லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்: சிங்களத்திரைப்படங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியவர்!
" உலகிலேயே மிகவும் ஏமாற்றமளிப்பது, (75 ஆண்டுச்சரித்திரமுள்ள) இந்தியச் சினிமாத்துறைதான். தென்னிந்தியாவில் உருவாகும் சினிமாப்படங்களில் 20 வீதம் மட்டும் வர்த்தகரீதியாகவாவது வெற்றிபெறுகின்றன. உயர்ந்ததோர் கலைமரபைக்கொண்டது தென்னிந்தியா. தென்னிந்தியாவின் சங்கீதம் உலகிலேயே முதன்மையான ஒன்று. தென்னிந்தியரின் நடனம், உலகெங்குமுள்ளவர்களால் மிகவும் போற்றி ரசிக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பண்டைக்காலச்சிற்பங்கள், ஈடிணையற்றவை. இப்படியாக ஒரு உன்னதமானதும், ஆழமானதுமான கலை மரபை வளர்த்துவந்திருப்பவர்கள், சினிமாத்துறையிலே இத்துணை பின்தங்கியிருப்பது ஏமாற்றமும் வேதனையுமளிப்பதாகும். "
இவ்வாறு 48 ஆண்டுகளுக்கு முன்னர், ஈழத்து இலக்கியஉலகில் முன்னர் வெளியான மல்லிகை இதழில் (1970 செப்டெம்பர்) சொன்னவரும், இலங்கையின் சிங்களத்திரையுலகை வெளியுலகம் வியப்புடன் விழியுயர்த்தி பார்க்கவைத்தவருமான திரைப்பட மேதை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் நேற்று முன்தினம் கொழும்பில் காலமானார்.
இவ்வாறு தென்னிந்தியப்படங்கள் பற்றிய பார்வையை அன்றே வைத்திருந்த இவர், ஜெயகாந்தனின் முதல் திரைப்படமான "உன்னைப்போல் ஒருவனை" யும் பார்த்திருக்கிறார். அதனை இவருக்காகவே ஜெயகாந்தன் காண்பித்துமிருக்கிறார் என்ற தகவலையும் அதே மல்லிகையில் பதிவுசெய்துள்ளார். டொமினிக் ஜீவாவின் மல்லிகை எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூகப்பணியாளர்களை ஒவ்வொரு இதழிலும் மரியாதை நிமித்தம் அட்டைப்பட அதிதியாக கௌரவித்து அவர்களின் நேர்காணல்களை அல்லது அவர்கள் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு வந்திருக்கிறது. மாவை நித்தியானந்தன், 'தில்லைக்கூத்தன்' என அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் ஆகியோர் மல்லிகைக்காக லெஸ்டரை நேரில் சந்தித்து எழுதிய குறிப்பிட்ட நேர்காணல் கட்டுரையைப்பார்த்த பின்னரே லெஸ்டரின் படங்களை விரும்பிப்பார்த்தேன்.
முற்போக்கான எண்ணங்களும் இடதுசாரிச்சிந்தனைகளும் கொண்டிருந்த லெஸ்டர், சிறந்த இலக்கியவாசகராகவும் திகழ்ந்தார். இலங்கைச்சிங்கள மக்களின் இயல்புகள், கலாசாரம், நம்பிக்கைகள், நாகரீகம் என்பனவற்றை யதார்த்தமாக பிரதிபலித்த சிங்கள படைப்புகளை (நாவல், சிறுகதை) திரைப்படமாக்குவதில் ஆர்வம்கொண்டிருந்தவர். அதனால், மார்ட்டின் விக்கிரமசிங்கா (கம்பெரலிய, மடோல்தூவ, யுகாந்தய) , மடவள எஸ். ரத்நாயக்க (அக்கர பஹ) கருணாசேன ஜயலத் ( கொளு ஹதவத்த) ஜீ.பி. சேனாநாயக்கா ( நிதானய) முதலான படங்களை தமிழ் எழுத்தாளர்களும் விரும்பிப்பார்த்தனர். அவை பற்றிய விமர்சனங்களையும் எழுதினர். லெஸ்டர் பற்றிய சிறந்த அறிமுகத்தை ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் பலர் எழுதிவந்துள்ளனர்.
1919 ஆம் ஆண்டில் ஏப்ரில் மாதம் பிறந்திருக்கும் லெஸ்டர், கடந்த ஏப்ரில் மாதம் தனது 99 ஆவது பிறந்ததினத்தையும் கொண்டாடினார். அதனை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் அவர் வசித்த திம்பிரிகஸ்ஸாய இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்தினார்கள். நூறு ஆண்டு வயதை நெருங்குவதற்கு 12 மாதங்கள் இருக்கும் தருணத்தில் அவர் இலங்கை கலையுலகிற்கு விடைகொடுத்துவிட்டார்.

" உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் " என்ற கோஷத்துடன் தொழிலாள விவசாய பாட்டாளி மக்கள் தமது உரிமைகளுக்காக உரத்துக்குரல் கொடுத்து ஊர்வலம் செல்லும் நாள் மேதினம். வருடந்தோறும் மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் இந்தவருடம் புத்தர்பெருமானுக்காக இந்த மேதினம் ஏழாம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. புத்தரின் பெயரால் எதிர்காலத்தில் இவ்வாறு எத்தனை மாற்றங்கள் வருமோ தெரியவில்லை.!? தங்கள் பொது எதிரணிக்கு மேதினம் கொண்டாடுவதற்கு காலிமுகம் கிடைக்கிவில்லை என்பதனால், தாங்கள் காலியில் கொண்டாடவிருப்பதாக சொல்லியிருக்கிறார் மகிந்தர். வழக்கமாக நடக்கும் மேதினங்களில் பல அணிகள் பிரிந்து பல மேடைகளில் "உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்" என்பார்கள். வழக்கமாக கொழும்பில் மாத்திரம் சுமார் 17 மேடைகளில் பிரிந்து நின்று உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பார்கள் அல்லது அடுத்த தேர்தல் பற்றி பேசுவார்கள்!!?? இலங்கையில் தொடர்ச்சியாகவே மேதின மேடைகளில் இந்த உழைக்கும் வர்க்கம் பற்றியா பேசப்படுகிறது...? அந்த வர்க்கத்தின் நலன்கள் குறித்தா தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன....? அனைத்து மே தின மேடைகளிலும் அடுத்த தேர்தலைக்குறியாக வைத்துத்தான் பேசப்படுகிறது. இலங்கையில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரில் மாதமும் மே மாதமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாதங்கள். 1971 ஏப்ரிலில் மிகவும் கொடூரமான முறையில் அடக்கி ஒடுக்கப்பட்டது மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம். நதிகளில் மிதந்த சடலங்கள், பொலிஸ் நிலையங்களின் பின்வளவுகளில் எரிக்கப்பட்ட சடலங்கள், ரயர்களுடன் கொளுத்தப்பட்ட இளம் உயிர்கள். கூட்டிக்கழித்துப்பார்த்தால் 25 ஆயிரத்தையும் தாண்டும் அவற்றின் எண்ணிக்கை.
"அன்புள்ள முருகபூபதி, நலம், நாடுவதும் அதுவே!" இவ்வாறு தொடங்கும் நீண்ட கடிதத்தை, ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் பிரபல நாவலாசிரியருமான இளங்கீரன் எங்கள் நீர்கொழும்பு ஊரிலிருந்து 19 செப்டெம்பர் 1989 திகதியிட்டு எழுதியிருந்தார். அதற்கு 24 - 10 - 1989 ஆம் திகதி நானும் பதில் அனுப்பியிருந்தேன். நான் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன். வருவதற்கு முன்னர் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கொழும்பில் புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்திருந்த முஸ்லிம் லீக் வாலிபர் சம்மேளனத்தின் மண்டபத்தில் அவருக்கு மணிவிழா பாராட்டு நிகழ்ச்சியையும் ஒழுங்குசெய்துவிட்டுத்தான் விடைபெற்றேன். இலக்கிய உலகில் இளங்கீரனும் எனக்கு மற்றுமொரு ஞானத்தந்தை. அவருடைய இயற்பெயர் சுபைர். அவருக்கு முதலில் தெரிந்த தொழில் தையல்தான். அதன்பின்னர் முழுநேர எழுத்தாளரானார். பெரிய குடும்பத்தின் தலைவர். வாழ்க்கையில் பல தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர். துவண்டுவிடாமல் அயராமல் இயங்கினார். சிறுகதை, நாவல், தொடர்கதை, நாடகம், விமர்சனம், வானொலி உரைச்சித்திரம் , இதழியல் என அவர் கைவைத்த துறைகளில் பிரகாசித்தார். கைலாசபதி தினகரனில் பிரதம ஆசிரியராக இருந்த காலத்தில் இளங்கீரனின் தொடர்கதைகள் வெளியானது. அதில் ஒரு பாத்திரம் பத்மினி. அந்தப்பாத்திரம் கதையின் போக்கில் இறக்கநேரிடுகிறது. அதனை வாசித்த அக்கதையின் அபிமானவாசகர் ஒருவர், " பத்மினி சாகக்கூடாது" என்று வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினார். இவ்வாறு வாசகரிடம் தமது பாத்திரங்களுக்கு அனுதாபம் தேடித்தந்தவர் இளங்கீரன் என்ற தகவலை கைலாசபதி தாம் எழுதிய நாவல் இலக்கியம் என்ற விமர்சன நூலில் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ் இலக்கிய உலகில் அறுபது ஆண்டுகாலமாக எழுத்தூழியத்தில் ஈடுபட்டுவரும் கனடாவில் வதியும் மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் எழுத்துலகத்தைக் கொண்டாடும் விழா எதிர்வரும் ஏப்ரில் மாதம் கனடாவில் நடக்கவிருக்கிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் (2009 மார்ச் ) மல்லிகை இதழின் முகப்பை அலங்கரித்த முத்துலிங்கம் பற்றி அதே இதழில் எழுதிய பதிவு, மீண்டும் வாசகர்களுக்கு - முருகபூபதி -
