வேந்தராய் ஓங்கிய சம்புவராயர்!
இசுலாமியப் படையெடுப்பினால் தமிழ் அரசர் ஆட்சி தஞ்சையிலும், மதுரையிலும் ஒழிந்தாலும் தொண்டை மண்டலத்தில் இசுலாமிய ஆட்சி ஏற்படாமல் ஒழித்தோ அல்லது ஆட்சியை மீட்டோ பல்லவ காடவர்களான சம்புவராயர்கள் வேந்தர்களாக விசயநகர படையெடுப்பு வரை வடதமிழ்நாட்டை ஆண்டுள்ளனர். இவர்களே முன்முயன்று மதுரையில் சுல்தானின் ஆட்சியை ஒழித்திருந்தால் விசயநகர கம்பண்ண படையெடுப்பு நிகழ வாய்ப்பு இருந்திருக்காது. தமிழக வரலாறு வேறு வகையாக இருந்திருக்கும். தாம் பல்லவக் காடவர் வழிவந்தோர் என்று நிறுவ தேடித் தேடி ஓடிஓடி செப்பேடு உண்டா கல்வெட்டு உண்டா என்று அலைந்து பாடுபடும் சில இளைஞர்கள் இந்தப் பல்லவர் ஈரானில் இருந்து வந்த ஆரியப் பார்தியர்கள் என்பதை பலரும் அறிந்திரா நிலையில் இவர்கள் அறிந்திருப்பாரா எனத் தெரியவில்லை. தெரிய வருங்கால் ஆரியர் அடையாளத்தை சுமக்க முன்வருவாரா என்பது ஐயமே. அந்த துணிவு உள்ள நெஞ்சங்களுக்கு காஞ்சி அருளாளப் (வரதராச) பெருமாள் திருக்கோயிலில் உள்ள இரு சம்புவராயர் காலக் கல்வெட்டுகளை கீழே. கொடுத்துள்ளேன்.
ஸ்வஸ்திஸ்ரீ கட்டாரி ஸா / ளுவன் விட்ட / திருவிடையாட்ட / ம் சிறுபுலியூர் / க்கு திருமுகபடி / ஸ்வஸ்திஸ்ரீ [II*] ஸகலலோகச் சக்ரவத்தி ஸ்ரீ இராஜநாராயணன் பலவ ஸம்வத்ஸரத்து / ப்ரதமையும் திங்கட்கிழமையும் பெற்ற ரேவதி நாள் ஜயங்கொண்ட சோழ -- - / ஞ்(ச)சிபுரத்து திருவத்தியூர் நின்றருளிய அருளாளப்பெருமாளுக்கு அமுதுப / ணி உள்ளிட்டனவற்றுக்கு விட்ட உக்கல் பற்று சிறுபுலியூர் ஊரவர்க்கு தங்களுர் பலதளி பூசைபாதியும் பட்ட ப்ர / த்தியும் நீக்கி ஆறாவது ஆடி மாதம் முதல் கடமை பொன்வரி உள்ளிட்ட பல வரிகளும் எடுத்து அளவு / விருத்துப்படி அரிசிக்கணம் - - -
விளக்கம்: பிலவ ஆண்டு (1364) 2 -ஆம் இராசநாராயண சம்புவராய வேந்தரின் ஆட்சியின் போது காஞ்சிபுரம் அருளாளப் பெருமாளுக்கு அமுதுபடி உள்ளிட்டனவற்றுக்கு உக்கல் பற்றாக சிறுபுலியூர் ஊரார்க்கு பல கோவில் பூசை பாதியில் வரிநீக்கி அந்த வரிப்பணத்தை கொண்டு என்ற வரை கல்வெட்டு நிறைவு பெறாமல் நின்று விடுகிறது. இதனை கட்டாரி சாளுவன் என்பவன் தானமாக வழங்குகிறான். இவன் பெயருக்கு முன் ஸ்வஸ்திஸ்ரீ வருவதால் இவனும் மன்னனாக இருக்க வேண்டும்
