்; கணுக்கேணியாக குளத்திற்குச் சென்ற அவற்றைப் பார்த்துவந்ததாக அங்குள்ள இடிபாடுகள், வேம்பு, புளி, பூவரசு போன்ற மனித தேவைகளோடு ஒட்டிய மரங்கள் இன்றும் அங்கு உள்ளதாகக் குறிப்பிடுகின்றார். ஏன் இந்தக் கிராமம் கைவிடப்பட்டது என்பதற்கான போதிய விளக்கம் தெரியவில்லை. ஆனால் மலேரியா சுரம், வாந்திபேதி, அம்மை போன்ற உயிர்கொல்லி நோய்களின் தாக்கமும் விலங்குகளின் தொடர்ச்சியான அழிவுகளும் இவற்றிற்குக் காரணமாக இருந்திருக்கலாம் அல்லது வரட்சியும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். வன்னியரின் ஆதிக்கம் குறைவடைந்தமையும் வளந்தொட்டுக்குளம் பெருக்கும் மன்னர்களின் ஆதரவு இன்மையும் இன்னொரு காரணியாகவும் இருந்திருக்கவேண்டும் என் ஊகிக்கமுடிகின்றது.

தென்னவன் மரவடி தமிழரின் பூர்வீக கிராமம் இன்று பதவியா திட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டு அங்கிருந்து தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு வீடுகள், வயல் நிலங்கள், கால்நடைகள் என்பன அபகரிக்கப்பட்டுள்ளமை 1983க்குப் பின்னரான செயற்பாடு. இங்கிருந்த தமிழ்க் குடும்பங்கள் குமுளமுனை, செம்மலை, தண்ணீரூற்று, புதுக்குடியிருப்பு ஆகிய கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து ஊரவர்களின் தயவில் வாழ்ந்துவந்தமையை நான் நன்கு அறிவேன். தேன்னவன் மரவடியில் உள்ள ஆலயத்திற்கான பூசாரியாக முள்ளியவளை கந்தசாமி ஆலயத்தின் பிரதம குருவாக இருந்த நாகராஜா ஐயரின் மகன் நடராஜா பிரதம குருக்களாக பணியாற்றிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குருந்தூர் மலை

குருந்தூரில் மீட்கப்பட்ட சிவலிங்கம் 2300 ஆண்டுகளிற்கு முற்பட்ட நாகர் வழிபட்ட இலிங்கம் என்கிறார் மூத்த வரலாற்று பேராசிரியர் யாழ் பல்கலைக் கழக வேந்தர் பத்மநாதன் அதிலுள்ள தமிழி எழுத்துக்கள் அதனை உறுதி செய்கின்றன என்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ள குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட சின்னம் 2, 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை சின்னத்தில் உள்ள தமிழ் வரிவடிவ எழுத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன என்று யாழ்.பல்கலைக்கழக வேந்தரும் மூத்த வரலாற்றுத்துறை பேராசியருமான சி.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இணையத்தத்தள மொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தமை வருமாறு,

“குருந்தூர் மலையில் உள்ள இப்பொழுது பேசப்படுகின்ற சின்னங்கள் சிலர் பல்லவர் காலத்துக்கு உரியன என்று சொல்கின்றனர். பல்லவர் காலத்துக்கும் இந்தச் சின்னங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவை அந்தக் காலத்துக்கு மிக முற்பட்டனவாகும்.