இலங்கையில் பிரபல சிங்கள எழுத்தாளர் மார்டின் விக்கிரமசிங்கா, மாத்தறை கொக்கல என்ற பிரதேசத்தைச்சேர்ந்தவர். அவர் எழுதிய கம்பெரலிய நாவலை, தென்னிலங்கை பேருவளMartin-Wickramasingheையைச்சேர்ந்த கலாநிதி எம். எம் உவைஸ் " கிராமப்பிறழ்வு" என்ற பெயரில் மொழிபெயர்த்தார். கம்பெரலிய நாவல் மட்டுமன்றி, மார்டின் விக்கிரமசிங்காவின் மடோல்தூவ, யுகாந்தய முதலான நாவல்களும் திரைப்படமாகி விருதுகளையும் பெற்றன. மடோல் தூவ நாவலை, வீரகேசரியில் பணியாற்றிய ஊர்காவற்துறையைச்சேர்ந்த கே. நித்தியானந்தன், " மடோல்த்தீவு" என்ற பெயரில் மொழிபெயர்த்து, வீரகேசரியில் தொடராக வெளியிட்டார். மஹரகமையைச்சேர்ந்த தெனகம சிரிவர்தன எழுதிய குருபண்டுரு என்ற சிங்கள நாவலை, தென்னிலங்கை பண்டாரகமவைச் சேர்ந்த திக்குவல்லை கமால், குருதட்சணை என்ற பெயரில் மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களுக்கு வழங்கினார். ஹொரணையில் கும்புகே என்ற கிராமத்தைச்சேர்ந்த கருணாசேன ஜயலத் எழுதிய கொளுஹதவத்த என்ற நாவலை, புங்குடுதீவைச்சேர்ந்த, கொழும்பில் வசித்த தம்பிஐயா தேவதாஸ் ஊமை உள்ளம் என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இதனை வீரகேசரி பிரசுரம் வெளியிட்டது. மினுவாங்கொடையைச்சேர்ந்த வண. ரத்னவன்ஸ தேரோ, யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த செங்கைஆழியானுடைய வாடைக்காற்று நாவலை சிங்களத்தில் அதே பெயரில் மொழிபெயர்த்தார். அத்துடன் திக்குவல்லை கமாலின் எலிக்கூடு கவிதை நூலையும் சிங்களத்தில் தந்தார். வந்துரம்ப என்ற சிங்களப்பிரதேசத்தைச்சேர்ந்த பந்துபால குருகே எழுதிய செனஹசின் உப்பன் தருவோ நாவலை கொழும்பில் வசிக்கும் இரா. சடகோபன் " உழைப்பால் உயர்ந்தவர்கள்" என்னும் பெயரில் தமிழில் வரவாக்கினார். உசுல. பி. விஜயசூரியவின் அம்பரய நாவலை தேவா என்பவர் தமிழில் தந்துள்ளார். கண்டி கல்ஹின்னையைச்சேர்ந்த எஸ்.எம். ஹனிபா எழுதிய மகாகவி பாரதியின் சுருக்கமான வரலாற்றை அதே பெயரில் தெஹிவளையில் வசித்த கே.ஜீ. அமரதாஸ சிங்களத்திற்கு வரவாக்கினார்.

"பிள்ளைகளுக்கு கதை கேட்பதில் எத்தனை இன்பம். கதை சொல்லுவதில் பாட்டிக்குத் தனி இன்பம். பாட்டி தான் கண்டதையும் கேட்டதையும் தன்னைப்பற்றியும் தன் குடும்பம் தன் பந்துக்கள், தன் கிராமம், தன் ஊர், தன் இன்ப துன்பம் இவைகளைப்பற்றியும் கதை கதையாகச்சொல்லுவாள். பேரன் பாட்டியை கதைசொல்லும்படி கேட்டபோது, அவள் நான் பிறந்த கதைசொல்லுவேனா? நான் பட்ட கதைசொல்லுவேனா? என்ற கேள்வியைச்சொல்லி கதையை ஆரம்பித்தாளாம். பலவருடங்களுக்குப்பின் மலைநாட்டில் பிறக்கும் ஒரு பேரன் தன் பாட்டியிடம் கதைசொல்லும்படி கேட்டால், அநேகமாய் பழைய பாட்டி சொன்ன பதிலையே சொல்லுவாள். அது நாம் பிறந்த கதையாகவும் பட்ட கதையாகவும்தான் இருக்கமுடியும். இந்தக்கதை நாடற்றவர், வீடற்றவர் கதை." இவ்வாறு தொடங்குகிறது அமரர் சி. வி. வேலுப்பிள்ளையின் நாடற்றவர் கதை. இதன் முதல் பதிப்பு 1987 இல் தமிழகத்தில்தான் வெளிவருகிறது. அவருடைய வாரிசுகளில் ஒருவரான இர. சிவலிங்கம் அதனை தமிழகத்தில் வெளியிடுகிறார். 
மின்னஞ்சல், ஸ்கைப், டுவிட்டர், எஸ். எம். எஸ். , வைபர், வாட்ஸ்அப் அறிமுகமானதன் பின்னர் கடிதம் எழுதுவதே அரிதாகிவிட்டது. இவை அண்ணன் தம்பிகள் போன்று அடுத்தடுத்து பிறந்த குழந்தைகள். தற்காலத்தில் படிவங்களையும் ஒன்லைனில் பூர்த்திசெய்து அனுப்பமுடிந்திருப்பதனால் அதிலும் பேனைக்கு வேலையில்லாமல் போய்விட்டது. காசோலைக்கு ஒப்பமிடுவதற்கு மாத்திரம் பேனை உதவும் காலத்தில் வசதிபடைத்தவர்கள் மாறிவிட்டார்கள். எழுத்தாணியும் பனையோலை ஏடுகளும் வெள்ளீய அச்சும் நூதனசாலைக்குச்சென்றுவிட்டதுபோன்று தபால் முத்திரைகளும் வருங்காலத்தில் ஆவணக்காப்பகங்களிலும் அருங்காட்சியகங்களிலும் இடம்பெறலாம். அவுஸ்திரேலியாவில் தபால் நிலையங்களை போஸ்ட் ஷொப் (Post Shop) என அழைக்கிறார்கள். அந்தப்பெயரில்தான் தபால் நிலையம் காட்சிப்பலகையில் துலங்குகிறது. அங்கே முத்திரை மட்டுமல்ல இனிப்பு சொக்கலெட், தண்ணீர்ப்போத்தல், சிறுவர்க்கான விளையாட்டுப்பொருட்கள், காகிதாதிகள் உட்பட வேறு பண்டங்களும் விற்பனையாகின்றன. மக்கள் முத்திரை வாங்குவதும் குறைகிறது. காரணம் கணினிதான்.