ஸ்வஸ்திஸ்ரீ ஸகலலோகச் சக்ரவத்தி ஸ்ரீ இராஜநாராயணன் சம்புவராயர்க்கு யாண்டு 7 ஆவது ஆனி மாதம் முப்பதாந்தியதி பெருமாள் அருளாளநாதன் கோயில் தானத்தார்க்கு நினைப்பு பெருமாள் திருநாள் எழுந்தருளும் அளவில் அனைநம்பிரானிலும் குதிரைநம்பிரானிலும் ஸ்ரீகருடாழ்வானிலும் நகரி சோதனைக்கும் எழுந்தருளும் நாலுநாளும் மிறங்கின திருவீதி / யிலே எழுந்தருளுவிக்ககடவார்(ர)கள் ஆகவும் திருத்தேரில் எழுந்தருளும் அளவில் திருநாள்தோறும் ஏழாந்திருநாளின் அற்றைக்கு கங்கைகொண்டான் மண்டபத்து அளவாக எழுந்தருளு னால் மீள எழுந்தருளுவிக்க கடவாராகவும் உடையார் ஏகாம்பரநாதன் திருநாமத்துக்காணி ஆன திருத்தோப்புகளில் சேரமான் திருத்தோப்பு அறப்பெருஞ்செல்வி திருத்தோப்பு செண் /பகத்தோப்பு ஈசானதேவர் திருத்தோப்பு இந்நாலு திருத்தோப்பிலும் உடையாரை எழுந்தருளுவிக்கும்படியும் இப்படிக்கு கல்லு வெட்டி நாட்டி இது ஒழிய புதுமைபண்ணிச் செய்யாதபடியும் சொல்லிவிட்ட அளவுக்கு இப்படிக்கு தாழ்வற நடத்திப்போகவும் பார்ப்பதே இவை தென்னவதரையன் எழுத்து .

பல்லவர் வேந்தராக ஆட்சி புரிந்து வீழ்ந்த பின்னும் அவர்கள் இரண்டாம் அதிகார நிலை மன்னர்களாக தொண்டை மண்டலத்தின் சில இடங்களில் ஒரே காலத்தில் ஆண்டுள்ளனர். குறிப்பாக காடுவெட்டி பல்லவன் நல்லசித்தன், காடுவெட்டி கோப்பெருஞ்சிங்கர், தொண்டைமான்கள், கண்ட கோபாலன் என்போர். இவர்கள் 3 -ஆம் குலோத்துங்கன் காலத்தில் அவனுக்கு கீழ்ப்படிந்து ஆட்சிபுரிந்துள்ளனர். கோப்பெருஞ் சிங்கனும், கண்ட கோபாலனும் சோழர் வீழ்ச்சிக்கு பின் வேந்தர்களாகி விட்டனர். நான்காம் அதிகார நிலையான நாடு கிழவன் நிலையிலும் புழல் கோட்டத்தில் அடங்கிய நாடு ஒன்றுக்கு கருமாணிக்கப் பல்லவரையன் இருந்துள்ளான். இப்படி நான்கு அதிகார நிலையிலும் பல்லவர் இருந்துள்ளனர். இனி நல்லசித்த மகாராசன் பற்றிய கல்வெட்டு கீழே:
- எனது 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பினை (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) அடிப்படையாக வைத்துத் திறனாய்வுக் கட்டுரையொன்றினை லக்பிமா (Lakbima) சிங்களத் தினசரியின் வாரவெளியீட்டின் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பான எழுத்தாளர் கத்யான அமரசிங்க அவர்கள் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை லக்பிமா வாரவெளியீட்டில் எழுதியுள்ளார். சிறப்பான அச்சிங்களக் கட்டுரையினை தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார் எழுத்தாளர் ரிஷான் ஷெரீப். இருவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. இக்கட்டுரையினைத் தங்களது வாரவெளியீட்டில் வெளியிட்ட லக்பிமா பத்திரிகை நிறுவனத்துக்கும் மனப்பூர்வமான நன்றி. இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி. பல தமிழ் நூல்களைச் சிங்கள மொழிக்கும் மொழிபெயர்த்த எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்களால் மேற்படி 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' நூல் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றது. அவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். - வ.ந.கிரிதரன் -
