வேலூர் மாவட்டமும் திருவள்ளூர் மாவட்டமும் இணைகின்ற பகுதியில் இரயிலடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது தான் திருவாலங்காடு என்னும் சைவத் திருத்தலம்.  ஐந்து சபைகளுள் ஒன்றான இரத்தின சபை இதுவே. இருபுறம் காவல் கொண்ட  இரத்தின சபை வாயில்.

இது ஒரு பாடல்பெற்றத் தலம். இக்கோயில் மிகப் பழமையானது என்றாலும் கூட கடந்த நூற்றாண்டில்  சைவத் திருப்பணி என்ற பெயரில் நகரத்தார் கற்சுவர்களை தேய்த்து மெருகேற்றி (polish)  அதன் பழமையை மறைத்து உள்ளார்கள் என்பது எவராலும் உணரமுடியும். இந்த நிகழ்வில் எத்தனை கல்வெட்டுகள் தேய்த்து அழிக்கப்பட்டன என்று தெரியவில்லை. மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் இப்படித் தான் தேய்த்து அழித்துள்ளனர், திருநின்றவூர் இருதயாலீசுவரர் கோயிலிலும் இப்படி மெருகேற்றும் ஒரு பகுதியாக கல்வெட்டுகளை தேய்த்துக்கரைத்து அழித்தட்டுவிட்டனர்.  ரத்தினசபை வாயிலை தேய்க்காமல் விட்டுவிட்டதால் அங்கு கல்வெட்டுகள் பார்வைக்குத் தெரிகின்றன. அதே நேரம் அந்த ரத்தினசபை சுவருக்கு நேர் எதிர்ப்புறத்தே அமைந்த வடக்கு சுவரிலும்  கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மற்றபடி கோயில் வாயிலின் உட்பகுதியில் இருபுறத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.   (படம் 1)

கோபுர வாயிலில் மக்களை வரவேற்கும் ஆரணங்குகள் . (படம் 2&3)

 

கோபுர வாயிலில் மக்களை வரவேற்கும் ஆரணங்குகள் .கோபுர வாயிலில் மக்களை வரவேற்கும் ஆரணங்குகள் .


​கோயில்தூண்களில் குறிப்பிட்டு சொல்லும்படி புடைப்புச்  சிற்பங்கள் ஏதும்  இல்லை. இலை, மரம், பூ ,தெய்வவடிவுகள் தாம் உள்ளன. இக்கோயிலிலும் விசயநகர ஆட்சியில் குதிரை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரேயொரு சிற்பம் மட்டும் புராண நிகழ்வை குறிக்கிறது.  அரக்கர் மதிமயங்கி அமிர்தம் உண்பதை மறந்து மோகினிக்காக  ஏங்கித்தவிக்க திருமால் மோகினியாக உருவெடுத்து தேவர்களை மட்டும் அமிர்தத்தை உண்ண  அனுமதித்தபோது அவர்களுக்கு மட்டும் ஏன் மதி கிறுகிறுக்கவில்லை? அவர்கள் உணர்வு அற்றவர்களா? என்ற கேள்வி என்னில் பலகாலம் ஒலித்தபடியே உள்ளது. சிலை வடித்த சிற்பியே கிறுகிறுத்து போய்தான் சிற்பம் வடித்துள்ளான் என்றால் நேரில் மோகினியைக் கண்ட அரக்கர்கள் மட்டும் அமைதியாகவா இருக்கமுடியம்? நீங்களும் அந்த மோகினியை காணுங்களேன் ஒருகணம். அடுத்து மோகினி சிற்பம் உள்ள குதிரை மண்டபம்.   

தலைக் கோபுரம்

இரயிலடி 5 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், அதிலும் அடிக்கடி super fast local விடுவதால் சாதாரண கட்டணத்தில் இங்கு வரமுடிகிறது. காலை 5.30 மணிக்கு சென்ட்ரலில் தொடங்கி 6.45மணிக்கே இரயில் திருவாலங்காடு வந்துவிடுவதால் மக்கள் அதிக எண்ணிக்கையில் இக்கோயிலுக்கு சென்னையில்  இருந்து வருகிறார்கள். வேலூரில் இருந்தும் வருகிறார்கள். ​

