படித்தோம் சொல்கின்றோம்: தாமரைச்செல்வியின் உயிர்வாசம் ( நாவல்)! அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து படகில் வந்த மக்களின் வாழ்வியல் கோலம் !

தற்காலத்தில் கொரோனா என்ற நாமத்தை முழு உலகமும் சுமந்துகொண்டிருக்கிறது! அதே சமயம் அகதி என்ற நாமத்தை சுமந்துகொண்டிருப்பவர்கள் உலகெங்கும் நெடுங்காலமாக வாழ்ந்துவருகின்றனர். இரண்டு நாமங்களும் மறையவேண்டும். எனினும், உலக அரங்கில் மறக்கமுடியாத, மறைக்கமுடியாத தடங்களாகவே அவை இரண்டும் நிலைகொண்டிருக்கும். பசுமைநிறைந்த வயல் வெளிகளையும், போர்க்காலத்தில் காடுறைந்த மக்களையும், கொல்லப்பட்ட உறவுகளைப்பார்த்து அழுவதற்கும் நேரம் இல்லாமல், இடம்பெயர்ந்து ஓடியவர்களையும், வன்னிபெருநிலப்பரப்பில் வாழ்ந்த ஆச்சிமாரையும் , அவர்களின் வாழ்வுக்கோலங்களையும் பற்றி இதுவரையில் எழுதிவந்திருக்கும் தாமரைச்செல்வி, அவுஸ்திரேலியாவுக்கு கனவுகளை சுமந்துகொண்டு படகுகளில் வந்து வலிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் கதையை எழுதியிருக்கிறார். அவருடைய உயிர்வாசம் என்ற புதிய நாவல், ஏறக்குறைய ஐநூறு பக்கங்களுக்கும் மேல் விரிகிறது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்தவர்களின் ஆசைகள் நிராசையாகிவிடலாகாது என்ற அவதிதான் இந்நாவலின் பக்கங்களில் இழையோடியிருக்கும் நாம் நுகரும் வாசம்! காந்தன், மதி, செந்தில், செழியன், சுதா, இளங்கோ, தேவகி, தவம், உருத்திரன், கார்த்தி, செல்வி, செபமாலை, பார்த்தி, நிரஞ்சன், பரஞ்சோதி, குழந்தைகள் துஷி, சாரா உட்பட பலரதும் அகதிவாழ்வுக்கதைகளின் ஊடே நகர்ந்து விரியும் நாவல். அவர்களின் கதைகள் 500 பக்கங்களில் எழுதித்தீராதவை! இவர்களில் பரஞ்சோதி என்பவர் நடுக்கடலில் படகில் இறந்து ஜலசமாதியாகிறார். உறவுகள், நண்பர்கள் இருந்தும், இறுதி நிகழ்வில் எவருமே இல்லாமல் அனாதைகள் போன்று சமகாலத்தில் உலகெங்கும் ஆயிரக்கணக்கில் எரிக்கப்படுபவர்கள் புதைக்கப்படுபவர்கள் கதைகளை கேட்டு பதற்றத்திலிருக்கும் நாம், படகுகளில் வந்து கடலில் மூழ்கி ஜலசமாதியானவர்கள் பற்றிய செய்திகளையும் கடந்து வந்திருக்கின்றோம்.

இயேசு கிறிஸ்து ஆறுமணி நேரம் சிலுவையில் தொங்கினார். முதல் மூன்று மணி நேரங்கள் அவர் ரோம வீரர்களாலும், மற்றவர்களாலும், அடிக்கப்பட்டு, இழிவாக பேசப்பட்டு, எள்ளி நகையாடப்பட்டு, வேதனைகளை அனுபவித்தார். அவற்றை எல்லாம் பொறுமையாக பொறுத்துக் கொண்டார். ஆறாம் மணி நேரம் முதல், ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் அந்தகாரம் பூமியை மூடி கொண்டது. அந்த ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ! “ஏலி! ஏலி! லாமா சபக்தானி “ என்று உரத்துச் சத்தமிட்டுக் கூப்பிட்டார் ! அதற்கு “ என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்..? “ என்று அர்த்தம். – (மத்தேயு 27:45-46) இந்த வாசகங்களை ஏற்கனவே படித்திருப்பீர்கள். கடந்த வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி யேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட தினம். அதனால் அதனை பெரிய வெள்ளி என்று தமிழிலும் Good Friday என்று ஆங்கிலத்திலும் அழைப்பர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை 06 ஆம் திகதி வவுனியாவில் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.