தஞ்சையை விட அதிக விறுவிறுப்பும், பரபரப்பும் கொண்டு இயங்கும் நகரம் கும்பகோணம் என்பதை காண்பவர் யாவரும் உணருவர். இதற்கு காரணம் இங்குள்ள பாடல் பெற்ற தளங்கள் தாம். அதிலும் கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்கள் பலவும் 12 ராசிக்குரிய அதிபதிகளை, சிறப்பாக 9 கோள்களை முதன்மைப்படுத்தும் வகையினவாக உள்ளன. இவை எல்லாம் கும்பகோணத்தை சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளன.இதனால் 9 கோள்களின் தோஷம் நீங்க பரிகாரம்
கோவிலில் சிலையை படம் பிடிக்கக் கூடாது என்பது ஒரு முழு மூடநம்பிக்கை. இதை ஆதரிக்க சரியான காரணத்தை எவராலும் கூறமுடியாது. இந்த மூடநம்பிக்கையை வலுவாக நடைமுறைப்படுத்தவே கோவிலில் உள்ள பிற கல்வெட்டுகளை புடைய்ப்புத்தூண் சிற்பங்களைக் கூட படம் பிடிக்கக் கூடாது என்று சட்டத்திற்கும் மக்கள் உரிமைக்கு புறம்பாக தடை போடுகிறார்கள். அதேநேரம் சில கோயில் நிர்வாகத்தார் விரும்பினால் உரூ.50/- அல்லது 100/- பெற்றுக் கொண்டு படம் பிடிக்க அனுமதிக்கிறார்கள். இதுவே இந்த நம்பிக்கையில் விழுந்த ஓட்டை தான். கோவிலில் படம்பிடிக்கக் கூடாது என்பதற்கு அரசியல் யாப்பின் அடிப்படையில் எந்த சட்ட பிணிப்பும் இருப்பதாகத் தோன்றவில்லை. உன் வீட்டில் எவரேனும் படம்பிடிக்க அனுமதிப்பாயா? அப்படித் தான் கோவிலும் என்கின்றனர். இதை ஆழ்ந்து சிந்திக்கும் கால் கோவில் என்பது வீடு போல அகம் (personal) சார்ந்த முறையல்ல. அது ஒரு பொது முறை. மேலும், உற்பத்தி ரகசியம் சார்ந்த தொழிற்சாலையில் படம்பிடித்தால் உற்பத்தி இரகசியம் வெளியாகிவிடும் என்ற நிலையும் இல்லாதது கோவிலென்பது. மாறாக மக்களின் பக்தி உணர்வு, பண்பாட்டு உணர்வு, வரலாற்று உணர்வு ஆகியவற்றால் பின்னிப்பிணைந்து தான கோவில் என்ற அமைப்பு. ஆகவே மக்கள் தம்மை அதனோடு அடையாளப்படுத்திக் கொள்ள அங்கு படம் பிடித்துக்கொள்ளவே விரும்புவர்.
நீரின்றி அமையாது உலகு என்பது நம் தமிழ ஆன்றோரின் பட்டறிவு. அதனால் தான் உயிர்களின் பெருக்கம் கருதியும், நிலைத்து வாழ்தல் கருதியும் ஆற்றங்கரை மேட்டில் பழம் நாகரிகங்களை உலகம் முழுதும் தோற்றுவித்து மனித இனம் மேம்படச் செய்த பெருமை நம் தமிழ் இனத்திற்கு உண்டு. மேலைக்கடல், கீழைக்கடல் என உலகை வலம் வந்து தாம் பெற்ற அறிவை எல்லாம் அங்கத்து மக்களுக்கு பகிர்ந்து அவரை நாகரீகராக்கி மனிதநாகரீகம் வளர்த்தவர் தமிழ் இனத்தவர் என்ற வகையில் தமிழரே உலக மூத்த தொல்குடி மக்கள் என்ற கருத்து மிகச்சரியானதே.