அங்கு செங்கட்டிகளால் அமைக்கப்பட்ட ஒரு சிறிய கட்டிடத்தின் இடிபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. பார்ப்பவர்கள் எவருக்கும் இது புலனாகும். அந்தக் கட்டடத்தினுள் சற்று முன்புறமாக ஒரு வெள்ளைக் கல்லில் அமைந்த ஒரு உருவம் தெரிகிறது. அதில் பௌத்த படிமம் போல எதுவும் காணப்படவில்லை. ஆதி காலத்து தொல்பொருள் சின்னங்களில் அனேகமானவை நாகர்களோடு தொடர்புடையவையாகும். நாகர்கள் வழிபட்ட சிவலிங்க வடிவங்கள் பனங்காமம் தொடக்கம் ஓமந்தை போன்ற இடங்களிலே பெருமளவிலே காணப்படுகின்றன. இங்கே காணப்படுவது சிவலிங்க வடிவம் என்று கொள்வது சாலவும் பொருந்தும். இதைத்தான் வேறு ஆய்வாளர்களும் சொல்லியுள்ளார்கள். அது சிறிய கட்டிடத்தில் அமைந்திருப்பது இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது. அதில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. நாகர்களுடைய கடவுள் பெயர் அதிலே காணப்படுகின்றது. அந்த லிங்கத்திலே மணி நாகன் என்ற பெயர் தெளிவாகத் தெரிகின்றது. அது மட்டுமன்றி வேள் நாகன் என்ற பெயரும் அதிலே காணப்படுகின்றது. வழமையாக கடவுள் சின்னங்களிலும் கடவுள் பெயரை எழுதுவதோடு அதை தாபனம் பண்ணியவர்கள் அல்லது நன்கொடை செய்பவர்களுடைய பெயரை எழுதுவது வழமை. நாகர்களுடைய வழமைப்படி வேள் நாகன் என்று தான் அது எழுதப்பட்டிருக்கிறது.

வழிபாட்டிச் சின்னங்கள் எல்லாவற்றிலும் அவர்கள், கடவுள் பெயர்களை தமிழ்ப் பிராமி வடிவங்களிலே பொறித்தார்கள். சிவலிங்கம், புத்தர் படிமம், நந்தி, மயூரம், பூசகம் முதலிய எல்லாவற்றிலும் இந்தக் கடவுள் பெயர் காணப்படும். சின்னத்தின் அடிப்படையிலே தான் அது எந்த வழிபாட்டு மரபுக்கு உரியது என்பது நிர்ணயிக்கப்படும்.

இங்கு காணப்படுவது சிவலிங்கம். அதிலே காணப்படுகின்ற எழுத்துக்களைக் கொண்டு பார்க்குமிடத்து இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கொள்ளத் தக்கது. சில சமயங்களில் இலங்கையில் வட்டெழுத்து மரபு பரவியிருக்காததனாலே தமிழ்ப் பிராமி வரி வடிவங்கள் தொடர்ந்தும் சில நூற்றாண்டுகளாக நிலைபெற்றிருந்திருக்கின்றன.

ஆனால் இந்த வடிவத்தைப் பொறுத்தவரையில் இது சர்ச்சைக்குரிய வடிவமன்று. உறுதியாகச் சொல்லக்கூடியது என்னவென்றால் இது ஒரு பழங்காலத்து லிங்க உருவம். லிங்க உருவத்தின் ஆரம்பகால வடிவமைப்பினை பிரதிபலிக்கின்ற வடிவம். நாகர்களின் கடவுள் பெயர் எழுதப்பட்டுள்ள வடிவம், சைவ சமய சின்னமாக அது அமைகின்றது.

குமுளமுனைக் கிராமத்தின் குடிப்பரம்பலும் வரலாறும்.