இலங்கையின் மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று ( மார்ச் 27 ஆம் திகதி) வியாழக்கிழமை மாலை கொழும்பில் தமதில்லத்தில் மறைந்தார். உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இலங்கையிலும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையிலிருக்கும் இக்காலப்பகுதியில் நீர்வை பொன்னையன் அவர்களின் மறைவும் எதிர்பாராமல் நிகழ்ந்துள்ளது. நாளை மறுதினம் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இறுதி நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாக அறியப்படுகிறது.
ஏரிக்கரை பத்திரிகை ( Lake House) என வர்ணிக்கப்படும் தினகரன் 1932 ஆம் ஆண்டு முதல் நாளிதழாக வெளியாகிறது. 23-05-1948 ஆம் திகதியன்று தனது முதலாவது தினகரன் வாரமஞ்சரியை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. ஆங்கில, சிங்கள ஏடுகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டுவரும் ஏரிக்கரையிலிருந்து இயங்கும் Lake House என்ற பெரிய நிறுவனத்தின் ஒரே ஒரு தமிழ்த்தினசரி தினகரன். அது வெளிவரத்தொடங்கிய காலகட்டத்தில் மற்றும் ஒரு இந்திய ஊடகம் என்ற மாயைதான் இலங்கை வாசகர்களிடம் உருவாகியிருந்தது. தினகரனை இலங்கையின் தமிழ்த் தேசியப்பத்திரிகையாக்கிய பெருமை பேராசிரியர் க. கைலாசபதியையே சாரும். இவருக்கு முன்னர் கே.க.ப. நாதன் தினகரன் ஆசிரியராக பணியாற்றினார். பின்னாளில் இவர் கொழும்பில் தினபதி, சிந்தாமணி, வெளியிட்ட சுயாதீன பத்திரிகை சமாஜத்தின் தந்தி மாலைத்தினசரியின் ஆசிரியரானார். பாரதி ஆய்வாளராகவும் அறியப்படும் பேராசிரியர் க. கைலாசபதியின் தினகரன் ஆசிரியப்பணி குறித்தும் இருவேறு கருத்தியல்கள் இலக்கிய உலகில் நிலவியதை அறிவோம்.
சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை நாவல் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்வு, மெல்பனில் கடந்த ஆண்டு ( 2019 ) நடந்தவேளையில் நான் முதல் முதலில் சந்தித்த இலக்கிய வாசகர் அசோக். எமது 19 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் நிகழ்ந்த வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்கில், இவர் மறைந்த தோப்பில் முகம்மது மீரானின் ஒரு கடலோரக்கிராமத்தின் கதை நாவலைப்பற்றி பேசினார். தமிழகம் - மதுரையில் பிறந்து வளர்ந்தவர். பொறியியல் துறையில் கற்றுத் தேர்ந்தவர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மெல்பன் வாசியாகிவிட்டவர். தன்னை தீவிர வாசகனாக்கியவர், மதுரையில் தனது தமிழ் ஆசானாக விளங்கியவரான குமரேசன் அய்யா என நன்றியோடு சொல்லிவருகிறார்.
“எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை.“ இந்த வரிகளை மறந்துவிடாதீர்கள். உங்கள் வாழ்க்கை பயணத்திலும் ஏதோ ஒரு வடிவத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழும்! கடந்த வாரம் சிட்னியில் திடீரென மறைந்த கலைவளன் சிசு. நாகேந்திரன் அய்யாவின் இறுதி நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி சிட்னியில் நடந்து முடிந்தபின்னர், நேற்று சிட்னியில் Hurstville என்ற பிரதேசத்தில், தனது மனைவி, பிள்ளைகள், மருமக்கள், மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசிக்கும் எங்கள் மூத்த கவிஞர் அம்பி அவர்களை பார்ப்பதற்குச்சென்றேன்.
தனது 99 வயதினை நெருங்கும் வேளையில் எம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார் மூத்த எழுத்தாளரும் நாடக, கூத்து கலைஞரும் சமூகப்பணியாளரும் ஒளிப்படக்கலைஞருமான கலைவளன் சிசு நாகேந்திரன். நீண்டகாலம் அவுஸ்திரேலியா மெல்பனை வதிவிடமாகக்கொண்டிருந்தவர். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் அவரது புதல்வியும் பேரப்பிள்ளைகளும் அவரை சிட்னிக்கு அழைத்துச்சென்று, அங்கு ஒரு முதியோர் காப்பகத்தில் பராமரித்துக்கொண்டிருந்தனர். கடந்த சனிக்கிழமை திடீரென சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 10 ஆம் திகதி திங்கட்கிழமை மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி எம்மை வந்தடைந்தது. யாழ். நல்லூர் இவரது பூர்வீகம் எனச்சொல்லப்பட்டாலும், பிறந்தது கேகாலையில் 1921 ஆம் ஆண்டில். இவரது பிறந்த தினம் ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி.
