பிரதேச மொழி வழக்கில் பேசி நடித்து அசத்திய மரைக்கார் ராமதாஸ் மறைந்தார்! இலங்கை கலையுலகின் மைந்தனுக்கு நினைவஞ்சலிப்பகிர்வு!
பட்டி தொட்டி எங்கும் ஒலித்த " அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு " பாடல் இடம்பெற்ற பட்டிக்காடா பட்டணமா படமும் அவ்வாறே அன்றைய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. 1972 இல் வெளிவந்த இந்தப்படத்தில் இன்றைய முதல்வர் ஜெயலலிதாவுடன் சிவாஜி நடித்தார். அடங்காத மனைவிக்கும் செல்வச்செருக்கு மிக்க மாமியாருக்கும் சவால்விடும் நாயகன், தனது முறைப்பெண்ணை அழைத்து பாடும் இந்தப்பாடல் அந்நாளைய குத்துப்பாட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. விமர்சன ரீதியாகப்பார்த்தால் அந்தப்படமும் பாடலும் பெண்ணடிமைத்தனத்தையே சித்திரித்தது. மக்களிடம் பிரபல்யம் பெற்றதால், இலங்கையில் சிங்கள சினிமாவுக்கும் வந்தது. இன்னிசை இரவுகளில் இடம்பெற்றது. அதே இசையில் ஒரு பாடலை எழுதிப்பாடிய இலங்கைக்கலைஞர் ராமதாஸ் தமிழ்நாட்டில் மறைந்தார்.
" அடி என்னடி சித்தி பீபீ " என்று தொடங்கும் அந்தப்பாடலின் சொந்தக்காரர் ராமதாஸ், இலங்கையில் புகழ்பூத்த கலைஞராவார். மரைக்கார் ராமதாஸ் என அழைக்கப்பட்ட இவர் பிறப்பால் பிராமணர். ஆனால், அவர் புகழடைந்தது மரைக்கார் என்ற இஸ்லாமியப்பெயரினால். சென்னையில் மறைந்துவிட்டார் என்ற தகவலை சிட்னி தாயகம் வானொலி ஊடகவியலாளர் நண்பர் எழில்வேந்தன் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன். கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவுடன் இருந்ததாகவும் அறிந்தேன்.
1970 காலப்பகுதியில் இலங்கை வானொலி நாடகங்களிலும் மேடை நாடகங்களிலும் தோன்றி அசத்தியிருக்கும் ராமதாஸ், குத்துவிளக்கு உட்பட தமிழ், சிங்களப் படங்களிலும் நடித்தவர். பாலச்சந்தரின் தொலைக்காட்சி நாடகத்திலும் இடம்பெற்றவர். கோமாளிகள் கும்மாளம் நகைச்சுவைத் தொடர் நாடகத்தைக் கேட்பதற்காகவே தமிழ் நேயர்கள் நேரம் ஒதுக்கிவைத்த காலம் இருந்தது. அதற்குக் கிடைத்த அமோக வரவேற்பினால் அதனைத் திரைப்படமாக்குவதற்கும் ராமதாஸ் தீர்மானித்தார். வானொலி நாடகத்தில் பங்கேற்ற அப்புக்குட்டி ராஜகோபால், உபாலி செல்வசேகரன், அய்யர் அப்துல்ஹமீட் ஆகியோருடன் மரைக்கார் ராமதாஸ் வயிறு குலுங்க சிரிக்கவைத்த தொடர்நாடகம் கோமாளிகள் கும்மாளம். நான்குவிதமான மொழி உச்சரிப்பில் இந்தப்பாத்திரங்கள் பேசியதனாலும் இந்நாடகத்திற்கு தனி வரவேற்பு நீடித்தது. திரைப்படத்தை தயாரிக்க முன்வந்தவர் முஹம்மட் என்ற வர்த்தகர். திரைப்படத்திற்காக ஒரு காதல் கதையையும் இணைத்து , காதலர்களை ஒன்றுசேர்ப்பதற்கு உதவும் குடும்ப நண்பர்களாக மரைக்காரும் அப்புக்குட்டியும் அய்யரும் உபாலியும் வருவார்கள். இந்தப் பாத்திரங்களுக்குரிய வசனங்களை ராமதாஸே எழுதினார். காதலர்களாக சில்லையூர் செல்வராசன் - கமலினி நடித்தார்கள். நீர்கொழும்பு - கொழும்பு வீதியில் வத்தளையில் அமைந்த ஆடம்பரமான மாளிகையின் சொந்தக்காரராக ஜவாஹர் நடித்தார். அதற்கு கோமாளிகை என்றும் பெயர்சூட்டினார் ராமதாஸ்.