இந்தியாவில் வைதீக சமயம் தனக்கானக்கட்டமைப்பை எல்லாப் படிநிலைகளிலும் உருவாக்கிக் கொண்டுள்ளது. வைதீகம் வேதங்களையும் உபநிடதங்களையும் முதன்மையாகக் கொண்டு அதையே கடைபிடித்து, சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து வாழ்தலே வைதீகத்தின் உள்ளார்ந்த பொருளாகும். “இந்துமதம் என்றொரு மதமோ, கொள்கையோ, ஒருதத்துவமோ அந்த மதத்திற்கென்று தத்துவ நூலோ கிடையாது. வடமொழி, வேதத்தினை மட்டும் ஏற்றுக்கொண்டு சாதி அடுக்கினைச் சரிந்துவிடாமல் பேணிக்கொண்டு தங்கள் சாதி மேலாண்மையினைக் காப்பாற்றிக் கொள்ளத் துடித்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தனி ஒரு தத்துவ நூலும் ஆகமங்களும் உடைய சைவ வைணவ மதங்களை விழுங்கிச் செரித்துக் கொண்டு அரசதிகாரத்தின் துணையோடு மீண்டும் மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது” எனத் தொ. பரமசிவன் கூறுகிறார். (தொ.பரமசிவன் சமயங்களின் அரசியல்,ப.63) இச்சமய அவதானிப்பில் இருந்த நெருடல்களைக் கண்டு வெகுண்டு ஒதுங்க நினைத்தவர்கள் சித்தர்கள். இவர்கள், காலங்காலமாக நம்மிடையே பழகிப்போன வழக்கத்தில் இருந்த நாட்டுப்புற வழிபாட்டு மரபின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கலாம். சமூகத்தின் மீது இருந்த அக்கறையும் சமயத்தின் மீது இருந்த பற்றையும் பொது அடையாளமாக வெளிக்காட்டவும் முனைந்தவர்கள்.
நவீனக்கட்டடக்கலையின் முன்னோடிகளில் பன்முகத்திறமை வாய்ந்த ஆளுமைகளில் முதன்மையானவர் சுவிஸ்-பிரான்ஸ் கட்டடக்கலைஞரான லே கொபூசியே. சுவிஸில் பிறந்து பிரான்சு நாட்டின் குடிமகனானவர் இவரின் இயற்பெயர் சார்ள்ஸ் எடுவார்ட் ஜென்னெரெ Charles-Édouard Jeanneret. நகர அமைப்பு, கட்டடக்கலை, ஓவியம், தளபாட வடிவமைப்பு , எழுத்து எனப்பன்முகத்திறமை வாய்ந்த ஆளூமை மிக்கவர் இவர். உலகின் பல நாடுகளிலும் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிலெல்லாம் இவரது கை வண்ணம் மிளிர்கிறது. சுதந்திர இந்தியாவில் முதன் முதலாகப் புதிதாக அமைக்கப்பட்ட சண்டிகார் நகர வடிவமைப்பினை அமைத்தவர் இவரே. அத்துடன் அந்நகரிலுள்ள பல முக்கியமான கட்டடங்களையும் வடிவமைத்தவரும் இவரே.