“ தன் வாழ்க்கையில் என்ன அவலங்கள் இருந்தாலும் தன் மனதில் எத்தனை சோகச்சுமையிருந்தாலும் அதையெல்லாம் மறைத்து தன் நகைச்சுவையால் மக்களை விலா நோகச்சிரித்து மகிழச்செய்பவர்தானே மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் “ -என்று நடிகர் சிவகுமாரால் 1986 இல் விதந்து எழுதப்பட்டவர்தான் நடிகர் நாகேஷ். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இலட்சக்கணக்கான ரஸிகர்களை தனது அபாரமான நடிப்பினால் கவர்ந்தவர் நாகேஷ். நாகேஷ், தமிழ்நாடு,தாராபுரம்பகுதியில் கன்னட மாத்வர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் 1933 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி பிறந்தார். 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி மறைந்தார். 


கிளிநொச்சி அறிவியல் நகரில் நடைபெற்ற 49 ஆவது இலக்கியச் சந்திப்பிற்கு வடக்கு, கிழக்கு, தலைநகரத்திலிருந்தும் கனடா, லண்டன், மற்றும் தமிழ்நாட்டிலிருந்தும் பல கலை, இலக்கிய ஆளுமைகள் வந்திருந்தனர். நண்பர் கருணாகரனின் அழைப்பில் அங்கு சென்றிருந்தேன். அவுஸ்திரேலியா திரும்பியது முதல் பல்வேறு பணிகள் இருந்தமையால் அந்த இரண்டு நாள் சந்திப்பு குறித்து எந்தவொரு பதிவும் எழுதுவதற்கு கால அவகாசம் கிடைக்கவில்லை. ஆனால், அதற்கு வந்திருந்த பலரும் தத்தமது முகநூல் வழியாக படங்களையும் குறிப்புகளையும் வெளியிட்டிருந்ததாக அறிந்தேன். என்னிடம் முகநூல் கணக்கு இல்லையென்பதனால், வேறு எதுவும் தெரியவில்லை!
எமது நீர்கொழும்பூரில் கலை, இலக்கியவாதிகள் இணைந்து இலக்கிய வட்டம் என்ற அமைப்பை 1975 களில் தொடங்கினோம். அதன் தலைவராக இயங்கியவர் எழுத்தாளர் மு. பஷீர். இந்த அமைப்புக்கு முன்னோடியாக எமது இல்லத்தில் வளர்மதி நூலகம் என்ற நூல் நிலையத்தையும் தொடக்கியிருந்தேன். வளர்மதி நூலகம் 1971 இல் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி தொடங்கப்பட்ட காலத்தில் உருவானது. மாலையானதும் ஊரடங்கு உத்தரவு அமுலாகிவிடும். வெளியே செல்லமுடியாது. அக்காலத்தில் தொலைக்காட்சியும் இல்லை.
நீண்ட காலத்திற்குப்பின்னர் அவன் என்னைப்பார்க்க வந்தான். அவனை “ அவர் “ என்று அழைக்காமல் மரியாதைக் குறைவாக “அவன் “ என்று அழைப்பதாக வருந்தவேண்டாம். அவன் பிறப்பதற்கு முன்னர் – நூறாண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தமையால், அவ்வாறு அழைக்கின்றேன். 
எமது இலக்கியக்குடும்பத்தின் சகோதரி தங்கேஸ்வரி மட்டக்களப்பில் மறைந்தார் என்ற செய்தி வந்ததும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. இலங்கைப்பயணத்தில் இம்மாதம் ( ஒக்டோபர் ) 08 ஆம் திகதி அவரை, அவரது மட்டக்களப்பு இல்லத்தில் சந்தித்தேன். அவர் கடந்த சில வருடங்களாக இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர். அவ்வப்போது தொலைபேசியில் உரையாடி அவரது உடல்நலம் பற்றிக்கேட்பதுண்டு. அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தமையால், எனக்குத் தெரிந்த சில அரசியல் பிரமுகர்களிடம் அவர் பற்றிச்சொல்லி, சென்று பார்ப்பதற்கு ஆவனசெய்யுமாறும், அவரது மருத்துவ சிகிச்சைக்கு உதவுவதற்கு ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தேன். எனினும் எவரும் அவரைச்சென்று பார்த்திருக்கவில்லை என்பதை அன்றைய தினம் அறிந்துகொண்டேன். நண்பர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனுடன் அவரை பார்க்கச்செல்லும்போது பிற்பகலாகியிருந்தது.
( கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் நிகழ்த்திய மதிப்பீட்டுரை)

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