வாழ்வின் அந்திம காலங்களில் தனித்துவிடப்படுபவர்கள், விடப்பட்டவர்கள் பற்றி அறிந்திருக்கின்றேன். அவ்வாறு தனித்தே வாழ்ந்திருக்கும் ஆளுமைகள் பற்றி பேசியும் எழுதியும் வந்திருக்கின்றேன். சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வீரகேசரி பிரசுரமாக ஒரு நாவல் வெளிவந்தது. ' நான் ஓர் அனாதை' என்ற அந்த நாவலை எழுதியவர் கமலா தம்பிராஜா. கதை மறந்துவிட்டது! அவர் அந்தத்தலைப்பில் ஏன் எழுதினார்? என்பதற்காகவாவது மீண்டும் அதனைத்தேடி எடுத்துப்ப டிக்கவேண்டும்போலிருக்கிறது. நானறிந்தவரையில் சகோதரி கமலா, தனது தனிப்பட்ட வாழ்வின் பெரும்பொழுதுகளை தனிமையில் கழித்திருந்தாலும், அவர் சார்ந்திருந்த ஊடகத்துறையில் பலருக்கும் மத்தியில் இயங்கிக்கொண்டே இருந்தவர். கடந்த 7 ஆம் திகதி அவர் கனடாவில் டொரொன்டோவில் காலமானார் என்ற தகவல் கிடைத்ததும் உடனடியாக அதனை ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்காக கனடாவில் வதியும் வீரகேசரியின் முன்னாள் விளம்பர - விநியோக முகாமையாளர் திரு.து. சிவப்பிரகாசம் அவர்களைத்தொடர்புகொண்டேன். அதன்பின்னர், இலங்கையிலிருக்கும் ' கலைக்கேசரி' ஆசிரியை திருமதி அன்னலட்சுமி இராசதுரை அவர்களுக்கும் செய்தி சொல்லி துயரத்தை பகிர்ந்தேன். வீரகேசரியிலிருந்து கமலா, தகவல் அமைச்சிற்குச்சென்ற பின்னர் அவ்வப்போது எங்கள் அலுவலகத்திற்கு வந்தால் நெடுநேரம் அன்னலட்சுமி அக்காவுடன்தான் பேசிக்கொண்டிருப்பார். வீரகேசரி பத்திரிகையில் செல்வி கமலா தம்பிராஜா 1970 களிலேயே ஊடகவியலாளராக தனது தொழிலை ஆரம்பித்தவர். அதன்பிறகு 1972 இல் நான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக அங்கு இணைந்தேன். அதனால் அவர் எனக்கு மூத்த ஊடகவியலாளர். 1977 இல் நான் அங்கு ஒப்புநோக்காளராக ( Proof Reader) வேலைக்குச்சேர்ந்த வேளையில் கமலா, தகவல் அமைச்சின் செய்தித்தொடர்பாளர் பணியில் இணைந்துவிட்டார். அவ்வப்போது வீரகேசரி அலுவலகம் வந்து தனது நண்பர்கள் சிநேகிதிகளுடன் உறவைப்பேணிக்கொண்டிருந்தார். கமலா யாழ்ப்பாணத்தில் பிரபல வேம்படி மகளிர் கல்லூரியில் தனது உயர்தர வகுப்பைத்தொடர்ந்த காலத்திலேயே எழுத்தாற்றல், பேச்சாற்றல் நிரம்பிய ஆளுமைமிக்க பெண்ணாக திகழ்ந்ததாக அவருடைய ஆசிரியை, தற்பொழுது சிட்னியில் வதியும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார். வேம்படி மகளிர் கல்லூரியிலிருந்து பேராதனை பல்கலைக்கழகத்திற்கு பிரவேசித்த கமலா, பட்டம் பெற்றதும் ஊடகவியலாளராகவே வீரகேசரியில் இணைந்தவர். அதனால் செய்தி எழுதுவது, வரும் செய்திகளை செம்மைப்படுத்துவது, மொழிபெயர்ப்பது முதலான துறைகளிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வந்திருப்பவர். சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். பின்னாளில் இலங்கை வானொலியில் இணைந்து நிகழ்ச்சிகள் தயாரித்தார். செய்திகளை வாசித்தார். இவ்வாறு அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களே அவர்தேடிய மூலதனம். அதுவே அவரை தொலைக்காட்சியிலும் பிரவேசிக்கத்தூண்டியது. இலங்கையில் முதல் முதலில் 1979 இல் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் I.T.N. ( Independent Television Network) தொடங்கப்பட்டபோது செய்தி மஞ்சரியில் செய்திகளை தொகுத்துவழங்கினார். ரூபவாஹினி தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அங்கும் தமிழ் செய்தியாளரானார். சிறுவர் நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்தார். ஈரானிய உயர் ஸ்தானிகராலயத்திலும் செய்தித் தொடர்பாளராகவும் சேவையாற்றியவர். இவையெல்லாம் அவர் நேசித்த - சார்ந்திருந்த ஊடகத்துறை பணிகள்.