குமுளமுனை என்னும் பெயர் மிக அண்மைக் காலத்தில்தான் வளங்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது கிராமசேவையாளராக நீண்டகாலம் பணியாற்றிய திரு. அருணாசலம் அவர்களின் கருத்தாக உள்ளது. கரிக்கட்டுமூலை தெற்கு என அழைக்கப்பட்ட பிரதேசத்தின் ஒரு பகுதியே குமுளமுனைக் கிராமம். ஆரம்பதில் ஆண்டான் குளம் பெரிய கிராமமாக செழிப்புமிக்க நன்செய் நிலபுலன்கள் நிறைந்த கிராமமாக இருந்துள்ளது என்பதற்கு அங்கு வானளாவ உயர்ந்த வளர்ந்து காணப்படும் பனைமரங்களும், புளியமரங்களும், வேப்பமரங்களம் சான்றாக உள்ளன. மிகப் பழமைவாய்ந்த ஐயன் ஆலய வழிபாடு மிக நெடுங்காலமாக இடம்பெற்றுள்ளது. ஆண்டான்குளத்துச் சின்னப்பிள்ளை அக்கா நீண்காலமாக காய்ச்சில் வந்தவர்களுக்கு அல்லது ஏதாவது சுகவீனம் என்றால் விபூதி பூசி, நூல் கட்டிவிடுவார். ஊளவியல் ரீதியாக மனதில் நம்பிக்கையை ஊட்டும் ஒரு பெரும் செயலாக அமைகின்றது. மனப்பயத்தை விரடட்டியடிக்க இவ்வித செயற்பாடுகள் இடம்பெறுவது கிராமத்தவர்கள் மத்தியில் பெரும் வரேவேற்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. என்றால் அவரது தந்தையார்தான் அதன் பூசாரியாக நெடுங்காலமாக இருந்துவந்துள்ளார். ஆங்கு உள்ள நாவற்கேணி என்னும பிரதேசம் எருமைமாடுகளின் மேய்ச்சல் தலமாகப் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. ஐயனார் மடை, பட்டிப் பொங்கல் என்பன மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளன.

குமுளமுனையின் கிராமத்தலைமக்காரனாக இருந்தவர் மாணிக்க ஐயர். இவது தந்தையார் குடும்பத்தோடு இங்கு வந்தவர். ஆண்டான்குளத்தில் திருமணம் செய்துகொண்டார். தென்னிந்தியாவின் வேதாரிணியப் பரம்பரையில் வந்தவர்கள். வன்னியனால் ஆலய பராமிப்பிற்காகக் கொண்டுவரப்பட்ட ஆதிசைவப் பரம்பரையினர். ஆரம்பத்தில் வந்தவர்கள் கரணவாய், தம்பசெட்டி, வரணி ஆகிய இட்ங்களில் குடியமர்த்தப்பட்டனர். வுடமராட்சியில் இவர்கள் பல ஆலயங்களின் அர்ச்சகர்களாக விளங்கினர். குரவெட்டி தச்சன்தோப்பு பிள்ளையார் ஆலயம், கரவெட்டி கிராய்ப்பிள்ளையார் ஆலயம், நுணிவில் பிள்ளையார் ஆலயம், துன்னாலை தாமரைக்குளத்தடிப் பிள்ளையார் அலயம், நெல்லியடி அந்திரான் முருகன் ஆலயம் உடுப்பிட்டி, கல்லுவம், மயிலியதனை, போன்ற ஆலயங்கள்இவர்களின் பராமரிப்பில் இருந்துள்ளன. மாணிக்க ஐயர் இங்குவந்தவர்களுள் ஒருவர்; என்பது அனைவருக்கும் தெரிந்தவரலாறு. இவர் ஆண்டான்குளத்தைச் சேர்ந்த நில உடமையாளரின் ஒரே மகளான ‘உண்ணாமலை’ என்பவரை மணந்துகொண்டார். உண்ணாமலை அவர்களின் தந்தை ஆண்டான்குளத்தைச் சேர்ந்தவர். ஆனால் தாயார் வரணியைச் சேர்ந்தவர். இவரின் திருமணத்தின் காரணமாக மாணிக்க விதானையார் பெருந்தொகையான நில புலங்களுக்கு சொந்தக்காரரானார். இவர்களுக்கு பிள்ளைப் பாக்கியம் கிட்டவில்லை. தனக்கு ஒரு வாரிசு தேவை என்பதற்காக விதவையாக இருந்த பொன்னம்மா என்பவரை துணைகொண்டு கமலாம்பாள் கனகசபை என்னும் பெண்குழந்தையைப் பெற்றெடுத்து பிள்ளை பிறந்ததும் தாயிடம் இருந்து பிரித்து தனதுவீட்டிற்கே கொண்டு சென்றுவிட்டார். மிகச்சீரும் சிறப்போடும் குழந்த வளர்ந்தது மட்டுமல்ல இந்தியாவிற்கு அனுப்பி கல்வி கற்கவும் வைத்தார். இளமைக் காலத்தில் இவரோடு திருமதி சிவக்கொழுந்து தம்பையா (அரியகுட்டி) அருணாசலம், குமாரசாமி, தண்ணீரூற்றுச் சைவப்பாடசாலையிலும் பின்னர் வித்தியானந்தக்; கல்லூரியிலும் கற்றனர்.

