படித்தோம் சொல்கின்றோம்: நடேசன் எழுதிய அந்தரங்கம் கதைத் தொகுதி! மாயாவாதமும் அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் ! - முருகபூபதி -
மனித வாழ்வில் அந்தரங்கங்களுக்கு குறைவிருக்காது. அந்தரங்கம் அவரவர்க்கு புனிதமானது. ஜெயகாந்தனும் அந்தரங்கம் புனிதமானது என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதியவர். அவுஸ்திரேலியாவில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும் நடேசன், இங்கு வந்தபின்னரே இலக்கியப்பிரதிகளும் அரசியல் பத்தி எழுத்துக்களும் எழுதத் தொடங்கியவர். சிறுகதை, நாவல், பயண இலக்கியம், அரசியல் பத்தி எழுத்து மற்றும் தான் சார்ந்த விலங்கு மருத்துவத்துறை அனுபவங்கள் சார்ந்த பதிவுகள் என்பனவற்றை தொடர்ச்சியாக எழுதிவரும் நடேசனின் சிறுகதைகளும், நாவல்களும் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டுவரும் நடேசனுக்கு இதழாசிரியர் என்ற முகமும் உண்டு. சிலவருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் உதயம் என்ற மாத இதழின் நிருவாக ஆசிரியராகவும் பணியாற்றியிருப்பவர்.
சிறுகதையாகட்டும், நாவலாகட்டும், அரசியல் பத்திகளாகட்டும், இவர் எழுதும் எந்தவொரு படைப்பிலும் அங்கதம் இழையோடியிருக்கும். அந்தரங்கம் கதைத்தொகுதியும் விலக்கல்ல. இதனை வெளியிடுவதற்கு முன்னின்றுழைத்த கருணாகரன், இந்நூலுக்கு அசாதாரணங்களின் கதை என்ற தலைப்பில் மிகவும் பொருத்தமான அருமையானதோர் முன்னுரையை வழங்கியிருக்கிறார். 2010 ஆம் ஆண்டு, முதல் முதலில் நடேசனை யாழ்ப்பாணத்தில் சந்தித்தது தொடக்கம், இத்தொகுதி வெளியாகியிருக்கும் இந்தத் தருணம் வரையில் தான் அவதானித்த நடேசன் பற்றியும், நடேசனின் இலக்கியம், மற்றும் சமூக அரசியல் பணிகள் பற்றியும் விளக்கியிருக்கிறார். தமிழகத்தின் மூத்த இதழாளரும் இலக்கியப்படைப்பாளியுமான மாலன் இத்தொகுதியில் இடம்பெறும் கதைகள் தொடர்பான தமது வாசிப்பு அனுபவத்தை முன்னுரையாக எழுதியுள்ளார்.

இந்து தமிழ்: உணர்வால், புகழால் எங்கும் நிறைந்திருக்கிறார் ஜெயகாந்தன்: ஏப்ரில் 24 - பிறந்த நாள் கருத்தரங்கில் ஆளுமைகள் புகழாரம்
இந்த அஞ்சலிக்குறிப்பினை குற்றவுணர்வுடனேயே பதிவுசெய்கின்றேன். கடந்த ஆண்டு ( 2020 ) ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதிதான் எமது மதிப்பிற்குரிய திருமதி மகேஸ்வரி சொக்கநாதன் அம்மையாரின் நூறாவது பிறந்த தினத்தை அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், மற்றும் உறவினர்கள், குடும்ப நண்பர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவரும் மானசீகமாக வாழ்த்திக்கொண்டாடியதை அறிந்திருந்தேன். எலிஸபெத் மகாராணியாரும் அம்மையாரை வாழ்த்தி சான்றிதழ் வழங்கியிருந்தார். அவுஸ்திரேலியப்பிரதமர், ஆளுநர் தம்பதியர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினரும் வாழ்த்தியிருந்தார். சமூகத்திற்கு பயன்மிக்க பணிகளை மேற்கொண்டவர்கள் பற்றி, முடிந்தவரையில் அவ்வப்போது அவர்கள் வாழும் காலப்பகுதியிலேயே எனது அவதானக்குறிப்புகளை எழுதிவந்திருக்கின்றேன். எனினும், எனது கணினியில் நேர்ந்த வைரஸ் தாக்கத்தினால், அம்மையாரின் படங்கள், தேடிச்சேமித்துவைத்திருந்த சில குறிப்புகள் மறைந்துவிட்டன. பின்னர் எழுதலாம் என்று காலம் கடந்தது. சமகாலத்தின் கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் இடைவெளி பேணும் கலாசாரத்திற்கு கட்டுப்பட்டு, வீடடங்கியிருந்து இணையவெளி அரங்குகளில் நேரத்தையும் காலத்தையும் செலவிட்டதனால், உடனடியாக அம்மையார் பற்றி எழுதமுடியாமல் போனதையிட்டு, இதனைப்படிக்கும் அன்னாரின் குடும்ப உறவுகளிடமும், வாசகர்களிடத்திலும் மன்னிப்பு கேட்டவாறே இந்த அஞ்சலிப்பதிவுக்குள் வருகின்றேன்.
