ஒரு இலக்கியனின் பருதிப்பார்வை - அங்கம் 05 தமிழ் – சிங்கள இலக்கிய உறவுக்கு பாலமாக விளங்கும் திக்குவல்லை கமால்
இலங்கையில் முஸ்லிம்கள் என்றாலே – அவர்கள் ‘ வர்த்தக சமூகத்தினர் ‘ என்ற கணிப்பு பொதுவானதாக நிலைபெற்றிருந்த காலமொன்றிருந்தது. அக்கணிப்பு பின்னாளில் பொய்யானது. அவ்வாறான மாற்றத்திற்கு அச்சமூகம் கல்வி மீது கொண்டிருந்த நாட்டம்தான் அடிப்படைக்காரணம். அவர்கள் மத்தியிலிருந்து ஆசிரியர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள் தோன்றினார்கள். இலங்கையில் பெரும்பான்மையினத்து பௌத்த சிங்கள மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசங்களில் அவர்கள் தமிழில் பேசினார்கள். எழுதினார்கள். அத்துடன் சிங்களம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் தெரிந்துகொண்டார்கள். அதனால் எமது ஈழத்து தமிழ் இலக்கியவளர்ச்சியில் அவர்களும் உந்துசக்திகளாக மாறினார்கள். தென்னிலங்கையில் மாத்தறைக்கு சமீபமாக இருக்கும் திக்குவல்லை என்ற ஊரின் பெயரை தமிழ் இலக்கிய உலகிற்கு பிரசித்தம் செய்த முன்னோடியாக எம்மத்தியில் திகழ்ந்துகொண்டிருப்பவர்தான் இலக்கிய நண்பர் திக்குவல்லை கமால்.
ஒரு கடலோரக்கிராமம் தமிழ் இலக்கியத்தில் தனது பெயரை தக்கவைத்துக்கொண்டதற்கு அங்கு பிறந்து ஆசிரியராகவும் இலக்கிய கர்த்தாவாகவும் அறிமுகமான நண்பர் எம். எச். எம். ஷம்ஸ் எமக்கு அறிமுகப்படுத்திய திக்குவல்லை கமாலின் ஆசிரியர்களும் எழுத்தாளர்கள்தான் என்பதும் ஆச்சரியமானது.
ஏ. இக்பால், சந்திரசேகரன் ஆகியோரிடம் கல்வி கற்றிருக்கும் திக்குவல்லை கமாலின் இயற்பெயர் முகம்மது ஜலால்தீன் முகம்மது கமால். 1950 ஆம் ஆண்டு, திக்குவல்லையில் பிறந்திருக்கும் கமால், அவ்வூர் மக்களின் பேச்சுத்தமிழை இலக்கியத்திற்கு வரவாக்கியவர்.
1970 களில் தமிழகத்திலும் இலங்கையிலும் புதுக்கவிதைத் துறை பெரும் வீச்சாக வளர்ந்தது. புதுக்கவிதையை ஏற்கலாமா? நிராகரிக்கலாமா? என்ற சர்ச்சைகளும் எழுந்தன. அதனை குளியலறை முணுமுணுப்புகள் என்றும், ஆற்றுவெள்ளம் எனவும் சிலர் எதிர்வினையாற்றினார்கள். ஆனால் புதுக்கவிதை புற்றீசல்போன்று பரவியது. இரண்டு வரிகளில் பல அர்த்தங்கள் தரக்கூடிய புதுக்கவிதைகளும் வந்தன. வல்லிக்கண்ணன், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தொடரையும் எழுதினார். பின்னர் அத்தொடரும் நூலாகியது. தமிழகத்தில் வானம்பாடிகள் இந்தத் துறையில் சிறகடித்துப்பறந்தனர். புதுக்கவிதைகளுக்காகவும் சிற்றேடுகள் மலர்ந்தன. மல்லிகையில் நான் எழுதத்தொடங்கிய காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து பல படைப்பாளிகளும் அறிமுகமாகியிருந்தனர். இலங்கையில் அவ்வேளையில் எனக்கு படிக்கக்கிடைத்த முதலாவது புதுக்கவிதை நூல் எலிக்கூடு. அதனை நூல் எனச்சொல்வதிலும் பார்க்க சிறிய பிரசுரம் என்றுசொல்வதுதான் பொருத்தம். சின்னச்சின்ன கவிதைகளுக்கு அத்தகைய சிறு பிரசுரங்கள் போதுமானதாகவுமிருந்தது.