சிவன்கோயில்கள் தோற்றத்திலும், அளவிலும் மாலியக்கோவில்களை விடவும்  கம்பீரமாகவுள்ளன. அதிக கல்வெட்டுகளையும்  பெற்றுள்ளன. பொதுவாக பண்டு அரசர்கள், வேந்தர்கள் கோயில்களை ஆறுபாயும் இடங்களில் தான் ஊரமைத்து கோயில் கட்டினார்கள். அந்தவகையில் பார்த்தல் இக்கோவில் உள்ள ஊரில் ஏதேனும் ஒரு ஆறு பாயவேண்டும் ஆனால் என்னவோ கொசத்தலையாறு தான்  சில கிலோ  மீட்டர் தள்ளித்  கிழக்கில் பூண்டி அணை நோக்கி ஓடுகிறது. பண்டு கொசத்தலை இவ்வூர் அருகே ஓடியிருக்க வேண்டும் என்று மட்டும் ஊகிக்க முடிகிறது. ஏனென்றால் எளிய மக்களிடம் காசு புழக்கம் இல்லாத பண்டைக் காலத்தில் கோவிலின் தடையற்ற இயக்கத்திற்கும், கோயில் பணியாளர்க்கும்  கூலியாக விளைநிலங்களை ஒதுக்கி அதில் பயிர் செய்து  பிழைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவற்றுக்கு நீர்ப்பாசனம் தேவை என்பதால்  தான் ஆற்றின் அருகே ஊர் அமைப்பும் , கோவில் கட்டுமானமும் மேற்கொள்ளக் காரணம்.  கொசத்தலை ஆறு பாயுமிடங்களில் 12 கு மேற்பட்ட சிவன் கோயில்கள் அமைந்துள்ளன என்கின்றனர்.

https://www.google.co.in/maps/ place/Kosasthalaiyar+River/@13 .2995634,80.1086905,11z/data=! 3m1!4b1!4m5!3m4!1s0x3a527956de c6497b:0xb572296a37c13b17!8m2! 3d13.2996017!4d80.2487789

திருவாலங்காட்டில் கோவிலுக்கு அருகில் அரசு கரும்பாலை அமைந்து உள்ளது. மற்றபடி இவ்வூரின் முதன்மைத் தொழில் வேளாண்மைதான். சென்னைக்  கோயம்பேடு, வில்லிவாக்கம் சந்தைகளுக்கு இங்கிருந்து தான் அதிக காய்கறிகள் அன்றாடம் செல்கின்றன.

இவ்வூரில் தமிழரில் வன்னிய ரெட்டியார்களும், முதலியார்களும்; தெலுங்கரில் ரெட்டிமார்களும், நாயுடுகளும் மிக அதிகமாக  வாழ்கின்றனர். இவர்களுக்குத்  தான் இங்கத்து விளைநிலங்களும் சொந்தம்.  அவ்வளவு ஏன் வடதமிழ்நாட்டின் லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் 90% இந்த நான்கு சாதியருக்கு  மட்டுமே சொந்தமாகவுள்ளன. தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் இதே நிலை தான் என்றாலும் முதலியாருக்கு பதிலாக  வேறு பிற தமிழ்ச் சாதிகள் இடம்பிடிக்கின்றனர். தெலுங்கு சாதிகள் மட்டும் அங்கேயும்  இதே சாதிகள் தான்.  தமிழ்நாட்டில் எந்த மன்னர் ஆட்சி போனாலும் எந்த புதிய மன்னராட்சி வந்தாலும் அவர்களை தமக்கு ஆதரவாக்கி  பலநூற்றாண்டுகளாக இவ்விளை நிலங்களை இவர்கள் தமக்கு மட்டுமே உரிமையாக வைத்துள்ளனர். மற்ற தமிழ் சாதிகள், ஒடுக்கப்பட்ட  தலித்துகளுக்கு விளைநிலங்களில்  உரிமை கிடையாது. இது தான் இன்று வரை தொடரும் சமூக அநீதி நிலைமை (social  injustice) என்பதை யாவரும் உணரமுடியும். ஆனால் பாருங்கள் வெள்ளையர் ஆட்சியில் ஆங்கிலேயருக்கு கைகட்டி செய்யும் வேலைகளை அதிகமாக பிராமணர்கள் ஆக்கிரமித்து கொண்டு உள்ளனர் என்று கூக்குரல் கொடுத்த சமூக நீதிப் போராளிகள் என்னவோ இந்த சாதிகளில் இருந்து தான் அதிகம் வந்தார்கள். ஆனால் ஏனோ அவர்கள் கருத்திற்கு தம்முன்னோர் விளைநிலங்களை தமக்கு  சாதிகளுக்கு மட்டுமே உரிமையாக்கி வைத்திருப்பது  ஆக்கிரமிப்பாக, சமூக அநீதியாக  தோன்றவில்லை. இது தமக்கு ஒரு ஞாயம் பிறர்க்கு ஒரு ஞாயம் என்பதன் பாற்படும்.