”கிழக்கு வானில் சூரியன் தங்கப்பாளமாக ஜொலித்தபடி உதயமாகிக்கொண்டிருந்தான். சூரியோதயத்தை நான் முன்னர் கடற்கரையோரங்களில் நின்று பார்த்துக் களித்திருக்கிறேன். ஆனால், உயரத்தில், பறந்துகொண்டிருக்கும் விமானத்திலிருந்து, புதிய கோணத்தில் வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும் மேகங்களினூடாக அந்த அழகிய காட்சியைப்பார்த்தபோது நான் மெய்மறந்துபோனேன். ஆதவனின் ஒளிப்பிழம்புகள் கணத்துக்குக்கணம் புதிது புதிதாய் கொள்ளை அழகை அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தன.”
முன்னொரு காலத்தில் மாத – வார இதழ்களில்தான் சிறுகதைகள் வெளிவந்துகொண்டிருந்தன. முன்னொரு காலம் என்றால், பழந்தமிழ் இலக்கியம் அறிமுகமான அந்தக்காலம் அல்ல. குறிப்பிட்ட முன்னொரு காலத்தில் இலங்கையில் இலக்கியத்துறையில் மறுமலர்ச்சிக்கால இலக்கியம் , மண்வாசனை இலக்கியம், முற்போக்கு இலக்கியம், பிரதேச மொழி வழக்கு இலக்கியம், தலித் இலக்கியம், போர்க்கால இலக்கியம், இடப்பெயர்வு இலக்கியம் என்று சிலவகை இலக்கியப்படைப்புகளை இலங்கையில் மாத இதழ்கள் தாங்கி வெளிவந்தன. தமிழ்ப்பத்திரிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிட்ட வார இதழ்களும் இலக்கியப்படைப்புகளுக்கு போதியளவு களம் வழங்கின. காலம் மாறியது. இலங்கையில் இனநெருக்கடி உச்சம் பெற்றதனால் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலிருந்த கலை, இலக்கியவாதிகள், புகலிடத்திலிருந்து இதழ்களை வெளியிட்டு வந்ததுடன் புகலிட இலக்கியத்தையும் பேசுபொருளாக்கினர். மாறிக்கொண்டிருப்பது காலம். சமகாலத்தில், முகநூலின் வருகையையடுத்து பலரும் அதிலும் எழுதி உடனுக்குடன் எதிர்வினைகளையும் வரவாக்கிக்கொள்கின்றனர். நவீன தொழில் நுட்பத்தின் தீவிர பாய்ச்சலினால், வரப்பிரசாதமான இணைய இதழ்களும், முகநூல்களும் இலக்கியம் பேசிவருகின்றன. எவரும் தத்தமக்கென வலைப்பூவை வைத்துக்கொண்டும் தங்கள் அன்றாட பதிவுகளை அதில் ஏற்றமுடிகிறது.