" பூரணி காலாண்டிதழ் தற்பொழுதுதான் வெளியாகத்தொடங்கியிருக்கிறது. ஒரு சில இதழ்களே வெளியாகியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதன் குறைகளை சுட்டிக்காட்டும் அதேவேளையில், அதன் வளர்ச்சிக்காக உழைக்கும் பூரணி குழுவினருக்கு அதில் உள்ள நிறைவுகளை எடுத்துக்கூறி ஊக்குவிக்கவேண்டியது நம்போன்ற வாசகர்களது கடமையாகும். அதற்கு இப்படியான விமர்சன அரங்குகள் சந்தர்ப்பம் அளிப்பது மகிழ்ச்சிதரக்கூடிய விஷயமாகும். சஞ்சிகைகள் எல்லோருக்கும் புரியக்கூடிய மாதிரி வெளிவருவது சிரமசாத்தியமாகும். வாசகர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இலக்கியம் மக்களிடம் ஒரு சாதனமாக அறிவிக்கப்படவேண்டும். பூரணியில் ஒரு சில அசட்டுத்தனமான கவிதைகள் இடம்பெற்றது கண்டிப்புக்குரிய விடயம். அதுபோன்றவை இனிமேலும் வெளிவந்து விமர்சகர்களின் கண்டனத்திற்கு ஆளாகக்கூடாது. "
" தமிழ்மக்களுக்குப் பல குறைகள் உண்டு என்பதனை பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சகல அரசியல் தலைவர்களும் ( கட்சிகளும் இயக்கங்களும்) ஏற்றுக்கொண்டு நீண்டகாலமாகிட்டது. அதனால் பல ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டன. மாநாடுகள் கூட்டப்பட்டன என்பது கண்கூடு. ஆனால், ஒரு பெரும்பான்மை மொழி மற்றுமொரு சிறுபான்மை மொழியினை ஆக்கிரமித்து, அமிழ்த்தி சாகடித்துவிட்டு, தான் மட்டும் மேலெழும்பி உலகைப்பார்ப்பதானது நியாயமற்ற செயல் என்பது இங்கு கவனிக்கப்படுவதில்லை. படிப்படியாக வாழை மரத்தில் ஊசி ஏற்றுமாப்போல் அக்கைங்கரியம் நடைபெற்று வந்துள்ளது. அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் அவற்றின் வெளியீட்டு பிரசுரங்கள் அரசுக்கு நிதி தேடித்தரும் அதிர்ஷ்ட லாபச்சீட்டுக்கள் என்பவற்றில் எல்லாம் அக்கைங்கரியம் சாதுரியமாகவே மேற்கொள்ளப்படுவது குறித்து பொதுவாக எவரும் சிரத்தைகொள்ளாமல் இருப்பதுதான் கவலைக்குரியது"
இலங்கையின் சிங்கள சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியதுடன், தமிழ்பேசும் மக்களின் கனவுகளையும் திரையில் ஆவணமாக்கிய மனிதநேயக்கலைஞர் திரைப்பட இயக்குநர் கலாநிதி தர்மசேன பத்திராஜ இன்று 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை , கண்டியில் தனியார் மருத்துவமனையில் காலமானதாக செய்தி வந்தது. இன்றைய தினமே மாலையில் கண்டி மஹியாவ மயானத்தில் அவருக்கு இறுதிநிகழ்வுகளும் நடந்துவிட்டன! அண்மையில்தான் அவருக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திரைப்படவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. தமது வாழ்நாளின் இறுதிக்காலத்தில் தமிழ்ப்பிரதேசத்திலிருந்தே விருது பெற்றுக்கொண்டு விடைபெற்றுவிட்டார் என்பதை அறியும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. தர்மசேன பத்திராஜ தமிழ்ப்பேசும் மக்களின் உற்ற நண்பர். தமிழ் கலா ரசிகர்களினால் போற்றப்பட்டவர். இலங்கையின் முன்னணி திரைப்பட இயக்குநர். தரமான சிங்களப்படங்களையும் குறும்படங்கள் ஆவணப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் பலவற்றையும் இயக்கியவர். பழகுதற்கு இனியவர். எளிமையானவர். சிறுபான்மை இனமக்களிடம் அளவுகடந்து நேசம் பாராட்டியவர். விசால மனம்படைத்த மனித உரிமை செயற்பாட்டாளர். எல்லாவற்றுக்கும் அப்பால் மனித நேயக்கலைஞர். அதனால் எமது நெஞ்சத்துக்கும் நெருக்கமானவர்.