சமூக அநீதி நிலகிழமையால் தான் பேரளவில் நிகழ்ந்தது, நிகழ்கிறது. தமிழக மக்கள்தாம்  வரலாற்றில் இந்த சமூக அநீதி குறித்த விழிப்பை  அறிந்துகொள்ள வேண்டும். இப்போது சிலர்  விகிதாச்சார அடிப்படையில் அந்த அந்தச்சாதி மக்களுக்கு தேர்தலில், தொகுதி ஒதுக்கீட்டில் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்று பேசிவருகிறார்கள். ஆனால் விளைநிலம்  என்று வரும்போது மட்டும் இந்த சாதி விகிதாச்சார அடிப்படையை அவர்கள் பொருத்திப் பார்க்க மறுக்கிறார்கள். ஏனென்றால் இந்த விகிதாச்சார அடிப்படை பற்றிபேசுபவர்கள் பெரும்பாலும் இந்த நிலக்கிழமை சாதிகளை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பதே உண்மைக்கு உண்மையாகும்.  விளைநிலங்கள் அனைத்தும் தனியார் உரிமையிலிருந்து நீங்கி கூட்டுறவின் கீழ் கொண்டுவரப்பட்டு வேளாண்மை ஒரு தொழிலாக செய்யப்பட்டு  அதில்  ஒதுக்கீடு முறையில் எல்லா சாதியாருக்கும் இந்த விளைநிலம் கிட்ட  ஏற்பாடு ஆகின்றவரை இது சமூக அநீதியாகவே தொடர்ந்து கொண்டு இருக்கும்.

​திருவாலங்காடு கல்வெட்டுகளின் படங்கள் 17 முதல் 23 முடிய உள்ளவையுடன் 11-ஆம் படத்தையும் படித்ததில் கிடைத்தவை;

 

படம்-17
யுடைய (முழான்)....ராயன்
..........ட்டை (ஸ்ரீ) ..க்கோ ...... காச்யபன்
.....திருவாலங்காடு..........(சா வா) மூவாப்
படம்-18
...ராயன்   வடுகநாதன் ....நத
காச்யபன் திருச்சிற்றம்பல பட்ட(னும்)
சாவா மூவாப்பெரும் பசு (4?)  இ
படம்-19   - படிக்க இயலவில்லை
படம்-20
வரங்கில் அண்டமுற் ந...
பட்டனும் ஆத்ரேயன்  ச
படம்-21
......கோட்டத்து ...
ண்டமுற்  ந... மாந்த..
ஆத்ரேயன் சந்த்ரசேகர (பட்டனும்)
படம்-22
...பழையனூர் நாட்டு...
ளிய  நாயநார் திருமு(ன்)
(ப0ட்டனும் காச்யபன் கா..
படம்-23
திருமுன்பு வைத்த சந்(தியா தீபம்)
கா...பட்டனும்

விளக்கம்:  
கோயிலில் நந்தா தீபம் எரிக்கப் பசுக்கொடை  அளித்தது பற்றிய கல்வெட்டு.  கோயிலில் எழுந்தருளிய நாயநார் (இறைவர்) திருமுன்பு (கருவறையில்) நந்தா விளக்கு எரிப்பதற்காக (நான்கு?) பசுக்கள் கொடையளிக்கப்படுகிறது. இப்பசுக் கள் சாவா மூவாப்பெரும்பசுக்கள் என்று குறிக்கப்படுகின்றன.