- தமிழ்நாட்டில் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலின் தடையை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. மாதொரு பாகனுக்கு மாத்திரமின்றி கருத்துச்சுதந்திரத்திற்கும் கிடைத்த வெற்றி இது. தடை அழுத்தத்தினால் தான் மரணித்துவிட்டதாகச்சொன்ன பெருமாள்முருகன் ஊரைவிட்டும் சென்றார். இனி அவர் உயிர்த்தெழும் காலம் கனிந்துள்ளது. இந்நாவல் மீதான சர்ச்சை வெளியானபொழுது நான் எழுதிய நீண்ட கட்டுரையை மீண்டும் இங்கு பதிவு செய்கின்றேன். இதனை எழுதியபின்னர்தான் மாதொருபாகன் நாவல் படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக்கிடைத்தது. -(முருகபூபதி -
" இந்தக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பெயருக்குரியவனை உமக்குத்தெரியுமா ? "
எங்கள் நாவலர், " வசனநடை கைவந்த வல்லாளர் ஆறுமுகநாவலர் " - என்று அறிந்திருக்கின்றோம். தமிழ்நாட்டில் கடலூரில் ஒரு காலத்தில் வள்ளலார் சுவாமிகளுக்கு எதிராக நீதிமன்றில் அவர் வழக்காடியதையும் அறிந்திருப்போம். ஆனால், அவர் தமது இளமைக்காலத்தில் கோபமும் மூர்க்க குணமும் கொண்டவர் என்பதை அறிந்திருப்போமா ? தமது உறவினர் மீது தமக்கு வந்த கோபத்தை வெளிப்படுத்துவதற்கு ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு அவர் துரத்திய கதை எத்தனைபேருக்குத் தெரியும் ? ஆறுமுகநாவலர் நூற்றாண்டு இலங்கையில் நாடுதழுவிய ரீதியில் கொண்டாடப்பட்டவேளையில் நடைபெற்ற விழாக்களில் உரைநிகழ்த்தியவர்தான் அந்த சுவாரஸ்யத்தை வெளிப்படுத்தினார். அவர்தான் தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம். இவ்வாறு கூட்டங்களிலும் விழாக்கள் மற்றும் சந்திப்புகளிலும் பல சுவாரஸ்யங்களை அவிழ்த்து கலகலப்பூட்டும் பூலோகசிங்கம் அவர்கள் தற்பொழுது அவுஸ்திரேலியா, சிட்னியில் ஒரு முதியோர் பராமரிப்பு நிலையத்தில் கட்டிலில் சயனித்தவாறு கடந்த காலங்களை நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார். ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் முதுமை வரும். அந்த முதுமை மேலும் இரண்டு மைகளையும் அழைத்துக்கொண்டு அருகிலிருந்து உறவாடும். அவைதான் தனிமை - இயலாமை. அந்தத்தனிமையும் எழுதமுடியாதிருக்கும் இயலாமையும்தான் இன்று அவரை வாட்டிக்கொண்டிருக்கின்றன.
