படித்தோம் சொல்கின்றோம் : சி. மகேந்திரன் எழுதிய ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் ! நதி வெள்ளம் காய்ந்துவிட்டால், நதி செய்த குற்றம் என்ன…? - முருகபூபதி -

“வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் என்பது நதிகளின் மரண சாசனம். நதியின் உருவமாக , படபடத்து சிறகசைக்கும் வண்ணத்துப் பூச்சிகள், பெரும் துயருடன் என் மனதில் குடியேறின. இதன் விளைவுதான் வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம். இயற்கைக்கு மரணம் இல்லை. மனிதர் செய்யும் இடையூறுகளை கடந்து அது புதிய பரிமாணங்களைக் கண்டறிந்து வாழ்ந்துகொண்டேயிருக்கும். இதைப்போலவே மரணசாசனம் என்பதும் ஒரு ஆதங்கம். நதிகளை பாதுகாப்பதற்கான எச்சரிக்கை. ஆனால், நதி இன்னமும் மரணமுற்று விடவில்லை. மரணம் அடைந்துவிட்டதாக மனம் கொந்தளிக்கிறது. அவ்வளவுதான். “ என்று, வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் என்ற நூலை எழுதியிருக்கும் தோழர் சி. மகேந்திரன், ஏன் இதனை எழுதினேன் என்பதற்கான காரணத்தை சொல்கிறார். தலைப்பினைப் பார்த்ததும், இந்த நூல் ஏதோ கவிதைகளை உள்ளடக்கிய நூலாகவிருக்குமோ ? என்ற எண்ணம்தான் வாசகர்களுக்கு முதலில் வரக்கூடும். ஆனால், தமிழக நதிகளின் வரலாற்றையும் சுற்றுச்சூழலினால் மாறிவிட்ட அதன் கோலங்களையும் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களின் ஊடாக ஆவணமாகவே இந்நூல் பதிவுசெய்து வைத்திருக்கிறது. நூலாசிரியர் , இந்தநூலின் 74 ஆவது அங்கத்தின் தொடக்கத்தில் சொல்லியிருக்கும் ஆதங்கத்தையே இந்தப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
இதுவரையில் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்ட இந்த நூல் இந்திய சாகித்திய அகடமியின் தெரிவுக்குழுவுக்கு ஏன் எவராலும் பரிந்துரை செய்யப்படவில்லை..? என்ற ஆதங்கம்தான் எனக்கு வந்தது. இந்நூலில் இடம்பெற்றுள்ள தமிழக நதிகளின் வரலாறு ஏற்கனவே ஜூனியர் விகடனில் 25 இதழ்களில் பிரபல ஓவியர் மருது வரைந்த வண்ணப்படங்களுடன் தொடராக வெளியாகியது.




வாசிப்பு அனுபவம், ஆளாளுக்கு வேறுபடும். ஒரு எழுத்தாளரின் புனைவு இலக்கியப் படைப்பினைப் பற்றி, சாதாரண வாசகர் கொண்டிருக்கும் ரசனைக்கும், மற்றும் ஒரு எழுத்தாளர் வைத்திருக்கும் பார்வைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. கனடாவில் வதியும் வ. ந. கிரிதரனின் கதைத் தொகுதியான கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் நூலை நான் படித்தபோது, வாசகர் மனநிலையிலும், படைப்பாளி மனவுணர்வுடனும்தான் படிக்க நேர்ந்தது.
- எழுத்தாளரும், முன்னாள் தெல்லிப்பளை, யூனியன் கல்லூரி அதிபருமான கதிர் பாலசுந்தரம் அவர்கள் தனது தொண்ணூற்றாவது வயதில் காலமானார். அவர் பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். அதனையொட்டி முன்னர் பதிவுகளில் எழுத்தாளர் முருகபூபதி எழுதிய இக்கட்டுரையினை நினைவூட்டுகின்றோம். - பதிவுகள்.காம் -
கல்லிலிருந்து கணினி வரைக்கும் பாய்ந்திருக்கும் மொழிகளில் தமிழ் தொன்மையானது. இந்தத்தொன்மையிலிருந்து உருவான பழந்தமிழ் இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், என்பவற்றின் ஊடாக தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சியில் தமிழர்களின் வேட்கையையும் புரிந்துகொள்ள முடிகிறது.







இலங்கைத் தலைநகரில் ஒன்பது தசாப்தங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கும் தினகரன் பத்திரிகைக்கு இந்த ஆண்டு, இம்மாதம் 92 ஆவது பிறந்த தினம்! குறிப்பிட்ட தொண்ணூறு ஆண்டுகளுக்குள், இலங்கையில் நேர்ந்த அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களையெல்லாம் ஊடகப்பெருவெளியில் தொடர்ந்தும் பதிவுசெய்து வந்திருக்கும் தினகரன், தென்கிழக்காசியாவில் குறிப்பிடத்தகுந்த நாளேடாகவும் பரிமளிக்கிறது.




அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்குமுகமாக நடத்திவரும் வருடாந்த இலக்கியப்போட்டியில் இம்முறை, 2022 ஆம் ஆண்டில் வெளியான நூல்களிலிருந்து நடுவர்களின் மதிப்பீட்டின் மூலம் சிறந்தனவற்றை பரிசுக்குத் தெரிவு செய்துள்ளது. சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை முதலான நான்கு துறைகளில் 2022 ஆம் ஆண்டு வௌியான இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் இந்தத் தெரிவுக்காக ஊடகங்களின் வாயிலாக கோரப்பட்டிருந்தது.
ஆறு தசாப்தங்களுக்கு முன்னர், அதாவது 1960 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத் தொடங்கிய விவேகி மாத இதழின் அன்றைய விலை நாற்பது சதம்தான். “நாற்பது சதமா…?“ அது எப்படி இருக்கும் என்று சமகாலத்தில் எமது குழந்தைகள் கேட்பார்கள். இலங்கையில் பணவீக்கம் படிப்படியாக வளர்ச்சி கண்டு, அக்கால நாணயங்களை மதிப்பிழக்கச் செய்துவிட்டது. அதற்கு காரண கர்த்தாக்கலான அரசியல்வாதிகளும் தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிய அரசுகளும் நாணயமற்றுப் போனதன் விளைவை இலங்கை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

'


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