ஆண்டான் குளத்தில் இருந்தவர்கள் தங்களின் வயல் வேலைகளுக்காக தண்ணீருற்று, வற்றாப்பளை போன்ற இடங்களில் இருந்து சில குடும்பங்களைக் குடியேற்றினர். ஆவர்கள் பரம்பரை பரம்பரையாக இவர்களின் வயல்கள் தோட்டங்களில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்துவந்தனர். 1880ம் ஆண்டளவில் அவர்கள் ஆண்டான் குளத்தில் குடியேறினர். அவர்கள் அங்கு இருந்த வீட்டுக்காணிகளை விட அவர்களுக்கு வேறு எந்தச் சொத்தும் இருந்ததில்லை. 1950களுககுப் பின்னர் தண்ணிமுறிப்புத்திட்டத்தின் பயனாகவும் ஆறுமுகத்தான் குளம் கட்டப்பட்டு அப்போதைய அரசாங்க அதிபராக இருந்த மாணிக்க இடைக்காடர் அவர்களால் அரசாங்கக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதன் விளைவாக அவர்கள் தங்கள் சொந்த நிலங்களில் விவசாயம் செய்யும் கமக்காரர்களாக மாற்றம் பெற்றனர்.

மாணிக்க விதானையார் பற்றி அண்மையில் (இறப்பதற்கு முன்னர்- 2022) அவரது மகள் திருமதி. கமலாம்பாள் கனகசபையோடு கலாநிதி. கனகையா ரகுநாதனும் நானும் தொலைத்தொடர்பு (ணுழழஅ வழி) உரையாடினோம். அவரிடம் இருந்து பல வராற்று ஆதாரங்களைப் பெறமுடிந்தது. அவர்களிடம் 1909ம் ஆண்டு எழுதப்பட்ட காணிக்கான தாய் உறுதி இருப்பதாகக் குறிப்பிட்டார். மாணிக்க ஐயரின் பரம்பரையினர் இந்தியாவின் வேதாரிணத்தில் இருந்து வருவிக்கப்பட்டவர்கள் என்பது அவரது கூற்று. குமுளமுனையில் ஆரம்பதில் வந்துகுடியேற்றப்பட்வர்களின் பெரும்பாலானோர் இப்பரம்பரையினரே. இவர்களுக்கு கரணவாய் குருக்கள் பகுதியினரின். உறவினர்கள் ஆவர். ஆ.உ. நல்லதம்பி உடையார் குடும்பமும் சந்திரசேகரம் மயில்வானத்தின் (மயிலர்) குடும்பம் சின்னத்தம்பி (ரத்தினம்) குடும்பம் ஆப்பாப்பிள்ளை ஐயர் குடும்பம், கதிரவேலு என்பன அவ்வித தொடர்பைக் கொண்டவர்களாகவே தெரிகின்றது. ஆதி சைவர் அல்லது ‘ஆதிசைவர்’ எனப்படும் குலத்தைச் சேர்ந்தவரகள் தமது பரம்பரையினர் என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இங்குள்ள ஆலயங்களைப் பரிபாலனத்திற்காக வன்னியனால் கொண்டுவரப்பட்டவர்கள் தங்களின் பரம்பரையினர் என்பதனை திரு. அருணாசலம் அவர்களும் திருமதி. கமலாம்பாள் கனகசபையும் குறிப்பிடுகின்னர். திரு. கனகசபை அவர்கள் கரணவாயைச் சேர்;ந்தவர். பருத்தித்திறை வேலாயுதம் பாடசாலையில் கல்விபயின்று அரசாங்கப்பணியை