உலகப்பிரசித்திபெற்ற ஓவியர் பிக்காசோ, மொனாலிசா ஓவியம் பற்றி அறிந்திருப்போம். ஆனால், இந்தப்பெயர்களை லங்கையில் பிறந்து, தனது வாழ்நாள் முழுவதும் ஓவியராகவே வாழ்ந்த ஒருவர் தமது பிள்ளைகளுக்கு வைத்து அழகு பார்த்த செய்தி தெரியுமா...? வீரகேசரியுடன் எனக்கு உறவும் தொடர்பும் ஏற்பட்ட 1972 ஆம் ஆண்டு முதல் என்னுடன் நட்புறவாடியவரான ஓவியர் மொராயஸ் கடந்த 26 ஆம் திகதி திங்கட்கிழமை மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். சிலர் தமது முன்னாள் காதலிகள், காதலர்களின் அல்லது தமது விருப்பத்துக்குரிய கடவுள்களின் பெயர்களை -வாசித்து அனுபவித்த கதைப்பாத்திரங்களின் பெயர்களை அல்லது குடும்பத்தின் பரம்பரை பெயரை தமது பிள்ளைகளுக்கு வைப்பார்கள். அவ்வாறு தமக்குப் பிடித்த ஓவியத்துறை சார்ந்த பெயர்களை மொராயஸ் தமது பிள்ளைகளுக்குச் சூட்டியது வியப்பல்ல.
புன்னகை தவழும் முகம். தமிழில் பேசினால் குழந்தையின் மழலை உதிரும். ஆழ்ந்த அமைதி. இலக்கிய நண்பர்களை அரவணைக்கும் வார்த்தைகள். இந்த அடையாளங்களுடன் வாழ்ந்த நண்பர் உபாலி லீலாரத்ன அவர்களை இனிமேல் ஒளிப்படங்களில்தான் பார்க்கமுடியும்! இனிமேல் நிகழும் மொழிபெயர்ப்பு சார்ந்த உரைகளில் பேசுபொருளாவார். தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை முன்னர் ஒருவழிப்பாதையாகத்தான் இருந்தது. அந்தப்பாதையை இருவழிப்பாதையாகவும் இருகை ஓசையாகவும் மாற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் உபாலி லீலாரத்ன. அவரது மறைவுச்செய்தி எமக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழாராய்ச்சிக்கென உலகப்பொது நிறுவனம் அமைத்தவர் அமரர் தனிநாயகம் அடிகளார் எனச்சொல்வோம். இன்னலுற்ற தமிழ் சமூகத்திற்காக அயராது பாடுபட்டவர்கள் வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் எனச்சொன்னால் அது அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களையே குறிக்கும். கடந்த 11 ஆம் திகதி மாலை கொழும்பில் மறைந்தார் என்ற துயரச்செய்தி வந்தது. இலங்கை வடபுலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக பங்குத்தந்தையாக ஆன்மீக பணிகளை முன்னெடுத்துவந்தவர். அதேசமயம், தான் வாழ்ந்த பிரதேசத்து மக்களின் நலன்கள் குறித்து அக்கறையோடு செயற்பட்டவர். இலங்கையில் தமிழ் சமூகத்திற்கும் தமிழர்தம் உரிமைக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளின் வாழ்வாதாரத்திற்கும் சமூக நீதிக்கும் இனங்களின் நல்லிணக்கத்திற்கும் அயராமல் பாடுபட்டவர்களின் வரிசையில் பல கத்தோலிக்க அருட்தந்தைகளை நாம் காணமுடியும். தவத்திரு தனிநாயகம், மேரி பஸ்டியன், ஆபரணம் சிங்கராயர், அன்டனி ஜோன் அழகரசன், சந்திரா பெர்ணான்டோ உட்பட பலரை நாம் இனம்காண்பிக்கமுடியும். எனினும் இவர்களைப்பற்றி இதுவரையில் முழுமையாக எவரும் ஆவணப்படுத்தவில்லை. தனிநாயகம் அடிகளார் குறித்து பல நூல்களும் ஆவணப்படங்களும் வெளியாகியுள்ளன. இலங்கையில் மக்கள் சேவையே மகேசன் சேவையென வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர். இவர் குருத்துவப்பட்டம் பெற்று 49 ஆண்டுகளாகின்றன. பொன்விழா ஆண்டை நெருங்கும் வேளையில் விடைபெற்றுவிட்டார்.