தென்னிந்திய வரலாற்றில் பல்லவர்களின் காலம் புகழ்மிக்கதாகும். களப்பிரர்களின் இருண்ட காலத்திற்குப் பின் பல்லவர்களின் ஆட்சி தோற்றுவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாக விளங்கியது. பல்லவர்களின் வரலாற்றை அறிய இலக்கியங்கள், பட்டயங்கள், கல்வெட்டுகள், நினைவுச்சின்னங்கள் ஆகியவை சான்றுகளாகப் பெரிதும் உதவுகின்றன. சர்வநந்தியின் ‘லோக விபாகம்’, தண்டியின் ‘அவந்தி சுந்தரி கதை’, மகேந்திரவர்மனின் ‘மத்த விலாச பிரகாசனம்’ போன்ற நூல்களும் திருமுறைகள் எனப்பட்ட தேவாரம், நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம், நந்திக்கலம்பகம், பாரதவெண்பா, பெரியபுராணம் போன்ற சமய நூல்களும் பல்லவர்களின் சமய, சமுதாய, அரசியல் நிலைமைகளை விளக்கும் ஆதாரங்களாகும். இவைகள் தவிர ஏறக்குறைய 300 பட்டயங்களும் 200 கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் சிவகந்தவர்மனின் ‘மயிதவோலு’, ‘இரசுடகள்ளி’ பட்டயமும் பரமேச்சுவர வர்மனின் கூரம்பட்டயமும் இரண்டாம் நந்திவர்மனின் காசக்குடி, உதயேந்திரச் செப்பேடுகளும் மிகவும் முக்கியமானவை ஆகும். சமுத்திரகுப்தனின் அலகாபாத் கல்வெட்டும் இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டும் பல்லவர் வரலாற்றை ஒப்பிட்டறிய உதவும் சமகாலச் சான்றுகளாகும்.
ஜேர்மனியில் பிறந்து 1938இல் அமெரிக்கா குடிபுகுந்து அமெரிக்காவில் நவீனத்துவக்கட்டடக்கலையின் முக்கிய கட்டடக்கலைஞராக விளங்கியவர் 'லட்விக் மீஸ் வான் டெர் ரோ' (Ludwig Mies Van der Rohe). இவர் தனது கட்டடக்கலைத் தொழிலை ஜேர்மனியில் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமெரிக்கக் கட்டடக்கலைஞரான பீட்டர் பெஹ்ரென்ஸுடன் (Behrens) பணி பழகுநராகச் சேர்ந்து தன் கட்டடக்கலைத் தொழிலினை ஆரம்பித்தவர்.
நவீனக் கட்டடக்கலையின் கோட்பாடுகளிலொன்று சேதனக் கட்டடக்கலை (Organic Architecture). இதன் மூலவர் புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான ஃப்ராங் லாயிட் ரைட் ( Frank Lloyd Wright) . இதனை , இச்சொல்லாட்சியினை், அவர் தனது சூழலுக்கு இயைந்த கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிக் குறிப்பிடுகையில் பாவித்ததன் மூலம் அறிமுகப்படுத்தினார். இதனை இவர் வடிவமானது அதன் செயற்பயனை அல்லது பாவனைப்பயனைத் தொடருமொன்று (form follows function) என்று நம்பிய கட்டடக்கலைஞரும் , ஃப்ராங் லாயிட் ரைட்டின் கட்டடக்கலைத்துறை வழிகாட்டியுமான கட்டடககலைஞர் லூயிஸ் சல்லிவனின் ( Louis Sullivan) கட்டக்கலைக் கருதுகோள்களின் வாயிலாக வந்தடைந்ததாக கட்டடக்கலை விமர்சகர்கள் கருதுவர். மேலும் சிலர் தோரோவின் மீ இறையியல் (Transcendentalism) சிந்தனையே இவரை அதிகம் பாதித்ததாகக் கருதுவர். ஃப்ராங் லாயிட் ரைட் வடிவமும், அதன் செயற்பயனும் ஒன்றென்று (form and function are one.) வாதிடுவார். வடிவம் அதன் செயற்பயனைத்தொடர்வது என்னும் கோட்பாடு அல்லது சிந்தனை நவீனக் கட்டடக்கலையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடோ அத்தகையதொரு கோட்பாடே ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக் கட்டடக்கலை என்னும் கோட்பாடும்.
ஒரு கட்டடத்தின் அல்லது பொருளொன்றின் வடிவமானது அக்கட்டடம் அல்லது அப்பொருள் எக்காரணத்துக்காகப் பாவிக்கப்படுகின்றதோ அக்காரணத்துக்கேற்ப பொருத்தமான வடிவமொன்றினைப்பெறும். அதாவது அக்கட்டடம் அல்லது அப்பொருளின் செயற்பயனுக்கேற்ப அவற்றின் வடிவமுமிருக்கும். இதனைத்தான் வடிவம் செயற்பயனைத்தொடர்தல் (Form follows function) என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது. இக்கருதுகோள் அல்லது சிந்தனை் அல்லது விதி இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் அல்லது தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பொருளொன்றின் வடிவமைப்பில் முக்கியமானதொரு கருதுகோளாகும்.