பெரியார் ஈ.வே.ராமசாமி தமது குடியரசு இதழ் விநியோகத்திற்கு முதலில் தேர்வு செய்த இடங்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் இருந்த சிகை அலங்கார நிலையங்கள்தான் என்று சொல்லப்பட்டதுண்டு. காரணம்; இங்கு வரும் வாடிக்கையாளர்களின் கண்களில் குடியரசு இதழ்கள் தென்படும். எடுத்துப்படிப்பார்கள். அவ்வாறு தமது சமூகச்சீர்திருத்தக் கருத்துக்களையும் பகுத்தறிவுவாத சிந்தனைகளையும் பெரியார் அக்காலத்தில் சாதாரண மக்களிடம் பரப்பினார். எங்கள் மல்லிகை ஜீவாவுக்கும் பெரியார் ஆதர்சமாகத் திகழ்ந்தவர். அவரை முன்மாதிரியாகக்கொண்டு, தாம் வெளியிட்ட மல்லிகையை இலங்கையில் பல தமிழ் அன்பர்கள் நடத்திய சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கும் விநியோகித்தார். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இவ்வாறு மல்லிகையை அவர் விநியோகம் செய்ததை நேரில் பார்த்திருக்கின்றேன். தொடக்கத்தில் அவருடைய யாழ்ப்பாணம் கஸ்தூரியார் விதியில் அமைந்த ஜோசப்சலூனின் பின்னறையிலிருந்து மல்லிகையின் பக்கங்கள் அச்சுக்கோர்க்கப்பட்டன. காலப்போக்கில் ராஜா தியேட்டருக்குப்பின்னால் மல்லிகைக்கென தனியாக அலுவலகம் அமைத்து வெளியிட்டார். வடக்கில் போர் நெருக்கடியினாலும் இயக்கத்தின் நெருக்குவாரங்களினாலும் கொழும்புக்கு இடம்பெயர்ந்து, மல்லிகையை வெளியிட்டார். கடந்த சில வருடங்களாக மல்லிகை வெளிவரவில்லை.
நூல் வெளியீடுகள் எங்கும் நடக்கின்றன. முதல் பிரதி, சிறப்புப்பிரதி வழங்கும் சடங்குகளுக்கும் குறைவில்லை. அவற்றை அவ்வாறு பெற்றுக்கொள்பவர்கள் படிக்கிறார்களா ? என்பது வேறு விடயம். இவ்வாறு நூல்களின் அரங்கேற்றங்கள் கோலம்கொண்டிருக்கையில், ஒரு எழுத்தாளரின் நூலை முகத்திற்காக விலைகொடுத்து வாங்காமல், எதிர்பாராத தருணத்தில் ஒரு சைவஹோட்டல் வாயிலில் அந்த எழுத்தாளரின் கைப்பையிலிருக்கும் நூலைக் கண்டுவிட்டு பணம் கொடுத்து வாங்கிய முகம் மறந்துபோன ஒரு வாசக அன்பர் இன்றும் அழியாதகோலமாக அந்த எழுத்தாளரிடம் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
1.
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் நகரம், கிராமம் உட்பட பட்டிதொட்டியெங்கும் பிரசித்தமான பாடல்தான் " சின்ன மாமியே உன் சின்னமகளெங்கே ? பள்ளிக்குச்சென்றாளோ படிக்கச்சென்றாளோ ? "தமிழ்த்திரைப்படங்கள் சிலவற்றிலும் இடம்பெற்றுள்ளது. இலங்கை வடமராட்சியைச்சேர்ந்த கலைஞர் கமலநாதன் இயற்றிய அந்தப்பாடல், தற்பொழுது அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் பிரபல பாடகர் நித்தி கனகரத்தினத்தால் பிரசித்தி பெற்றது. ஒரு கால கட்டத்தில் இளைஞர்களை பெரிதும் வசீகரித்த இந்தப்பாடலை இயற்றிய கமலநாதன் நேற்று (26-01-2016) வடமராட்சி - வதிரியில் அக்கினியுடன் சங்கமமானார்.
'இந்து மதச்சிறையினிலே ஹரிஜனங்க நாங்க
எல்லாமே நேற்று நடந்தது போலிருக்கிறது. காலம் என்னதான் விரைந்து ஓடிMrsKohilamMahendranனாலும், நினைவுச்சிறைக்குள் அடைபட்டுத்தான் வாழ்கிறது. அவ்வப்போது விடுதலையாகி வெளியே வந்தாலும் அந்தக்கூட்டுக்குள் மீண்டு விடுகிறது பறவையைப்போன்று. திசை மாறிய பறவைகள் பற்றி அறிவோம். ஒரு மருத்துவ கலாநிதியாக வந்திருக்கவேண்டியவர், எவ்வாறு திசைமாறி இலக்கிய மருத்துவரானார்....? தெல்லிப்பழை விழிசிட்டி என்ற கிராமத்திலிருந்து கூவத்தொடங்கிய ஒரு விழிசைக்குயில் பற்றியதுதான் இந்தப்பதிவு.