கல்வெட்டுகளில் கொடையாகக் குறிக்கபெறும் ஆடு, பசு ஆகியவற்றைச்”சாவா மூவா’” என்னும் அடைமொழி கொண்டு குறிப்பது வழக்கம். இந்தக் கால்நடைகள்  இடையர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வளர்வதால் இறப்புகள் நேர்ந்தபின்னும் புதிய காலநடைகளின் பிறப்பால், அவற்றின் எண்ணிக்கை குறையாதிருக்கும் என்பதால், “சாவா மூவா”  என்னும் குறிப்பு.கொடையாளி,  உயர் அதிகாரிகளில் ஒருவனாக இருக்கவேண்டும். அவனுடைய முழுப்பெயர் கல்வெட்டில் புலப்படவில்லை எனினும், “யுடைய முழான்.... ராயன் வடுகநாதன்    என்னும் துண்டுச் சொற்கள் கொடையாளி ஒரு பெரிய அதிகாரி என்று உனர்த்துகின்றன.  கொடைப்பொருள்கள், கோயிலின் பூசை உரிமை பெற்ற சிவப்பிராமணர் பொறுப்பில் கொடுக்கப்படுகின்றன. அச் சிவப்பிராமணர்கள், காச்யப கோத்திரத்துத் திருச்சிற்றம்பல பட்டன், ஆத்ரேய கோத்திரத்து சந்திரசேகர பட்டன்  முதலியோர் ஆவர். இன்னொருவர் பெயர் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவனும் காச்யபன் கோத்திரத்தான் எனத்தெரிகிறது. திருவாலங்காட்டின் இருப்பிடம் பழையனூர் நாட்டுப்பிரிவு எனத்தெரிகிறது.   (அடுத்த கல்வெட்டுப்படம்-11 -இல் இப்பழையனூர் நாட்டுப்பிரிவு, மேல்மலைப் பழையனூர் எனவும், மணவில் கோட்டத்தைச்சேர்ந்தது எனவும் குறிப்பிடப்படுகிறது.

படம்-11
1 (மண்ட)லத்து மணவிற்கோட்டத்து மேன்மலைப் பழைய..
2 (ச)ண்டேசுரப் பெருவிலை ஆகத் திருநாமத்துக்காணி
3 ...கோலாலளந்து கண்ட குழி இருநூற்றுக்கும்
4 ர  சோழர(ச)...க்கு விற்றுக்குடுத்துக் கைக்கொ(ண்ட)

விளக்கம் :  மேலே கூறியவாறு, திருவாலங்காடு, மணவில் கோட்டம்,மேல்மலைப் பழையனூர் நாட்டுப்பிரிவில் இருந்த குறிப்பு இக்கல்வெட்டின் முதல் வரியில் காணப்படுகிறது.  கோயிலுக்கு நிலங்களைக் கொடையாக அளிக்கும்போது (சில கல்வெட்டுக் குறிப்புகளில் உள்ளவாறு)  இறைவன் பெயரில் உரிமை பதிவு செய்யப்படும். இவ்வகை நிலங்கள், திருநாமக்காணி என்று வழங்கும். அதாவது, இறைவன் நாமம்; காணி=உரிமை. இவ்வாறு, திருநாமத்துக்காணியாக இருந்த கோயில் நிலம் ஒன்று,ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏல விற்பனை, சண்டேசுரப்பெருவிலை என்று வழங்கப்படும். ஏலத்தின்  மூலம் கிடைக்கப்பெறும் உயர்வான ஒரு விலைப்பணம் கோயிலுக்கு அமுதுபடி, திருப்பணி, திருவிழா ஆகிய செலவினங்களுக்குப் பயன்படும்.கல்வெட்டு, இவ்வாறான ஒரு நிலத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறது. நிலத்தின் அளவு, இருநூறு குழி. நிலம், இருநூறு குழி என்று ஒரு அளவீட்டுக் கோல் மூலம் அளக்கப்படுகிறது. இவ்வகையான அளவீட்டுக் கோல்கள், 12 அடிக்கோல், 16 அடிக்கோல், 18 அடிக்கோல் எனப்பலவகை இருந்தன. இக்கோல்களுக்குப்பெயர்கள் சூட்டப்பட்டன என்றும் அறிகிறோம். சில கோயில்களில், கல்வெட்டுகளுக்கி டையில், கோலின் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலா ம். - திரு. சுந்தரம், கோவை. கல்வெட்டை வாசித்துப்  பொருள் கூறியவர்.

பி.கு.: மணவில் இன்று மணவூர் என்ற பெயரில் வழங்குகிறது. https://en.wikipe dia.org/wiki/Manavur  இங்குள்ள கோவிலிலும் கல்வெட்டுகள் நிரம்ப உண்டு என்று தெரிகிறது. . https://soki.in/manavoor-tir uvelangadu-thiruvallur.அன்று மணவூரில் திருஆலங்காடு இருந்தது. இன்று திருவாலங்காட்டில் மணவூர் அடங்கிவிட்டது

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com