Save
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பட்டப்படிப்பினைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்களுக்குப் 'பாரம்பரியக் கட்டடக்கலை' (Traditional Architecture) என்னும் பாடத்தினை எடுத்தவர் பேராசிரியர் நிமால் டி சில்வா. இவர் கட்டடக்கலைஞரும் கூட. தனியாகக் கட்டடக்கலை நிறுவனமொன்றினையும் நடத்தி வந்தவர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடக்கலை பற்றிய விடயங்களில் இப்பாடத்தின் மூலம் எம் கவனம் திரும்பியது. இப்பாடம் உண்மையில் கட்டடக்கலையின் வரலாறு என்னும் பாடத்தின் துணைப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ்ப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட நாற்சார வீடுகள் பற்றி, தென்னிலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மண்ணால் நிரப்பப்பட்ட மரச்சட்டங்கள் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் (wattle and daub) பற்றியெல்லாம் அறியத்துணையாகவிருந்த பாடமிது. எனக்குப் பாரம்பரியக் கட்டடக்கலை மீது ஆர்வத்தினை ஏற்படுத்தியதில் பேராசிரியர் நிமால் டி சில்வாவுக்கு முக்கிய பங்குண்டு.
ஜெவ்ரி பாவா Geoffrey Bawa - 'வெப்பநில நவீனத்துவக்' (Tropical Modernism) கட்டடக்கலைப்பாணியின் மூலவர்!
- L T Kiringoda is a Chartered Architect, Town Planner and a Chartered Environmentalist. He headed the Directorate of Development Planning of the Urban Development Authority of Sri Lanka, wherein he served for nearly 3-decades. E-mail:
- L T Kiringoda is a Chartered Architect, Town Planner and a Chartered Environmentalist. He headed the Directorate of Development Planning of the Urban Development Authority of Sri Lanka, wherein he served for nearly 3-decades. E-mail:
ஜூலை 6, 2016 அன்று பல வருடங்களுக்குப் பின்னர் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தில் கட்டடக்கலைஞர்கள் பலருடன் சந்தித்த கட்டடக்கலைஞர்களில் சிவா(குமாரன்) திருவம்பலமும் ஒருவர். நான் கட்டக்கலை மாணவனாக மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் அடியெடுத்து வைத்தபோது மயூரதநாதன், கலா ஈஸ்வரன் இருவரும் தமது இளமானிப்பட்டப்படிப்பை முடித்து வெளியேறியிருந்தார்கள். சிவா திருவம்பலம், 'தமிழர் மத்தியில்' நந்தகுமார் ஆகியோர் இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். எமக்கு மென்மையான 'ராகிங்' தந்தவர்களிவர்கள். 
1. ஆரிய சக்கரவத்திகளான யாழ்ப்பாண அரசர்களின் வாளைக் குறித்த செய்தி வெளியீடு.-
நடுவண் பண்பாட்டு அமைச்சகம் தெலுங்கிற்கான செம்மொழி வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின்படி 2008 நவம்பரில் இல் தெலுங்கைச் செம்மொழியாக அறிவித்தது.
ஒரு மொழிக்குச் செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை மிக்கதாய் இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இதுகாறும் 1) தமிழ் 2) சமற்கிருதம் 3) கன்னடம் 4) தெலுங்கு 5) மலையாளம் அதோடு 6) ஓடியா என ஆறு மொழிகள் இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ள கன்னட மொழியின் பழமைக்குச் சான்றாக கருநாடகத்து அசன் மாவட்டத்தில் உள்ள பேளூர் வட்டத்தில் அமைந்த ஹல்மிடி என்ற ஊரின் கண் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் முன் மைசூர் அரசின் தொல்லியல் துறை இயக்குநராக இருந்த திரு எம். எச். கிருஷ்ணாவால் 1936 இல் கண்டறியப்பட்ட காலம் குறிப்பிடாத கல்வெட்டு ஒன்றை ஆவணமாகக் காட்டி கன்னட மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுள்ளனர். இக்கல்வெட்டு இக்கால் மைசூர் அருங்காட்சியக பாதுகாப்பில் உள்ளது.