மேற்கொண்டவர். கொழும்பில் வங்;கியாளராக இருந்த அவர் பின்னர் ஆசிரிய நியமனம் பெற்றுக்கொண்டு பணியாற்றியர். அவரது தந்தையாரும் குருக்கள் ஆவார். குமுளமுனை கற்பகப்பிள்ளையார் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு 1954ம் ஆண்டு கும்பாவிசேகம் செய்யப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர் மாணிக்க விதானையார் அவர்கள்தான். தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் இடிபாடுகளுக்கிடையே கிடந்த கருங்கற்கள் இந்த ஆலயதின் கட்டிடவேலைகளுக்கு பாவிக்கப்பட்டுள்ளன. ஊரவர்கள் வண்டிகளில் கட்டிக் கொண்டுவந்ததை நான் சிறியவனாக இருந்தவேளை பார்த்துள்ளேன். எனது தந்தையார் வடக்கன் மாடுகளை வைத்திருந்தமையால் அவரது வண்டில் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டதை நான் அறிவேன். ஊரவர்களின் சில குடும்பத்தினர் மண்டபத்திற்கான தூண்களைக் கட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். கூரைவேலை முடிவடைந்தது. செம்மலையில் உள்ள தோட்ட உரிமையாளர் கனகசபை என்பவர். அவரிடம் இருந்தது. அவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர். அவரது லொறி நெல்லு வாங்குவதற்காக குமுளமுனைக்கு வந்து செல்வது வழக்கம். 1950களில் துன்னாலையில் இருந்து அறுவடைக்காக வரும் வேலை ஆட்களுக்குக் கூலியாக நெல் கொடுப்பது வழக்கம். அதன்படி ஆண்டுதோறும் அந்த லொறியில் நெல்மூடைகளை எற்றி அனுப்புவது வழக்கம். அந்தலொறியில் ஓட்டுகொண்டுவர ஏற்பாடுசெய்யப்பட்டது. ஓடும் வந்துவிட்டது. ஆனால் பணம் கொடுக்கப்படவேண்டும். மாணிக்க ஐயர் எனது தந்தையாரிம் வந்து 2000.00 ரூபா தேவை எனக் கேட்டதோடு அதற்காக நாம் இப்பொழுது இருக்கும் கோயிலுக்கான காணியை எழுதித்தருவதாக உறுதி அளித்தார். தந்;தையார் பணத்தைக் கொடுத்தார். கூரைக்கு ஓடு போடப்பட்டது. சங்காபிசேகத்திற்கு வைத்தியநாதக் குருக்களோடு செவ்வந்திக்குருக்கள், செல்லையாக்குருக்கள் எனப்பலர் வந்திருந்தனர். எனக்கு ஏழு வயது. ஆப்பொழுது எனக்கும் எனது சசோதரருக்கும் வைத்தியநாதக்குருக்கள் தீட்சை செய்துவைத்தது நினைவிருக்கின்றது. வெள்ளை வேட்டியால் போர்த்திக்கொண்டு மந்திரம் ஒதியதை அறிவேன். நேற்றி, கை, கால்கள் என திருநீற்று முக்குளிகளை இட்டமையும் நினைவில் உண்டு. அனால் அவர் சொல்லித்தந்த எந்த மந்திரமும் நினைவில் இல்லை.