இலங்கை வடபுலத்தில் உரும்பராயில் 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி பிறந்திருக்கும் கணேசலிங்கன் அவர்கள் தமது 93 ஆவது அகவையை இன்று நகர்ந்துள்ளார். உரும்பராய் கிராமத்தில் செல்லையா – இராசம்மா தம்பதியருக்கு இரண்டாவது புதல்வனாகப்பிறந்த கணேசலிங்கன், தனது ஆரம்பக்கல்வியை உரும்பராயில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையிலும் அதனையடுத்து சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாம் தரம் வரையிலும் கற்றபின்னர், யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் மேற்கல்வியை தொடர்ந்தார். கணேசலிங்கன் அன்று கற்ற பரமேஸ்வராக்கல்லூரிதான் பின்னாளில் 1974 இல் யாழ். பல்கலைக்கழக வளாகமாக உருமாறியது. இந்தப்பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டு நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நடந்தபோது, கணேசலிங்கனின் நாவல்களும் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று 26 ஆம் திகதி உடல்நலக்குறைவால் மறைந்துவிட்ட தோழர் தா. பாண்டியன் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதியே இறந்திருக்கவேண்டியவர் ! இதனை வாசிக்கும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா..? அந்தத் திகதியை எவரும், ஏன் முழு உலகமுமே மறந்திருக்காது. அந்தநாள் எத்தகையது என்பதை தா. பாண்டியனின் வாக்குமூலத்திலிருந்தே இங்கே தருகின்றேன். அந்த வாக்குமூலத்தை அவர் தமது 69 வயதில்தான் பதிவுசெய்துள்ளார்.

“ சிறு வயதிலேயே தானும் தனது சமூகமும் முடக்கப்படுகிறோம் என தான் உணர்ந்த நாளில் இருந்து தான் இறக்கும் நாள் வரை ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தின் குரலாக ஒலித்தவர் 'மல்லிகை' இலக்கிய இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா. அன்னாரின் மறைவில் இருந்து இன்னுமொரு வரலாறு எழும் “ என்று எழுத்தாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் விடுத்திருக்கும் அஞ்சலிக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
“ மல்லிகை ஜீவா அவர்கள் ஈழத்து தமிழ்த்தேசிய இலக்கிய வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். ஈழத்து எழுத்தாளர்கள் பலருக்கு களம் வழங்கி ஈழத்து இலக்கிய செல்நெறிக்கு உந்துசக்தியாக விளங்கியவர். சாதாரண அடிநிலை சமூகத்தில் பிறந்து அச்சமூகத்தின் குரலாக இலக்கியத்தில் ஒலித்தவர். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு வளம்சேர்ப்பதற்காக யாழ்ப்பாணத்தில் 1966 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மல்லிகை மாசிகையை ஆரம்பித்தவர். இடையில் போர்க்காலம் தோன்றியவேளையிலும் சளைக்காது குறைந்த வளங்களுடன் மல்லிகையை வெளிக்கொணர்ந்தவர். இலங்கையில் தமிழ் படைப்பு இலக்கியத்திற்கு முதல் முதலில் தேசிய சாகித்திய விருதும் பெற்றவர். அத்துடன் தேசத்தின் கண் என்ற உயரிய விருதையும் சாகித்திய இரத்தினா விருதையும், கனடா இலக்கியத்தோட்டத்தின் "இயல்விருது “ உட்பட பல விருதுகளும் பெற்றவர். மூவின இலக்கியவாதிகளால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இன நல்லிணக்கத்திற்காக மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கும் தமது மல்லிகை இதழில் முன்னுரிமை வழங்கியவர். நூற்றுக்கணக்கான மூவின கலை, இலக்கிய ஆளுமைகள் மற்றும் சமூகப்பணியாளர்கள் மற்றும் இலக்கிய பேராசிரியர்களின் படங்களை மல்லிகை இதழ்களின் முகப்பில் பதிவுசெய்து பாராட்டி கௌரவித்து மல்லிகை இதழிலே அவர்கள் பற்றிய கருத்துச்செறிவு மிக்க ஆக்கங்களையும் வெளிவரச்செய்தவர். இலங்கையின் அனைத்து பிரதேச எழுத்தாளர்களுக்கும் மல்லிகையில் சிறந்த களம் வழங்கியவர்.