அன்பிற்கினிய நண்பர் பூபதி அவர்கட்கு , நீண்ட….. நீண்ட….. காலத்திற்குப் பின்னர் தங்கள் கடிதம் படித்து நேரில் கண்டு உரையாடிய மகிழ்வடைந்தேன். “ எனத் தொடங்கும் 05-08-1999 ஆம் திகதி எழுதப்பட்ட ஒரு கடிதம் எனக்கு தபாலில் வந்திருந்தது. கனடாவிலிருந்து வந்திருந்த அக்கடிதத்தை எழுதியவர் எனது நீண்ட கால நண்பர் எஸ்.தி என எம்மால் அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் எஸ். திருச்செல்வம். இவருக்கும் எனக்குமிடையே நட்பு மலர்ந்த காலம் 1980 களாயிருக்கலாம். அவர் எனக்கு முன்பே ஊடகத்துறையில் பிரவேசித்தவர். அவரது பெயருடன் (By line) வெளிவந்த பல முக்கியமான தலைப்புச்செய்திகளுடன் அன்றைய தினகரன் நாளேட்டினை எனது பாடசாலைப்பருவத்திலேயே படித்திருக்கின்றேன். அவரது ஊடகப்பணிக்கு அரைநூற்றாண்டு காலம் வயதாகிவிட்டது. அதனை முன்னிட்டு கனடாவில் நடந்த சேவை நலன் பாராட்டுவிழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஊடகத்திரு ‘ எஸ்தி 50 + ‘ என்ற நூலும் கடிதங்கள் என்ற 2001 ஆம் ஆண்டு வெளிவந்த எனது நூலும் எனது மேசையில் கணினிக்கு அருகிலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.
சமூகத்தில் கல்வி, கலை இலக்கியம், ஊடகம், மருத்துவம், அரசியல், பொதுநலத் தொண்டு முதலான துறைகளில் ஆளுமைகளாக விளங்கியிருப்பவர்கள் குறித்த பதிவுகள் பெரும்பாலும் அவர்களின் மறைவுக்குப்பின்பே அஞ்சலிக்குறிப்புகளாக வெளிவருகின்றன.
" ஆலையமணியின் ஓசையை நான் கேட்டேன், அருள்மொழி கூறும் பறவையின் ஒலி கேட்டேன் " - இந்தப்பாடலை எங்கள் மூத்த தலைமுறையினர் மறந்திருக்கமாட்டார்கள். 1961 ஆம் ஆண்டு வெளிவந்த பாலும்பழமும் படப்பாடல். ஒரு சிறிய பூங்காவில்தான், இந்தப்பாடல் கவியரசு கண்ணதாசனிடம் பிறந்தது. அந்தப்பூங்காவின் முன்பாகத்தான் அமைந்திருக்கிறது கவிஞரின் கவி, கலை, திரை, அரசியல் வாழ்க்கைச் சரிதத்தில் முக்கிய இடம் வகிக்கும் அவரது இல்லம். சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) இலக்கியவாதிகளுக்கு மிகவும் வேண்டப்பட்டது. இங்குதான் கண்ணதாசன் பதிப்பகம், கலைஞன் பதிப்பகம், மணிமேகலை பிரசுரம், நர்மதா பதிப்பகம், தமிழ்ப்புத்தகாலயம், தாமரை- ஜனசக்தி காரியாலயம், கணையாழி அலுவலகம் இப்படியாக பல.
