[இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]
அரிக்கமேடு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய சிற்றூர். இது முன்பே முனைவர் மார்டிமர் வீலரால் 1942 இல் அகழாய்வு செய்யப்பட்ட ஒரு இந்தோ - உரோம தளம். இதுவே தொல்லியல் அகழாய்வுகள் மண்ணடுக்கியல் (stratigraphy) நெறிமுறையைப் பயன்கொண்டு செய்யப்பட்ட முதல் தளம். அவர் இத்தளத்தை கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையானது என நாள்குறித்தார். அவருடைய அகழாய்வில் பெரும் எண்ணிக்கையில் பானைஓட்டு பிராமிப் பொறிப்புகள், உரோமர் மட்கலங்கள், உரோமக் காசுகள், உரோமர் குடியேற்றங்கள் ஆகியன கண்டறியப்பட்டன. அவர் இதன் காலக் கணக்கீட்டை கருப்பு - சிவப்புநிற மட்கலன்கள், உரோமக் காசுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பொருத்தினார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறை 1991 - 1993 ஆகிய ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை உடனுழைப்போடு (colloboration) இத்தளத்தில் மற்றுமொரு அகழாய்வைப் பொறுப்பேற்று நடத்தியது. இந்த அகழாய்வுகள் சொல்லும் அளவிற்கு பெரிதாக எந்த தொல்பொருள்களையும் ஈட்டித் தரவில்லை. மட்கலங்களான கருப்பு - சிவப்புநிற மட்கலம் போன்றனவும் சிறு தொல்பொருள்களான மணிகள் வளையல்கள் போன்றனவுமே சிறு அளவில் கண்டறியப்பட்டன என்பது முனைவர் வீலரால் தரப்பட்ட காலக்கணக்கீட்டைப் பெரிதும் உறுதி செய்கின்றது. இந்த அகழாய்வுகள் மேலதிகமான சான்றுகளைப் பெறும் நோக்கிலேயே நிகழ்த்தப்பட்டன.
முனைவர் சா. குருமூர்த்தி எடுத்துரைக்காத, சென்னைப் பல்கலைக்கழகப் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறையால் பற்பல தளங்களில் மேற்கொள்ளப்படட் தொல்லியல் அகழாய்வு விவரங்கள் பின் வருமாறு:
தளப் பெயர் மாவட்டம் ஆண்டு காலம்
திருக்காம்புலியூர் கரூர் 1962 - 1963 இரும்பு
அழகரை கரூர் 1964 இரும்பு
(திருக்காம்புலியூர் & அழகரை தொல்லியல் அகழாய்வுகள் சென்னைப் பல்கலையால் நூலாக வெளியிடப்பட்டு உள்ளது)
கல்லேறிமலை வேலூர் 1979 இரும்பு
அதியமான்கோட்டை தருமபுரி 1981 – 198 இரும்பு
குட்டூர் தருமபுரி 1983 இரும்பு
திருவாமத்தூர் விழுப்புரம் 1987 இரும்பு
முடிக்காடு கடலூர் 1989 இரும்பு
படவேடு திரு. மலை 1992 – 1993 இடைக்காலம் (மாநில தொல்லியல் துறை இணைந்து)
பாலூர் காஞ்சிபுரம் 2001 – 2005 இரும்பு
மேல்சித்தாமூர் விழுப்புரம் 2005 - 2006 இரும்பு
அனுப்பியவர்: சேசாத்திரி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.