குமுளமுனையில் முகமாமாலையில் இருந்துவந்து குடியேற்ப்பட்ட குடும்பங்கள் சில காலப்போக்கில் அங்குள்ளவர்களோடு திருமணத் தொடர்புளை எற்படுத்திக்கொண்டனர். முகமாலைப் பொன்னர், கந்தப்பிள்ளை சின்னையா, ஆறுமுகம், காசிப்பிள்ளை, போன்றோர் அத்தொடர்பினை உடையவர்களாக உள்னர். இவர்களைவிட மண்டூரில் இருந்து வந்தவர்களாக தில்லையம்பலம் குடும்பம் உள்ளது. இங்கு பரம்பரையாக உள்ளவர்கள் நாகநாதிகுடும்பம், கறபகத்தார் குடும்பம், தம்பையா குடும்பம் மற்றும் சின்னத்தம்பி, அப்பாக்குட்டி (பொன்னையா, சுப்பிரமணியம் (சின்னத்தம்பி) கனகசுந்தரம், சிவமயம் பகவதி, ஆகியோரின் தந்தை) மாரிமுத்தர் (வல்லிபுரம், கந்தையா, பொன்னர், கணபதிப்பிள்ளை) குடும்பம் என்பனவற்றைக் குறிப்பிடமுடியும். முருகர் குடும்பம், நாகமணியர் குடும்பம், வருணர் குடும்பம், கணபதிப்பிள்ளை குடும்பம். இவர்கள் புதுக்குடியிருப்பில் இருந்துவந்து குடியேறிவர்களாகும்.

அரியகுட்டியர் குடும்பம் (அ.உ.நல்ல தம்பி)

உடையார் என்னும் அரசாங்க பதவியில் தந்தைக்குப்பின்னராக அமர்;தப்பட்டவர். பல கிராமங்களை உள்ளடக்கிய நிருவாகப் பொறுப்பில் இருந்தவர். இவர் இரண்டு தாரமுடையவர் முதல் மனைவியின் வழியில் மயில்வாகனம், சிதம்பரப்பிள்ளை, கனகையா என்னும் மூன்று ஆண்பிள்ளைகளைப் பெற்றபின்னர் மனைவி தவறிவிட்டார். அதன்பின்னர் அத்தாய் (மாலிசந்தி) கிராமத்திலிருந்து திருமதி வள்ளிப்பிள்ளை என்பவரைத் திருமணம் செய்து கூட்டிவந்தார். அவருக்கு அருணாசலம், குமாரசாமி, வள்ளியம்மை, இராமலிங்கம், திருநாவுக்கரசு ஆகிய ஐவர் பிள்ளை

சித்தர் குடும்பம்:

சித்தர் துரையர், சித்தர் கந்தையா (கந்தப்பு). துரையர் தனது மகனுக்குத் தந்தையின் பெயரைச் சூட்டவேண்டும் என்பதற்காக சிற்றம்பலம் என வைத்ததாக அடிக்கடி பெருமைப்படுவார். கந்தப்பிள்ளை அவர்கள் புதுக்குடியிருப்பில் திருமணம் செய்துகொண்டார். குமுளமுனையில் உள்ளவர்கள் அனைவரும் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள். அவர்களின் அடிப்படைத்தேவை வயல்வேலைக்கான கலப்பை, மண்வெட்டி கத்தி, அருவாள் என்பன. துரையர் வயல்வேலைக்கான கலப்பை, நுகம் செய்வதில் வல்லவர். மரவேலைகள் சிலவற்றைச் செய்யக்கூடியவர். அவர் இளமைக்காலத்தில் நில அளவைத் திணைக்களத்தில் பணியாற்றியமையால் திரியாய்போன்ற பகுதிகளுக்குச் சென்று பதவியா போன்ற நிலங்களை அளக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். திரியாயிலேயே திருமணம் செய்துகொண்டார்.

உசாத்துனை நூற் பட்டியல்

'வன்னிவள நாடு” - வன்னிப்பிராந்திய தமிழராய்சி மகாநாட்டு மலர் -மாங்குளம் எஸ. கதிர் சிவலிங்கம் (1983)
‘நாட்டார் பாடல்கள்’ - மெட்டாஸ்மெயில்:
பேராசியருமான சி.பத்மநாதன் நேர்காணல்
நிவேதினி சஞ்சிகை -  செல்வி திருச்சந்திரன்

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here