சமகாலத்தில் மறைந்தவர்களின் அறையினுள்தான் வாழ்கின்றேனா....? இந்தக்கேள்வியை எனக்கு நானே கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். ஆனால், இந்தக்கேள்விக்கு பதில் இல்லை. இந்த ஆண்டின் இறுதியும் மறைந்தவர்களின் அறையினுள்தான் என்னை முடக்கிப்போட்டிருக்கிறது. எனது அறையிலிருக்கும் கணினியை திறக்கும்பொழுதே பதட்டம்தான் வருகிறது.
எழுதிச் செல்லும் விதியின் கை
"ஏகே 47 துப்பாக்கியுடன் ஒவ்வொரு குழந்தையும் மூன்று ரவைக் கூடுகளை அணிந்துகொள்கிறார்கள். சிலர் ஆறு ரவைக் கூடுகளைக்கூட கட்டியிருப்பார்கள். இந்தச் சுமையைப்பற்றி எங்களுக்கும் கவலையில்லை. எங்கள் தலைவர்களுக்கும் கவலையில்லை. எந்தப்பாரத்தைச் சுமந்தாவது, என்ன வித்தை காட்டியாவது தலைமையின் கவனத்தைப் பெற்றுவிடுவதில் குழந்தைகள் கண்ணும் கருத்துமாயிருந்தார்கள். கனமான இந்தத்துப்பாக்கிகள் எங்களுக்குத்தாயின் அரவணைப்பைப்போன்றன. நாங்கள் உயிரைவிட்டாலும் விடுவோமே தவிர ஒரு கணமும் துப்பாக்கியை விட்டுப்பிரியமாட்டோம். துப்பாக்கி இல்லாத நாங்கள் முழுமையற்ற பிறவிகள். உங்களின் இந்த அவலநிலை குறித்து உங்கள் தளபதிகள் கொஞ்சமேனும் கவலை கொள்ளவில்லையா... ? என நீங்கள் கேட்கக்கூடும். அவர்கள் முசேவெனியின் விருப்பங்களைப் பிழைபடாமல் நிறைவேற்றும் கலைகளில் மூழ்கிக்கிடந்தார்கள். " 
திரையுலகில் நடிக்கும்பொழுது தான் இணைந்து நடிக்கப்பயந்த மூன்று கலைஞர்களைப்பற்றி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். அம்மூவரும்: நடிகையர் திலகம் சாவித்திரி, நடிகவேள் எம்.ஆர். ராதா, சகலகலா ஆச்சி மனோரமா. இன்று இவர்கள் அனைவரும் திரையுலகை விட்டு விடைபெற்றுவிட்டனர். இறுதியாக கடந்த 10 ஆம் திகதி சென்றவர் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனைகள் பல நிகழ்த்திய மனோரமா. தமிழ்சினிமா மிகைநடிப்பாற்றலுக்கு பெயர் பெற்றது. நாடக மேடைகளிலிருந்து அந்தக்காலத்தில் வந்த நடிகர், நடிகைகளும் அவர்களுக்கு உணர்ச்சியூட்டும் வசனம் எழுதிக்கொடுத்தவர்களும் சினிமா என்றால் இப்படித்தான் இருக்கும் - இருக்கவேண்டும் என்ற கற்பிதம் தந்தவர்கள். அதனால் யதார்த்தப்பண்புவாத தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை தமிழ் சினிமாவில் குறைந்தது. இந்தக்கருத்தை இலங்கைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களும் கனடா மூர்த்தி சிவாஜி கணேசன் மறைந்தபொழுது தயாரித்த 'சிவாஜிகணேசன் ஒரு பண்பாட்டுக்குறிப்பு' என்ற ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கலை இலக்கிய நண்பர்கள் கழகம் என்ற அமைப்பு 1970களில் இயங்கியது. இதில் எழுத்தாளர்கள் சாந்தன், மாவை நித்தியானந்தன், குப்பிழான் சண்முகன், யேசுராசா, இமையவன், நெல்லை க.பேரன் உட்பட சில நண்பர்கள் அங்கம்வகித்து அடிக்கடி கலை, இலக்கிய சந்திப்புகளை நடத்திக்கொண்டிருந்தார்கள். சில நிகழ்ச்சிகளை வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்திலும் நடத்தி மூத்த எழுத்தாளர்களை அழைத்து அவர்களின் இலக்கிய அனுபவங்களை பேசவைத்தார்கள்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