இன்று 29 ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் எனது கைத்தொலைபேசி சிணுங்கியது. இந்த அகாலவேளையில் யார்…? எனப்பார்த்தேன். மறுமுனையில் இலக்கிய நண்பர் தெய்வீகன், “உறக்கத்தை குழப்பியதற்கு மன்னிக்கவும்“ எனச்சொல்லிவிட்டு, எங்கள் மல்லிகை ஜீவா கொழும்பில் மறைந்துவிட்டார் என்ற ஆழ்ந்த துயரம்மிக்க செய்தியை சொன்னார். அத்துடன் எனது உறக்கம் முற்றாக களைந்துவிட்டது. தனது வாழ்நாள் முழுவதும் களைக்காமல் ஓடி ஓடி ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு அயராமல் உழைத்த மல்லிகை ஜீவா இனியாவது நிரந்தரமாக ஓய்வுபெறட்டும். என்று என்னை நானே தேற்றிக்கொண்டு, பொங்கிவந்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கியவாறு இந்த நினைவுப்பதிகையை அஞ்சலிக்குறிப்பாக சமர்ப்பிக்கின்றேன்.
“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா…? “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.
- அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். நலம்தானே...? உடல் நலத்தில் அவதானமாக இருக்கவும். இங்கு நாம் நலம். தங்கள் பதிவுகளில் தங்களின் வாசிப்பும் யோசிப்பும் பகுதியில் ( 366 ஆவது அங்கம் ) எழுதப்பட்ட குறிப்புகளைப்படித்துவிட்டு, - கடந்த 2019 இல் வெளியான எனது இலங்கையில் பாரதி நூலில் இடம்பெற்ற இரண்டு அங்கங்களை தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைத்துள்ளேன். நன்றி - அன்புடன் , முருகபூபதி -
நான் அவுஸ்திரேலியா மெல்பனில் வசிக்கும் புறநகரமான மோர்வெல்லிலிருந்து சுமார் 65 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் மற்றும் ஒரு புறநகரமான சேல் என்ற ஊருக்கு கனத்த மனதுடன் சென்றுகொண்டிருக்கின்றேன்.
கண்ணுக்குத் தெரியாத எதிரி கொரோனோ என்ற பெயரிலும் கொவிட் 19 என்ற புனைபெயருடனும் வந்ததே வந்தது, உலகெங்கும் தனது கோரத்தாண்டவத்தை அலுப்பு சலிப்பின்றி ஆடிக்கொண்டிருக்கிறது. அது பலியெடுத்த அறிவுஜீவிகளின் வரிசையில் நேற்று நவம்பர் 18 ஆம் திகதி மற்றும் ஒருவரும் விடைபெற்றுவிட்டார். நேற்று முன்தினம் நவம்பர் 17 ஆம் திகதி அதிகாலை சென்னையில் மூத்த பதிப்பாளரும் இலக்கியவாதியுமான க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கிடையில், மற்றும் ஒரு சோவியத் அறிஞரை நேற்று நவம்பர் 18 ஆம் திகதி பறிகொடுத்துவிட்டோம். 1941 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 27 ஆம் திகதி ருஷ்யாவில் பிறந்திருக்கும் இவரது முழுப்பெயர்: அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்ஸ்கி. நேற்று தமது 79 வயதில் கொரோனோ தொற்றின் தாக்கத்தினால் மறைந்துவிட்டதாக செய்தி வௌிவந்துள்ளது. இவர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நெருக்கமானவர். இவரை இவ்வாறு எமது மொழியுடனும் எமது இனத்துடனும் நெருங்கவைத்தவர் மகாகவி பாரதியார்.
க்ரியா இராமகிருஷ்ணன் இன்று நவம்பர் 17 ஆம் திகதி, அதிகாலை சென்னையில் கொரோனோ தொற்றின் தாக்கத்திலிருந்து மீளாமலேயே நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடத்தை இனி யார் நிரப்புவார்கள்..? என்ற வினா மனதில் நிழலாட இந்த அஞ்சலிக்குறிப்பினை பதிவுசெய்கின்றேன். மகாகவி பாரதியின் அந்திமாகாலத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் பிரகாரத்தில், எழுபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்துடன் இந்த அஞ்சலிக்குறிப்பினை ஆரம்பிக்கின்றேன்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