அப்பொழுது எனக்கு ஐந்து வயதிருக்கும். 1956 ஆம் ஆண்டு. எனது பெயரில் " முருகன் லொட்ஜ்" என்ற சைவஹோட்டலை நீர்கொழும்பு பிரதான ( பஸாரில்) வீதியில் நடத்திக்கொண்டிருந்த அப்பா லெட்சுமணன், பரோபகரா இயல்புகளினாலும் எவரையும் முன்யோசனையின்றி நம்பிவிடுவதனாலும், இரக்கசிந்தனையினாலும் , பொறுப்புணர்ச்சி குறைந்தைமையாலும் நட்டப்பட்டு, அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டின் உறுதியை வைத்து கடன் பெற்று, அதனையும் மீட்க வழிதெரியாது, கொழும்பிலிருந்த ஒரு கம்பனியில் வெளியூர் விற்பனைப் பிரதிநிதியாகி மலையகப்பக்கத்திற்கு கம்பனி வாகனத்தில் சென்றிருந்தார்.
படைப்பிலக்கியத்துறைக்கு வரும் பெரும்பாலானவர்கள் " தாங்கள் எழுத்தாளரானதே ஒரு விபத்து " என்றுதான் சொல்லிவருகிறார்கள். முதலில் வாசகர்களாக இருந்து, பின்னர் தாமும் எழுதிப்பார்ப்போம் என்று முனைந்தவர்கள், தமது படைப்புகளுக்கு கிட்டும் வாசகர் அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் தொடர்ந்து எழுதி பிரகாசிக்கிறார்கள். தமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்களும் வாசகர் மதிப்பீட்டை காலத்திற்குக்காலம் கணித்துவைத்துக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகருகிறார்கள். இந்தப்பின்னணியில்தான், அவுஸ்திரேலியா மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வதியும் விலங்கு மருத்துவர் நொயல் நடேசன் அவர்கள், இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கி சுமார் இருபது வருட காலத்துள் கவிதை தவிர்ந்த இலக்கியத்தின் இதர துறைகளிலும் தன்னை தக்கவைத்துக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் சென்னையிலிருந்து ஒரு திரைப்பட நடிகரும் அவரது காதலியான நடிகையும் கொழும்புக்கு வந்து கலதாரி மெரிடீன் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அவர்களை அழைத்தவர் செட்டியார் தெருவில் ஒரு பிரபல நகைக்கடை முதலாளி. அவர் மற்றும் ஒரு கிளையை திறக்கும்போது குறிபிட்ட நடிகரையும் அவரது காதலியையும் அந்தத் திறப்புவிழாவுக்கு பிரதம விருந்தினர்களாக அழைத்து, எங்கள் பத்திரிகையில் அரைப்பக்கம் விளம்பரமும் கொடுத்திருந்தார். விளம்பரத்திற்குரிய கட்டணமும் செலுத்திய அந்த வர்த்தகப்பிரமுகர், குறிப்பிட்ட நடிகர் - நடிகையை யாராவது ஒரு நிருபர் சந்தித்து பேட்டிகண்டு பத்திரிகையில் எழுதி, தனது வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் மேலும் பரவலான தகவல் தரவேண்டும் என்று பிரதம ஆசிரியரிடம் வினயமாக கேட்டுக்கொண்டார். அந்தவேலைக்கு பிரதம ஆசிரியர் என்னை அனுப்பியபோது வேண்டா வெறுப்பாகச்சென்றேன். " ஒரு சினிமா நடிகரிடம் சென்று எதனைக்கேட்பது? அரசியல்வாதி - இலக்கியவாதியிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. அந்த சினிமா நடிகரிடம் என்ன கேட்கமுடியும்? அடுத்து எந்தப்படத்தில் நடிக்கிறீர்கள்? உடன் வந்திருக்கும் காதலியைத்தான் மணம் முடிக்கப்போகிறீர்களா? இலங்கை ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? " இதனைத்தானே கேட்கமுடியும். இந்த பொறுப்பான(?) கேள்விகளுக்கும் அர்த்தமுள்ள இந்தக் கடமைக்கும் (?) நானா கிடைத்தேன். வேறு எவரும் இல்லையா? என்று எனது சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினேன். என்னை ஒரு படைப்பிலக்கியவாதியாகவும் நன்கு தெரிந்துவைத்திருந்த ஆசிரியர், " ஐஸே, நாய் வேடம் போட்டால் குரைக்கத்தான் வேண்டும். பத்திரிகையாளருக்கு எல்லோரும் ஒன்றுதான். அது நாட்டின் அதிபராக இருந்தால் என்ன, சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களாக இருந்தால் என்ன எல்லோரும் ஒன்றுதான். பத்திரிகைக்கு செய்தி முக்கியம். அத்துடன் வரும் விளம்பரங்களும் அவசியம்" என்றார்.
" நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை. என்றாலும்கூட எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படியிருக்கவேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானதில்லை, என் சமூகத்துக்கானதில்லை என்று அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியிலிருந்து உருவானதொரு கனவு. எனது திரைப்படங்கள் அதிலிருந்துதான் வரவாகின. இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு அப்படிப்பட்ட கனவா? என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பிப்பார்த்துக்கொள்கிறேன்" என்று சொன்ன இயக்குநர் மகேந்திரன் நேற்று 02 ஆம் திகதி சென்னையில் மறைந்தார்.

தொழில் நுட்ப வளர்ச்சியினால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுவதை அவதானித்துவருகின்றோம். கால மாற்றம் நமக்களித்த வரப்பிரசாதங்கள் அநேகம். அதேசமயம் அந்த வரப்பிரசாதங்களை புரிந்துகொள்ளமுடியாமலும் அனுபவிக்கமுடியாமல் திணறுபவர்களையும் அன்றாடம் காணமுடிகிறது. நான் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் வெள்ளீய அச்சு எழுத்துக்கள் கோர்க்கப்பட்டு, பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுத்தான் பத்திரிகைகள் வெளியாகின. அச்சுக்கூடங்களும் கொம்பசிட்டர் என்ற அச்சுக்கோப்பாளர்ளை நம்பித்தான் இயங்கின. சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், எழுத்தாளர் விந்தன் ஆகியோர் தமது வாழ்வை அச்சுக்கூடத்தின் கொம்பசிட்டர்களாகத்தான் தொடங்கினார்கள். ஜெயகாந்தன் அச்சுக்கூடங்களில் ஒப்புநோக்காளராக (Proof Reader) இருந்தவர்.
( இம்மாதம் 24 ஆம் திகதி கல்முனையில் கவிஞர் மருதூர்கனியின் ஞாபகார்த்தமாக நடைபெறும் நிகழ்வை முன்னிட்டு எழுதப்படும் பதிவு)
எமது தாயகம் ஈழத்தில் 1970 களில் எழுத்துத்துறையில் சிறகு முளைத்து இலக்கிய வானில் இற்றைவரையில் உயர உயர பறந்து கொண்டிருக்கும்இலக்கியப் பறவை முருகபூபதி கங்காரு நாட்டின் சரணாலயத்திற்கு 1987 இல் புலம்பெயர்ந்தவர். கலை இலக்கியவாதிகள் நிரம்பிய பாரிஸ் மாநகரம் நோக்கி இந்தப்பறவை சிறகு விரித்தது. தனது கல்வி கண்ணை திறந்த வட்டுக்கோட்டை சித்தங்கேணிபண்டிதர் மயில்வாகனனாரின் நூற்றாண்டு நிகழ்வுக்காக பாரிஸ் வந்த முருகபூபதியை மூன்று தருணங்கள்சந்தித்தேன் . பல தடவைகள் தொலைபேசியில் பேசினேன். அவருடனான சந்திப்புகளும்,உரையாடல்களும் சிந்திக்க வைத்தன.அவரது வாயிலிருந்து சிந்திய
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்னவேலை
இலங்கையின் வடமேற்குக் கரையில் இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்பில் திகழும் நீர்கொழும்பூருக்கு ஐதீகத்திலும் வரலாற்றிலும் அழியாத அடையாளம் இருக்கிறது. இலங்கேஸ்வரன் இராவணனின் புதல்வன் இந்திரஜித்தன் நிகும்பலை என்னும் யாகம் வளர்த்த ஊர் என்பதனால் அதற்கு நிகும்பலை என்றும் ஒரு காரணப்பெயர் இருக்கிறது. அந்த யாகத்திற்காக இந்திரஜித்தன் இவ்வூரில் ஐந்து இடங்களில் உருவாக்கிய குளங்கள் காலப்போக்கில் அடையாளம் தெரியாதவகையில் உருமாறிக் கட்டிடக்காடுகளாகிவிட்டன. எனினும், இன்றும் மழைக்காலத்தில் அந்த இடங்களில் தண்ணீர் தங்கித் தேங்கிவிடுவதை அவதானிக்கமுடிகிறது.
" ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்" இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன. அவற்றில் பெரும்பாலானவை சுயவிமர்சனப்பாங்கில் எழுதப்பட்டிருந்தவை. இலங்கை - இந்திய பாதுகாப்புத் தரப்பைச்சேர்ந்தவர்களும் ஐக்கியநாடுகள் சபைக்காக இலங்கையில் பணிபுரிந்த மேற்குலக வாசிகளும், ஆண்கள் - பெண்கள் உட்பட முன்னாள் போராளிகளும் , படைப்பாளிகளும் எழுதும் நூல்கள், ஆவணங்கள், ஆய்வுகள் வந்தவண்ணமிருக்கின்றன. நீடித்த உள்நாட்டுப்போரின் பெறுபேறாகவும் இவற்றை ஏற்கலாம்! அவ்வாறு எழுதியவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் நடேசன். இவரது தொழில் விலங்கு மருத்துவம். அது சார்ந்த உண்மையும் புனைவும் கலந்த கதைகளையே தொடக்கத்தில் எழுதியவர். அத்தகைய எழுத்துக்களின் ஊடாகவே சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியங்கள் என தனது பார்வையை விரிவுபடுத்திக்கொண்டவர்.
புத்தர் வந்த திசையிலிருந்து, காந்தி பிறந்த தேசத்திலிருந்து அவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு இடப்பட்ட நாமம் " அமைதிப்படை" ! மக்கள் அவர்களை நம்பினார்கள். ஏற்கனவே, சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் போரிட்டு, தங்கள் தேசத்தின் எல்லைகளை பாதுகாத்தவர்கள் எங்களையும் காப்பாற்றுவார்கள் என போற்றினார்கள்.
பல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள், மெல்பனில் எனது வீட்டுக்கு வந்தார். சிட்னியில் வசிக்கும் அவரது மகளிடம் வந்திருந்த சந்தர்ப்பத்தில் அவரை மெல்பனுக்கு அழைத்திருந்தேன். ஒருநாள் இரவுப்பயணமாக பஸ்ஸில்தான் வந்தார். அவரது கையிலிருந்தது ஒரு ஆங்கில துப்பறியும் நாவல். தந்திரபூமி, குருதிப்புனல், காலவெள்ளம், சுதந்திரபூமி முதலான பல நாவல்களும் பல கதைத்தொகுப்புகளும் சிறந்த நாடகப்பிரதிகளும் எழுதியிருக்கும் அவர் எனது அபிமான எழுத்தாளர். இவருக்கு எப்படி துப்பறியும் நாவல்களில் ஆர்வம் வந்தது எனக்கேட்டபோது, தான் பயணங்களில் விறுவிறுப்பான அத்தகைய நூல்களைத்தான் படிப்பது வழக்கம் என்றார். பயணக்களைப்பை அது போக்கிவிடுமாம். தேர்ந்த வாசகர்களினால் விரும்பிப்படிக்கப்படும் பல எழுத்தாளர்களிடத்தில் இவ்வாறு விசித்திரமான இயல்புகளும் இருக்கின்றன. ஜெயகாந்தனிடம், "நீங்கள் சரித்திர நாவல்கள் படிப்பதில்லையா?" என்று, கல்கியையும் சாண்டில்யனையும் , அகிலனையும் மனதில் வைத்துக்கொண்டு யாரோ கேட்டார்களாம். அதற்கு ஜெயகாந்தன், " நான் அவற்றை படிப்பதில்லை. அதனைவிட தனக்கு அம்புலிமாமா கதைகள்தான் விருப்பம்" என்றாராம்.
கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்த தினம் இன்றாகும். வடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசு, இலக்கிய உலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர். தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியான் மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் வர்ணிக்கப்பட்டவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல நாவல்கள் உட்பட சில விமர்சனக்கட்டுரைத் தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணம் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
பழங்காலம் (600 - 1200)

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