இலங்கைத்தீவின் இனமுரன்பாடுகளிடையே தோன்றி, முப்பது வருடங்களுக்கு மேலாக உக்கிரங் கொண்டு தொடர்ந்த யுத்தமானது, முடிவில் பாரிய இழப்புக்களையும் அழிவுகளையும் மாறாத வடுக்களையும் அனைத்து சமூகங்களிடையேயும் விட்டுச்சென்றுள்ளது. இந்த இனமுரண்பாடுகளுக்கு முக்கியமாக சமூக, பொருளாதார, கலாச்சார வேறுபாடுகள் காரணங்களாக இருந்துள்ள போதிலும் சமூகங்களுக்குள் இருந்துள்ள தவறான வரலாற்றுக் கண்ணோட்டங்களும் அவை மக்களிடையே ஏற்படுத்தியிருந்த சிந்தனை முறைமைகளுமே பிரதான பங்குகளை வகித்துள்ளன. சிங்கள மக்களிடையே இருந்த பொய்மையான மகாவம்ச சிந்தனைகளும் தமிழ் மக்களிடையே உணர்வுற்று இருந்த கங்கை கொண்ட கடாரம் வென்ற கருத்தாக்கங்களும் முஸ்லிம் மக்களிடையே கருக்கொண்டுள்ள ஆதித்தந்தை ஆதாம் பதித்த கால்தடங்கள் போன்ற கற்பனைச் சித்திரங்களும் இனமுரண்பாட்டின் தீவிரத்தன்மையை வலிமைப்படுத்துபவையாக இருகின்றன. இந்த ஆண்ட பரம்பரைக் கோஷங்களில் இருந்து அனைத்து சமூகங்களும் விடுபட வேண்டிய தேவையை உணர வேண்டும். இது நடை பெரும் சந்தர்ப்பத்திலும் இனமுரண்பாடுகளை உருவாக்கும் வலுவான அத்திவாரங்கள் தகர்க்கப்படும் என்பதில் பலரும் திடமான நம்பிக்கையை வைத்துள்ளனர். இப் புதிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு பொய்மைகளும் தவறுகளும் நிறைந்த பழய வரலாற்று ஆவணங்கள் மீளாய்வு செய்யப்படுவதும், சரியானதும் உண்மைகள் நிரம்பியதுமான தகவல்கள் நல்ல முறையில் மக்களிடையே கொண்டுசெல்லப்பட வேண்டியதும் இன்று அனைவரிடையேயும் உள்ள முக்கியமான பணிகளாகும். இது குறித்த நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டியது அறிவு ஜீவிகளினதும் துறைசார் வல்லுனர்களினதும் கடமையாகும்.
பண்டைத் தமிழரின் சிறப்பையும், பெருமையையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டுவனவாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க நூல்களுள் ஒன்றான புறநானூறு தமிழக வரலாற்றை அறிவதற்கு மிகப்பெரிய சான்று ஆகும். புறநானூற்றின் மூலம் நாகாpகம், பண்பாடு, வீரம், ஆட்சி, கொடை, வாணிகம் போன்றவற்றையும், படைத்திறம் வாய்ந்த பெருவேந்தரையும் கொடைத்தன்மை வாய்ந்த வள்ளல்களையும் கற்றறிந்த சான்றோர்களையும் பழந்தமிழ்க் குலங்களையும் அறியமுடிகிறது. மேலும் அரசனின் ஆட்சிக்கு அடித்தளமான அரண் குறித்த கருத்துக்களையும் உணரமுடிகின்றது. திருக்குறளிலும் அரண் குறித்த செய்திகளைப் பொருட்பாலில் அரண் என்ற அதிகாரத்தின் மூலம் அறியமுடிகின்றது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