இலங்கையில் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்களை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய வேளையில், 1983 தொடக்கத்தில் தமிழக எழுத்தாளர்கள் பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன், தொ.மு. சி. ரகுநாதன் ஆகியோரையும் அழைத்திருந்தது. இவர்களில் ரகுநாதன் பாரதி இயல் ஆய்வாளர். புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அத்துடன் அவர் எனது அப்பாவின் வழியில் உறவினர். எனக்கு பாட்டா முறை. இலங்கை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவர் தமிழகத்திற்கு திரும்புவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது " இங்கிருந்து எடுத்துச்செல்வதற்கு உங்களுக்கு என்ன வேண்டும்?" எனக்கேட்டேன். உடனே அவர் ஏ.ஈ. மனோகரனின் " சுராங்கனி.... சுராங்கனி... சுராங்கனிட்ட மாலு கெனாவா..?" என்ற பாடல் கஸட் வாங்கித்தரமுடியுமா?" என்று கேட்டார். நான் மூர்ச்சையாகி விழாமல், அவரையே கண்இமைக்காமல் சில கணங்கள் பார்த்தேன். இலங்கையிலிருந்து அவர் எடுத்துச்செல்லவிரும்பிய ஈழத்தின் பொப்பிசைச்சக்கரவர்த்தியின் அந்தப்பாடல் இன்றும் பல மொழிகளில் பலரால் பாடப்படுகிறது. மனோகரன் இந்தப்பாடலை ஹிந்தி உட்பட எட்டு மொழிகளில் பாடியிருக்கிறார். இசைஞானி இளையராஜாவும் சுராங்கனி மெட்டில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடலுக்கு இசையமைத்துள்ளார். ஹிந்தி திரையுலகில் பிரபல்யமான பாடகி ஆஷாபோன்ஸ்லே, " "சுராங்கனி கமால் கரோகி" என்ற பாடலை பரமாத்மா என்ற படத்தில் பாடியிருப்பதாக அறியப்படுகிறது. அண்மையில் வேற்று நாட்டு மங்கையொருவராலும் இந்தப்பாடல் கிராமிய காட்சிகளுடன் ஒளிப்பதிவுசெய்யப்பட்டு ஒலித்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கின்றேன்.
" எழுத்தாளர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை. எப்பொழுதும் சண்டை பிடித்துக்கொண்டிருப்பார்கள்." என்று ஒரு நண்பர் சொன்னார். இத்தனைக்கும் அவர் எழுத்தாளர் அல்ல. எழுத்தாளர்கள் பலரை நண்பர்களாகக்கொண்டவர். கோயில்கள் மற்றும் பல்கலாசார பொது அமைப்புகளில் அங்கம் வகித்து கசப்பான அனுபவங்களினால் நொந்து நூலாகிப்போனவர். கசப்பான அனுபவங்களை சுமந்தவாறு, தொடர்ந்தும் பல அமைப்புகளில் ஈடுபாடு காண்பித்துக்கொண்டிருப்பவர்.
இலங்கைத்தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்ததை அறிந்ததும், இலங்கை அரசு பதறிக்கொண்டு தனது பிரதிநிதிகளை அங்கு அனுப்புவதற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கான அமைச்சர் செய்தியாளர் மாநாடு நடத்துகிறார். ஜனாதிபதியும் ரஷ்ய அதிபர் புடினுக்கு கடிதம் எழுதுகிறார். இலங்கை மலையக மக்களின் உதிரமும் வியர்வையும் கலந்ததுதான் நாம் அருந்தும் சுவையான தேநீர். ஏற்றுமதி செய்யப்பட்ட பொதிக்குள் வண்டு வந்துவிட்டதால் அது எந்த நாட்டின் வண்டு என்ற ஆராய்ச்சி வேறு நடக்கிறது. அஸ்பஸ்டஸ் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடைவிதித்தமையால்தான் ரஷ்யா இலங்கைத்தேயிலையை வாங்குவதை நிறுத்த முயற்சிக்கிறது என்றும் செய்திகள் கசிகின்றன. இந்தப்பதற்றம், நூற்றாண்டு காலமாக அந்த மலைகளில் அட்டைக்கடிகளுக்கு மத்தியில் ஒரு அறை மாத்திரமே கொண்ட லயன் காம்பராக்களில் குடித்தனம் நடத்தும், பிரசவம் பார்க்கும், வசதிக்குறைவுடன் வாழ்க்கை நடத்தும், மண்சரிவு அபாயங்களை சந்திக்கும், இலங்கைக்கான அந்நியசெலாவணியை ஈட்டித்தரும் அம்மக்கள் குறித்து, மாறி மாறி பதவிக்கு வந்த அரசுகளுக்கு என்றைக்குமே வந்ததில்லை. ஆனால், அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்த படைப்பாளிகளுக்கு வந்தது. அந்த பதற்றம்தான் நாம் படித்த துன்பக்கேணியும், தூரத்துப்பச்சையும், மலைக்கொழுந்தும், நாட்டற்றவனும், வீடற்றவனும், ஒரு கூடைக்கொழுந்தும், ஒப்பாரிக்கோச்சியும், உழைக்கப்பிறந்தவர்களும், பாலாயியும் இன்னும் பல கதைகளும் நாவல்களும். அம்மக்களின் பதற்றம், எத்தனை படைப்பாளிகள் எழுதிக்குவித்தும் இன்னமும் ஓயவில்லை.
முகநூல் கலாசாரம் தீவிரமாகியிருக்கும் சமகாலத்தில், முகநூல் எழுத்தாளர்களும் பெருகியிருக்கிறார்கள். இக்கலாசாரத்தின் கோலத்தினால் முகவரிகளை இழந்தவர்களும் அநேகம். அதே சமயம் முகநூல்களில் பதிவாகும் அரட்டை அரங்கங்களை முகநூல் பாவனையற்றவர்களிடத்தில் எடுத்துச்சென்று சேர்க்கும் எழுத்தாளர்களும், அவற்றை மீள் பதிவுசெய்து பொதுவெளிக்கு சமர்ப்பிக்கின்ற இதழ்கள், பத்திரிகைகளும் அநேகம். அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், மற்றும் பிரபலமானவர்களினால் உதிர்க்கப்படும் வார்த்தைகளுக்கு கிண்டலடித்து அவற்றுக்குப்பொருத்தமான கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் முதலானோர் திரைப்படங்களில் அவிழ்த்துவிடும் ஜோக்குகளையும் பதிவேற்றி வாசகர்களை கலகலப்பூட்டும் முகநூல் எழுத்தாளர்களும் தோன்றியிருக்கிறார்கள். அத்தகைய வழக்கமான பதிவேற்றலிலிருந்து முற்றாக வேறுபட்டு, இலங்கையினதும் சர்வதேசத்தினதும் சமகால அரசியல் அதிர்வேட்டுக்கள் தொடர்பாக முகநூல்களில் எழுதுபவர்களின் கருத்துக்களையும் அதற்குவரும் எதிர்வினைகளையும் சுவாரஸ்யம் குன்றாமல் தொகுத்து தனது பார்வையுடன் எழுதிவருகிறார் எமது கலை, இலக்கிய நண்பர் கனடா மூர்த்தி. அதற்கு அவர் சூட்டியிருக்கும் தலைப்பு: "கண்டதைச்சொல்லுகிறேன்" கனடாவிலிருந்து வெளியாகும் தமிழர் தகவல் மாத இதழில், தான் முகநூலில் கண்டவற்றை குறிப்பாக அரசியல் அதிர்வேட்டுகளை அரங்கேற்றிவருகிறார். சமகால அரசியல் என்பதனால் இதனைப்படிக்கும் தமிழ்அரசியல் வாதிகளும் அரசியல் ஆய்வாளர்களும் அரசியல் ஈடுபாடுள்ள இலக்கிய பிரதியாளர்களும் கண்டதைச்சொல்லுகிறேன் பத்தியை ஆர்முடன் படித்துவருகிறார்கள். எனது நீண்ட கால கலை, இலக்கிய நண்பர் கனடா மூர்த்தி அவர்களைப்பற்றிய கட்டுரையையே இந்த ஆண்டிற்கான எனது நூறாவது பதிவாக இங்கு சமர்ப்பிக்கின்றேன். 2017 ஆம் ஆண்டு விடைபெறும் தருணத்தில் நான் எழுதும் நூறாவது ஆக்கம்தான் இந்தப்பதிவு.
"சோகங்கள் கதையாகிச் சோர்வு எனை வாட்டும்போது
நானறிந்தவரையில் இலங்கையில் பல படைப்பாளிகள் ஆசிரியர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியன வற்றில் விரிவுரையாளர்களாகவும், இலக்கியத்துறை சார்ந்த கலாநிதிகளாகவும் பேராசிரியர்களாகவும் கல்விப்பணிப்பாளர்களாகவும், கல்வி அதிகாரிகளாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். அதனால் இத்தகைய படைப்பாளிகளிடம் கல்வி கற்ற மாணவர்களும் பின்னாளில் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். அந்தவகையில் இந்தப்பதிவில் சொல்லப்படும் ஏ. இக்பால் அவர்கள் ஆசிரிய பெருந்தகைகளால் வளர்க்கப்பட்ட படைப்பாளியாக மாத்திரம் திகழவில்லை, இவரும் தமது மாணவர்கள் சிலரை படைப்பாளியாக்கியிருக்கிறார்.
" கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு.
ஐந்தாம் தரம் வரையே பள்ளிப்படிப்பைக் கண்டிருந்த தண்டபாணி முருகேசன் என்ற சிறுவன் தமிழகத்தின் கடலூர் வீட்டை விட்டு வெளியேறி, சென்னைவந்து, கம்யூனிஸ்ட் தோழர்களின் அரவணைப்பில் வளர்ந்து, கட்சிப்பிரசுரங்கள் விநியோகிப்பது முதலான தொண்டூழியம் முதல் பல்வேறு சிறு சிறு தொழில்களும் பார்த்து, அச்சுக்கூடத் தொழிலாளியாகி, செய்திப்பத்திரிகை, படைப்பு இலக்கியம் படித்துக்கொண்டே, ஒப்புநோக்காளனாகவும் (Proof Reader) தன்னை வளர்த்துக்கொண்டு, ஜெயகாந்தன் என்ற எழுத்தாளனாக அறிமுகமாகி, இலக்கிய உலகில் அங்கீகாரத்தையும் பெற்று பேராளுமையாக உருவாகியவரின் படைப்புகள் தோன்றிய காலத்தையும், அந்தப்படைப்புகளில் இன்றைய வாசகரின் அவதானிப்பையும் கணிக்கும் மறுவாசிப்பு அரங்கு நேற்று முன்தினம் மெல்பனில், இலக்கிய நண்பர் பல் மருத்துவர் மதியழகன் இல்லத்தில் நடந்தது. அதே தினத்தில் மெல்பனில் வேறு ஒரு திசையில் நடந்த வேறு ஒரு நிகழ்ச்சிக்கு செல்லவேண்டிய அவசியத்தையும் புறம் ஒதுக்கிவிட்டு, ரயிலேறிச்சென்றேன்.
ஒவ்வொருவருக்கும் கனவுகள் வருவது இயல்பானது. மனதில் தங்கிவிடும் அல்லது நீண்டகாலம் நினைவிலிருந்து மறைந்துவிடும் கனவுகளையும் கடந்து வந்திருப்போம். இளைய தலைமுறையினரைப்பார்த்து பாரத ரத்னா அப்துல்காலம், " கனவு காணுங்கள்" எனச்சொன்னார். அதன் அர்த்தம் தொடர்ந்து உறங்கவும் என்பதல்ல. சிறுபராயத்தில் பாடசாலைகளில் குடும்பத்தில் எதிர்காலத்தின் என்னவாக வரப்போகிறாய்...? என்ற பொதுவான ஒரு கேள்வியைக்கேட்பார்கள். ஒவ்வொருவரும் தமது கனவுகளைத்தான் சொல்வார்கள். ஆசிரியரோ தனது அபிமான மாணவர் இப்படித்தான் வரவேண்டும் என்று கனவுகாண்பார். பெற்றவர்கள் தமது பிள்ளை இவ்வாறுதான் எதிர்காலத்தில் இருக்கவேண்டும் என கனவு காண்பர். கனவுகளைத்தொலைத்தவர்கள், கனவுகளை விதைத்தவர்கள், கனவுகளிலேயே வாழ்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் பற்றியும் எழுதியிருப்போம், பேசியிருப்போம்.
கல்முனைக்குப் புறப்படுவதற்கு முன்னர் நண்பர் மௌனகுருவிடம் செல்லத்தயாரானோம். அன்று முற்பகல் பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களுடனான சந்திப்பும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மெளனகுரு அவர்களின் இல்லத்திற்கு முன்பாக கோபாலகிருஷ்ணனின் கார் தரித்தது. இல்லத்தின் முற்றத்திலிருந்து கணீரென்ற குரலில் ஒரு கூத்துப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த இல்லம் வாவிக்கரையில் இருந்தமையால் ரம்மியமாக காட்சியளித்தது. முன்பொரு (2010 இறுதியில்) தடவை நண்பர்கள் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங், அஷ்ரப் சிஹாப்தீன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் அங்கு வந்திருக்கின்றேன். சுநாமியின்போது மௌனகுரு - சித்திரலேகா தம்பதியர் அந்த இல்லத்தின் மேல்தளத்தில் நின்று தப்பித்த திகில் கதையை சொல்லியிருக்கின்றனர். மெளனகுரு அந்தத்திகிலையும் சுவாரஸ்யமாகவே சித்திரித்திருந்தார்.
மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் என்பன ஐதீகங்களாக போற்றப்பட்டாலும், இவற்றில் வரும் பெண்பாத்திரங்களுக்கு கோயில்கள் அமைத்து வழிபடும் மரபும் தொன்றுதொட்டு நீடிக்கிறது. இந்தக்காவியங்களில் வரும் ஆண் பாத்திரங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். மகாபாரதத்தில் குந்தி முதல் பாஞ்சாலி வரையிலும், இராமாயணத்தில் சீதையும், சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள்தான். குந்தியைத்தவிர ஏனைய மூவரும் வழிபாட்டுக்குரியவர்களாகிவிட்டனர். இலங்கையில் திரெளபதை அம்மன், கண்ணகி அம்மன், சீதை அம்மன் கோயில்கள் அமைத்து சைவத்தமிழர்களும் பௌத்த சிங்களவர்களும் வழிபடும் மரபும் தொடர்ந்து பண்பாட்டுக்கோலமாகவே மாறிவிட்டதை காணமுடிகிறது. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலையும் மக்களிடத்தில் காவியமாகியிருக்கிறாள். மணிமேகலை தமிழ்க்காப்பியம் மட்டுமல்ல, அது பவுத்த காப்பியமும்தான் என்று நிறுவுகிறார் தமிழக எழுத்தாளர் பேராசிரியர் அ. மார்க்ஸ். ( ஆதாரம்: தீராநதி 2017 ஜூன்)
மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்திலிருந்து புறப்படத்தயாரானபோது ஒரு அன்பர் என்னிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தாம் வெளியிடும் விருந்து கலை, இலக்கிய இதழைத் தந்தார். எதிர்மன்னசிங்கத்தின் நூல் வெளியீடு அன்றையதினம் அவரது பவளவிழாவையும் முன்னிட்டு நடந்திருந்தமையால் அந்த நிகழ்ச்சியும் கலை, இலக்கிய விருந்தாகவே அமைந்திருந்தது. அதன் சுவையை ரசித்துவிட்டு கிளம்புகையில் எனது கைக்கு வந்தது கிழக்கிலங்கை பாண்டிருப்பிலிருந்து இருமாதங்களுக்கொருமுறை வெளியாகும் விருந்து. வெல்லும் தமிழ் - எங்கள் வெல்லத்தமிழ் என்ற கவித்துவ மகுடத்துடன் இதனை வெளியிட்டுவரும் அதன் ஆசிரியர் அகரம். செ. துஜியந்தன் இதழையும் தன்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டார். எனக்குத்தரப்பட்டது அதன் மூன்றாவது இதழ். இவ்விதழ் வெளியாகும் ஊரில் பிறந்து வளர்ந்து, இலக்கியப்பணியும் ஆசிரியப்பணியும் புரிந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களை நினைவுகூரும் வகையில் குறிப்பிட்ட விருந்து வெளியாகியிருக்கிறது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









